புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துபாய்க் கடலில் ஒரு மாலைப் பொழுது... : அனுபவக் குறிப்புகள் Poll_c10துபாய்க் கடலில் ஒரு மாலைப் பொழுது... : அனுபவக் குறிப்புகள் Poll_m10துபாய்க் கடலில் ஒரு மாலைப் பொழுது... : அனுபவக் குறிப்புகள் Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துபாய்க் கடலில் ஒரு மாலைப் பொழுது... : அனுபவக் குறிப்புகள் Poll_c10துபாய்க் கடலில் ஒரு மாலைப் பொழுது... : அனுபவக் குறிப்புகள் Poll_m10துபாய்க் கடலில் ஒரு மாலைப் பொழுது... : அனுபவக் குறிப்புகள் Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
துபாய்க் கடலில் ஒரு மாலைப் பொழுது... : அனுபவக் குறிப்புகள் Poll_c10துபாய்க் கடலில் ஒரு மாலைப் பொழுது... : அனுபவக் குறிப்புகள் Poll_m10துபாய்க் கடலில் ஒரு மாலைப் பொழுது... : அனுபவக் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாய்க் கடலில் ஒரு மாலைப் பொழுது... : அனுபவக் குறிப்புகள்

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 17, 2010 3:23 am

துபாய்க் கடலில் ஒரு மாலைப் பொழுது... : அனுபவக் குறிப்புகள்
ச.செந்தில்வேலன்

இயற்கையின் வர்ணவித்தைக்கு முன்பு நாம் எங்கே இருக்கிறோம். இயற்கையின் எழிலுக்கு முன்பு நம் படைப்புகள் எங்கே இருக்கின்றன. மனிதர்களின் படைப்புகளான கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் யாவிற்கும் ஒரே வடிவம் தான், ஒரே வர்ணம் தான். ஆனால் இயற்கைக்கு?

அலுவலக வேலைப்பளுவிலிருந்தும், கண்களின் அயர்ச்சியிலிருந்து விடுபடவும் தூரத்திலிருக்கும் பொருளைப் பார்ப்பது நல்லது என்பர். இந்தியாவில் இருக்கும் பொழுது ஏதாவது ஒரு மரத்தைச் சிறிது நேரம் வெறித்துப் பார்ப்பதுண்டு. துபாய்க்கு வந்த பிறகு, நான் பார்ப்பது கடலைத்தான்.

என் அலுவலக அறையிலிருந்து கடலைப் பார்ப்பது எனக்கு பிடித்தமான விசயம். கடலைக் காட்டிலும் தன் வண்ணத்தையும், வடிவத்தையும் மாற்றிக்கொண்டே இருக்கும் விசயங்கள் இருக்க முடியுமா?

காலை ஏழு மணிக்குப் பார்க்கும் பொழுது நீல வண்ணத்தைக் கொண்டிருக்கும் கடல் மதியமாகிறது பொழுது ஊதா நிறத்தையும் கருநீல நிறத்தையும், பச்சை நிறத்தையும் எடுத்து வித்தை காட்டிக்கொண்டிருக்கும். அதே சமயம் கடலில் பயணம் செய்யும் பொழுது கடல் எப்படி இருக்கும்? சீற்றத்துடன் இருக்குமா? அல்லது தூரத்தில் இருந்து பார்க்கும் அதே மகிழ்ச்சியைத் தருமா என்பது போல பல கேள்விகள் மனதுக்குள் எழும்!

ஒரு நாள் கடலில் பயணம் சிறிது தூரமாவது சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்குள்ளே இருந்து கொண்டே இருக்கும். அந்த ஆவலைத் தீர்க்கும் வண்ணம் அமைந்தது தான் அலுவலக நண்பர்களுடன் இன்று சென்ற பாய்மரக் கப்பலில் கடல் உலா. அலுவலக ஊழியர்களின் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் ஆறு மாதத்துக்கோ அல்லது மூன்று மாதத்துக்கோ ஒரு முறை நிர்வாகம் இது போல வெளியே அழைத்துச் செல்வதுண்டு. இந்த முறை கடல் பயணம்.

துபாய் மெரினாவில் உள்ள படத்துறையில் இருந்து கடலுக்குள் அழைத்துச் செல்லுதல், பிறகு கடலில் குளியல், சிறிய சிற்றுண்டி என்பது போல ஏற்பாடு செய்திருந்தனர். கடலில் குளியல் என்றதால் குளிப்பதற்குத் தகுந்த உடைகளையும் எடுத்திருந்தேன். பாய்மரக்கப்பல் 40 பேர் பயணிக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தது. எங்கள் குழுவில் 10 பேர் மட்டுமே இருந்ததால் பிற சுற்றுலாவாசிகளையும் ஏற்றிக் கொண்டனர். படகில் என்னையும், இன்னொருவரையும் தவிர்த்து பெரும்பாலானோர் ஐரோப்பியர்களே.

கப்பல் கரையிலிருந்து கிளம்பி கொஞ்ச தூரம் பயணிக்கத் துவங்கியவுடன், உயரமாக இருந்த துபாய் மெரினாவிலுள்ள கட்டங்களின் உயரம் குறைய ஆரம்பித்தன. நியூயார்க் நகர மன்ஹாட்டன் பகுதிக்கு இணையாக துபாய் மெரினாவில் பல கட்டடங்கள் நிலத்துக்கும் வானுக்கும் நிற்கின்றன. இங்கே உள்ள கட்டங்களைக் கட்டத் தான் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து இலட்சக் கணக்கானோர் இரவும் பகலும் உழைக்கிறார்கள். 80 சதவீததினர் உழைப்பால் 20 சதவீதத்தினர் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். 20 சதவீதத்தில் துபாய் குடிமக்களும் ஐரோப்பியர்களுமே அடங்குவர்.

'80 - 20' விதி எப்படி எல்லாம் உறுதி செய்யப்படுகிறது பாருங்கள்!

துபாய் மெரினாவின் கட்டடகள் மறையத் துவங்கியவுடன் படகில் வந்த ஆண்களும் பெண்களும் நீச்சல் உடைக்கு மாறினார்கள். கவர்ச்சிக் கன்னிகளுக்கான உடை என்று தமிழ் சினிமா நம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் டூ-பீஸைத் தான் பெரும்பாலான பெண்கள் அணிந்திருந்தார்கள். எவரிடமும் தவறான பார்வையோ உள் நோக்கமோ இல்லை. அவர்களைப் பொருத்த வரையில் அது நீந்துவதற்கான ஓர் உடை. நம் சினிமாவினர் கோவாவையோ, நீச்சல் குளத்தையோ காட்டுப் பொழுது கவர்ச்சிக் கண்ணோட்டத்தில் நீச்சல் உடையணிந்த பெண்களைக் காட்டுவது எவ்வளவு அருவருப்பான செயல்!

மதியம் இரண்டு மணிக்குக் கிளம்பியவுடன் நண்பர்களுடன் அரட்டை, அனுபவப் பகிரல் என பயணம் குதூகலமானது. அலைகளில் மெதுவாகப் போன படகு ஆடம்பர விடுதியான அட்லாண்டிஸ் வழியாகச் சென்று ஏழு நட்சத்திர விடுதியான புர்ஸ்-அல்-அராபை நெருங்கிய பொழுது மணி மூன்றரை. பிறகு குளிக்க விருப்பமிருப்பவர்கள் குளிக்கலாம் என்று படகின் மேலாளர் கூறியவுடன் அனைவரும் கடலில் இறங்கினர். யாருமே லைஃப்-ஜாக்கட் எனப்படும் பாதுகாப்பு அங்கியை அணியவில்லை. ஆண்கள், பெண்கள் என அனைவரும் அட்டகாசமாக நீந்தி விளையாடினர். எனக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும், கடலில் குளிக்கப் பயமாக இருந்ததால் நான் குளிக்கவில்லை.

நம் நாட்டில் நீச்சல் தெரிந்தோர் எத்தனை சதவிதத்தினர் இருப்பர். உயிரைப் பாதுகாக்கத் தேவையான பயிற்சியை நம் வாழ்வியல் முறை ஏன் பழக்கப்படுத்துவதில்லை? நீர் நிலைகள் இல்லை என்று பதில் கிடைக்கும். நீர் நிலைகள் அதிகம் இருக்கும் ஊரில் அனைவருக்கும் நீந்தத் தெரியுமா? அனைவருக்கும் நீச்சல் போன்றவை தெரிந்திருந்தால் தேக்கடியில் நேர்ந்ததைப் போல விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை குறைந்திருக்குமே!

புத்தகங்கள் மட்டுமே வாழ்க்கை என்பது சரியான முறையா என்பன போன்ற எண்ணங்கள் மனதில் தோன்றின.

அனைவரும் குளித்துவிட்டு வந்த பிறகு சிக்கன் பார்பிக்யூ மற்றும் இன்னபிற உணவுகளுடன் சிற்றுண்டியைப் பரிமாறினர். சிற்றுண்டியை முடித்தவுடன் படகு திரும்பவும் கரையை நோக்கிக் கிளம்பியது.

மாலை ஐந்து மணியானவுடன் சூரியனும் கடலும் காட்டிய வித்தைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நீல நிறத்தில் இருந்த கடல் பரப்பு சூரியனின் ஒளிபட்டு வெண்ணிறமாகவும், கொஞ்ச நேரம் கழித்து இளஞ்சிவப்பு நிறத்தையும், ஊதா நிறத்தையும் காட்டி வித்தை செய்துகொண்டிருந்தது. கப்பல் மாலுமிகள் இது போல எத்தனை அருமையான காட்சிகளைக் கண்டிருப்பார்கள்? அவர்களது அனுபவத்தைக் கேட்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும்.

நாம் இளம்வயதில் வரைய ஆரம்பிக்கும் பொழுது வரைய விரும்புவது மலைகளின் நடுவிலோ அல்லது கடலின் நடுவிலோ மறையும் சூரியனைத்தான். அது போன்றதொரு சூரிய அஸ்தமனத்தைக் கடலில் பார்த்த பொழுது இளவயது நினைவுகள் கிளம்ப ஆரம்பித்தன. சூரியன் கடலில் புதைந்துவிட படகும் கரையை நெருங்க ஆரம்பித்தது.

இரண்டு மணி நேரத்துக்கு முன்பு மறைந்த துபாய் மரினாவின் கட்டங்களில் உள்ள மின்விளக்குகள் மின்மினிப் பூச்சியைப் போல மின்ன ஆரம்பித்தது. கரையை அடைந்தவுடன் அலுவலக நண்பர் என்னிடம், "கடற்காற்று என்றாலும் எவ்வளவு சுத்தமானதாக இருந்தது? வாரத்துக்கொரு முறை இது போல வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"

"நீங்கள் மீனவராக மாறிவிடுங்கள். தினமும் இது போல கடற்காற்றை சுவாசிக்க முடியும்" என்றேன், அவர்கள் படும் அவதி நம்மைப் போன்றவர்களுக்கு எப்படித் தெரியும் என்று நினைத்தவாரே!

நன்றி: http://youthful.vikatan.com/youth/NYouth/senthilvelan18112009.asp

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக