புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
25 Posts - 38%
heezulia
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
4 Posts - 6%
Raji@123
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
2 Posts - 3%
prajai
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
2 Posts - 3%
M. Priya
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_m10சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 12, 2010 8:48 am

சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி:ஆஸி., பவுலர்கள் ஏமாற்றம்

பெங்களூரு: சச்சின், முரளி விஜய் சதம் அடித்து அசத்த, பெங்களூரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு சரியான பதிலடி கொடுத்தது இந்தியா. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் பெங்களூருவில் நடக்கிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 478 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் (44), விஜய் (42) அவுட்டாகாமல் இருந்தனர்.

சச்சின் அதிரடி:

நேற்று 3 ம் நாள் ஆட்டம் நடந்தது. சச்சின், விஜய் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சச்சின் அதிரடி காட்ட, விஜய் நிதானமாக ஆடினார். ஆஸ்திரேலிய பந்து வீச்சை சிதறடித்த சச்சின், ஹாரிட்ஸ் ஓவரில் ஒரு இமாலய சிக்சர் அடித்து சதம் கடந்தார். இது டெஸ்ட் அரங்கில் சச்சின் அடிக்கும் 49 வது சதம். தவிர, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவர் அடிக்கும் 11 வது சதமாக அமைந்தது.

முதல் சதம்:

சச்சினுடன் இணைந்து மறுமுனையில் அசத்திய முரளி விஜய், டெஸ்ட் அரங்கில் முதல் சதம் பதிவு செய்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறியது ஆஸ்திரேலியா. 2 சிக்சர், 14 பவுண்டரி உட்பட 139 ரன்கள் குவித்த முரளி விஜய், ஜான்சன் பந்து வீச்சில் வெளியேறினார். 3 வது விக்கெட்டுக்கு சச்சின், முரளி விஜய் ஜோடி 308 ரன்கள் குவித்து அசத்தியது. அடுத்து வந்த அறிமுக வீரர் புஜாரா, கிடைத்த வாய்ப்பை வீணடித்தார். இவர் வெறும் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.

ரெய்னா ஆறுதல்:

பின்னர் ரெய்னா, சச்சினுடன் இணைந்தார். சற்று நேரம் தாக்குப் பிடித்த ரெய்னா 32 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 435 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் (191), தோனி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

வலுவான இலக்கு?:

தற்போது இந்திய அணி முதல் இன்னிங்சில், 43 ரன்கள் பின்தங்கியுள்ளது. கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ள நிலையில், இன்றைய 4 வது நாள் ஆட்டத்தில், இந்திய அணி வலுவான இலக்கை எட்டலாம். பெரும்பாலும் இப்போட்டி "டிரா' வில் முடிய அதிக வாய்ப்பு உள்ளது.

தொடரும் சாதனை

பெங்களூரு டெஸ்டில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் சாதனை தொடர்கிறது. நேற்று முன் தினம் டெஸ்ட் அரங்கில் 14 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார்.

* நேற்று டெஸ்ட் அரங்கில் 49 வது சதம் விளாசிய சச்சின், அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். டெஸ்டில் அதிக சதம் கடந்த "டாப்-5' வீரர்கள்:

சச்சின் (இந்தியா) 171 49 14164
பாண்டிங் (ஆஸி.,) 148 39 12178
காலிஸ் (தெ.ஆ.,) 140 35 11126
கவாஸ்கர் (இந்தியா) 125 34 10122
லாரா (வெ.இண்டீஸ்) 131 34 11953

* இதுவரை டெஸ்ட் அரங்கில் 49, ஒரு நாள் அரங்கில் 46 சதங்கள் விளாசிய சச்சின், சர்வதேச அரங்கில் மொத்தம் 95 சதங்கள் விளாசியுள்ளார். இன்னும் 5 சதங்கள் அடிக்கும் பட்சத்தில் 100 சதங்களை எட்டலாம்.

* நேற்று 116 ரன்கள் எடுத்த போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்கள் எடுத்த 3 வது வீரர் என்ற சாதனை படைத்தார் சச்சின். இதற்கு முன் இங்கிலாந்தின் ஹாப்ஸ் (3636 ரன்), டேவிட் கோவர் (3269 ரன்) ஆகியோர் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.

* ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று 11 வது சதம் (31 போட்டி) அடித்தார் சச்சின். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் 2 வது இடம் பிடித்தார். இப்பட்டியலின் முதலிடத்தில் இங்கிலாந்தின் ஹாப்ஸ் (12 சதம், 41 போட்டி) உள்ளார்.

* நேற்று 191 ரன்கள் சேர்த்த சச்சின், டெஸ்ட் அரங்கில் 20 வது முறையாக, 150 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாராவை முந்தி புதிய சாதனை படைத்தார். லாரா 19 முறை 150 ரன்களை கடந்துள்ளார்.

* சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரரானார் சச்சின். இவர் இந்தியாவில் 22 சதங்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் பாண்டிங், ஹைடன் சாதனையை முறியடித்தார். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய மண்ணில் 21 சதங்கள் அடித்துள்ளனர்.

* ஒரே ஆண்டில் அதிக சதங்கள் (6) அடித்துள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார் சச்சின்.

சூப்பர் ஜோடி

நேற்று சச்சின், முரளி விஜய் ஜோடி 308 ரன்கள் எடுத்து அசத்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 வது விக்கெட்டுக்கு அதிக பட்ச ரன்களை குவித்த 2 வது ஜோடி என்ற பெருமை பெற்றது. இப்பட்டியலின் முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் கிரீம் போலக், பார்லோவ் ஜோடி உள்ளது. இந்த ஜோடி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 3 வது விக்கெட்டுக்கு 341 ரன்கள் எடுத்துள்ளது.

2 ஆண்டுகளுக்குப் பின்...

டெஸ்ட் அரங்கில் முதல் சதம் அடித்து அசத்தினார் இந்திய வீரர் முரளி விஜய். காம்பிருக்கு பதில், அணியில் வாய்ப்பு பெற்ற இவர், சாதித்துக் காட்டியுள்ளார். கடந்த 2008 ம் ஆண்டு நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானார் முரளி விஜய். அணியில் அவ்வப்போது வாய்ப்பு பெற்று வந்த இவர்,சதம் அடிக்க வில்லை. ஆனால் இவரது சதம் அடிக்கும் கனவு, 2 ஆண்டுக்குப் பின் நேற்று நிறைவேறியது. இதுவரை 8 டெஸ்டில் விளையாடியுள்ள இவர்,2 அரை சதம், ஒரு சதம் உட்பட 472 ரன்கள் குவித்துள்ளார்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்
ஆஸ்திரேலியா 478

இந்தியா

விஜய் (கே) பெய்ன் (ப) ஜான்சன் 139 (310)
சேவக் (கே) ஜான்சன் (ப) ஹில்பெனாஸ் 30 (28)
டிராவிட் (கே) நார்த் (ப) ஜான்சன் 1(7)
சச்சின்-அவுட் இல்லை- 191 (319)
புஜாரா எல்.பி.டபிள்யு., (ப) ஜான்சன் 4 (3)
ரெய்னா (கே) ஹில்பெனாஸ் (ப) கிளார்க் 32 (43)
தோனி -அவுட் இல்லை- 11 (22)
உதிரிகள் 27
மொத்தம் (122 ஓவரில் 5 விக்.,) 435

விக்கெட் வீழ்ச்சி: 1-37 (சேவக்), 2-38 (டிராவிட்), 3-346 (விஜய்), 4-350 (புஜாரா), 5-411 (ரெய்னா).
பந்து வீச்சு: ஹில்பெனாஸ் 25-5-61-1, ஜான்சன் 23-2-89-3, ஜார்ஜ் 15-1-38-0, ஹாரிட்ஸ் 39-4-153-0,கிளார்க் 8-0-27-1
வாட்சன் 7-0-28-0, காடிச் 5-0-18-0.

தினமலர்

சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 10:13 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாடகன் பாடகன்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 3:07 pm

இரண்டாவது டெஸ்டையும் இந்தியா வென்றது :suspect: :suspect: :suspect:

ஈகரை தமிழ் களஞ்சியம் சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 13, 2010 3:15 pm

என்னுடய அன்பு வாழ்த்துக்கள் சச்சின் என்றும் சிறக்கட்டும்.

சச்சின், விஜய் சதம்: இந்தியா பதிலடி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக