ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் பற்றிய தவறான எண்ணங்கள்

2 posters

Go down

உடல் பற்றிய தவறான எண்ணங்கள் Empty உடல் பற்றிய தவறான எண்ணங்கள்

Post by Admin Sun Oct 19, 2008 11:21 pm

மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களின் அம்சங்கள் இல்லையென்றும், உடலுறவில் தம்மால் ஆண்ளைத் திருப்பிப் படுத்த முடியாது என்றும் கவலை கொண்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

கிராமத்து பெண்களிடம் மட்டுமல்ல, நகரத்து பெண்களிடமும் இதுபோல் தங்களது உடல் அமைப்பு குறித்த தவறான எண்ணங்கள் உள்ளன. இதைத்தான் Body இமேஜ் என்று சொல்கிறோம். அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கிருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து, இது உருவாகிறது. முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும், இதுபோல் பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணுக்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும் உள்ளன. இந்த நம்பிக்கைகள் எந்த அளவுக்குச் சரியானவை என்பது பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.

இந்த நம்பிக்கைகள் எந்த காலகட்டத்தில் உருவானவை என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. விஞ்ஞானரீதியான சிந்தனைகளும், கண்டுபிடிப்புகளும் இல்லாத காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கற்பனையில்தான் விடைகளை கண்டுபிடித்தார்கள். இதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம், பெரியம்மை நோய். இது ஒரு வைரஸ் கிருமியால்தான் வருகிறது என்பது கண்டறியப்படாத காலகட்டத்தில், அம்மை என்றொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இது வருகிறது என்று உலகம் முழுவதும் நம்பினார்கள். இதுபோல் பல நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உடல் பற்றிய தவறான எண்ணங்கள் Empty Re: உடல் பற்றிய தவறான எண்ணங்கள்

Post by Admin Sun Oct 19, 2008 11:22 pm

ஆனால் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து, இதற்கெல்லாம் விடை கிடைத்துவிட்ட பிறகும், தலைமுறை தலைமுறையாக நன்றாக காலூன்றியிருக்கும் இந்த நம்பிக்கைகள் அப்படியேதான் இருக்கின்றன. இதுபோல்தான் பாடி இமேஜ் பற்றிய நம்பிக்கைகளும். ஏதோவொரு காலகட்டத்தில் தோன்றி, இன்றுவரை வந்திருக்கின்றன. இண்டெர்நெட்டில் நூற்றுக்கணக்கான சைட்கள் இதுபற்றி இருக்கின்றன என்றால், உலகம் முழுக்க இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு காலூன்றியுள்ளது பாருங்கள்.

இனி, இந்த நம்பிக்கைகள் சரியானவைதானா என்று பார்ப்போம். முதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அப்போது அதனுடைய வேலை, சிறுநீர் கழிப்பது மட்டும்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை உள்ளதால், விறைப்புத் தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியமாகிவிடுகிறது.

அதாவது, பெண் பிறப்புறுப்பின் உட்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப்படும்போதுதான், பிறப்புறுப்பின் உட்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்சகட்ட இன்பத்தைப் பெற்று திருப்தியடைகிறாள் என்பது நம்பிக்கை. அதைவிட முக்கியமானது, பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் வேறு கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில்தான் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது. பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவுகளைப் பார்ப்போம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உடல் பற்றிய தவறான எண்ணங்கள் Empty Re: உடல் பற்றிய தவறான எண்ணங்கள்

Post by Admin Sun Oct 19, 2008 11:22 pm

சாராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலையில், அதாவது விறைப்பற்ற நிலையில் ஆண் பிறப்புறுப்பு 2 அங்குலம் முதல் 4 அங்குலம் வரை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. விறைப்படைந்த நிலையில், 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப்புறுப்பின் முதல் 2 இன்ச் பகுதிகளில்தான் அவள் து}ண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அடைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில்தான் உள்ளன.

அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமில்லை. எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறைப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப்புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிகமான நீளம்கொண்டதாகத்தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்புறுப்பு அமைந்துள்ளது. எனவே ஆண் பிறப்புறுப்பு சிறியதாக உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.

முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பதுதான் உண்மை. ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக்கு அவன் மேல் விருப்பமும் ஆசையும் கொள்கிறாளோ அந்த அளவுக்குத்தான் அவள் உடலுறவின்போது திருப்தியடைகிறாள். ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக்கங்களைப் பொறுத்துதான் உள்ளது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உடல் பற்றிய தவறான எண்ணங்கள் Empty Re: உடல் பற்றிய தவறான எண்ணங்கள்

Post by Admin Sun Oct 19, 2008 11:22 pm

எனவே பெண்ணை திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன்னை விரும்பும் விதமாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியமே தவிர, ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றி கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது. தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவது தேவையில்லாதது. மூக்கு பெரிதாக இருக்கிறவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன்றாக சுவாசிக்கிறார்கள், மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அளவுக்கு நன்றாக சுவாசிக்க முடிவதில்லை என்பது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல்தான் இதுவும்.

சிறுநீர் கழிக்கும் இடங்களில் மற்ற ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும். சில ஆண்கள் தனது பிறப்புறுப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர். இதுவும் தேவையில்லாத கவலை. பொதுவாக ஒரு பொருளை பக்கத்தில் பார்ப்பதற்கும் து}ரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பக்கத்தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளை தூர விலகி நின்று பார்க்கும் போது பெரிதாகத் தெரியும். இது ஒப்ரிக்கல் இல்யூஷன் (Optical Illusion)தான். மேலும் எல்லோருக்கும் ஒரே அளவு இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை.

போலி டாக்டர்களும் மருந்து தயாரிப்பவர்களும் இந்த பயத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் பயன்படுத்திக் கொண்டு ‘‘சிறு வயதில் செய்த கோளாறுகள் காரணமாக ஆணுறுப்பு சுருங்கி விடுகிறது’’ என்று மேலும் அதிகம் பயங்காட்டி காசு சம்பாதிக்கிறார்கள். ஆனால் 18 வயதுக்கு மேல் உடல் உறுப்புகளின் வளர்ச்சி நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு சிறிதாகாது என்பதுதான் உண்மை. மேலும் எந்த மருந்து மாத்திரைகள் மூலமும் உடற்பயிற்சி மூலமும் ஆண் பிறப்புறுப்பை வளர்க்க முடியாது என்பதும் விஞ்ஞான ரீதியான உண்மை.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உடல் பற்றிய தவறான எண்ணங்கள் Empty Re: உடல் பற்றிய தவறான எண்ணங்கள்

Post by Admin Sun Oct 19, 2008 11:22 pm

இதேநிலைதான் பெண்ணின் மார்பகங்களுக்கும். அது சிறிதாக இருப்பதற்கும் பெரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்தமில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வளவு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.

பொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள்மீது நம்பிக்கை இல்லாமல் ஆகும்போதுதான் ஏற்படுகிறது. தன் உடலை காதலிக்க வேண்டும். என்ன இருக்கிறது என்பதல்ல, அதை நான் எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டுடன், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் சேர்ந்தால் போதும். பரிபூரண இன்பம் என்பதை யாராலும் தடுக்க முடியாது.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உடல் பற்றிய தவறான எண்ணங்கள் Empty tahnks

Post by ganesh12345 Tue Oct 21, 2008 1:25 pm

it is very good...i ask one question....2inch means how many centimeters...ple reply....
avatar
ganesh12345
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 01/10/2008

Back to top Go down

உடல் பற்றிய தவறான எண்ணங்கள் Empty Re: உடல் பற்றிய தவறான எண்ணங்கள்

Post by Admin Tue Oct 21, 2008 1:39 pm

2 இன்ச் = 5.08 செ.மீ
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

உடல் பற்றிய தவறான எண்ணங்கள் Empty Re: உடல் பற்றிய தவறான எண்ணங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum