ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு

4 posters

Go down

முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு Empty முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு

Post by கார்த்திக் Fri Oct 08, 2010 9:20 am



கரூர் மாவட்டம் , குளித்தலை அருகில் காவிரியின் தென் கரையில் மேட்டு மருதூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இவ்வூருக்கு செல்லும் சாலையின் கிழக்கு பக்கத்தில் பழமையான சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சோழ மாமன்னன் முதலாம் ராஜராஜன் (கி.பி.985-1014) காலத்தில் கட்டப் பட்டதாகும்.

தொல்லியல் துறையின் முதன்மை செயலாளர் (ஆணையர்) ஸ்ரீ.ஸ்ரீதர் ஆணைப் படி கல்வெட்டு முனைப்பு திட்டத்தின் கீழ் கருவூர் சேரர் அகழ்வைப்பக காப்பாட்சியர் நாக.கணேசன் கரூர் மாவட் டத்தில் ஆய்வு மேற்கொண்ட பொழுது இக்கோவிலை கண்டறிந்துள்ளார்.

மேலும் இது குறித்து நாக.கணேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில்,

’’இக்கோவில் ஆயிரம் ஆண்டு களை கடந்து இன்றும் கலை யழகுடன் காட்சியளிக்கிறது.

கருவறை, அர்த்த மண்டபம் என்ற அமைப்பில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் ஜகதி, பட்டி, குமுதவரி, கால் (சுவர்), பிரஸ்தரம் போன்றவை கருங்கற்களாலும், விமானம் செங்கற்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கருவறையின் 3 பக்கங்களிலும் வேலைப்பாடுகள் மிக்க 22 தூண்களைக்கொண்டு கருவறை கட்டப்பட்டுள்ளது. பிரஸ் தரத்தில் கொடுங்கை வரியில் பூதகணங்கள் வரிசையாக அணி வகுத்து நிற்பது போல் காட்டப்பட்டுள்ளன.

கருவறை சுவர் பகுதியிலுள்ள ஒவ்வொரு தூணிற்கும் மேல் பிரஸ்தரத்தில் கொடிக்கருக்கும் அதன் நடுவே மனித முகமும் குடைந்து அழகு படுத்தப் பட்டுள்ளது.

விமானத்தின் கட்டுமானமும், சுதை உருவங் களும் சிதைந்து விட்டதால் அவற்றைப்பற்றிய விவரம் முழுமையாக அறிய இயல வில்லை.

கருவறையின் வெளிப் பக்கத்தில் தென்மேற்கு மூலை யில் சுவர் பகுதியிலும், கருவறை குமுதவரியிலும் பொறிந்த நிலையில் கல் வெட்டு பொறிப்புகள் காணப்படுகின்றன. கருவறையின் உள்ளே பெரிய அளவில் ஆவுடையாரும், லிங்கமும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன.


கருவறையையடுத்து அர்த்த மண்டபம் உள்ளது. அர்த்த மண்டபத்தின் வெளிப்புறத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய 3 பக்கங்களில் 10 தூண்களை கொண்டு சிறிய வடிவில் அர்த்த மண்டபம் அமைக்கப் பட்டுள் ளது. ஒவ்வொரு தூணின் மேல் பகுதியில் கொடி கருக்கும் அதன் நடுவே மனித முகமும் குடைந்து காட்டப் பட்டுள்ளது.


அர்த்த மண்டபத்தின் உள்ளே மையப்பகுதியில் நான்கு தூண்கள் காணப்படுகின்றன. அர்த்த மண்டபத்தின் நுழைவு வாயிலில் தென்புற நிலைக் காலில் முதலாம் இராசராசனின் கல் வெட்டு பொறிக்கப் பட்டுள்ளது.

21 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் முதல் 10 வரிகள் தெளிவாகவும், ஏனைய வரிகள் பொறிந்தும் காணப்படுகின்றன. கோவிலின் முன் நந்தி உள்ளது. கோவில் அர்த்த மண்டபத்தின் முன் சேஷ்டாத்தேவி, விநாயகர் போன்ற உதிரி சிற்பங்கள் காணப்படுகின்றன.


இக்கோவில் கல்வெட்டு முதலாம் இராசராசனின் 11-வது ஆட்சியாண்டை சேர்ந்த கல்வெட்டாகும். தெளிவாக தெரியும் கல்வெட்டு பகுதி யிலிருந்து இவ்வூரைப் பற்றியும், இக்கோவில் இறைவனைப் பற்றியும், இக்கோவிலை கட்டிய மன்னனை பற்றியும், அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் பல புதிய தகவல்களையும் இக்கல் வெட்டுகள் உணர்த்துகின்றன.


இக்கல்வெட்டில் `ஸ்வஸ்தி ஸ்ரீ சாலை' , `கலமறுத்த கோவிராஜ', `ராஜகேஸரி ப ந்ம', `க்கு யாண்டு யக (11)', `ஆவது மீய் கோட்டு', `நாட்டு மாதான மருதூ', ` ர் ஆரா வமிதீஸ்வரத்', `து தேவர்க்கு இவ்வூ', `ர்' என்ற கல்வெட்டு பொறிப்பு களிலிருந்து இக்கோவில் மா மன்னன் முதலாம் இராசராசனின் (கி.பி.985-கி.பி.1014) பதினோறாவது ஆட்சி யாண்டில் கட்டப் பட்டுள்ளதை அறிய முடிகிறது.


இக்கல்வெட்டில் "சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜ சேகரி'' என்று பொறிக்கப்பட்டுள்ள மெய்க்கீர்த்தி தொடர் முதலாம் இராசராசனை குறிப்பதாகும். முதலாம் ராஜராஜன் கி.பி.985-ல் ஆட்சி பொறுப் பேற்றதிலிருந்து நான்காண்டு காலம் வரை (கி.பி. 989) "கோவி இராஜராஜ கேசரி'' என்றும், எட்டாவது ஆட்சியாண்டு வரை (கி.பி.993) "காந்தளுர் சாலை கலமறுத் தருளிய கோவி இராஜராஜ கேசரி'' என்றும், அதன் பிறகு வரும் அம்மன்னனது கல் வெட்டுகள் அனைத்தும் "திருமகள் போலப் பெருநிலச் செல்லியும்'' என்ற மெய் கீர்த்தியுடனும் தொடங்கு வதை அம்மன்னனது கல்வெட்டுகளில் காணலாம்.


மேட்டுமருதூர் கோவிலில் காணப்படும் கல்வெட்டு பொறிப்புகளிலிருந்து முதலாம் ராஜராஜனின் பதினோறாவது ஆட்சியாண்டில் கி.பி.996ல் இக்கோவில் கட்டப்பட்டுள்ள தையும், அம்மன்னனின் 11-வது ஆட்சியாண்டு வரை "சாலை கல மறுத்த கோவிராஜராஜ கேசரி'' என்று அம்மன்னனின் மெய்கீர்த்திகள் பொறிக்கப் பட்டுள்ளதையும் அறிய முடிகிறது.


முதலாம் ராஜராஜன் முதன் முதலில் கேரளத்திலுள்ள விழிஞம் கோட்டையையும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த காந்தளூர்ச்சாலையையும் வெற்றிகொண்டான். அம்மாபெரும் வெற்றியை நினைவு கூறும் வகையில் மூன்று வகையான தனது மெய்க் கீர்த்திகளிலும் அவ்வெற்றிகளை இடம் பெற செய்தான்.

முதலாம் ராஜராஜனின் காந்தளூர்சாலை வெற்றிக்கு பின் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் அனைத்தும் "சாலை கல மறுத்த கோவி இராஜராஜகேசரி'' என்ற மெய்க் கீர்த்தியுடன் தொடங்கப் பட்டுள்ளதையும், முதலாம் ராஜராஜனின் 11-வது ஆட்சியாண்டு வரை அம்முறை நடை முறைப் படுத்தப் பட்டுள்ளதையும், மேட்டு மருதூர் சிவன் கோவிலில் கிடைத்துள்ள கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.


இக்கல்வெட்டிலிருந்து மேட்டு மருதூர் "மாதான மருதூர்'' என்றும், அவ்வூர் ஈஸ்வரன் "ஆராவமிதீஸ்வர்'' என்றும் அழைக்கப் பட்டுள்ளமை தெரிகிறது. இக் கோவில் முதலாம் ராஜராஜனின் 11-வது ஆட்சி யாண்டில் கட்டப்பட்டுள்ள தையும், மேட்டு மருதூர், சோழப் பேரரசில் "மீய் கோட்டு'' நாட்டில் அமைந்துள்ள சிற்றூர் என்பதையும் இக்கல்வெட்டின் மூலம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.


கி.பி. 996ல் முதலாம் ராஜராஜன் காலத்தில் கட்டப் பட்டு சிறப்புற்று விளங்கிய இச்சிவாலயம் பற்றி அறிய செய்திகளை கொண்டுள்ள இக்கோவில் கல்வெட்டுகள் முற்றிலும் சிதைந்து விட்டதால் இக்கோவில் பற்றிய தொடர்ச்சி யான வரலாற்றினை கண்டறிய இயலவில்லை. எனினும் இக்கோவிலும், இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளும், கோவில் கட்டிட அமைப்பும் மாமன்னன் முதலாம் ராஜ ராஜனின் மேன்மையை பறை சாற்றும் மற்றுமொரு ஆவண மாகும்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நக்கீரன் ..


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு Empty Re: முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு

Post by சிவா Fri Oct 08, 2010 9:23 am

நம்மைப் பெருமைப்பட வைக்கும் கண்டுபிடிப்பு!


முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு Empty Re: முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு

Post by நவீன் Fri Oct 08, 2010 12:09 pm

சிவா wrote:நம்மைப் பெருமைப்பட வைக்கும் கண்டுபிடிப்பு!


முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு 453187 முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு 453187 முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு 453187 முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு 453187 முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு 453187 முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு 453187 முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு 453187 முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு 453187
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு Empty Re: முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு

Post by தாமு Fri Oct 08, 2010 12:11 pm

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு Empty Re: முதலாம் ராஜராஜன் காலத்து கோவில் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தஞ்சை பெரிய கோவில் ராஜராஜன் கோபுரத்தை மின்னல் தாக்கியது
» மாயன் காலத்து அணைக்கட்டின் பாகங்கள் மத்திய அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
» ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு
» கி.மு 1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்துக் கோவில் கண்டுபிடிப்பு
» கி.பி. 13–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் திண்டுக்கல்லில் கண்டுபிடிப்பு; முருகன், நந்தி, பைரவர் சிலைகளும் இருந்தன

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum