ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமானுக்காக முதல்வரை சந்திப்பேன்!

Go down

சீமானுக்காக முதல்வரை சந்திப்பேன்! Empty சீமானுக்காக முதல்வரை சந்திப்பேன்!

Post by உமர் பாரூக் Sat Oct 16, 2010 9:33 pm

''இன்னிக்கு இருக்கிற ஆயிரமாயிரம் வசதிகளை வெச்சு விஞ்ஞானி களை

உருவாக்கலாம்... விசித்திர மனிதர்களைப் படைக்கலாம். ஆனால், சீமான் மாதிரி ஒரு உணர்வாளனை யாராலும் உருவாக்க முடியாது. அவரைக் கைது செய்து வைக்கிற அளவுக்கு அவர் கொலை செய்தாரா... கொள்ளை அடிச்சாரா..? எட்டு வருஷத்துக்கு இந்தியாவையே நிர்வகிக்கிறதுக்கு தேவையான கோடிகளை சுவிஸ் வங்கியில் பதுக்கி வெச்சிருக்காங்களே... அவங்களை உள்ளே தள்ளணுமா? இல்லை, சட்டைப் பையில சல்லிப் பைசாகூட இல்லாம, ஒட்டுமொத்த தமிழினத்துக்காகவும் குரல் கொடுக்கிற சீமானை தள்ளணுமா?'' - தொண்டை நரம்பு புடைக்க தங்கர்பச்சான் இப்படிப் பேசியது மும்பையில் உள்ள தாராவி ஏரியாவில். கடந்த 10-ம் தேதி ஆயிரக்கணக்கான தமிழர்கள் மத்தியில் அனல் தெறிக்க தங்கர்பச்சான் பேசிய பேச்சு, அவர் தமிழகத்துக்கு வருவதற்குள்ளேயே இங்கே சூட்டைக் கிளப்பிவிட்டது. சரி, தங்கர் பேச்சின் சொச்ச சூட்டையும் கேட்டுவிடுவோம்...



''நிலத்தையும் நிம்மதியையும் ஒருசேரப் பறிகொடுத்துவிட்டு உயிரை மட்டுமே கடைசிப் பொருளாகப் பத்திரப்படுத்தியபடி ஈழத் தமிழினமே நாதியற்று அலைகிறது. உறவுகளுக்குக் கைகொடுக் கவோ, ஒன்றுபட்டு நிற்கவோ உரிமைகளை உணரத் தவறிய தமிழனால் முடியவில்லை. தொன்மையையும், துடிப்பையும் மறந்தவனாக அனைத்து அடையாளங்களையும் இழந்தவனாக தமிழன் மாறிவிட்டான். தனக்கென ஒரு சரியான தலைவனைத் தேர்ந்தெடுக்கக்கூட அவனுக்குத் தெரியவில்லை. நமக்கான எதிரி வெளியில் இல்லை. ஒவ்வொரு தமிழனின் உயிரையும் வாக்குகளாக்கி, நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தராமல் ஏமாற்றி அலையும் நமது அரசியல் கட்சிகள்தான் தமிழினத்தின் எதிரிகள். தண்ணீர் பிரச்னை தொடங்கி தலையில் இடிவிழும் பிரச்னை வரை தமிழன் நிர்கதியாக நிறுத்தப்பட்டு இருக்கிறான். இனம்தான் முக்கியம் என நினைத்திருந்தால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேர்ந்து போராடி நமக்கான தேவைகளைத் தீர்க்க முடியும்.

நீர் வளத்தை இழந்ததால், விவசாய ஜீவன்கள் பிச்சைக்காரர்களாகி நகரத்தை நோக்கி ஓடுகிறார்கள். வலை வீசினால்தான் வாழ்க்கை என பிழைப்பு நடத்தும் மீனவர்கள், சிங்களவனின் துப்பாக்கிக்கு பலியாகி உயிரைவிடுகிறார்கள். ஒன்றரை லட்சம் தமிழர்களை தரையில் நசுக்கிக் கொன்றது போதாது என இன்றைக்கும் முகாமுக்குள் அடைத்துவைத்து மீத வெறியையும் தீர்த்துக்கொள்கிறது வெறி பிடித்த சிங்கள அரசு. இனத்தின் மீது விழும் இத்தனை துயரங்களை 10 கோடி தமிழர்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்றால்... நாளைய வரலாறு காறித்துப்பாதா?

நான்கு லட்சம் மக்கள்தொகை கொண்டவர்கள்கூட தனி நாடாக அங்கீகரிக்கப்படுகிறபோது, இத்தனை கோடி தமிழர்கள் இருந்து என்ன புண்ணியம்? போகிற இடத்தில் எல்லாம் உதை வாங்கத்தான் இந்த இனமா? தமிழனோட தலைகளை வாக்குகளாக்கி மத்திய அரசின் காலடியில்வைத்து அதிகாரம் பெற்றுக்கொண்டு, பின் நம்மையே அழிக்கிற காரியத்தை ஒரு நிமிடம் மனதுக்குள் நினைத்துப் பார்த்தீர்களேயானால்... நம் எதிரிகள் யார் என்பது உங்களுக்குத் தெரியும்! அய்யா அரசியல்வாதிகளே... தேர்தல் நேரத்தில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கூறுபட்டு நில்லுங்கள்... ஆனால், இனம், மொழி, மண் என தமிழனுக்குப் பிரச்னை வருகிறபோது தயவுசெய்து ஒன்றாக நில்லுங்கள். இதற்காக உங்கள் கால்களில் விழவும் தயாராக இருக்கிறேன்!

எது தேசியப் பாதுகாப்புச் சட்டம்? மண்ணுக் காகவும், மக்களுக்காகவும் பேசினால் பாய்வதுதான் தே.பா.ச-வா?'' என தங்கரின் தடதடப்பு எகிற எகிற... கூட்டமும் பொங்கியது. ''செந்தமிழன் சீமானை வெளியில் எடுப்போம்... செந்தமிழ் ஆட்சியை வென்று எடுப்போம்!'' என அங்கிருந்த இளைஞர்கள் ஆவேசமாகக் குரல் கொடுக்க... தங்கரின் பேச்சு வழக்கமான பாணிக்கு மாறித் துள்ளி இருக்கிறது.

''சீமான் மேல் தமிழக முதல்வர் கலைஞருக்கு தனிப்பட்ட விரோதம் ஏதும் கிடையாது. அவரைப் பார்த்தும், அவர் தமிழைப் பார்த்தும் வளர்ந்தவங்கதான் நானும், சீமானும். சீமானை கலைஞர் எந்த அளவுக்கு நேசிக்கிறார்னு மத்தவங்களுக்குத் தெரியாது. ஆனா, அவரோட மனசை நல்லா அறிஞ்சு வெச்சிருக்கிற எனக்குத் தெரியும். சீமானை விடுவிக்கச் சொல்லி நான் முதல்வரை நேரில் சந்திச்சு கோரிக்கை வைக்கப் போறேன். உலகத் தமிழர்கள் சீமானை எப்படிப் பார்க்கிறாங்கன்னு அவர்கிட்ட உரக்கச் சொல்லுவேன். அவரைவிட்டா நாங்க சொல்றதுக்கு வேற ஆள் இல்லையே..!'' என தங்கர் முடிக்க... கூட்டமே கலங்கியது.

தங்கரின் பேச்சு முதல்வரின் மனதை அசைத்துப் பார்த்தால் சரிதான்!
உமர் பாரூக்
உமர் பாரூக்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 15/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum