புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
157 Posts - 79%
heezulia
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
3 Posts - 2%
Pampu
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
1 Post - 1%
prajai
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
322 Posts - 78%
heezulia
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
8 Posts - 2%
prajai
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தலித் மக்களுக்காக தேவர் Poll_c10தலித் மக்களுக்காக தேவர் Poll_m10தலித் மக்களுக்காக தேவர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலித் மக்களுக்காக தேவர்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 3:00 pm

சூரியனையும், சந்திரனையும், மி்ன்மி்னிப்பூச்சிகளைப் பாவித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது பாரதி, வ.உ.சி., தேவர், அம்பேத்கார் போன்ற தேசியத்தலைவர்களை சாதியத் தலைவர்களாகச் சொல்வது.

தலித் மக்களுக்கான ஆலயப் பிரவேசம் நடத்த ராஜாஜி மந்திரிசபை சுதந்திரப் போராட்டவீரர் வைத்திய நாதய்யர் வழியாக முயன்றபோது, வெளியில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.செய்வதறியாது திகைத்துப் போயிருந்த அய்யரவர்களுக்கு "தேவரை அணுகுங்கள்" என்கிற ஆலோசனை ராஜாஜியிடமி்ருந்து கிடைத்தது.அப்பொழுது தேவரவர்களுக்கும் ராஜஜிக்கும் அரசியல் ரீதியாக முரண்பட்டு இருந்தாலும், இக்காரியத்தில் தேரரவர்கள் உதவ முன் வந்தார்.

"உங்களின் எதிர்ப்பைக் கைவிடாமல் மேலும் கெடுதல் செய்தால் நானே பல்லாயிரக்கணக்கான ஹரிசனங்களையும் மற்றுமுள்ளவர்களையும் படையாகத் திரட்டி தமி்ழகம் முழுக்க ஆலயப் பிரவேசம் செய்வேன்" - என்று சானாதனிகளைப் பார்த்து தேவரவர்கள் கடுமையாக எச்சரித்ததும் சானாதனிகள் பணிந்தனர்.இதனைத் தேவரவர்களே தமி்ழக சட்டமன்றத்திலும் தனது சொற்பொழிவில் தெரிவித்திருக்கிறார்

1952 ல் மீண்டும் ராஜாஜி மந்திரிசபை அமைந்தபோது "குலக் கல்வித்திட்டம்" என்ற வர்ணாஸ்ரம அடிப்படையிலான திட்டம் கொண்டுவந்தபோது இதை வன்மையாக எதிர்த்து இவ்வாறு கூறினார் "ராஜாஜி கொண்டு வந்த ஆலயப் பிரவேசத்தை முன்பு ஆதரித்த நாங்கள், குலக்கல்வியை எதிர்க்கிறோம்" என்று தலித்களுக்காகக் குரல் கொடுத்தார்.மேலும் அதே சபையில் பலமுறை பேசும் போதும் குலக் கல்வித்திட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.

"தகப்பன் தொழிலை மகன் செய்யத்தான் வேண்டும் மென்ர ஒரு சூழ்நிலை ஒரு சமுதாய அமைப்பு கல்வி முறை முன்பு இருந்ததது. அதை நான் மறுக்க வில்லை. ஆனால் இன்றைக்கு எந்த ஜாதியில் பிறந்தவனாக இருந்தாலும் கூட, தன்னுடைய திறமைக்கேற்ப எந்தத்தொழிலையும் செய்யலாமென்ற ஒரு சூழ் நிலை ஏற்பட்டுவிட்டது என்பது கணம் முதலமச்சரப் போன்ற அறிவாளிக்குத் தெரியாமலிருக்க முடியாது"

தலித் மக்களுக்காக 1954 மார்ச் 24 ல் அவர் ஆற்றிய உரை:

"இந்த ஹரிசனம், அதில் முன்னேற்றம் என்று சொல்லப் படுகிற விவகாரம்...
இந்திய தேசத்திற்கும், சிறப்பாக இந்து மதத்திற்கும் ஒரு பெரும் களங்கம் என்று சொன்னால் அது மி்கையாகாது - இந்த(சாதி) பழக்கமானது மக்களைச் சின்னாபீன்னப்படுத்திவிட்டது. இது பரிதாப வளர்ச்சி, பிற்போக்கான வளர்ச்சியுங்கூட
அதே போல சதோதரர்களாக வாழ்ந்த சமூகத்தால் தொழிலின் காரணமாக வகுப்பப்பட்ட பொழுது தீண்டாமை என்கிற இழிவான நிலைக்கு ஆகிவிட்டார்கள்" - என தீண்டாமைக்கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.அது மட்டுமல்ல தலித் மக்களின் வாழ்வு உயரச் செய்ய வேண்டியது என்ன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

"ஹரிசனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால் அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பழக்கத்தில் பார்க்கிறோம்.செய்யவேண்டியது என்னவென்று கேட்டால், பெரும்பாலான நிலங்கள் வீணாகக் கிடக்கின்றன. அந்த பெரும்பாலான நிலங்களை தர்காஸ்து கொடுக்கிறபோது பழைய அரசாங்கத்தின் பழக்கப்படியே உயர்ந்தவர்கள், வேண்டியவர்கள் என்பவர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறதே தவிர, அந்த ஏழைகளுக்கு ஏன் சலுகை காட்டவில்லை...?

பெரும்பாலான ஹரிசனங்கள் உழுதுகொண்டே வாழ்வோர்களாக சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கை கட்டி வாழ்கிற இழிவான நிலைமையிலிருந்து மாறி ஹரிசனங்கள் நல்ல விவசாயிகளாவார்கள். அந்த முறையில் ஹரிசனப் பிரச்சினையை 60% செளகரியமாகத் தீர்க்கலாம்"

மதுரையில் ஹரிஜனங்களுக்கு என்று ஒரு விடுதியை அரசு கட்டியது, அது ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமாகக் கட்டினார்கள் இதனை தேவர் விமர்சித்தார்:
"அது நகரத்தின் மத்தியில் இருந்திருக்குமானால் பல ஹரிஜனங்கள் வந்து தங்கவோ, அவர்கள் இதர சமூகத்தோடு பழகவோ வசதியளிக்கும்" என்றார்.

தலித் மக்களூக்காக வாதாடும் உரிமையோடு ஹரிஜன சகோதரர்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன் "ஹரிஜனங்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் ஒன்று சேர, சாப்பிடக் கூசுகிறபொழுது எங்களை ஒன்றாக இருக்கச் சொல்கிறார்களே என்று உயர் ஜாதியார் எங்களப் போன்ற சீர்திருத்தவாதிகளைக் கேட்க முடியாத் நிலையை உண்டாக்க வேண்டாம்."

"ஆம்! தலித் மக்களின் வாழ்வு உயர சரியான் கோரிக்கைகளை வைத்தது மட்டுமல்ல, அவற்றிற்காக தலித் மக்களும் தலித் அல்லாதவரும் சேர்ந்து நின்று போராட வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்தவர் தேவரவர்கள்.சித்தாந்தங்களையும் இந்துமதக் கோட்பாடுகளையும் நன்கு உணர்ந்த தேவரவர்கள் எல்லோரையும் சமமாகவே பாவித்தார். சகோதரர்களாகவும், இறைவனின் திருவுருவாகவும் கண்டார். "மனித தெய்வங்களே" என அனைவரையும் அழைப்பார்

"உயர்வு தாழ்வு அற்றது தான் மனித உலகம். உயர்வும் தாழ்வும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை. மனிதன் தன் உடலில் உண்டாக்கிக் கொண்ட உயர்வு தாழ்வில் ஒரு உறுப்பை உயர்வாக எண்ணி, இன்னொரு உறுப்பைத்தாழ்வாக நினைக்கக்கூடாது.
கரம் கூப்பி வணங்கும் போது இரு கைகளும் இணைந்துதான் வணங்க வேண்டும்" என்று கூறி உயர்வு தாழ்வு கூடாது, சாதி வேறுபாடுகள் கூடாது என்றார்.

"நிறம், சாதி பார்த்தா மனிதனை இறைவன் படைத்தான். அனல் நிறம் கொண்ட சிவனையும், அட்டக்கரி நிறம் கொண்ட கண்ணனையும் நாம் நிறம் பார்த்து வணங்குவதில்லை. மனிதர்கள் சாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பதற்கு அரன் மகன் குமரனையும், குறமகள் வள்ளியையும் தம்பதியாக்கிக் காட்டுகிறது நமது புராணம்."

"சாதி என்பது பச்சை அநாகரிகம்... சாதியையும், நிறத்தையும் பார்ப்பவன்,
அரசியலுக்கு லாயக்கில்லை...சாதி பார்ப்பவன் தெய்வத்தை வணங்குவதில் அர்த்தமி்ல்லை,சாதிக்காக எதையும் செய்பவன், அரசியலில் புகுந்தால் அரசியல் கெடும்.சாதியும், நிறமும் அரசியலுக்குமி்ல்லை ஆன்மீகத்துக்குமி்ல்லை" -
என "மனிதனுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் பூஜை" என்று கூறினார்.


"தாழ்த்தப் பட்டவர்களும், ஆதி திராவிடர்களும் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றமடைய கல்வி மி்க முக்கியம்" என உரைத்தார். "ஒரு சாதி ஆதிக்கத்திலுள்ள பள்ளியில் மற்றொரு சாதி மாணவருக்கு இடம் கிடைக்காத நிலையா...?" என மனம் நொந்தார்.

"சமுதாயத்தில் தாழ்த்தப் பட்ட நிலையில் உள்ளோர் தங்கள் தொழிலை தூக்கி எறிந்து விட்டு வாழ்க்கையின் முன்னேற்றமான தொழிலை செய்து பொருளாதார வசதிகளை பெருக்கி அதன் மூலம் தங்கள் குழந்தைளின் கல்வி வளர்ச்சியில் கவனம் அதிகம் பெற வேண்டும்" யென்று கேட்டுக்கொண்டார்.

பெரும் பணக்காரர்களே நிலங்களை வாங்கி குவித்து கொண்டிருப்பதை அறிந்து "ஏழை மக்களும் குறிப்பாக தாழ்த்தப் பட்ட மக்களுக்கு அரசு நிலங்களைப் பகிர்ந்து கொடுங்கள். அவர்களை சொந்த நிலமுள்ள விவசாயிகளாக ஆக்குங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார். தாங்களும் மற்றவர்களுக்கு இணையானவர்கள் என்ற நிலை வர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

தாழ்த்தப் பட்டவர்களுக்காகக் கட்டப் படும் குடியிருப்புகள் ஊரை விட்டு தொலைவிலில்லாமல் ஊருக்குள்ளேயே கட்டவெண்டுமென்றார்.
பஸ்ஸிலோ, ரயிலிலோ சம அந்தஸ்த்தோடு பயணம் செய்ய வேண்டும்; மக்களோடு மக்களாக இணைந்திருக்க வேண்டும் என்று கூறினார்.

வெறும் பேச்சளவில் போலிவேடமி்ல்லாமல் தமது சொத்துக்களை தனது மரண சாசனத்தில் கூட ஆதிதிராவிட மக்களுக்காக தனது நிலத்தின் பெரும் பகுதியை எழுதிவைத்துவிட்டு இறந்தார்.

மேலும், முக்கியமாக சமபந்தி உணவுமுறையைத் தானே முன்னின்று நடத்திக் காட்டினார்.தனது கண்காணிப்பிலேயே பல ஆதி திராவிடச் சிறுவர்களை தனது இல்லத்திலேயே வளர்த்து அவர்களை படிக்க வைத்து வாழ்க்கையில் உயர்வடையச் செய்தார்.

நேரிடையாக தேவரிடம் மோதி வெற்றி பெற முடியாத காங்கிரஸ் கட்சித்தலைவர்கள்,
மறைமுகமாக தேவரவர்களைப் பலிதீர்த்துக் கொண்டார்கள்.1957 ல முதுகுளத்தூர் கலவரத்தை வெகு நேர்த்தியாக திட்டமி்ட்டு உயிர் சேதங்களை மட்டுமல்ல
இன்றுவரைக்கும் தலித்துகளுக்கும் தேவரினத்துக்கும் குரோதத்தை மூட்டிவிட்டு மன ஊனங்களை ஏற்படுத்திய பெருமை காங்கிரஸாரையே சாரும்.

விரும்பத்தகாத அந்த சம்பவத்தால் மனம் நொந்த தேவரவர்கள், "பரம்பரை பரம்பரையாக அரிசனங்களும், தேவர்களும் தோளோடு தோள் இணைந்தவர்கள். அவர்களைத்தாக்குவதும் துன்புறுத்துவதும் என் ரத்தத்தைச் சிந்தவைப்பதுபோலாகும்"

"அரிசன மக்கள் என் சகோதரர்கள் அவர்களைத்தாக்காதீர்கள். அவர்களைத்தாக்க வேண்டுமென்று நினைத்தால் முதலில் என்னைக் கொன்று விட்டு அப்புறம் அவர்களிடம் போங்கள்" என்று 10.09.1957 பொதுக்கூட்டத்தில் உரைத்தார்.

தேவரவர்கள் அனைத்து வகுப்பினருக்கும் பா.பிளாக் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்திருந்தார்; தலித் களுக்கும் பொறுப்புக்களையும்,எம்.எல்.ஏ., போன்ற பதவிகளையும் கொடுத்திருந்தார்.

"எனக்கு வகுப்புவாதி என்று பெயரிட்டுப் பார்த்தார்கள்.நான் எல்லோருக்கும் பொதுவான தேசிய வாதியாக இல்லாமல் வெறும் வகுப்புவாதியாக மட்டும் இருந்திருந்தால் நான் தேர்தலில் ஜெயித்திருக்கவே முடியாது. ஏனெனில் என் தொகுதியில் 18 ஆயிரம்பேர்தான் நான் சார்ந்துள்ள வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் நான் இரண்டு லட்சம் ஓட்டுக்களுக்கும் மேல் ஒவ்வொருதடவையும் வாங்குகிறேன்" யென்று மனம் நொந்து, விரக்தியாகி வாழ் நாளின் கடைசி பொதுக் கூட்டத்தில் பேசும்போது தேவரவர்கள் ஆற்றிய சோக உரை இது.

இம்மானுவேல் கொலை வழக்கில் கடுமையாக அலைக்கழிக்கப் பட்டு இறுதியில் குற்றவாளியில்லையென விடுதலை செய்யப் பட்டார்.ஒரு எம்.பி -ஐ, ஒரு தேசியத்தலைவரை, விடுதலைப் போராட்ட வீரரை, ஆங்கிலத்திலும் தமி்ழிலும் சரளமாகச் சொற்பழிவு நிகழ்த்துகின்ற அபூர்வத் தலைவரை குற்றவாளி இல்லையெனச் சொல்ல எடுத்துக்கொண்ட காலங்களில் திட்டமி்ட்டே அவரது உடல் நலத்தைச் சீர்குலைத்து, துன்பத்தைக் கொடுத்து இறுதியில் மரணத்தையும் கொடுத்தார்கள்.

இம்மானுவேல் கொலைவழக்கில் அவரது மைத்துனரும், பரமக்குடி தேவேந்திர குல வேளாளர் பண்பாட்டு மையத்தின் தலைவர் ஜி.பாலச் சந்திரன் கூறுகிறார் "தேவர் சட்ட மன்றத்திலும், தனது சொந்த வீட்டிலும் பள்ளர் இன மக்களை சமமாகப் பாவித்து நானே நேரில் பார்த்துள்ளேன். மறவர், பள்ளர் இடையே நல்லுறவை வளர்த்தவர் தேவர். அவர் இம்மானுவேல் கொலைக்கும் காரணமாக இருந்தார் என்பதில் நம்புவதிற்கில்லை"

தேவரவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டதும் :

1962 ல் நடந்த அருப்புக்கோட்டை பாராளுமன்றத்தேர்தலிலும், முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தலிலும் அமோக வாக்குளைப் பெற்று வெற்றி பெற்றார். அமோக வாக்குகள் தலித் மக்களேல்லொரும் சேர்ந்தளித்த வாக்கு. அவர் மேலிருந்த கலங்கம் துடைக்கப் பட்டது
ஆனால் அவரது உயிரையுமல்லவா எடுத்துக்கொண்டுபோய் விட்டது 55 வயதிலேயே.


சிறப்பு நன்றி : கருத்துகளை தொகுத்து எங்களுக்கு வழங்கிய அகில உலக தேவர் கூட்டமைப்பை சார்ந்த உறவினர் முத்துராமலிங்கம் எங்களது நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக