ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிற பேதம் கூடாது

Go down

நிற பேதம் கூடாது Empty நிற பேதம் கூடாது

Post by சிவா Sun Oct 10, 2010 3:42 pm

பரந்து விரிந்து நிழல்பரப்பிக் கொண்டிருந்தது வேப்பமரம். பறந்து கொண்டிருந்த வெள்ளைப்புறாவின் கண்களில் வேப்பமரம் தென்பட... இளைப்பாற எண்ணி, அதன் கிளையில் வந்து அமர்ந்தது.

தன்னுடைய கண்களை உருட்டி சுற்றும் முற்றும் பார்த்தது. மற்றொரு கிளையில் இரண்டு கிளிகள் சந்தோசமாய் கதைபேசி சிரித்துக் கொண்டிருந்தன. மகிழ்ச்சியுடன் கிளிகளின் அருகே போய் உட்கார்ந்து, நலம் விசாரித்தது. கிளிகளும் புறாவின் வரவில் மகிழ்ச்சி அடைந்தன.

பனைமரத்தில் அமர்ந்திருந்த காகம் ஒன்று கிளிகளும், புறாவும் சந்தோசமாகப் பேசிச் சிரிப்பதைக் கண்டு, தானும் அதில் கலந்து கொள்ள விரும்பியது. பனை மரத்தை விட்டுப் பறந்து, ``கா... கா...'' என்று தன் வருகையை அவர்களுக்குத் தெரிவித்தபடியே எதிரே வந்து அமர்ந்தது.

``வாருங்கள் சகோதரரே!'' - கிளிகள் சந்தோசமாய் வரவேற்றன. அதேசமயம் புறாவின் முகம் மாறியது. காகத்தை அலட்சியமாகப் பார்த்தது. இந்தக் கறுப்போடு இருந்தால் தனக்கு இழுக்கு என்று எண்ணி, `விருட்'டென்று அங்கிருந்து பறந்து சென்றது. காகத்தின் முகம் சோகமாய் மாறிவிட... கிளிகள் ஆறுதல் கூறின.

வெள்ளைப்புறாவுக்கு எப்போதுமே கர்வம் அதிகம். தன் அழகில் அகந்தை கொள்ளும். தன் வெள்ளையான நிறத்தைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாகப் பேசும்.

அன்று புறாவிற்கு அகோர பசி. பசியின் தாக்கத்தால் மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. அதனால் அதிக தூரம் பறக்க முடியவில்லை. அயர்வுடன் அருகிலிருந்த ஆலமரத்தில் போய் அமர்ந்தது.

ஆலமரத்தடியில் நிறைய காகங்கள் சிறுவர்கள் சாப்பிட்டதில் சிதறிக்கிடந்த தானியங்களை கொத்திக் கொண்டிருந்தன. வேர்க்கடலை, கோதுமை, அரிசி, பொரி என்று விதவிதமான தானியங்கள். அங்கு சென்றால் காகம் தனக்கும் சாப்பிட இடம் கொடுக்கும்தான். ஆனால், அவற்றுடன் அமர்ந்து உணவு உண்ண அதன் தன்
மானம் இடம் கொடுக்கவில்லை.

சிறகுகளை விரிக்கவே சிரமமாக இருந்தாலும், அங்கிருக்க விருப்பமில்லாமல் மெல்ல மெல்ல இறக்கைகளை அடித்துக் கொண்டு அவ்விடத் தை விட்டு நகர்ந்தது. சிறிது தூரம் சென்றதும் பாதையில் சிதறிக் கிடந்த கோதுமை புறாவின் கண்களில் பட்டது. அதைப் பார்த்ததும் புறா சந்தோசம் அடைந்தது.

அவ்விடத்தில் போய் அமர்ந்த புறா, பசியில் வேகவேகமாய் கோதுமையைக் கொத்தியது. கால்களை நகர்த்த முயன்றபோது, அதனால் முடியவில்லை. கால்கள் எதிலோ சிக்கிக் கொண்டிருப்பதைக் கவனித்த புறாவிற்கு, பகீரென்றது.

வேடன் விரித்த வலையில் விழுந்து விட்டோம் என்பது புறாவிற்கு தெளிவாய்ப் புரிந்தது. வலையிலிருந்து கால்களை எடுக்க எவ்வளவோ போராடியது. ம்ஹும்... முடியவே இல்லை. தோல்விதான் கிடைத்தது. மரணம் உறுதியாகி விட்டது. வேடனுக்கு உணவாகப் போகிறோம் என்பது தெரிந்ததும்... அழ ஆரம்பித்தது.

அப்போது காகம் ஒன்று வானில் பறப்பது தெரிந்தது. மரண பயத்தில் இருந்த புறாவின் கண்களுக்கு இப்போது காகத்தின் நிறம் கண்ணுக்குத் தெரியவில்லை. கடவுளாகவே தெரிந்தது காகம். மனதிலிருந்த கசடுகள் எல்லாம் காணாமல் போயின; ஆணவம் அடியோடு அழிந்து போயிருந்தது.

``காக்கையாரே... காப்பாற்றுங்கள் என்னை'' உரத்த குரலில் அழைத்தது புறா.

பறந்து கொண்டிருந்த காகத்தின் காதில் புறாவின் மரண ஓலம் விழுந்தது. வலையில் புறாவைக் கண்டதும், ஒரு நிமிடம் தயங்கியது. ஆனாலும், மரணப்பிடியில் அதனை விட்டுவிட்டுச் செல்ல காகத்திற்கு மனம் வரவில்லை.

"என்னை மன்னித்து விடுங்கள் காக்கையாரே... எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்''.

அதனைப் பார்க்க காகத்திற்குப் பரிதாபமாக இருந்தது. உடனே மனம் இளகி, ``கா... கா...'' என்று பெருங்குரலெடுத்து தன் இனத்தை அழைக்க, அடுத்த நிமிடம் நூற்றுக்கணக்கான காக்கைகள் அங்கு வந்து குழுமின. சில நிமிடங்களில் வலையிலிருந்து புறாவை மீட்டன.

குணத்தால் உயர்ந்து நின்றிருந்த காகங்களின் முன் தலைவணங்கி நின்றது புறா. அதன்பின் எந்த பேதமும் பார்க்காமல் எல்லாரிடமும் ஒற்றுமையுடன் பழக ஆரம்பித்தது.

***
எஸ். மோகனா செல்வகணேசன்


நிற பேதம் கூடாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum