Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிள்ளைகளுக்கு கீழ்படிய கற்றுகொடுங்கள்
4 posters
Page 1 of 1
பிள்ளைகளுக்கு கீழ்படிய கற்றுகொடுங்கள்
சென்ற வருடம் ஒரு குளிர்கால நாளில் சென்னையில் உள்ள ஒரு பக்தர் வீட்டுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு நமக்கு அமைந்தது. மிகச்சிறிய குடும்பமான அவர்கள் தமது சிறிய குழந்தையை என்னிடம் ஆசீர்வாதம் வாங்க செய்தனர் அந்த குழந்தை பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தது ஆரோக்கியமாகவும் இருந்தது துருதுருவென விளையாடிய அது தனது மழலைமொழியில் அப்பா இங்கே வாடா என அழைத்தது குழந்தையின் இந்த பேச்சு எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது ஆனால் அந்த பெற்றோர்கள் குழந்தை அப்படி அழைத்ததை கேட்டு சந்தோஷப்பட்டார்கள் எவ்வளவு தெளிவாக பேசுகிறான் பார் என புகழவும் செய்தார்கள் குழந்தையின் மழலைச் சொல் நல்லதை சொன்னாலும் கெட்டதை சொன்னாலும் எல்லாமே இனிமையாகத்தான் இருக்கும் ஆனால் அதன்பின் விளைவுகள் என்பது மிக மோசமாக இருக்கும் தனது விருப்பப்படியே பேசிப்பழகும் குழந்தை பெரியவன் ஆன பின்னரும் இப்படி மரியாதை இல்லாமல் பொது இடத்தில் பெரியவர்களை அழைத்தால் அவமரியாதை பிள்ளைக்கு அல்ல பெற்றவர்களுக்கே என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
எனது நண்பர் ஒருவர் பிரபலமான சினிமா நடிகர் நல்ல திறமை வாய்ந்த இயக்குநனரும்கூட பல வெற்றிபடங்களை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இன்றுகூட கொடுத்துக் கொண்டுஇருக்கிறார் அவர் வீட்டிற்கு முதல் முறையாக நான் சென்றபோது தம்பி இங்கே வாங்க குருஜீக்கு நமஸ்காரம் பண்ணுங்க என்று நண்பரின் மனைவி தன் மகனை அழைத்தார் பையன் வந்து நமஸ்காரம் செய்தான் அவனுக்கு பத்து வயதிற்குள் தான் இருக்க வேண்டும் ஆனால் அவனை அம்மா அப்பா உட்பட வீட்டு வேலைக்காரர்கள் எல்லோருமே மரியாதையுடனே அழைத்ததை பார்த்தேன் அவனும் யாரையும் ஒருமையில் அழைக்கவில்லை என்பதை கண்காணித்தேன்.
இது சம்மந்தமாக அந்த நண்பரிடம் கேட்ட போது மிக அழகான காரணம் ஒன்றை சொன்னார் நான் படித்தவனாக இருந்தாலும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன் இன்று சினிமாவில் சம்பாதித்து கார், பங்களா என்று வசதியாக இருந்தாலும் அந்தகாலத்தில் அரைவயிற்றுக்கு கூட ஆதாரம் கிடைக்காமல் பட்டினியாக இருந்து இருக்கிறேன் பலரின் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறேன் நிறையபேரின் உதவி ஒத்தாசைகளையும் பெற்றிருக்கிறேன்.வாழ்க்கையில் நான் பெற்ற அடிகளும் படிகளும் நல்ல அனுபவங்களை மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனும் அவனவன் தரத்தில் உயர்ந்தவன் என்ற பாடத்தையும் தந்து இருக்கிறது. சினிமா நடிகனின் மகன் முகஸ்துதி செய்பவர்களும் காக்கா பிடிப்பவர்களும் அவனுக்கு போலி கர்வத்தை வருங்காலத்தில் ஏற்படுத்தி விடக்கூடும் அதை மாற்றத்தான் நீ மற்றவர்களை மதித்தால் மட்டுமே உனக்கு மரியாதை கிடைக்கும் என்பதை சொல்லாமல் சொல்லவே அவனை மற்றவர்கள் மரியாதையுடன் நடத்துகிறார்கள் அவனும் மற்றவர்களிடம் பணிவுடன் நடந்து கொள்கிறான்.
அவரின் இந்த கூற்று முற்றிலும் சரியானது பெரியவர்கள் இடத்தில் பணிவுடன் நடக்க வேண்டிய அவசியத்தை குழந்தைகளிடம் நாம் எதிர் பார்க்கும் போது வார்த்தைகளால் மட்டும் எந்த பயனும் இல்லை நமது நடைமுறையை அப்படி மாற்றிக் கொண்டால் குழந்தைகளும் அதன் படியே நடக்க கற்றுக்கொள்ளும் பொதுவாக பெரியவர்கள் சொல்லுக்கு கீழ்படியாத மரியாதை கொடுக்காத எந்த குழந்தையுமே பிரச்சனைகளின் பிறப்பிடமாக இருக்கிறது. பணிவு என்ற பண்பு குழந்தைகளிடம் வந்துவிட்டால் பிற்காலத்தில் அவர்களின் செயல்திறன் மிக நன்றாகவே அமைந்துவிடும் பத்து வயதிற்குட்பட்ட குழந்தை பருவத்திலும் முன்பால பருவத்திலும் பணிவு என்ற பன்பை அவர்களிடம் உருவாக்குவது மிகவும் எளிதாக இருக்கும் கொஞ்சம் வயது வளர்ந்த பிறகு இக்காரியம் கடினமான செய்லாகி விடும்.
நாம் இதற்காக கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே கடவுள் நமக்கு சிறந்த வாய்ப்புகளை தந்து இருக்கிறான் ஒரு பூனைக்குட்டி பிறந்த சில மாதங்களிலேயே வாலிப பருவத்தை அடைந்து விடுகிறது. ஆனால் மனித குழந்தை வாலிப வயதை தொட பதினெட்டு வருடங்கள் ஆகிவிடுகிறது.
இறைவன் ஏன் இத்தனை நீண்ட கால அவகாசம் மனிதனுக்கு தருகிறான் என்பதை என்னி பார்க்க வேண்டும் குழந்தைகள் பெரியவர்களாகி அதிககாலம் வாழப்போகிறார்கள் சமுதாயத்திற்கான பங்கு பணிகளை ஆற்ற போகிறார்கள் அதற்கு நிறைய தன்னடக்கம் வேண்டும் வாழ்க்கை பாரங்களை சுமப்பதற்கு ஏற்றவாறு கடினப்பயிற்சி வேண்டும் அவைகளை குறுகிய காலத்தில் பெற்றுவிட முடியாது என்பதற்காகவே மிக நீண்ட பாலபருவம் மனிதனுக்கு கொடுக்கப் பட்டுருக்கிறது.இதனால் குழந்தைகளை நன்குகண்காணிப்பதற்கும், வளர்ப்பதற்கும் சத்தியவழியில் பயிற்சி அளிப்பதற்கும் பெற்றோர்கள் அனைவருக்குமே நல்ல வாய்ப்பு அமைகிறது. ஆனால் நாம் இந்த பொறுப்புகளை பலநேரங்களில் தட்டி கழிப்பவர்களாகவோ பயன்படுத்திக்கொள்ளும் அறிவாற்றல் இல்லாதவர்களாகவோ நடந்து கொள்கிறோம்.
பல பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளுக்கு நல்லப்பயிற்சியையும் போதனைகளையும் ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டிருக்கிறேன் அதற்கு அவர்கள் எங்களுக்கு அதையெல்லாம் செய்ய கால அவகாசம் எங்கே இருக்கிறது வேலைக்கு செல்லவும் பணம் சம்பாதிக்கவும் வீட்டு வேலைகளை கவனிக்கவும் மட்டுமே நேரம் இருக்கிறது குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளும் கொஞ்ச நேரத்தையும் புத்தி சொல்லுவது திருத்துவது என்றாகிகொண்டால் அவர்கள் நம்மை பூச்சாண்டியை பார்ப்பது போலத்தானே பார்ப்பார்கள் சந்தோஷத்தோடு ஒட்டி உறவாட எப்படி வருவார்கள் எனவே பணிவு போன்ற பண்புகளை ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டுமே தவிர நாங்கள் அதை செய்ய முடியாது என்கிறார்கள்.
இந்த கருத்தை எந்தவகையிலும் நியாயமானது என்று சொல்ல முடியாது. சென்ற மாதத்தில் ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்று இருந்தேன் அங்குள்ள வகுப்பறையை பார்த்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது மிக விசாலமான வகுப்பறை முழுவதும் பிள்ளைகள் மிக நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்தனர். ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தன்பாட்டிற்கு ஏதையோ கத்திக் கொண்டிருந்தார் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர் வீட்டிலுள்ள ஒன்றிரண்டு குழந்தைகளையே நம்மால் நிர்வாகம் செய்யமுடியாத போது நாற்பது ஐம்பது குழந்தைகளை ஒரு ஆசிரியரால் எப்படி நிர்வகிக்கமுடியும் அவரும் மனிதர்தானே அது மட்டுமல்ல ஆசிரியரோடு மாணவர்கள் இருப்பது ஒரு நாளில் வெறும் ஐந்து மணி நேரம் மட்டும் தான் மீதமுள்ள பத்தொன்பது மணிநேரம் பெற்றவர்களோடுதான் பிள்ளைகள் இருக்கிறார்கள் எனவே ஆசிரியர்களைவிட பெற்றோர்களுக்கே பொறுப்பு அதிகம் என்பதை உணரவேண்டும். ஆசிரியரிடமும் பயிலாமல் தாய் தந்தையரிடம் பயில முடியாமல் போனால் குழந்தையின் நிலை மிகவிபரீதமாகிவிடும்.
ஒழுக்கநெறி என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதை குழந்தைகள் உணராவிட்டால் எல்லோரும் நம்மைவிட மட்டமானவர்கள் யாரைவேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் பேசலாம் யாருக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ண ஆரம்பித்து விடுவார்கள் கீழ்படிவதில் உள்ள தங்களுக்கு பிடிக்காத அம்சத்தை அதாவது இயல்பாகவே ஏற்பட்ட கெட்டபழக்கத்தை விடுவதில் உள்ள சிரமத்திற்காக புதிய நல்ல இயல்புகளை ஏற்றுக் கொள்ள தயங்குவார்கள் அவர்களின் அனுபவக்குறைவு கீழ்படிதலில் உள்ள நல்ல அம்சத்தை உணரமுடியாமல் செய்து விடுகிறது எனவே பணிவின் பண்பு நலத்தை குழந்தைகளுக்கு பெற்றோரும் ஆசிரியரும் எப்படியாவது ஏற்படுத்த வேண்டும். இந்த பணியை குழந்தை நடை பழகும் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டால் சிரமம் குழந்தைக்கும் தெரியாது நமக்கும் தெரியாது.
பல குடும்பங்களில் ஒரு விபரிதமான சூழ்நிலையை நான் பார்த்து இருக்கிறேன் தாய் தகப்பனுக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இணக்கமான சூழ்நிலை இருக்காது இது குடும்பத்தில் மட்டுமல்ல பள்ளிக்கூடங்களிலும் பரவலாக காணப்படுகிறது. ஆசிரியர்கள் மாணவர்களை தையப்புடைப்பது மாணவர்கள் ஆசிரியர்களை கண்டபடி பேசுவது போன்றவைகள் இந்த விபரீத நிலையின் வெளிப்படாகும் சில சிறுவர் சிறுமிகளிடம் தனிப்பட்ட ரீதியில் பேசும்போது அவர்கள் யாரும் அம்மா அப்பாவை திறமை சாலிகள் என்று ஏற்றுக்கொள்ளாததை நான் உணர்ந்து இருக்கிறேன் இந்த நிலை குழந்தைகளின் மனதில் வளர்வதற்கு மிக முக்கியமான காரணம் பணிவு இல்லாதது ஆகும்.
ஒரு குடும்பமோ வகுப்பறையோ ஆனந்தமுடனும் களிப்புடனும் இருக்க வேண்டும் என்றால் அங்குள்ள குழந்தைகள் பணிவுடையவர்களாகவும் பெற்றோர்கள் இடத்திலும் ஆசிரியர்கள் இடத்திலும் பூரண நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும் இது மட்டுமல்ல வயதில் பெரியவர்கள் இடம் நல்ல அறிவும் அனுபவமும் நிறைந்து இருக்கும் என்பதையும் பெரியர்கள் மட்டுமே நமக்கு வழி காட்ட முடியும் நம்மை பாதுகாக்கமுடியும் என்பதை குழந்தைகள் நன்கு அறிந்து இருக்க வேண்டும்.
பணிவதும் பணியாது இருப்பதும் பழக்கத்தை பொறுத்து தான் இந்த இரண்டில் ஒன்றைதான் குழந்தைகளால் தேர்ந்தெடுக்க முடியும் அவள் சின்னப்பெண் அவளுக்கு ஒன்னும் தெரியாது அவனைக் கொண்டு எந்த வேலையும் செய்ய இயலாது என்று எல்லாம் குழந்தைகளைப்பற்றி எப்பொழுதுமே நாம் எண்ணக்கூடாது நாம் அறிந்தோ அறியாமலோ நமது மகள் நம் ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாக கவனிக்கிறாள் அந்த கவனம் அவள் மனதில் ஆழமான சில பதிவுகளை ஏற்படுத்தி இருக்கிறது அதை நாம் சுலபமாக அகற்றிடவிட முடியாது என்பதை தெளிவாக உணரவேண்டும்.
நான் சிறுவனாக இருந்தபோது எனது தந்தையார் தன்னைவிட வயது குறைந்தவர்கள் தடமும் கூட பனிவுடன் பேசுவதை பார்த்து இருக்கிறேன் அவரின் இந்த நல்லபழக்கம் இன்று வரை என்னிடம் தொடர்வதாக நம்புகிறேன் அவர் எனக்கு பணிவைப்பற்றி உபதேசிக்கவில்லை அப்படி உபதேசித்து இருந்தால் ஒரு வேளை என் மூளை அதை ஏற்றுக்கொள்ளாமல் வெளியே தள்ளி இருக்கலாம் ஆனால் அப்படி எல்லாம் நடக்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம் அவர் அறிவுரையை வார்த்தையில் காட்டாமல் வாழ்ந்து காட்டினார். எனவே குழந்தைகளை அலங்கார பொம்மைகளாக கருதாமல் கண்காணிக்கும் புகைப்படகருவிகளாக கருதவேண்டும்.
குழந்தை நடைபழகும்போதே சில நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் என்று முதலில் சொன்னேன். அதை படிக்கும் சிலர் நடக்கும் குழந்தைக்கு பேச தெரியாது. அந்த நிலையில் எப்படி கற்று கொடுப்பது என்று கேட்கலாம் இந்த பருவத்தில் வார்த்தைகளுக்கு பயனில்லை என்பது உண்மைதான் ஆனால் சில செயல்கள் நிச்சயம் பயன் தரும். கண்களால் பார்க்கின்ற எல்லா பொருள்களையுமே தொடவும் தூக்கி போடவும் குழந்தைகள் விரும்பும் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக எரிகின்ற அடுப்பை தொட அனுமதிக்க முடியுமா அல்லது கண்ணாடி பொருள்களை விளையாட கொடுக்க முடியுமா சுலபமாக கிழிந்து போகக்கூடிய புத்தக அலமாரியை அவர்களுக்காக திறந்து கொடுக்க முடியும் அப்படி கொடுத்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு நமக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் தான் என்பதை நாம் அறிவோம் குழந்தைகள் அறியுமா அவைகள்தான் வேண்டும் என்று அடம்பிடித்து அழுகின்ற குழந்தைக்கு எப்படி புரியவைப்பது அய்யோ பிள்ளை அழுகிறான் கொஞ்சநேரம் வைத்து விட்டுப்போகட்டுமே என்று குழந்தைக்கு இணங்கி போகும் பெற்றோரின் செயல் அவனது அடாவடி தனத்திற்கு அஸ்திவாரம் போட்டது போல் ஆகிறது எனவே அப்படி செய்யாமல் இருப்பதற்கு என்ன வழி என்று யோசிக்கவேண்டும் சிலர் இது ஒரு சின்ன விஷயம்தானே இதற்காக சிரமப்படவேண்டுமா என்று யோசிக்கலாம் உண்மையில் நம்மை பொறுத்தவரை அது ஒன்றுமே இல்லாத விஷயம் தான் ஆனால் குழந்தைகள் பொறுத்தவரை அப்படியல்ல.
இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் நாம் மிகவும் நிதானத்துடனும் கண்டிப்புடனும் அதே நேரம் பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் குழந்தை தனது விளையாட்டு சாமான்களை தன்னை சுற்றி பரப்பி போட்டு இருக்கிறான் சில பொருள்களை வாயிலும், கையிலும் பிடித்து இருக்கிறான் அதில் ஆணிகளோ அல்லது அதைப் போன்ற காயபடுத்தக்கூடிய பொருள்களோ இருக்கிறது என்று வைத்து கொள்வோம் உடனே நாம் அதைத் தொடதே இதைத் தொடதே எல்லாவற்றையும் கீழேபோடு என்று பதட்டத்துடன் கூச்சல் போடவோ வலுக்கப்பட்டயமாக பிடுங்கவோ கூடாது அவன் விருப்பப்படும் பொருளை அவனிடமிருந்து பிரிக்கும் போது வெறுப்போ, கோபமோ அல்லது வேகமோ காட்டாமல் வேறு ஒரு பொருளை கையில் எடுத்து அவனை கவரும்படி செய்து அவனிடம் உள்ள ஆபத்தான பொருளை சந்தோஷமாக திருப்பித்தருமாறு செய்யவேண்டும் அவன் தந்த உடன் அந்த பொருள் நம்மை வேதனைப்படுத்தியதாக பாவனை செய்ய வேண்டும் இப்படி தொடர்ந்து செய்தால் குழந்தைதனது தவறை நாளடைவில் புரிந்து கொண்டு நம் சொல்படி நடக்க ஆரம்பிக்கும்.
இப்படி செய்வதினால் கீழ்ப்படியும் பழக்கம் எப்படி வரும் என்று சிலர் கேட்கலாம் அதற்கு நம் பதில் அதை அனுபவத்தில் உணரலாம் என்று சொன்னாலும் விளக்கவேண்டியதும் கடமை ஆகிறது. பெரியவர்கள் ஆன நம் மன நிலை வேறு சின்னஞ்சிறு குழந்தைகளின் மன நிலை என்பது வேறு நாம் நமது குழந்தைப் பருவத்தில் அனுபவித்த பலவிஷயங்களை மறந்து போய்விடுகிறோம் என்பதற்காக அந்த பருவத்தில் உணர்வுகள் என்பதே கிடையாது என்று சொல் முடியாது.
தான் எடுக்கும் பொருளை மற்றவர்கள் பறித்தால் குழந்தைகளுக்கு உடனே கோபம் வரும் கோபத்தில் அழுவார்கள் பிடிவாதம் பிடிப்பார்கள் தொடர்ச்சியாக அப்படி நிகழும் போது இதை நாம் செய்யக்கூடாது போல் இருக்கிறது என்னு தங்களை தாங்களே சமாதனப்படுத்தி கொள்வார்கள் நாளடைவில் பெரியவர்கள் தங்கள் செயல்களை கட்டுப்படுத்த கூடியவர்கள் அதனால் அவர்களின் அனுமதி இல்லாமல் நாம் எதையும் செய்யக்கூடாது என்ற எண்ணம் வளர ஆரம்பித்துவிடும்.
கீழ்ப்படியும் எண்ணத்தை மிககண்டிப்பாக குழந்தைகள் இடம் வளர்க்க வேண்டும் அது மட்டுமல்ல நம்மால் தடுக்கப்பட்ட செயல்களை அவர்கள் செய்கிறார்களா தம் சொற்படி நடக்கிறார்கள் என்பதை கவனத்துடன் கண்காணிக்கவேண்டும் நம் கண்முன்னால் மட்டும் பணிவதுபோல் பணிந்துவிட்டு நாம் இல்லாத நேரத்தில் தங்களது இஷ்டப்படி நடந்து கொள்ள முயற்சிக்கிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும் நாம் இருக்கும் போது சரி இல்லாதபோது சரி குழந்தைகள் ஒரே மாதிரியாக நடப்பவர்களாக இருக்கவேண்டும் ஒரு முறை நம் சொல்லை கேட்டுவிட்டு மறுமுறை அதை அசட்டை செய்யும் பழக்கம் குழந்தைகளுக்கு இயல்பானது.
பொதுவாக குழந்தைகள் எதை செய்யக்கூடாதோ அதை செய்யதான் பிரியப்படுவார்கள் இந்த மாதிரியான தருணங்களில் அறிவுடைய பெற்றோர்கள் குழந்தையின் கவனத்தை திசை திருப்ப முயல்வார்கள் இது சில நேரங்களில் சரியானதாகவும் புத்திசாலித்தனமானதகவும் இருக்கலாம் ஆனால் பலநேரங்களில் பலனளிக்கும் என்று சொல்ல முடியாது புதியச்சூழலில் தன்னை இணைத்து பழையச்சுழலை பிள்ளை மறந்துவிட்டான் என்று நாம் நம்பிவிட முடியாது காரணம் அடுத்த தருணத்திற்காக அவன்காததிருக்கலாம் அல்லவா எனவே தொடர்ச்சியான கவனிப்பு அவசியம்.தங்களது கட்டளைகளுக்கு குழந்தைகள் கிழ்ப்படிவார்களா என்று சிலர் சந்தேகிக்கலாம் அப்படி சந்தேகப்படுபவர்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் கட்டளையிடும் போதோ கண்டிக்கும் போதோ நமது குரல் கடுமையாக உயரவே கூடாது அமைதியுடனும் தன்னடக் கத்துடனும் பேசவேண்டும் ஏன் என்றால் குழந்தைகள் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சிறு பிராணியை போன்றவர்கள் தான்.
அரகண்டநல்லூர் கடை வீதிக்கு பின்புறம் இந்திய இரயில் வேக்கு சொந்தமான ஒரு பெரிய மைதானம் இருக்கிறது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் குதிரை குட்டிகளை வண்டி இழுக்க பயிற்சி அளிப்பதற்கு குதிரைக்காரர்கள் கூட்டி வருவார்கள் சண்டித்தனம் செய்யும் அதனால் குதிரை ஒட்டிகள் அதை அடித்து விடமாட்டார்கள் அப்படி அடித்தால் பயத்தில் நடுங்கி நாளவட்டத்தில் பலகீனமான குதிரைகளாகிவிடும் என்பதினால் இதமாக தட்டி கொடுத்த கொஞ்ச நேரம் அதன் போக்கில் விட்டு பின்னர் பயிற்சி அளிப்பதை பார்த்திருக்கிறேன்.குதிரை குட்டிகளைவிட குழந்தைகள் மேலானவர்கள் எனவே அவர்களுக்கு ஒழுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் வன்மையான போக்கு உதவாது மென்மையான அணுகுமுறையே பலனை தரும் செய்யத்தகாததை குழந்தை செய்யும்போது அதை தடுப்பதோடு மட்டும் நாம் நின்று விடக்கூடாது. நீ நல்ல பிள்ளை இதைப்போல் மீண்டும் செய்யக்கூடாது என்னு பதமாக சொல்லவும் வேண்டும் சின்னசின்னச் பாராட்டு வார்த்தைகளே குழந்தைகளின் மனதை குளிர செய்துவிடும்.
பல பாடசாலைகளிலும் பெற்றோர்கள் இடத்திலும் குழந்தைகளுக்கு பணிவு அவசியம் என்று நான் வற்புறுத்தும்போது அவர்கள் ஏன் கீழ்ப்படிய வேண்டும் பெற்றோர்கள் குழந்தைகளைவிட வலுவானவர்கள் என்பதனாலா அல்லது அவர்களின் பாதுகாவலர்களாக நாம் இருக்கிறோம் என்பதினாலா என்று சிலா கேட்கிறார்கள் சில மனோதத்துவ நிபுணர்கள் கீழ்ப்படிதல் என்பதே குழந்தைகளுக்கு கூடாது அப்படி தொடர்ந்து அவர்களுக்கு பயிற்சி அளித்தால் நாளடைவில் தன்னம்பிக்கையற்றவர்களாக பிறர் துணையின்றி இயங்கமுடியாதவர்களா ஆகிவிடுவார்கள் என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் தவறுதலான கருத்தாகும் குழந்தைகள் சுயேச்சையாக செயல்படும் போது கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியமாகும் அவர்களுக்கு சட்டம் ஒழுங்குப்பற்றியோ தர்ம நீதியைப்பற்றியோ எதுவும் தெரியாது துணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்ளும் மனசக்தியும் அவர்களுக்கு கிடையாது தமது செயல்களுக்கு பின்னால் நம்மை கண்காணிக்கக்கூடிய தெறிப்படுத்தக்கூடிய ஒரு நபர் குழந்தைகளுக்கு இருக்கவேண்டும் அப்படி இருந்தால் மட்டும்தான் வருங்கால சமுதாயப் பணிகளை குடும்பப் பொறுப்புகளை அவர்களால் திறம்பட செய்யமுடியும்.தனது விருப்பப்படியே அனைத்தும் நடக்க வேண்டும் என்று விரும்புவது தான் குழந்தைகளின் இயற்கைப் பண்பாகும் இந்த பண்பு குழந்தைகளுக்கு மட்டும் சொந்தமானது என்று சொல்லிவிட முடியாது மனிதர்கள் அனைவருக்குமே இந்த எண்ணம் உண்டு அப்படி விருப்பங்களை நிறைவேற்றமுடியாத போது தடையாக நிற்பவர்களை பகைவர்களாக கருதி விடுகிறோம் சில குழந்தைகள் அப்பா மட்டும் விரும்பியபடி சாப்படுகிறார் அம்மா பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலேயே இருக்கிறார் நான் மட்டும் வேளா வேளைக்கு அவர்கள் தருவதைதான் சாப்பிட்டு பள்ளிக்கு சொல்லவேண்டுமாம் இவர்கள் மட்டும் உயர்ந்தவர்களா நான் தாழ்ந்தவனா என்று எண்ணுவார்கள் ஆனால் அவர்களே விவரப்புரிய ஆரம்பிக்கபோது பெற்றோர்களும் சில கட்டுப்பாடுகளுக்கு பணிந்துதான் நடக்கிறார்கள் என்பதை காலப்போக்கில்தான் குழந்தை உணர தலைப்படும்.
மேலும் நாம் குழந்தைகளிடம் பேசும்போது மிகத்தெளிவாகவும் கவனமாகவும் நாம் சொல்வதைஇருக்கிறார் என்ற எண்ணம் வலுவாக அவர்கள் புரிந்து கொண்டார்களா என்பதை கவனித்து பேச வேண்டும் மாடி அறையில் துணிகளை மடித்துக் கொண்டிருக்கிறோம் இஸ்திரிப்பெட்டி எடுத்துவர மறந்து விட்டோம் குழந்தையை எடுத்துவரசொல்கிறோம் அது கீழே சென்று பார்க்கிறது சிறியதும் பெரியதுமாக இரண்டு இஸ்திரி பெட்டிகள் இருக்கிறது எதை எடுத்த செல்வது என்று புரியவில்லை வந்தவர்க்கு எதாவது ஒன்றை எடுத்து போவோம் என்று பெரிய பெட்டியை தான் அதனால் இதைக்கூட ஒழுங்காக செய்யமுடிவில்லையே என்று குழந்தையை திட்டுகிறோம் நமக்கு இருக்கும் அனுபவம் குழந்தைக்கு கிடையாது நம் எதிர்பார்ப்பு எது என்று அதற்கு புரியாது வேலை செய்தும் திட்டுவாங்குவதால் குழந்தைக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது வீட்டிலிருந்து எங்கேயாவது ஒடிப்போகலாம் என்று கூட சிந்திக்க தோன்றுகிறது.
அதனால் நாம் குழந்தைகள் இடம் நமது எதிர்பார்ப்பு என்ன என்பதை தெளிவாக புரியும்படி சொன்னால் அவர்களால் திறமையாக செயல்பட முடியும் நாம் சொல்லுவதை எல்லாம் குழந்தை செய்து முடிக்கும் போது பாராட்டப்பட்டால் அதற்கு தன்னம்பிக்கை வளர்கிறது பெரியவர்கள் காட்டிய வழியில் சென்றால் தோல்வி என்பது ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்று நம்ப ஆரம்பிக்கிறது. தொடர்ச்சியாக பெரியவர்களிடம் பணிவு காட்டவும் செய்கிறது இதனால் குடும்பத்தில் அமைதியும், சந்தோஷமும் எப்போதுமே இருக்கும் எனவே குழந்தைகளுக்கு கீழ்ப்படிய கற்றுகொடுத்தே ஆக வேண்டும் .

Re: பிள்ளைகளுக்கு கீழ்படிய கற்றுகொடுங்கள்
மிகச்சிறிய விஷயம்,, இதற்குஇத்தனை பெரிய வியாக்கியானம் தேவையற்றது என்பது என்கருத்து.
மழலையர் பேசும் மொழிக்கெல்லாம் பண்பாட்டைக் கற்றுக்கொடுப்பது என்பது வீணான விஷயம்.
எனக்குத்தெரிந்த பல குழந்தைகள் சிறு வயதில் மழலையில் கேட்பனவற்றைப் பேசி மகிழ்வித்த பிறகு வளர்ந்த பின் பெரியவர் சிறியவர் பாகுபாடு அறிந்து பண்புடன் தான் நடந்து கொள்கின்றன.
சின்ன குழந்தைகளை வாங்கபோங்க என்று விளித்து அவர்களை நம்மிலிருந்து தொலைவு படுத்துவதாக நாம் உணர்வதை தவிர்க்க இயலாது.
என்னைப்பொறுத்த வரை இது தேவையற்ற மிக நீஈஈஈஈஈளமான வாதம் என்பதே..
இதனை எத்தனைபேர் பொறுமையாக வாசிப்பார் என்பதையும் நேரமும் உழைப்பும் வீணே என்பதையும் உணர்ந்தால் சரி.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பிள்ளைகளுக்கு கீழ்படிய கற்றுகொடுங்கள்
உங்களுக்கே தெரியும் .. குழந்தைகள் எதை செய்ய வேண்டாம்
என்கிறோமோ அதை தான் செய்யும் ,,,
மழலை பருவம் தானே போக போக சரியாகிடும் ..
அவர்களை இப்பவே அடிபணிய வைத்தால் அன்பு எது என்றே தெரியாமல் போயிரும் ....
குழந்தைகள் சுதந்திரமாக இருக்கட்டும் ....

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: பிள்ளைகளுக்கு கீழ்படிய கற்றுகொடுங்கள்
மிகச்சரியாக சொன்னீர்கள் கார்த்திக்... அதைத்தான் நானும் சொன்னேன்... அதுக்கு இவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈளமான அறிவுரை தேவையான்னு கேட்டேன்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பிள்ளைகளுக்கு கீழ்படிய கற்றுகொடுங்கள்
கலை wrote:மிகச்சரியாக சொன்னீர்கள் கார்த்திக்... அதைத்தான் நானும் சொன்னேன்... அதுக்கு இவ்வளவு நீஈஈஈஈஈஈஈஈளமான அறிவுரை தேவையான்னு கேட்டேன்..!
நீங்கள் சொன்னதும் சரிதான் அண்ணா..
இந்த சின்ன விசியத்துக்கு இவ்லோஓஒ பெரிய கட்டுரை தேவை இல்லை .
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: பிள்ளைகளுக்கு கீழ்படிய கற்றுகொடுங்கள்
உங்கள் கருத்துக்கு நன்றி திரு கலை மற்றும் கார்த்திக் அவர்களே
Re: பிள்ளைகளுக்கு கீழ்படிய கற்றுகொடுங்கள்
சின்ன விசயத்துக்கு இவ்வளவு பெரிய கட்டுரை தேவை இல்லைன்னு நீங்க சொல்றதை நான் ஒப்புக்கறேன் கலை
ஆனா அவர் சொல்லி இருக்கறது ஏத்துக்க வேண்டிய ஒரு விசயம்தானே

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பிள்ளைகளுக்கு கீழ்படிய கற்றுகொடுங்கள்
மேலும் சில அன்பர்களின் பின்னூட்டங்களை பார்வையிட உஜிலாதேவி தளத்திற்கு வாருங்கள்
Similar topics
» பிள்ளைகளுக்கு அரசியல் அவசியமா?
» தேங்க்ஸ் சொல்ல பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்!
» டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு! உணவே மருந்து
» பிள்ளைகளுக்கு நேர்மை - பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுங்கள்..
» வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|