ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலியிடம் பேச்சிழந்த இராமன்

+5
கார்த்திக்
balakarthik
ரபீக்
கலைவேந்தன்
enganeshan
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாலியிடம் பேச்சிழந்த இராமன் Empty வாலியிடம் பேச்சிழந்த இராமன்

Post by enganeshan Mon Oct 11, 2010 3:17 pm

கம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான்.

வாலி இராமன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவன். சுக்ரீவன் இராமன் துணையுடன் போருக்கு அழைத்த போது தாரை வாலிக்கு எச்சரிக்கை விடுக்கிறாள். இராமன் துணையுடன் அவன் வந்திருக்கக்கூடும் என்கிறாள். ஆனால் வாலி அவளைக் கடிந்து கொள்கிறான்.

தம்பியர் அல்லது தமக்கு வேறு உயிர்
இம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை
அம்பிடைத் தொடுக்குமோ அருளின் ஆழியான்

(“தம்பிகளை விட தனக்கு உயிர் வேறு இல்லை என்கிற அளவு பாசம் வைத்துள்ள அருட்பெருங்கடலான இராமன் நானும் என் தம்பியும் நடத்தும் சண்டையில் அம்பை எய்துவானா?” என்று கேட்கிறான்).

அந்த அளவு வைத்த நம்பிக்கை பொய்த்த போது, இராமன் மறைந்திருந்து அம்பைத் தொடுத்த போது, அவனுக்கு இராமன் மீது வந்த கோபம் இயல்பானது தானே. தம்பி மனைவியை அபகரித்தது குற்றம் என்ற வாதம் அவனிடம் எடுபடவில்லை. மனித தர்மத்தை விலங்குகள் எங்களிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்றவன் விட்ட சொற்கணைகள் மிகவும் கூர்மையானவை.

வீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு என்னுடல்
பாரம் அன்று; பகையன்று: பண்பு ஒழிந்து
ஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ.

(இது வீரம் அல்ல; விதி அல்ல; தர்மம் அல்ல; உன் மண்ணுக்கு நான் பாரம் அல்ல; உனக்கு நான் பகைவனும் அல்ல; அப்படியிருக்கையில் பண்பில்லாமல், இரக்கமில்லாமல் ஏன் இப்படிச் செய்தாய்?)

வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே! நீ பரதன் முன் தோன்றினாயே!
தீமை தான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கு அன்றாமோ?
தாய்மையும் அன்றி நட்பும் தர்மமும் தழுவி நின்றாய்.

(கொடுத்த வாக்கையும் மரபையும் காத்து உயிர் விட்ட தூயவன் தசரதனின் மைந்தனே! நீ போய் பரதனுக்கு முன்னால் பிறந்தாயே. தீமையை அடுத்தவர் செய்யாமல் காத்து பின் அதை நீயே செய்தால் அது தீங்கில்லாமல் போய் விடுமா?)

இப்படியெல்லாம் கேட்ட வாலிக்குப் பதில் சொல்ல முடியாமல் கம்பனின் இராமன் ஊமையாக நின்றான். வால்மீகியின் இராமன் வாலிக்குப் பதில் சொல்கிறான். “ஆம் நான் அப்படித் தான் சேய்தேன். அதில் என்ன தவறு? நீ ஒரு வானரம் தானே. நீ வேட்டையாடுவதற்கு ஏற்ற பிராணி. என்னைப் போன்ற அரசர்கள் உன்னை வேட்டையாடுவதற்கு உரிமையுள்ளவர்கள். அவர்கள் மறைந்து நின்றோ, வேறு தந்திரங்களைக் கொண்டோ வேட்டையாடுவதில் தவறில்லை. உன்னை எனக்குத் தகுந்த எதிரியாக நினைத்து நான் ஏன் உன்னிடம் நேரிட்டு சண்டையிட வேண்டும்?”

ஆனால் கம்பனின் இராமன் உயர் பண்பின் சிகரம். வாலியின் குற்றச்சாட்டில் இருக்கும் நியாயத்தையும் உணர்ந்தவன் போல அவன் அப்படி எல்லாம் பேசவில்லை. எதிரில் நின்று போரிடுபவர்களின் பலத்தில் பாதியைப் பெற்று விடும் வரத்தை வாலி பெற்றிருந்ததால் தான் மறைந்து நின்று அம்பெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இராமனுக்கு இருந்தது. அதையும் சொல்லி வாதம் செய்யவில்லை கம்பனின் வீரம் மிகுந்த இராமன். கம்பனில் இலக்குவன் தான் வாலிக்கு எல்லா பதிலையும் சொல்கிறான். இராமனுடைய தர்மசங்கடமான மௌனம் இறந்து கொண்டிருந்த வாலிக்கு இரக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாலியே சமாதானம் சொல்லிக் கொள்கிறான்.

ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் செய்கை?

(உன் உயிரை, ஜனகன் பெற்ற அன்னத்தை, பாற்கடலைக் கடைந்த போது அமிர்தத்தோடு வந்த தேவியை இழந்த பின் என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்பினால் தான் இப்படிச் செய்தாய் போலும்)

வசை பாடிய வாலி இராமன் இறைவன் என்பதை மரணத்தருவாயில் உணர்ந்து எல்லாமே நீ தான் என்று துதிக்கவும் செய்கிறான்.

மூவர் நீ! முதல்வன் நீ! முற்றும் நீ! மற்றும் நீ!
பாவம் நீ! தருமம் நீ! பகையும் நீ! உறவும் நீ!

தன்னைத் தொழுது இறந்த வாலி இராமன் மனதில் உறுத்தலை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாலியின் மகன் அங்கதனிடம் பொன்னால் செய்த உடை வாளைத் தந்ததைக் கம்பன் இப்படிக் கூறுகிறான்.

தன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங்கணானும்,
பொன் உடை வாளை நீட்டி “நீ இது பொறுத்தி’ என்றான்.
என்னலும் உலகம் ஏழும் ஏத்தின; இறந்து வாலி
அந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்

”நீ இது பொறுத்தி” என்று இராமன் சொல்வது பல பட்டிமன்றங்களில் காரசாரமான விவாதத்திற்குக் காரணமாக அமைந்தது. “நீ இதைப் பெற்றுக் கொள்” என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று சிலரும், வாலியிடம் கேட்காத மன்னிப்பை அங்கதனிடம் கேட்கும் விதமாக “நீ இதைப் பொறுத்துக் கொள்” என்று இரட்டை அர்த்தத்தில் கூறுவதாகச் சிலரும் கூறுகிறார்கள்.

இரண்டாவது விதமாகவே இராமன் கூறியிருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் மேலே சொன்ன பாடலில் மூன்றாவது அடியைக் காரணம் காட்டுகிறார்கள். அப்படிச் சொன்னவுடன் ஏழு உலகங்களும் வாழ்த்தின என்றால் அது வெறும் வாளைத் தந்த செய்கைக்காக இருக்காது, இராமன் தன் செய்கைக்காக வருந்தி அந்த சொற்களைச் சொல்லியதாலேயே அவன் பெருந்தன்மைக்கு மெச்சியே ஏழு உலகங்களும் வாழ்த்தி இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.

(கிருஷ்ணாவதாரத்தில் ஒரு வேடன் தவறாக அம்பை எய்ததால் கிருஷ்ணர் உயிரை விட நேர்ந்தது. அவ்வேடன் துக்கத்துடன் கிருஷ்ணரிடம் மன்னிப்பைக் கோரிய போது கிருஷ்ணர் “இது உன் பிழை அல்ல. இது நான் சென்ற அவதாரத்தில் சம்பாதித்தது” என்று கூறியதாகச் சொல்வார்கள்.)

வால்மீகியும் கம்பனும் ஒருசில இடங்களில் வேறுபடுகிறார்கள். கம்பன் அப்படி வேறுபடுவதன் மூலம் அந்தக் கதாபாத்திரங்களை மேலும் மெருகுபடுத்துகிறான் என்பதற்கு வாலி வதம் ஒரு நல்ல உதாரணம்.

-என்.கணேசன்

[You must be registered and logged in to see this link.]

enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010

http://enganeshan.blogspot.in/

Back to top Go down

வாலியிடம் பேச்சிழந்த இராமன் Empty Re: வாலியிடம் பேச்சிழந்த இராமன்

Post by கலைவேந்தன் Mon Oct 11, 2010 3:44 pm

கண்களில் நீர் வழிய நான் வாசித்த கட்டுரை இது. ஏனோ என்னை மிகவும் தாக்கம் ஏற்படுத்தி விட்டது.

நன்றி கணேசன்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வாலியிடம் பேச்சிழந்த இராமன் Empty Re: வாலியிடம் பேச்சிழந்த இராமன்

Post by ரபீக் Mon Oct 11, 2010 3:46 pm

தகவலுக்கு நன்றி நண்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வாலியிடம் பேச்சிழந்த இராமன் Empty Re: வாலியிடம் பேச்சிழந்த இராமன்

Post by balakarthik Mon Oct 11, 2010 5:14 pm

வால்மீகியும் கம்பனும் ஒருசில இடங்களில் வேறுபடுகிறார்கள். கம்பன் அப்படி வேறுபடுவதன் மூலம் அந்தக் கதாபாத்திரங்களை மேலும் மெருகுபடுத்துகிறான் என்பதற்கு வாலி வதம் ஒரு நல்ல உதாரணம்.

உண்மைதான் ஆனால் ஒருவிசயம் வால்மீகி ராமர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் அவர் இராமாயணதை பார்த்து அதை நேரில் கண்டு படைத்தவர் அதுதான் மிக மிக உண்மையான ராமாயணம், ஆனால் கம்பனோ வால்மிகியின் ராமாயணத்தை மூலமாகக்கொண்டு படைத்தவர், கம்ப ராமாயணத்தில் பல கற்பனை செய்திகள் உண்டு அது கம்பரின் சொல் வளமைக்கும் கவிதை நயத்துக்கும் எடுத்துகாட்டு, கம்பராமாயணம் தமிழில் இருக்கும் மிக அருமையான கவிதை நயம் மிக்க ஒரு சரித்திரத்தின் தொகுப்பு ஆனால் வால்மீகி ராமாயணமோ ராமர் என்ற ஒரு அரசனின் உண்மை வாழ்கை சரித்திரம் வால்மீகி ராமாயணமே உண்மையான இதிகாசம், கம்பர் ராமாயணம் கற்பனை கலர்ந்த ராம காவியம்

Last edited by balakarthik on Mon Oct 11, 2010 6:47 pm; edited 1 time in total

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாலியிடம் பேச்சிழந்த இராமன் Empty Re: வாலியிடம் பேச்சிழந்த இராமன்

Post by கார்த்திக் Mon Oct 11, 2010 5:18 pm

balakarthik wrote:உண்மைதான் ஆனால் ஒருவிசயம் வால்மீகி ராமர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் அவர் இராமாயணதை பார்த்து அதை நேரில் கண்டு படைத்தவர் அதுதான் மிக மிக உண்மையான ராமாயணம், ஆனால் கம்பனோ வால்மிகியின் ராமாயணத்தை மூலமாகக்கொண்டு படைத்தவர், கம்ப ராமாயணத்தில் பல கற்பனை செய்திகள் உண்டு அது கம்பரின் சொல் வளமைக்கும் கவிதை நயத்துக்கும் எடுத்துகாட்டு, கம்பராமாயணம் தமிழில் இருக்கும் மிக அருமையான கவிதை நயம் மிக்க ஒரு சரித்திரத்தின் தொகுப்பு ஆனால் வால்மீகி ராமாயணமோ ராமர் என்ற ஒரு அரசனின் உண்மை வாழ்கை சரித்திரம் வால்மீகி ராமாயணமே உண்மையான இதிகாசம், கம்பர் ராமாயணம் கற்பனை கலர்ந்த ராம காவியம்

இம்புட்டு அறிவா உங்களுக்கு இருக்கு

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வாலியிடம் பேச்சிழந்த இராமன் Empty Re: வாலியிடம் பேச்சிழந்த இராமன்

Post by balakarthik Mon Oct 11, 2010 5:19 pm

கார்த்திக் wrote:

ஒத்துக்க மாட்டிங்களே

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாலியிடம் பேச்சிழந்த இராமன் Empty Re: வாலியிடம் பேச்சிழந்த இராமன்

Post by கார்த்திக் Mon Oct 11, 2010 5:34 pm

balakarthik wrote:

முடியவே முடியாது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வாலியிடம் பேச்சிழந்த இராமன் Empty Re: வாலியிடம் பேச்சிழந்த இராமன்

Post by balakarthik Mon Oct 11, 2010 5:35 pm

கார்த்திக் wrote:முடியவே முடியாது

நம்புங்கப்பா நானும் ரவுடிதான்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாலியிடம் பேச்சிழந்த இராமன் Empty Re: வாலியிடம் பேச்சிழந்த இராமன்

Post by கார்த்திக் Mon Oct 11, 2010 5:39 pm

balakarthik wrote:
கார்த்திக் wrote:முடியவே முடியாது

நம்புங்கப்பா நானும் ரவுடிதான்

காமெடி பண்ணாதிங்க .... .. . .

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வாலியிடம் பேச்சிழந்த இராமன் Empty Re: வாலியிடம் பேச்சிழந்த இராமன்

Post by balakarthik Mon Oct 11, 2010 5:42 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:முடியவே முடியாது

நம்புங்கப்பா நானும் ரவுடிதான்

காமெடி பண்ணாதிங்க .... .. . .

அம்மா சத்தியமா நானும் ரவுடிதாம்பா இவுங்களோட இவ்வளவுநேரம் பேசிகிட்டு இருந்தேனே நீ பாக்கலையா

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாலியிடம் பேச்சிழந்த இராமன் Empty Re: வாலியிடம் பேச்சிழந்த இராமன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum