ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் ஒரு பகுத்தறிவாளர் !

Go down

அமெரிக்காவில் ஒரு பகுத்தறிவாளர் ! Empty அமெரிக்காவில் ஒரு பகுத்தறிவாளர் !

Post by Ramya25 Sun Aug 09, 2009 4:15 am


அமெரிக்காவில் ஒரு பகுத்தறிவாளர் !

எஸ். குருமூர்த்தி


அமெரிக்க குட்டி கருணாநிதிக்கு நேர்ந்த கதி – ஒரு உண்மைக் கதை. நம்
நாட்டில் பெரும்பாலான மக்கள், தங்களைப் பற்றியும், நம் நாட்டைப் பற்றியும்
தாழ்வான எண்ணங்கள் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நாடுகளைப்
பற்றி உயர்வாகவும் நினைக்கிறார்கள். இப்போது வெளிவந்திருக்கும் ஒரு
அமெரிக்கச் செய்தி, நம்முடைய கவனத்திற்குரியது.

அமெரிக்காவின்
ஒரு "பகுத்தறிவாளர்' செய்திகளில் வெளிப்பட்டார். அவருடைய பெயர் ஸ்டீவ்
பிட்டர்மேன். அவர் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஒன்றான ஐயோவா
மாநிலத்தில் உள்ள, "ரெட் வோக்' என்கிற குட்டி நகரத்தில் உள்ள ஒரு
கல்லூரியின் பேராசிரியர். அந்தக் கல்லூரி அரசு உதவியுடன் நடக்கும் கல்விக்
கூடம்.

ஈரோடில் கருணாநிதி கீமாயணம் துவங்கிய மூன்றாம் நாள் –
செப்டம்பர் 18ஆம் தேதி – பிட்டர்மேன் தன்னுடைய மாணவர்களுக்காக மேற்கத்திய
கலாச்சாரம் பற்றிய வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பு முடிந்த
பிறகு மாணவர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவனிடம்
அவர் பைபிளின் முதல் பகுதியான பழைய ஏற்பாட்டில் இடம் பெறும், முதல் ஆண் –
பெண் ஜோடியான ஆதம் ஏவாள் பற்றி குறிப்பிட்டு, ""இந்த ஜோடி பற்றிய பைபிள்
கதையை அப்படியே நம்பிவிடக் கூடாது'' என்று கூறினார். இந்தப் பேச்சு,
தன்னுடைய மதத்தை இழிவுபடுத்துவதாகும் – எனக் கூறி, "நான் உடனேயே
வக்கீலிடம் சென்று உங்கள் மேல் வழக்குத் தொடர வழி செய்கிறேன்' என்று அவரை
எச்சரித்தான் அந்த மாணவன்.

அவருடைய இந்த விளக்கம் ஐயோவா மாநில
டெலிவிஷன் இணைப்பு மூலமாக, இதர மாணவர்களுக்கும் ஒளிபரப்பப்பட்டதால்,
மேலும் பல மாணவர்களும் "தங்கள் மத உணர்வுகளை அந்தப் பேராசிரியர் இழிவு
செய்தால், அவருக்கு எதிராக வழக்கு தொடர்வோம்' என்று குரல் கொடுத்தனர்.
ஆதம்ஏவாள்
கதை ஒரு கற்பனை என்று கூட அவர் கூறவில்லை; அவர் பைபிளின் "பழைய ஏற்பாட்டை'
மத அடிப்படையில் இல்லாமல், கல்வி முறையில் விளக்கினார் என்று செய்திகள்
கூறுகின்றன. பகுத்தறிவாளர் ஸ்டீவ் பிட்டர்மேன் இப்படி பேசிய 48 மணி
நேரத்துக்குள் டெலிஃபோன் மூலமாக பேராசிரியர் பதவியிலிருந்து "டிஸ்மிஸ்'
செய்யப்படுகிறார். அந்தக் கல்லூரியின் கல்வித்துறை துணை முதல்வர் லிண்டா
வைலட், அவருக்கு டெலிஃபோன் செய்து பதவியிலிருந்து "கல்தா' கொடுக்கிறார்.
"இப்படிப்பட்ட
புகழ்பெற்ற, அரசு நடத்தும் சமுதாயக் கல்லூரியிலா, இதுபோன்ற நியாயமற்ற
கேட்பாரற்ற நடவடிக்கை? என்று ஆடிப் போய்விட்டார், அமெரிக்காவின்
பகுத்தறிவாளர். அரசியல் சாசனத்தில் பேச்சுரிமைக்குப் பெயர் போன நாடாயிற்றே
அமெரிக்கா! அங்கு எப்படி இப்படி... என்று அந்தக் கல்லூரியின்
அதிகாரிகளிடம் பத்திரிகையாளர் கேட்டபோது, அவர் கொடுத்த ஒரு வரி இதுதான்.
""நாங்கள் செய்தது – பிட்டர்மேனை டிஸ்மிஸ் செய்தது – பேச்சு
சுதந்திரத்திற்கு விரோதமானதல்ல. அதற்கு அர்த்தம், பிட்டர்மேன்தான்
பேச்சுரிமை வரம்புகளை மீறி பேசியிருக்கிறார்''.

""எப்படி அந்தப்
பேராசிரியரை பதவி நீக்கம் செய்யலாம்? பைபிள் ஒரு கட்டுக்கதை. ஆதம்ஏவாள்
ஒரு கற்பனை என்பது எல்லா கல்வியாளர்களும் ஒப்புக்கொண்ட விஷயமாயிற்றே'' –
என்று கூறி பிட்டர்மேனுக்கு அத்திப்பூத்தாற் போல ஒரு நாத்திகவாதி –
ஹெக்டர் அவலோஸ் – மட்டுமே வக்காலத்து வாங்குகிறார். ""அப்படியானால் உலகம்
ஆறு நாட்களில் உருவாக்கப்பட்டது என்று பைபிள் கூறுவதை நம்ப வேண்டுமா?''
என்று கேட்கிறார் அவலோஸ். இவர்களுடைய பகுத்தறிவு வாதத்தை அந்த முற்போக்கு
சமுதாயத்தில் யாரும் சட்டை செய்யவேயில்லை.
தனிப்பட்ட முறையில்
மக்களுடைய மதஉணர்வுகளைப் புண்படுத்திய பிட்டர்மேன், பேராசிரியர் பதவிக்கு
லாயக்கில்லாதவர். ஆனால் இங்கு பொதுமேடையிலும், டெலிவிஷனிலும் ஸ்ரீராமரை
கட்டுக்கதை என்று கூறியது மட்டுமல்லாமல், "ராமன் குடிகாரன்' என்று
கீழ்த்தரமாக வசைபாடிய கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியில்
தொடர்கிறார். அவர் தன்னை "கருணாநிதி' என்று யாராவது கூறினாலே தனக்கு
மரியாதைக் குறைவு – என்று நினைக்கும் அளவுக்கு புண்படும் மென்மையான மனம்
படைத்தவர்.

ஆனால் பிறர் உணர்வுகள் புண்படுவது பற்றி அவருக்குக்
கவலையோ வருத்தமோ கிடையாது. மேலும் இப்படி அவர் தன்னை முற்போக்குவாதி,
மதச்சார்பற்றவர், சிறுபான்மையினரின் காவலர், பகுத்தறிவாளர் என்றும்
பிரபலப்படுத்திக் கொண்டிருப்பவர். இப்படிப்பட்ட கருணாநிதியையும்
அமெரிக்காவின் ஸ்டீவ் பிட்டர்மேனையும் ஒப்பிடும்போது, ஒரு விபரீதமான
கற்பனை எழத்தான் செய்கிறது. நம் கருணாநிதி அமெரிக்காவில் பிறந்து, அந்தப்
பேராசிரியர் போல பகுத்தறிவு பாடம் நடத்தியிருந்தால், ஸ்டீவ்
பிட்டர்மேனுக்கு நேர்ந்த கதிதானே அவருக்கும்? அதுபோல இவருக்கு இங்கு
நடக்காததற்குக் கருணாநிதியே கூறியது போல, நம் நாட்டு மக்கள், குறிப்பாக
தமிழ்நாட்டு மக்கள், மூடர்களாகவும், மௌடீகர்களாகவும் இருப்பதுதான் காரணமா?


பின்குறிப்பு:
அமெரிக்க பேராசிரியர் ஸ்டீவ் பிட்டர்மேன் பற்றிய விவரங்களை மேலும் அறிய
(http://foxnews.com/story/0,2933,297847,00.html) என்கிற இணைய தளத்தைப்
பார்க்கவும். அதற்கு மேலும் விவரம் வேண்டுபவர்கள் இந்தச் செய்தியை
வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் "மேகன் ஹாக்கின்ஸ்' அவர்களை,
0015152848169 என்கிற தொலைபேசியிலோ அல்லது mehawkins@dmreg.com என்கிற
ஈமெயில் விலாசத்திலோ தொடர்பு கொள்ளலாம்.
avatar
Ramya25
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum