ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை

+8
அப்புகுட்டி
nandhtiha
வழிப்போக்கன்
வள்ளியப்பன்
kirikasan
பிளேடு பக்கிரி
அலட்டல் அம்பலத்தார்
நிசாந்தன்
12 posters

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை Empty தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by நிசாந்தன் Sat 31 Jul 2010 - 6:04

1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.



சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..



இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.



ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை Empty தமிழரின் படை-2

Post by நிசாந்தன் Sat 31 Jul 2010 - 8:03

அடுத்த
கலகம் அம்பாரையில் வெடித்தது. கொழும்பில் இருந்து 200கி.மீ. தொலைவிலுள்ள நகரம். அங்குள்ள
கல் ஓயா பள்ளத்தாக்கில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அடுத்த பத்து நாட்களுக்கு,
அங்கு தேடுதல் நடாத்தி, தமிழர்களின் வீடுட்கள் சூரையாடப்பட்டன. அந்த பத்து நாட்களில்
மட்டும் 150 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.



ஜூன் 15,
1956, அரசாணை வெளியிடப்பட்டது. அதில், சிங்கள மொழி மட்டுமே அரசாங்க மொழி சொல்லப்பட்டது.
சொல்லப்படாதது, இலங்கை சிங்கள மக்களுக்கு மட்டுமே. தமிழர்கள் அன்றுமுதல் ஊமையானார்கள்.
ஒட்டுமொத்த தமிழர்களின் இருப்பியல், அடையாளம், உரிமை பிரச்சனை ஆனது. நாடாளுமன்றத்தில்,
தமிழ் பிரதிநிதிகள் சொற்பமே. இருந்தால் இரு, செத்தால், சாவு. இதுவே தமிழர் மீதான, அரசின்
பார்வை.



அதிகாரம் முழுக்க
சிங்களவரிடம் குவிந்து இருந்தது. நாடாளுமன்றம், காவல்துறை, நீதிமன்றம், அரசு அலுவலகங்கள்
அனைத்திலும் சிங்களவர்களே நிறைந்திருந்தினர். சந்தேகமே இல்லாமல், தமிழர்கள் சிறுபான்மையாக்கப்பட்டனர்.



செல்வநாயகம்…
ஃபெடரல் கட்சித் தலைவர். அறவழிப் போராட்டத்தைத் தவிர வேரு எதையும் அறியாதவர். வேறு
பாதையை யோசிக்கக் கூட அவர் மனம் ஒத்துக்கொள்ளாது. தமிழர்கள் அதிகம் போனால் கொடி பிடிக்கலாம்,
கோஷம் போடலாம், ஒலிப் பெருக்கியில் பயந்து பயந்து பேசலாம். மீறிப் போனால், சாவு நிச்சயம்.



சிங்களத்தை அரசு
மொழியாக அறிவித்ததை யாரும் தவறு என்று கூறவில்லை. சிங்களத்தை ம்ட்டும் அரச மொழியாக
அறிவித்தது தான் தவறு. 150 ஆண்டு கால பிரிட்டனின் ஆட்சிக்குப் பிறகும், ஐந்து சதவிகித
சிங்களருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரிந்திருந்தது. தமிழரில் பலருக்கு ஆங்கிலம் தெரியும்.
ஆங்கிளேயரிடம் சரளமாக ஆங்கிலம் பேசுவர். இதுவும் தமிழர் மீதான கோபத்திற்கு காரணம்.



தமிழர்கள் ஆங்கிளேயரிடம்
நெருங்கி பழகினர். பிரிட்டிஷ் கொண்டுவந்த பல திட்டங்களை சமயோசிதமாக பயன்படுத்திக் கொண்டவர்
தமிழர்களே...
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by அலட்டல் அம்பலத்தார் Sat 31 Jul 2010 - 8:31

ராசா தமிழரின் வரலாறு மத்துவமானது கண்டியலே ..
வாழ்த்துக்கள் ராசா கண்டிப்பா தொடர்ந்து பதியுங்கள் ராசா ...
புதிய தலை முறைக்கு அந்த காலத்தில நாங்க பட்ட கஷ்டங்கள் தெரியாது கண்டியலே ..வேதனையும் சோதனையும் நிறைந்ததுதான் வாழ்க்கை ....
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை Empty எனது நன்றிகள்

Post by நிசாந்தன் Sat 31 Jul 2010 - 10:49

நன்றி ஐயா, தமிழர்களிலேயே பல பேருக்கு ஈழத்தின் போராட்ட வரலாறு தெரியாது. எங்கள் சகோதர சகோதரிகளே, புலிகளை தீவிரவாதிகள் என்று கூறுகின்றனர். அதனால் தான் இந்த கட்டுரையை எழுத தலைப்பட்டுள்ளேன்.



Last edited by அப்புகுட்டி on Sun 17 Oct 2010 - 3:58; edited 2 times in total (Reason for editing : சில தவறுகள்)
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை Empty தமிழரின் படை-3

Post by நிசாந்தன் Sat 31 Jul 2010 - 17:20

தமிழர்களின் வளர்ச்சி சிங்களவரின் கண்களை உறுத்தியது. பிரிட்டன் தன் ஆதிக்கத்தை உலகம் முழுதும் பரப்பியிருந்த நேரம் அது. அப்போது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால், இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சியை தமிழர்களும் சிங்களவர்களும் கண்ணைமூடி ஏற்றுக் கொண்டிருந்தனர்.

பிரிட்டனில் அப்போது மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அதனை சமாளிக்க தன் காலனிகளுக்கு சுதந்திரம் அளிக்க முன்வந்தது. 1947-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தது. ஆனால் தமிழர்களின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாக, பிப்ரவரி 4, 1948-ல் சிங்களவரின் கைகளில் சுதந்திரப் பத்திரத்தை தினித்துவிட்டு சென்றது.

முழு அதிகாரமும்(இன்றுவரை) சிங்களவரின் கைகளுக்குச் சென்றன. ஆயினும் அவர்களால் திருப்தியடைய முடியவில்லை. ஏனெண்டால், அறிவு சார்ந்த விடயங்களில், தமிழர்களோடு சிங்களவர்களால் போட்டிப் போட இயலவில்லை.

இயாலாமை கோபமாக மாறியது. கோபம் வெறுப்பாக. வெறுப்பு வெறியாக. இனவெறியாக…

ஆகவே, மொழியிலிருந்து ஆரம்பித்தார்கள். பண்டாரநாயகா, முதலில் சிங்கள மகா சபை என்னும் அமைப்பை தொடங்கினார். பின், இலங்கை சுதந்திரக் கட்சி. சிங்களவரின் புனிதமான கலாச்சாரத்தை மீட்டெடுப்பேன். எதிரிகளை ஒழிபேன், என வீரவசனங்கள் பேசினார். அவர் ஒரு கிருத்துவர். ஆனால், தன் பிரதமராகும் கனவு நினைவேற பொளத்த மதத்தை தழுவிக் கொண்டார். 1956 தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். சிங்களவரின் ஒரே பிரதிநிதி என்னும் நிலையை அடையை அனைத்து வேலைகளையும் செய்தார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by பிளேடு பக்கிரி Sat 31 Jul 2010 - 17:21

நிசாந்தன் wrote: தமிழர்களின் வளர்ச்சி சிங்களவரின் கண்களை உறுத்தியது. பிரிட்டன் தன் ஆதிக்கத்தை உலகம் முழுதும் பரப்பியிருந்த நேரம் அது. அப்போது இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால், இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சியை தமிழர்களும் சிங்களவர்களும் கண்ணைமூடி ஏற்றுக் கொண்டிருந்தனர்.

பிரிட்டனில் அப்போது மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அதனை சமாளிக்க தன் காலனிகளுக்கு சுதந்திரம் அளிக்க முன்வந்தது. 1947-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தது. ஆனால் தமிழர்களின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாக, பிப்ரவரி 4, 1948-ல் சிங்களவரின் கைகளில் சுதந்திரப் பத்திரத்தை தினித்துவிட்டு சென்றது.

முழு அதிகாரமும்(இன்றுவரை) சிங்களவரின் கைகளுக்குச் சென்றன. ஆயினும் அவர்களால் திருப்தியடைய முடியவில்லை. ஏனெண்டால், அறிவு சார்ந்த விடயங்களில், தமிழர்களோடு சிங்களவர்களால் போட்டிப் போட இயலவில்லை.

இயாலாமை கோபமாக மாறியது. கோபம் வெறுப்பாக. வெறுப்பு வெறியாக. இனவெறியாக…

ஆகவே, மொழியிலிருந்து ஆரம்பித்தார்கள். பண்டாரநாயகா, முதலில் சிங்கள மகா சபை என்னும் அமைப்பை தொடங்கினார். பின், இலங்கை சுதந்திரக் கட்சி. சிங்களவரின் புனிதமான கலாச்சாரத்தை மீட்டெடுப்பேன். எதிரிகளை ஒழிபேன், என வீரவசனங்கள் பேசினார். அவர் ஒரு கிருத்துவர். ஆனால், தன் பிரதமராகும் கனவு நினைவேற பொளத்த மதத்தை தழுவிக் கொண்டார். 1956 தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். சிங்களவரின் ஒரே பிரதிநிதி என்னும் நிலையை அடையை அனைத்து வேலைகளையும் செய்தார்.

தகவலுக்கு நன்றி நண்பா தமிழரின் படை- 1 முதல் 100 வரை 677196 தமிழரின் படை- 1 முதல் 100 வரை 677196 தமிழரின் படை- 1 முதல் 100 வரை 677196 தமிழரின் படை- 1 முதல் 100 வரை 677196



தமிழரின் படை- 1 முதல் 100 வரை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை Empty தமிழரின் படை-4

Post by நிசாந்தன் Sun 1 Aug 2010 - 4:14

அவருக்காகவே ஒரு சந்தர்ப்பம் அமைந்தது. புத்தர் ஜெயந்தி வந்தது. சிங்களம் மட்டுமே சட்டம் என அறிவித்தார். சிங்களர்கள் ஆனந்தக் கூத்தாடினர். சிங்களவர்களை கவர்வதோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை, தமிழர்களுக்கு எதிரான இனவெறி பூதத்தை வெளியில் திறந்துவிட்டார். அதன் விளைவுகள் பயங்கரமாக இருந்தது, இன்றும் இருந்து கொண்டு இருக்கிறது.

பண்டாரநாயக வளர்த்துவிட்ட பவுத்த பாசிசம் அவரின் உயிரையே குடித்தது. செப்டம்பர் 25,1959, பண்டாரநாயக தமிழர்களுக்கு அருசணையாக உள்ளார் என்று கூறி, ஒரு பவுத்த பிக்குவால், சுட்டுக்கொல்லப்பட்டார். நீங்கள் கவனித்தால், தெரியும், அமைதியின் உருவமாக இருக்க வேண்டிய புத்த பிக்கு, துப்பாக்கியை தூக்குகிறார். சமீபமாக, ஒரு பத்திரிக்கையாளர் புத்த பிக்கு ஒருவரை பேட்டியெடுத்த போது, அவர் கூறியதாவது, “முதலில் நாங்கள் சிங்களவர்கள் பின் தான் புத்த பிக்குகள்” என்று கூறினார்.

ஈழத் தமிழர்களின் சரித்திரத்தில் 1956 முதல் 1960 வரயிலான காலகட்டம் நம்பிக்கை, ஏமாற்றம் இரண்டும் மாறி மாறி புரட்டிப் போட்ட ஆண்டுகள். தந்தை செல்வாக்கு முன்னால் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு வலிமையான தலைவர் திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் ஆவார். கிரிமினல் சட்டம் படித்தவர்.

1944-ல் பிரிட்டன் அரசு, லார்ட் சோல்பரி தலைமையில் கமிஷன் அமைத்து, இலங்கையின் அராசியலமைப்பை மாற்ற முடிவெடுத்தது. தமிழர்களை ஓரங்கட்டிவிட்டு, முழு அதிகாரத்தையும் தாங்களே அபகரிக்க சிங்களவர்கள் திட்டம் தீட்டினர். தமிழர்களின் தர்ப்பை தெரிவிக்க யாருமில்லாத நிலையை ஜி.ஜி.பொ. நிறைவு செய்தார். All Ceylon Tamil Congress எனும் அமைப்பை உறுவாக்கினார். இதில் தந்தை செல்வாவும் இணைந்துக் கொண்டார்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by kirikasan Sun 1 Aug 2010 - 4:56

இந்த தாக்குதலின்போது மிக மோசமாக நடந்து கொண்டார்கள் என்று எனது தாயார் கூறுவார். நான் அப்போது பிறந்திருக்கவேயில்லை. பெண்கள் ஆண்களின் வெறும் மேனியில் தார் சுடவைத்து சிங்களத்தில் சிறீ அடையாளம் குத்தினார்கள் அகிம்சை போராட்டம் செய்த பா.உறுப்பினரை பூட்ஸ் காலால் உதைத்தார்கள் என்று நிறையவே சொல்லுவார் நான் சிறுவனாக இருந்துபோது அவர் சொல்லக் கேட்பேன்.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை Empty தமிழரின் படை-5

Post by நிசாந்தன் Sun 1 Aug 2010 - 5:56

ஜி.ஜி.பொ. முன்வைத்த தீர்மானம் இதுதான். சிங்களவருக்கு 50 சதவிகிதம். மீதமுள்ள 50 சதவிகிதம் இலங்கையிம் பூர்வகுடி தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும், இந்தியாவிலிருந்து வந்துள்ள தேயிலைத் தோட்டத்தில் உழைக்கும் தமிழர்களுக்கும், பிறருக்கும். ஜி.ஜி.பொ.வின் தீர்மானத்தை பிரிட்டன் ஏற்றுக்கொள்ளவில்லை.

இலங்கையின் முதல் பிரதமராக அக்டோபர் 1947-ல், டான் ஸ்டீபன் டட்லி சேனாநாயகா பொறுப்பேற்றார். இன்றளவும் “சிங்களருக்கு இவரே தேசப்பிதா”. இவரது, சில செயல்கள் பலரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. 1948-ல் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலிருந்து கொத்தடிமைகளாக அழைத்துவரப்பட்ட மலையக தமிழர்களில் பத்து லட்சம் பேருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. இந்தியத் தமிழர்களுக்காக ஈழத் தமிழர்கள் வாய் திறக்கவில்லை.

இத் தருணத்தில் தான் தந்தை செல்வா, தன் ஆளிமையை வெளிப்படுத்தினார். டிசம்பர் 10,1948, தந்தை செல்வா நாடாளுமன்றத்தில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உரையாற்றினார்.

”இலங்கைத் தமிழரின் வாழ்வியல் அடையாளத்தை முற்றிலுமாக நிராகரிக்கும் சட்டமிது. நமக்கென்ன போச்சு என்று நான் சும்மா இருந்திட முடியாது. இன்று, மலையக தமிழர்கள். நாளை இலங்கையின் பூர்வகுடி தமிழர்களுக்கும் ஏற்படலாம். குறிப்பாக, மொழிப் பிரச்சனை பூதகரமாக வெடிக்கும் என நான் அஞ்சுகிறேன். தமிழர்களை ஒடுக்குவதற்கான அத்தனை வழிகளையும் சிங்கள அரசு செய்யும். இதை நாம் தடுத்தாக வேண்டும்.”

ஆனால் ஒருவராலும் தடுக்க முடியவில்லை. தந்தை செல்வாவின் தீர்க்க தரிசன வார்த்தைகளில் அடுத்த எட்டு ஆண்டுகளில் பலித்துவிட்டது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by நிசாந்தன் Sun 1 Aug 2010 - 6:03

தோழர் கிறிசனே, உங்களுக்கு இத்தகைய நிகழ்ச்சிகளை கூறப்பட்டதால் தான், புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் இன்று தலைவர் விட்டுச் சென்ற பணியை சிறத்தையோடு செய்து கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடப்பட வேண்டியது, போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இத்தலைமுறையினர் யாரும் அக்காலக் கட்டத்தில் பிறக்கவில்லை.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தமிழரின் படை- 1 முதல் 100 வரை Empty Re: தமிழரின் படை- 1 முதல் 100 வரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» 30 வகை வாழை சமையல் – பொரியல் முதல் போண்டா வரை… சூப் முதல் கேக் வரை…
» அவன் இவன் திரை விமர்சனம்– முதல் நாள் முதல் காட்சி
» 'முதல் பரிசுதான் முதல் தொடக்கம்'- பாலஸ்ரீ விருது வென்ற மாணவனின் அசத்தல் பேட்டி!
» இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு முதல் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum