ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை ஏன் படைத்தான்? (கவிதை)

+4
arsad
T.N.Balasubramanian
சிவா
kirikasan
8 posters

Go down

காதலை ஏன் படைத்தான்? (கவிதை) Empty காதலை ஏன் படைத்தான்? (கவிதை)

Post by kirikasan Sun Oct 17, 2010 9:04 pm

மெல்லிய பஞ்செனும் மேகம் படைத்ததில்
மின்னலை ஏன்கொடுத்தான்
முல்லைசெறி மலர்ப் பந்தலின் மீதிலே
மூடியோர் பாம்பை வைத்தான்
கல்லும் உருகிடும் சேதி கொள்ள எங்கள்
கண்களில் நீர் படைத்தான்
வல்லமை கொண்ட மனங்களிலே கொடும்
வஞ்சனை கோலமிட்டான்

பென்னம் பெரிதென பூமி செய்து அதை
பின்னிச் சுழல வைத்தான்
இன்னுமதில் நடமாடவென மக்கள்
எத்தனையோ படைத்தான்
பொன்னிற் அழகென்னும் மாதர்செய்து ஒரு
போதை விழியில் வைத்தான்
மின்னலென மனம் கொன்றிடக் காதலை
மெல்ல இழையவிட்டான்

சின்னதென பல பூக்கள் செய்து அதில்
தேனை நிரப்பியவன்
தின்னும்சிறு வண்டு தேவை முடிந்ததும்
தென்றலில் ஓடவைத்தான்
இன்னரும் ராகங்கள் தான் படைத்து அதில்
ஏனோ முகாரி வைத்தான்
பொன்னெழில் வண்ணசிலை வடித்து அதைப்
போட்டு உடைக்க வைத்தான்

தண்ணீரில் தாமரை தான்படைத்து மனம்
தாகமெடுக்க வைத்தான்
விண்ணின் கதிருக்கும் வீதி மலருக்கும்
வேடிக்கை காதல் வைத்தான்
மண்ணில் இருப்பது மாயமென்ன? மனம்
மாறும் உணர்வு வைத்தான்
எண்ணி மனங்காவல் கொள்ளவில்லை யெனில்
என்றுமே துன்பம் வைத்தான்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதலை ஏன் படைத்தான்? (கவிதை) Empty Re: காதலை ஏன் படைத்தான்? (கவிதை)

Post by சிவா Mon Oct 18, 2010 2:45 am

///பொன்னிற் அழகென்னும் மாதர்செய்து ஒரு
போதை விழியில் வைத்தான்///


இந்த உலகத்தின் இயக்கம் சீராக இருக்க வேண்டும் என்றுதான் இவ்வாறு படைத்தான்! ஆண்களின் வெற்றிக்கு இந்தக் காதல்தானே துணை புரிகிறது! காதலில்லா உலகம், காற்று இல்லாத நரகம்!


காதலை ஏன் படைத்தான்? (கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலை ஏன் படைத்தான்? (கவிதை) Empty Re: காதலை ஏன் படைத்தான்? (கவிதை)

Post by T.N.Balasubramanian Mon Oct 18, 2010 7:54 am

காதலை ஏன் படைத்தான் என கேட்டால்,
கவிஞர் பலர் உருவாக என்றிடுவேன்.

அருமையான கவிநயம், கிரிஹாசன்.
வாழ்த்துக்கள் அன்பு மலர் .

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காதலை ஏன் படைத்தான்? (கவிதை) Empty Re: காதலை ஏன் படைத்தான்? (கவிதை)

Post by arsad Mon Oct 18, 2010 10:56 am

இனிமையான கவிதைக்கு என் வாழ்த்துக்கள்!!!
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

காதலை ஏன் படைத்தான்? (கவிதை) Empty Re: காதலை ஏன் படைத்தான்? (கவிதை)

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 18, 2010 11:04 am

சின்னதென பல பூக்கள் செய்து அதில்
தேனை நிரப்பியவன்
தின்னும்சிறு வண்டு தேவை முடிந்ததும்
தென்றலில் ஓடவைத்தான்
இன்னரும் ராகங்கள் தான் படைத்து அதில்
ஏனோ முகாரி வைத்தான்
பொன்னெழில் வண்ணசிலை வடித்து அதைப்
போட்டு உடைக்க வைத்தான்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

காதலை ஏன் படைத்தான்? (கவிதை) Empty Re: காதலை ஏன் படைத்தான்? (கவிதை)

Post by அருண் Mon Oct 18, 2010 11:13 am

காதலை ஏன் படைத்தான் என்று காதலுக்கு புது விளக்கமளித்து அருமையாக கவிதை வடித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காதலை ஏன் படைத்தான்? (கவிதை) Empty Re: காதலை ஏன் படைத்தான்? (கவிதை)

Post by kirikasan Mon Oct 18, 2010 7:43 pm

பாராட்டிய அனைவருக்கும் என் அன்புகலந்த நன்றிகள்! தங்கள் அன்பான வாழ்த்துகளோடு தொடர்கிறேன். நன்றி!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதலை ஏன் படைத்தான்? (கவிதை) Empty Re: காதலை ஏன் படைத்தான்? (கவிதை)

Post by அன்பு தளபதி Mon Oct 18, 2010 10:02 pm

இனிமையான கவிதை ஏக்கம் அதிகம் காதலின் மீது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலை ஏன் படைத்தான்? (கவிதை) Empty Re: காதலை ஏன் படைத்தான்? (கவிதை)

Post by Thanjaavooraan Mon Oct 25, 2010 2:25 pm

அழகிய கவிநயம் மகிழ்ச்சி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

காதலை ஏன் படைத்தான்? (கவிதை) Empty Re: காதலை ஏன் படைத்தான்? (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum