ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீன் ஏஜ் அழகு குறிப்புகள்

2 posters

Go down

டீன் ஏஜ் அழகு குறிப்புகள் Empty டீன் ஏஜ் அழகு குறிப்புகள்

Post by சிவா Sun Sep 21, 2008 6:12 am

திருமணமாகி, குழந்தை பெற்று, இளமை காணாமல் போக ஆரம்பிக்கிற காலக் கட்டத்தில் பியூட்டி பார்லருக்குப் பெண்கள் படையெடுத்த காலம் மலையேறி விட்டது. இன்றைய பள்ளி மற்றும் கல்லு}ரி வாசல்களில் நின்று பார்த்தால் டீன் ஏஜ் பெண்களின் அழகு அட்டகாசம் பிரமிக்க வைக்கிறது. விதம் விதமான ஹேர் கலரிங், புதுசு, புதுசாய் ஹேர் ஸ்டைல்கள், ஃபேஸ் பெயிண்டிங், டாட்டூ என நாகரிகத்தின் உச்சத்துக்குப் போய் கொண்டிருக்கிறார்கள் இன்றைய டீன் ஏஜ் பெண்கள்.

டீன் ஏஜில் அழகுப்படுத்திக் கொள்வது என்பது ஆரோக்கியமானதா? ஆபத்தானதா? பிரபல அழகுக் கலை நிபுணர் வசுந்தரா என்ன சொல்கிறார்?

டீன் ஏஜில் அழகு சிகிச்சை என்பதை ஒட்டு மொத்தமாகத் தவறு என்று சொல்லிவிட முடியாது. இந்த வயதில் அவர்களுக்குத் தெரிய வேண்டிய அடிப்படை விஷயம் சுத்தம்.

அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என நினைக்கிற பலரும் இந்த வயதில் ஆரோக்கியமாகவோ, சுத்தமாகவோ இருக்க வேண்டும் என நினைப்பதில்லை.

டீன் ஏஜில் சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளின் வேலை வேகமாக, அதிகமாக இருக்கும். அதனால் முகத்தில் பருக்கள், சருமத்தில் எண்ணெய் வழிதல், வியர்வை போன்றவை இருக்கும். டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் என்ன தெரியுமா?

தினமும் மாலையில் வீடு திரும்பியதும் கிளென்சிங் மில்க் கொண்டு முகத்தைத் துடைத்து சுத்தப் படுத்த வேண்டும்.

தினம் இரண்டு முறைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்.

அடிக்கடி முகம் கழுவ வேண்டும்.

அக்குள் பகுதியில், அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சி ஆரம்பிக்கிற காலக்கட்டம் இது என்பதால் அந்த விஷயத்திலும் கூடுதல் சுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ரேசர், ரோமம் நீக்கும் கிரீம் போன்றவற்றை உபயோகித்து ரோமங்களை அகற்றாமல், வாக்சிங் செய்து கொள்ளலாம். இதனால் சருமம் கருத்துப் போகாது. வலியும் குறைவு.

வியர்வை நாற்றம் இந்த வயதில் தவிர்க்க முடியாதது. உடைகள் கறைபடியும். இதற்கு நல்ல தரமான டியோடரண்ட் உபயோகிக்கலாம். இது உடல் நாற்றத்தைப் போக்கி, வியர்வையையும் கட்டுப்படுத்தும்.

டீன் ஏஜில் பெரும்பாலானவர்களைக் கவலைக்குள்ளாக்கும் விஷயம் பரு. ஹார்மோன் மாற்றங்கள், அதிக சீபம் சுரப்பது போன்றவற்றின் விளைவால் பரு தோன்றும். வாரம் இரண்டு முறை இவர்கள் முகத்துக்கான பேக் உபயோகிக்கலாம். டீ ட்ரீ ஆயில், கற்பூரம், கிராம்பு மாதிரி ஏதேனும் ஒன்று கலந்த பேக் ஆன்டிசெப்டிக்காகவும் வேலை செய்யும். அதிக எண்ணெய் பசையையும் நீக்கும். பருக்களையும் கட்டுப்படுத்தும். பருக்கள் இருப்பவர்கள் ஆண்களோ, பெண்களோ அவற்றை நகங்களால் கிள்ளக் கூடாது.

குளிப்பதற்கு இவர்கள் அதிகக் கொழுப்பில்லாத சோப் அல்லது ஆயில் ஃப்ரீ சோப் மற்றும் ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாம். இது அவர்களது சருமத் துவாரங்களை அடைக்காமலிருக்கும்.

எண்ணெய் குளியல் என்பதை இந்தக் காலத்து டீன் ஏஜில் இருக்கும் அனேகம் பேர் அறிந்தே இருக்க மாட்டார்கள். இவர்களுக்காக வந்திருக்கிறது shower cream. எண்ணெய் கலந்த இந்த கிரீமை அப்படியே தலையில் தடவிக் கொண்டு, சிறிது நேரம் ஊறித் தேய்த்துக் குளிக்க வேண்டியதுதான். எண்ணெய் குளியல் எடுத்த எஃபெக்ட்டும் இருக்கும். ஷாம்பூ போட்டு குளித்த மாதிரிக் கூந்தலும் பளபளக்கும்.

பொடுகுப் பிரச்சினையும் இந்தப் பருவத்தில் பெரிதும் அவதி தரும். வாரம் மூன்று முறை ஆன்டி டான்டிராஃப் ஷாம்பூ உபயோகித்துத் தலைக்குக் குளிக்கலாம். இது தவிர மாதம் ஒன்றிரண்டு முறை தலைக்கு ஹாட் ஆயில் மசாஜ் செய்து கொள்ளலாம். ஆனால் தலைக்குக் குளித்த பிறகு கட்டாயம் கண்டிஷனர் உபயோகிக்க வேண்டியது முக்கியம்.

மாதவிலக்கு நாட்களில் டீன் ஏஜால் இருக்கும் பெண்கள் கூடுதல் சுத்தம் கடைப்பிடிக்கலாம். இருமுறை குளிப்பது, அடிக்கடி நாப்கின்களை மாற்றுவது தவிர, இந்த நாட்களில் உபயோகிக்கவென …ஃபெமினைன் வாஷ் என்று கிடைக்கின்றன. அவற்றை உபயோகிக்கலாம். இது துர்நாற்றத்தை நீக்கி, தொற்றுக் கிருமிகள் தாக்காமலும் காக்கும்.

இந்த வயதில் அதிகப் படியான மேக்கப்புக்குப் பழகுவது தேவையில்லாதது. டீன் ஏஜின் கடைசிக் கட்டத்தில் இருப்பவர்கள் சிம்பிளான மேக்கப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். ஆயில் ஃப்ரீ ஃபவுண்டேஷன், காம்பேக்ட் பவுடர், லைட் ஷேடுகளில் லிப்ஸ்டிக், கண் மை போன்றவற்றை உபயோகிக்கலாம். முகத்தில் எண்ணெய் வழியாமல், பளிச்செனக் காட்சியளிக்க இதுவே போதும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டீன் ஏஜ் அழகு குறிப்புகள் Empty Re: டீன் ஏஜ் அழகு குறிப்புகள்

Post by சபீர் Mon Jul 26, 2010 10:01 am

மிக்க நன்றின்னா அறியத்தந்தமைக்கு




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum