புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகள் - Page 4 I_vote_lcapபழமொழிகள் - Page 4 I_voting_barபழமொழிகள் - Page 4 I_vote_rcap 
6 Posts - 67%
heezulia
பழமொழிகள் - Page 4 I_vote_lcapபழமொழிகள் - Page 4 I_voting_barபழமொழிகள் - Page 4 I_vote_rcap 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
பழமொழிகள் - Page 4 I_vote_lcapபழமொழிகள் - Page 4 I_voting_barபழமொழிகள் - Page 4 I_vote_rcap 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிகள் - Page 4 I_vote_lcapபழமொழிகள் - Page 4 I_voting_barபழமொழிகள் - Page 4 I_vote_rcap 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகள்


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 4:51 am

First topic message reminder :

#பழமொழிகள்

# அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
# அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
# அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
# அசையாத மணி அடிக்காது
# அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
# அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
# அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
# அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
# அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
# அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
# அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
# அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
# அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
# அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
# #அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
# அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
# அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
# அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
# அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
# அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
# அன்பே #கடவுள்.
# அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
# அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
# அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
# அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
# அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
# அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
# அன்பும், மனைவியும் அமைவதே #வாழ்க்கை.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:08 am

சுக துக்கம் சுழல் சக்கரம்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
சுட்ட சட்டி அறியுமா சுவை.
சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.

சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:08 am

செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

செயவன திருந்தச் செய்.
செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.

சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
சேற்றிலே செந்தாமரை போல.

சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:08 am

சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
சொல் அம்போ வில் அம்போ?
சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.

சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
சொல்வல்லவனை வெல்லல் அரிது.
சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:09 am

தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.

தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
தருமம் தலைகாக்கும்.
தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
தலை இருக்க வால் ஆடலாமா ?
தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:09 am

தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
தவளை தன் வாயாற் கெடும்.
தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:09 am

நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.

நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?

நயத்திலாகிறது பயத்திலாகாது.
நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:09 am

நல்லது செய்து நடுவழியே போனால்,
பொல்லாதது போகிற வழியே போகிறது.
நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது
கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:10 am

நா அசைய நாடு அசையும்.
நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.

நாய் இருக்கிற சண்டை உண்டு.
நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.
நாய் விற்ற காசு குரைக்குமா?
நாலாறு கூடினால் பாலாறு.
நாள் செய்வது நல்லார் செய்யார்.
நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:10 am

நா அசைய நாடு அசையும்.
நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.

நாய் இருக்கிற சண்டை உண்டு.
நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.
நாய் விற்ற காசு குரைக்குமா?
நாலாறு கூடினால் பாலாறு.
நாள் செய்வது நல்லார் செய்யார்.
நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.
நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Oct 19, 2008 5:10 am

நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
நூல் கற்றவனே மேலவன்.
நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
நூற்றைக் கொடுத்தது குறுணி.

நெய் முந்தியோ திரி முந்தியோ.
நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

நேற்று உள்ளார் இன்று இல்லை.

நைடதம் புலவர்க்கு ஒளடதம்.

நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
நொறுங்கத் தின்றால் நூறு வயது.

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்.
நோய் கொண்டார் பேய் கொண்டார்.
நோய்க்கு இடம் கொடேல்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக