ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி தொல்லியல் முடிவுகள் சொல்வது என்ன?

2 posters

Go down

அயோத்தி தொல்லியல் முடிவுகள் சொல்வது என்ன? Empty அயோத்தி தொல்லியல் முடிவுகள் சொல்வது என்ன?

Post by நவீன் Fri Oct 01, 2010 10:04 am

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் மொத்தம் ஐந்து முறை அகழாய்வுகள்நடந்தன. 1862-63ல் ஏ.இ.கன்னிங்ஹாம் நடத்தியது முதல் ஆய்வு; 1889-91ல்ஏ.ப்யூரர் நடத்தியது இரண்டாவது; 1969-70ல் பேரா.ஏ.கே. நரேன் நடத்தியதுமூன்றாவது; 1975-76ல் பேரா.பி.பி.லால் நடத்தியது நான்காவது; 2003ல்இந்தியத் தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ.,) நடத்தியது ஐந்தாவது. உத்தரபிரதேசமாநிலம் அலகாபாத் ஐகோர்ட் உத்தரவின் படி, அயோத்தியில் 2003ல் ஏ.எஸ்.ஐ.,அகழாய்வு நடத்தியது. இந்த அகழாய்வில், 29 இஸ்லாமியர்கள் உட்பட மொத்தம் 131பேர் அடங்கிய தொழிலாளர் குழு ஈடுபடுத்தப்பட்டது. மே மாதம் 22ம் தேதி முதல்ஜூன் மாதம் 6ம் தேதி வரை நடந்த அகழாய்வின் முடிவுகள் தொடர்பான இடைக்காலஅறிக்கை ஒன்றை, ஜூன் 11ம் தேதியும், இறுதி முடிவுகளை 574 பக்கங்கள்கொண்ட அறிக்கையாக, ஆகஸ்ட் மாதத்திலும், லக்னோவில் உள்ள அலகாபாத் ஐகோர்ட்கிளையில், ஏ.எஸ்.ஐ., தாக்கல் செய்தது.அந்த முடிவுகளில் குறிப்பிடத்தகுந்தவை: 1. கி.மு.,100-கி.மு., 300: முதலாவதாக, அகழாய்வில், சிலபொருட்கள் கிடைத்ததை வைத்து, அயோத்தியில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பேமக்கள் வாழ்ந்திருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது இப்பகுதியில்கி.மு.,100ல் இருந்து கி.மு.,300 காலகட்டம் வரையில், வடமாநிலங்களில்பரவியிருந்த கலாச்சாரம் இங்கும் இருந்தது என்பது தெரிகிறது.இக்கலாச்சாரத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு நிறத்திலான வழவழப்பானபீங்கான் போன்ற மட்பாண்டங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் சர்ச்சைக்குரியஇடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் குறிப்பிடத் தகுந்தது, அசோகர்காலத்து "பிராமி' எழுத்துப் பொறிக்கப்பட்ட மோதிரம். மேலும், அதே காலத்தைச்சேர்ந்த சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் தெய்வச் சிலைகள், மணிகள்,சக்கரங்கள், கண்ணாடித் துண்டுகள் ஆகியவையும் அவற்றில் அடங்கும். 2. சுங்கவம்சத்து அரசர்கள் காலம் கி.மு., 200: இக்காலத்தைச் சேர்ந்த சுடுமண்ணால்செய்யப்பட்ட தாய்த் தெய்வச் சிலைகள், மனித மற்றும் விலங்கு உருவங்கள்,மணிகள், கொண்டை ஊசிகள், கருப்பு, சிவப்பு மற்றும் சாம்பல் நிறத்தில்அமைந்த மட்பாண்டங்கள், கற்கள் மற்றும் செங்கல் கட்டுமானங்கள்கண்டறியப்பட்டுள்ளன. 3. குஷானர் காலம் கி.பி.,100-300: இக்காலத்தைச்சேர்ந்த சுடுமண் மனித மற்றும் விலங்கு பாவைகள், மணிகள், வளையல் துண்டுகள்கண்டு எடுக்கப்பட்டன. 4. குப்தர்கள் காலம் கி.பி., 400-600 மற்றும்அதற்குப் பிந்தைய காலகட்டம்: இக்காலத்திய சுடுமண் சிற்பங்கள்,"ஸ்ரீசந்திர' என்று பொறிக்கப்பட்ட செப்புக் காசு, மட்பாண்டத் துண்டுகள்கண்டுபிடிக்கப்பட்டன. கிழக்குப் பகுதிச் சுவரில் நுழைவாயில், வடபுறச்சுவரில் அபிஷேக நீர் வெளியேறுவதற்கான, "ப்ரணாலம்' என்ற பகுதி ஆகியவற்றுடன்கூடிய வட்டவடிவமான ஒரு கட்டடம்(கோவில்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5. கி.பி., 11 மற்றும் 12ம் நூற்றாண்டுகள் : இக்காலத்தில் அமைக்கப்பட்ட ஒருமிகப் பெரிய மண்டபம் போன்ற பகுதி கண்டறியப்பட்டது. இது, வடக்குத்தெற்காகவும் கிழக்கு மேற்காகவும், 50 மீட்டர் நீளத்துக்கு அமைந்துள்ளது.மூன்று பெரும் பகுதிகளாக அமைந்துள்ள இம்மண்டபத்தில், 50 தூண்கள்இருந்ததற்கான, 50 அடிப்பகுதிகள் கிடைத்துள்ளன.
கடந்த 2003, ஜனவரியில்கனடா நாட்டைச் சேர்ந்த நிலவியல் அறிஞர் கிளவுட் ரோபில்லார்ட் என்பவர்,இப்பகுதியை ரேடார் அலைகள் மூலம் ஆய்வு செய்த பின்,"இந்த மசூதிக்குஅடிப்புறத்தில் சில கட்டடப் பகுதிகள் உள்ளன. இக்கட்டடப் பகுதிகளில் உள்ளதூண்கள், அஸ்திவாரச் சுவர்கள், செங்கல் பாவிய தரைகள், ஆகியவை, ஒரேகாலத்தில் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த கட்டடமாக இருக்க வேண்டும். ஆயினும்,அவற்றைத் தோண்டிப் பார்க்காமல் இன்ன கட்டடம் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது' என்று கூறினார்.
அயோத்தி தொல்லியல் முடிவுகள் :
1. மசூதியின் கீழ் கண்டறியப்பட்ட செங்கற் சுவர்கள் கிழக்குமேற்காகவும், வடக்குத் தெற்காகவும் அமைந்துள்ளன. ஒரு சுவரின் மேல் இன்னொருசுவர் உள்ளது. குறைந்தபட்சம் மூன்று தரைகள் தென்படுகின்றன.
2. தரைகள், வேலைப்பாடுகளுடன் கூடியதாகவும், வண்ணங்கள் பொருந்தியதாகவும் உள்ளன.
3. அதிக எண்ணிக்கையிலான தூண்களின் அடிப்புறங்கள் கிடைத்துள்ளன.குறிப்பாக, உடைந்த நிலையில் கிடைத்த 1.64 மீ., உயரம் கொண்ட ஒரு கருங்கல்தூண், நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந் ததாக உள்ளது. அதன் நான்குபுறமும் "யட்சர்' எனப்படும் தெய்வத்தின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
4. ஒரே அளவிலான 30 தூண்களின் அடிப்புறங்கள் கிடைத்துள்ளன. தூண்கள் இரண்டு வரிசையாக அடுத்தடுத்து இணையாக அமைக்கப்பட்டுள்ளன.
5. ஒரு படிக்கட்டும் கண்டறியப்பட்டுள்ளது. அலங்கார வேலைப்பாடு கொண்டஇரண்டு தூண்களில், புடைப்புச் சிற்ப நிலையில் தாமரை மலர் மீது ஓர் உருவம்அமர்ந்திருக்கிறது. அதன் அருகில் தோகை விரிந்த நிலையில் ஒரு மயில்காணப்படுகிறது.
6. உடைந்த நிலையில் கிடைத்த கருங்கல் துண்டுகளில், இந்து மதத்தின்சின்னங்களான தாமரை, கவுஸ்துப மணி (விஷ்ணுவின் மார்பில் இருப்பது), முதலைஆகியவற்றின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. வேலைப்பாடமைந்தஇக்கற்கள், சுவர்களில் ஆங்காங்கே பதிக்கப்பட்டிருந்தன.
7. ஒரு கருங்கல் பலகையின் ஒரு பகுதி, 20 அடி ஆழத்தில் எடுக்கப்பட்டது.அதன் மிச்சப் பகுதி, அதற்கும் அடியில் இருந்த செங்கற்சுவரில்பதிக்கப்பட்டிருந்தது. வெளியில் எடுக்கப்பட்ட பலகையில் தேவநாகரி எழுத்தில்ஐந்து எழுத்துக்கள் கொண்ட ஓர் இந்துப் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.
8. 20 அடி ஆழத்தில் எடுக்கப்பட்ட பொருட்களின் காலம் 1,500ஆண்டுகளுக்கு முந்தையது. தொல்லியல் நிபுணர்களின் கருத்துப்படி, ஒவ்வொருநூறாண்டுக்கும் மண்ணின் மேல் மற்றொரு மண்படுகை ஒரு அடி உயரத்துக்குபடியும். அதன்படி இக்காலம் கணிக்கப்பட்டுள்ளது.
9. எட்டுமுனைகள் (அஷ்டகோணம்) கொண்ட யாக குண்டம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
10.இங்கு எடுக்கப்பட்டுள்ள செங்கற்கள், இரண்டாயிரம் ஆண்டுகளாக வடமாநிலங்களில்புழக்கத்தில் இருந்து வரும் சுண்ணாம்புக் கல் கலந்த, "சுர்க்கி' (சுட்டசெங்கற்களைப் பொடி செய்து சுண்ணாம்புக் கல் சேர்த்து தேவைப்பட்டவடிவத்திற்கு வார்ப்பது) வகைச் செங்கற்கள் ஆகும். வட்டம் உட்பட பல்வேறுவடிவங்களில் இந்தச் செங்கற்கள் கிடைத்துள்ளன.
11. இப்பகுதியில் பெரிய கட்டடம் இருந்ததற்கான அடையாளம் இருந்ததே தவிர,பல்வேறு குடியிருப்புகள் இருந்ததற்கான அடையாளங்கள் இல்லை. ஹரி விஷ்ணுகல்வெட்டு: கடந்த 1992ல் சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்தபோது, சில பொருட்கள்கிடைத்தன. அதில் குறிப்பிடத் தக்கது, 1.10 மீ., நீளமும், 0.56 மீ.,அகலமும் கொண்ட, "ஹரி விஷ்ணு' கல்வெட்டு. மொத்தம் 20 வரிகள் உள்ள இந்தக்கல்வெட்டின் காலம் கி.பி., 1140 என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தக்கல்வெட்டில், பலி மற்றும் ராவணனைக் கொன்றவரான விஷ்ணுவுக்கு இக்கோவில்அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி., 11 மற்றும் 12வது நூற்றாண்டைச் சேர்ந்த நாகரி எழுத்து வடிவத்தில், சம்ஸ்கிருத மொழியில்இந்தக் கல்வெட்டு உள்ளது. இதை, கல்வெட்டறிஞர்களும், சம்ஸ்கிருதஅறிஞர்களும் ஆய்வு செய்துள்ளனர். அவர்களில் இந்தியக் கல்வெட்டுக்கழகத்தின் தலைவரான அஜய் மித்ர சாஸ்திரியும் ஒருவர். அவர் இக்கல்வெட்டுப்பற்றிக் கூறியதாவது: இந்தக் கல்வெட்டு சம்ஸ்கிருதத்தில் மிக உயர்ந்தநடையில் எழுதப்பட்டுள்ளது. இதன் ஒரு சிறிய பகுதி மட்டும் செய்யுளில்அமைந்துள்ளது. இக்கல்வெட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோவிலின் சுவரில்பதிக்கப்பட்டிருந்தது. இதன் 15 வது வரி, இக்கோவில் கற்களால் (சிலா சம்ஹதிகிரக) அமைக்கப்பட்டதாகவும், தங்கக் கலசத்துடன் (ஹிரண்ய கலச, ஸ்ரீசுந்தரம்)கூடியதாகவும், மற்றக் கோவில்களுடன் ஒப்பிட முடியாத அழகு பொருந்தியதாகவும்,முன்பு இருந்த அரசர்களால் (பூர்வைரபியக்ருதம் க்ருதம் ந்ருபாதிபிர்)கட்டப்பட்டதாகவும் கூறுகிறது. "இந்த அற்புதமான (அதி அத்புதம்) கோவில்,சாகேத மண்டலத்தில் அமைந்துள்ள கோவில் நகரமான (விபுத் ஆலாய்னி) அயோத்தியில்(19 வது வரியில்), பலி மற்றும் ராவணனைக் கொன்றழித்த இறைவன் விஷ்ணுவுக்குஅர்ப்பணிக்கப்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது, என்றார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அயோத்தி தொல்லியல் முடிவுகள் சொல்வது என்ன? Empty Re: அயோத்தி தொல்லியல் முடிவுகள் சொல்வது என்ன?

Post by கார்த்திக் Fri Oct 01, 2010 10:11 am

நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum