ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய வல்லரசு கனவுகள்....சித்தூர் முருகேசன் சிறப்பு கட்டுரை...!

Go down

இந்திய வல்லரசு கனவுகள்....சித்தூர் முருகேசன் சிறப்பு கட்டுரை...! Empty இந்திய வல்லரசு கனவுகள்....சித்தூர் முருகேசன் சிறப்பு கட்டுரை...!

Post by அன்பு தளபதி Sun Oct 10, 2010 9:01 pm

தம்பி தனிக்காட்டு ராஜா கோபி ஒரு மெயில் அனுப்பி இருந்தார் அதில் நிர்வாண உண்மைகள் என்ற வலைப்பக்கத்துக்கு சொந்தக்காரரான சகோதரர் இந்தியா பணக்கார நாடக சில வழிமுறைகள் வைத்து இருப்பதாகவும் அதை கழுகில் வெளியிட முடியுமா? என்றும் கேட்டிருந்தார். கழுகு எப்போதும் விழிப்புணர்வூட்டும் செய்திகளிலும், மக்களை சிந்திக்க தூண்டும் செய்திகளும் வெளியிடுவதில் அதீத விருப்பம் கொண்டது எனபதை தம்பியிடம் விளக்கி.... நாங்கள் வெளியிடுகிறோம் என்று சொன்னதின் விளைவு...இதோ...சித்தூர் முருகேசனின்....இந்திய வல்லரசு கனவுகள்....உங்கள் பார்வைக்காக...



நம்ம எல்லாருக்குமே இந்த நாடு எப்படியெல்லாமோ இருந்திருக்கனும். இப்படி சீரழிய விட்டிருக்கக்க கூடாதுங்கற எண்ணம் இருக்கு. எங்கேதப்பு நடந்து போச்சு ,

யாரெல்லாம் தப்பு பண்ணினாங்கங்கற கேள்விக்கு தான் வேறு வேறு பதில்கள் இருக்கே தவிர, தப்பு நடந்து போச்சுங்கறதுல மட்டும் கருத்துவேற்றுமை கிடையாது.


நடந்து போன தப்பை திருத்த என்ன பண்றதுங்கற விஷயத்துல கருத்து வேற்றுமை இருக்கலாமே தவிர ஏதாச்சும் செய்தாகனும்பாங்கறஎண்ணம் மட்டும் நிச்சயம் இருக்கு. ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்? ஏன் இத்தனை கருத்து மோதல்கள்?


நாம எல்லாருமே ஒவ்வொரு பிரச்சினையையும் தனி தனி பிரச்சினையா பார்க்கிறோம். அதுக்கு தீர்வு என்னனு யோசிக்கறோம். அதனாலதான்இத்தனை கருத்து வேற்றுமை.


இன்னைக்கு நாட்ல எத்தனையோ பிரச்சினைகள் இருக்கு. பிறப்பு முதல் இறப்பு வரை லட்சக்கணக்கான பிரச்சினைகள். பிரசவம் நடக்கிற லேபர்ரூம்ல இருந்து சவ அடக்கம் நடக்கிற சுடுகாடு வரை பிரச்சினை பிரச்சினை தான். நாம ஆளுக்கொரு பிரச்சினையை எடுத்துக்கிட்டு அதன்தீர்வுக்காக போராடிக்கிட்டிருக்கோம்.


இத்தனை பிரச்சினைகளும் ஒரே பிரச்சினையோட பின் விளைவுகள் தான்னு நான் சொன்னா அடிக்கவே வருவிங்க. அது என்னன்னு சொன்னாவேட்டிய உருவிருவிங்க. அந்த மூல பிரச்சினை எது தெரியுமா? வறுமை.. அந்த வறுமைக்கு காரணம் என்ன தெரியுமா?


இந்த நாட்டு மெஜாரிட்டி மக்களுக்கு உற்பத்தி நடவடிக்கைகள்ள சமப்பங்கு கிடைக்கவே இல்லை.

அது என்ன உற்பத்தி நடவடிக்கை, அதுலசமப்பங்கு கிடைச்சா என்ன? கிடைக்கலன்னா என்னனு கேப்பிக. சொல்றேன்.

ஒரு த‌னிம‌னித‌னின் வ‌ருவாயைக் கொண்டு அவ‌ன் செழிப்பை க‌ண‌க்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தனி மனித வ‌ருவாயை கொண்டு அத‌ன் செல்வ‌ செழிப்பை க‌ண‌க்கிடுகிறார்க‌ள். தனிமனித வருவாய்னா என்ன? தேசீய வருமானம் டிவைடட் பை மக்கள் தொகை. அதுசரி முதலில் தேசீய‌வ‌ருவாய் என்றால் என்ன‌?
ஒரு நாட்டில் ஒரு வ‌ருட‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ம‌ற்றும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளின் (SERVICES) ம‌திப்பே தேசீய‌வ‌ருவாய்.

தேசீய‌ வ‌ருவாயை, ம‌க்க‌ள் தொகையால் வ‌குத்தால் கிடைக்கும் தொகையே த‌னி ம‌னித‌ வ‌ருவாய்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.




(அதாவ‌து ர‌ஜினி காந்தின் வ‌ருவாயையும், அவ‌ர் க‌ட்‍‍ அவுட்டுக்கு பீர் அபிஷேக‌ம் செய்யும் ர‌சிக‌னின் வ‌ருவாயையும் கூட்டி இர‌ண்டால் வ‌குத்து விடுகிறார்க‌ள். ப‌ச்சையாக‌ சொன்னால் ர‌ஜினி வ‌ருமான‌த்தை‍ அவ‌ன் ர‌சிக‌னுக்கு ப‌ங்கு போடுகிறார்க‌ள். அதாவ‌து வெறும் காகித‌த்தில்.)




இந்த இழவை வச்சுத்தான் தலைவருமானம் அதிகரிச்சுருச்சு, வாங்கும் சக்தி சாஸ்தியாயிருச்சு, நாடு முன்னேறிருச்சுன்னு பிரதமர்லருந்து,நிதிமந்திரி வரை ஜல்லியடிக்கிறாய்ங்க.


அதே வாயால தான் பருப்பு விலை ஏறிப்போச்சு அதனாலதான் பணவீக்கம் சாஸ்தியாயிருச்சு. அரிசி விலை ஏறிப்போச்சு அதனாலதான் பணவீக்கம் இரட்டை இலக்கத்துக்கு போயிருச்சுனும் சொல்றாய்ங்க.




ரஜினி வருமானத்தை பேப்பர்ல வேணம்னா சனத்துக்கு பங்கு போட்டுரலாம். நெஜமாலுமே இது நடக்குமா? மிஞ்சி மிஞ்சி போனா ராகவேந்திராகல்யாணமண்டபம் பக்கமா பொடி நடையா போனா ரஜினி சாரோட வருமானத்துலருந்து ஒரு க்ளாஸ் மோர் கிடைக்கும். தட்ஸால்.


அவருக்கு யந்திரன் சினிமாவோட உற்பத்தி நடவடிக்கைல பங்கு கிடைச்சது. பங்குக்கேத்த வருமானமும் கிடைச்சிருக்கும். நமக்கு எந்த உற்பத்திநடவடிக்கைல பங்கு கிடைக்குது? கிடைக்க போவுதுனு கேப்பிக. சொல்றேன்


மொதல்ல உற்பத்தி எப்படி நடக்குது.. அதுக்கு என்னென்ன தேவைனு பாருங்க

உற்ப‌த்தி கார‌ணிக‌ள்:

உற்ப‌த்தி கார‌ணிக‌ள் 4. அவை நில‌ம்,கூலி,முத‌லீடு,நிர்வாக‌ம் ஆகிய‌ன‌வாகும். நாட்டில் ஆதிகால‌ம் முத‌ல் நில‌விய‌ சாதி அமைப்பினால் ச‌மூக‌த்தின் மெஜாரிட்டி ம‌க்க‌ள் வாழ்க்கைக்கு ஆதாரமான க‌ல்வி கிடைக்காது கூலிக‌ளாக‌வே வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் நில‌மோ.முத‌லீடோ,நிர்வாக‌த்தில் ப‌ங்கெடுக்கும் வாய்ப்போ த‌குதியோ இல்லை.


உற்பத்தியின் ப‌ல‌ன்:

நில‌த்தை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு வாட‌கை,முத‌லீடு வைத்த‌வ‌னுக்கு வ‌ட்டி,நிர்வாக‌ம் செய்த‌வ‌னுக்கு லாப‌ம் கிடைக்கும்.

வெறும் உட‌லுழைப்பை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு என்ன‌ கிடைக்கும்? கூலி. அதிலும் சேமிப்போ,எதிர்கால‌ பாதுகாப்போ,ஸ்கில்லோ,க‌ல்வியோ இல்லாத‌ வ‌னுக்கு என்ன‌த்தை..கூலி கிடைக்கும்? தேசீய‌வ‌ருமான‌த்தில் ப‌ங்கு கிடைக்கும்?


இதுக்கு என்னதான் தீர்வு? அடுத்த பாராக்கள் கொஞ்சம் போல தியரி வரும். மூளை டைரி பால்கோவா மாதிரி ஆயிரும். இருந்தாலும் உத்தாரா படிச்சு வைங்க.

உற்பத்தி காரணிகள் 4. இங்குள்ள வர்கங்கள் ரெண்டு. ஒன்னு உழைக்கும் வர்கம் .அடுத்தது ஆளும் வர்கம். உழைக்கும் வர்கம் எண்ணிக்கைலமெஜாரிட்டி. ஆளும் வர்கமோ மைனாரிட்டி. இந்த உற்பத்தி காரணிகள்ள நிலம், நிர்வாகம், முதலீடு மூணுமே நெம்பர்ல மைனாரிட்டியாஇருக்கிற ஆளும் வர்கத்தோட கையில இருக்கு.


நெம்பர்ல மெஜாரிட்டியாக உள்ள உழைக்கும் வர்கம் கிட்டே இருக்கிறது ஜஸ்ட் உழைப்புத்தான் . இந்த இன் ஈக்வாலிட்டிதான் எல்லாபிரச்சினைக்கும் மூலம்.

உற்பத்தி காரணிகளை வச்சுத்தான் உற்பத்தி - உற்பத்தில பங்கெடுக்கிறதுன்னா உங்க கிட்டே நிலமோ,முதலீடோ, நிர்வாகமோ,உழைப்போஇருக்கனும். உற்பத்தில நீங்க ஆற்றின பங்கை வச்சுத்தான் பலன். அதாவது தேசீய வருமானத்துல உண்மையான பங்கு. அதாவதுதலைவருமானம்.


ஆளும் வர்கம் கிட்டே உள்ள 1.நிலம் 2.நிர்வாகம் 3.முதலீடு ஆகிய 3 உற்பத்தி காரணிகள்ள ஏதேனும் ஒன்னு மெஜாரிட்டியா உள்ள உழைக்கும்வர்கத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகனும். அப்பத்தான் உற்பத்தி நடவடிக்கைகள்ள அதாவது தேசீய உற்பத்தில/அதாவது தேசீய வருமானத்துலஉண்மையான,சமமான பங்கு கிடைக்கும். உண்மையிலயே தனிமனித வருவாய் உயரும்.வறுமை ஒழியும்.வறுமையின் பின் விளைவாஏற்பட்ட வறுமை சுரண்டல் முதலான லட்சத்து தொன்னூறு பிரச்சினைகளும் ஒழியும்.


(இது மட்டும் சாத்தியப்பட்டா உற்பத்தியும் பலமடங்கு பெருகும். இத்தனை நாள் உற்பத்தி நடவடிக்கைகள்ள இருந்து விலகியிருந்த உழைக்கும்வர்கம் மெஜாரிட்டி வர்கம் உற்பத்தில நேரடியா பங்கேற்கறதால உற்பத்தி பிச்சிக்கும்)

எல்லாம் சரிங்கண்ணா உற்பத்தி காரணிகளை இருவர்கங்களுக்கிடையில சமமா பிரிச்சுட்டா மேட்டர் ஓவருங்கறிங்க. மேற்படி 3 காரணில எதைதூக்கி கொடுத்துர்ரது எப்படி கொடுக்கிறதுனு கேப்பிக. சொல்றேன்.

1.முதலீடு:

ஆடுவளர்ப்பு,மாடு வளர்ப்புன்னு சின்ன சின்னதா முதலீடு கொடுக்கப்பட்டுக்கிட்டே தான் இருக்கு. ஆனா என்ன அதிகாரிங்க விளையாடிர்ராய்ங்க.வங்கி அதிகாரிங்க விளையாடிர்ராய்ங்க.

2.நிர்வாகம்:

வியாபார நிர்வாகமென்ன அரசு நிர்வாகத்தையே சன நாயகம் கொடுத்து வச்சிருக்கு. ஆனால் என்ன லாபம்? பச்சை நோட்டு, மூக்குத்தினு சூகாட்டி கதைய முடிச்சுர்ராய்ங்க

3. நிலம்:

நில உச்சவரம்பு சட்டம், வினோபாவே பூதான் மூவ்மென்ட், நம்ம கலைஞரோட ஏக்கரா திட்டம் எல்லாத்துக்கும் டோக்கராதான். போறும்போறாததுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பேரால உள்ள நிலமெல்லாமும் உஷ் காக்கி.


அது சரி உற்பத்தி துறைகள்னா எத்தனையோ இருக்கில்லயா? எல்லா துறையோட உற்பத்திக்கும் மேற்படி நாலு உற்பத்தி காரணிகள்தேவைதான். ஆனால் இந்த குப்பன் சுப்பன் எல்லாம் மேற்படி துறைகள்ள என்னத்தை சாதிக்க முடியும்னு கேப்பிக. சொல்றேன்.


நம்ம நாட்டுல இன்னைக்கும் நூத்துக்கு 70% பேரு விவசாயத்துறைய நம்பித்தான் வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்க. மத்த 30% பேரு மேற்படி 70%பேருக்கு தேவையான பொருட்களையும், சேவைகளையும் தந்தபடி வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்க. அதாவது இந்த 70% நல்லாருந்தா இவிகளைநம்பி வாழற உபரி 30% பேரும் நல்லாருப்பாய்ங்க.


மேலும் இந்த நாடு விவசாயத்துக்கு சூட்டபிள். இங்கே பூகம்பம்,பாலை வனம்,பனிப்பொழிவெல்லாம் கிடயாது. ஃபேஷன் மாறிடும்ங்கறபிரச்சினை கிடையாது. ஒசாமாவுக்கும் கோதுமை தேவை. ஒபாமாவுக்கும் கோதுமை தேவை. உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள துறை.பொல்யூஷன் கிடையாது. இயற்கைக்கு நெருக்கமான துறை. ஐ.டி மாதிரி ஆட்குறைப்பு , ஆடை குறைப்பு,ஆடை குலைப்புக்குஅவசியமிருக்காது . ஆண்,பெண் குளுவான் ,குஞ்சுங்கற வித்யாசமே கிடையாது.எல்லாரும் உற்பத்தில நேரடியா பங்கு பெறலாம்.


அதனால நிலம்னா எல்லா நிலத்தையும் பறிக்கலைன்னாலும் விவசாய நிலம் வரையாச்சும் பறிச்சு உழைக்கும் வர்கத்துக்கு தந்தாகனும். இதுமுடியுமா? முடியவே முடியாது. ரத்த ஆறு ஓடும்.



என்னதான் தீர்வு?

நேரடியா பறிச்சு , கை மாத்தினாதானே ரத்த ஆறு. நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்கினால்? கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துத்தினால்? ரத்தம் ஐஸ் வாட்டர் மாதிரி ஆயிரும் தலைவா.




விவசாயிகளின் கூட்டுறவு சங்கம் மத்திய மானில அரசாங்கங்களோட உதவி, மேற்பார்வைல விவசாயம் பண்ணுவாய்ங்க. லார்ஜ் ஸ்கேல்ல பண்றதால க்ராப் இன்ஷியூரன்ஸ், மார்க்கெட்டிங் எல்லாம் ஸோ ஈஸி.

ஆமா இருக்கிற நிலத்துக்கே பாசனத்துக்கு வழியில்லே.இதுல சங்கமாவது,பண்ணை விவசாயமாவதுனு முனகல் கேட்குது. இதுக்கு ஒரு தீர்வு இருக்கு


நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல். மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல். கையோட கையா விவசாய உற்பத்திகளை பாதுகாக்க தேவையான கிடங்குகளையும் நிர்மாணிக்கலாம்.


ஆமா.. இப்போ நடைமுறைல உள்ள பாராளுமன்ற ஆட்சி முறைல,எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைல இந்த திட்டத்தையெல்லாம் எப்படி நடை முறைப்படுத்தறதாம்னு கேப்பிக. சொல்றேன்.


பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல். இதனால அரசாங்கத்துக்கு மட்டுமல்லாம கட்சிகள் வேட்பாளர்களுக்கும் தேர்தல் செலவு குறையும். மும்முணை போட்டி ஏற்பட்டு மக்கள் தொகைல 52 சதவீதமா இருக்கிற பி.சி,எஸ்.சி, மைனாரிட்டி மக்கள்ள பாதி பேர் ஒரு பார்ட்டிக்கு ஓட்டு போட்டா கூட உண்மையான பி.சி,எஸ்.சி, மைனாரிட்டி மக்களின் நலம் விரும்பி பிரதமராக வாய்ப்பிருக்கு. ஸ்திரத்தன்மை இருக்கும். எம்.பிக்களோட தயவை நம்பி காலம் தள்ள வேண்டாம். மேலவைக்கு வாயிதா போன கிழவாடிகளை நியமிக்காம உண்மையான அறிவு ஜீவிகளை நியமிக்கலாம்.


இதுவரைக்கும் லாஜிக்கலா தான் இருக்கு. ஆனால் மூட்டை மூட்டையா கருப்பு பணம் வச்சிருக்கிறவன்லாம் தூங்குவானா? நல்லது நடக்க விடுவானானு கேப்பிக சொல்றேன்.


தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்


இப்போ ரத்தின சுருக்கமா பார்ப்போம்:

1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல் ,.

2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்.

3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல், நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். 4.கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்,.


5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்



கழுகிற்காக,
சித்தூர் முருகேசன்.
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum