ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குதிரை சவாரியும் இலவச சேணமும்

Go down

குதிரை சவாரியும் இலவச சேணமும் Empty குதிரை சவாரியும் இலவச சேணமும்

Post by குடந்தை மணி Mon Sep 27, 2010 8:22 pm

கட்டுரைகள்

குதிரை சவாரியும் இலவச சேணமும் Moz-screenshot-8

குதிரை சவாரியும் இலவச சேணமும்


மா. ஆறுமுககண்ணன்


First Published : 27 Sep 2010 12:00:00 AM IST
மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இப்போது ஒரு விஷயத்தில் கடும் போட்டி நிலவுகிறது என்றால் அதில் மிகையில்லை. அது, யார் அதிக இலவசங்களை அள்ளிக் கொடுத்து மக்களைத் தங்கள் வசம் தக்கவைத்துக் கொள்வது என்பதுதான். கலர் டிவி, கேஸ் அடுப்பு, விவசாயிகளுக்கு மின்சாரம்...என பலவற்றை இலவசமாக வழங்கும் தமிழக அரசின் பட்டியலில் இப்போது விவசாயிகளுக்கான பம்ப் செட்டும் சேர்ந்துள்ளது. டிவிக்களைப் பொறுத்தவரை கேபிள் இணைப்பு இல்லை என்றால் அவை மூலையில் முடங்கிக்கிடக்க வேண்டியதுதான் என்பது ஆட்சியாளர்கள் அறியாததல்ல. ஆயினும் ஏழைகள் மீது கருணை கொண்டு நிதி ஒதுக்கி கலர் டிவிக்களை இலவசமாக வழங்கினர். வழங்குகின்றனர், தொடர்ந்து வழங்குவதாகவும் கூறுகின்றனர். டிவிக்களை இலவசமாகப் பெறும் ஏழைகளோ மாதந்தோறும் கேபிள் கட்டணமாக அந்தந்தப் பகுதிகளில் இயங்கும் கேபிள் நிறுவனங்களைப் பொறுத்து 150 வரை செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். தொடர்ந்து செலுத்த வேண்டிய இந்த நெடுந்தொகை போக, முன்பணம் என்ற பெயரில் கணிசமான குறுந்தொகையும் செலுத்தினால்தான் அன்றாடக் கூலிகளான அந்த ஏழைகள் கேபிள் இணைப்புக் கிடைக்கப்பெற்று, தங்கள் டிவிக்களில் மானாடுவதையும், மயிலாடுவதையும் பார்த்து, எப்போதும் சிரிப்பொலி முழங்க சுபீட்சமாக பொழுதைக் கழிக்க இயலும். உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, திரைக்கு வந்து சில வாரங்களே ஆன தமிழ்த் திரைப்படங்களையும் பார்த்து பிறவிப் பயன் அடைய முடியும்! கேபிள் இணைப்பில் தனியார் நிறுவனங்களின் இந்தத் தன்னிகரற்ற தலைவிரி ஆட்டத்துக்குக் காரணம் அரசு கேபிள் அடக்கமாகச் செயல்படுவதுதான் என்பதும் ஆட்சியாளர்கள் அறிந்ததுதான். இந்நிலையில், மாநில அரசுக்குத் தானும் இளைப்பில்லை என மற்றுமொரு புதிய திடீர் திட்டத்துடன் இலவச கோதாவில் குதித்திருக்கிறது மத்திய அரசு. அது வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்கு இலவச கைப்பேசி வழங்கும் முன்னோடித் திட்டம். கிடங்குகளில் வீணாகிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான டன் தானியங்களை ஏழைகளுக்குக் கொடுக்க எள்ளளவும் மனமில்லாததுடன், அதுகுறித்த நீதிமன்ற உத்தரவுக்கும் எதிர்வாதம் புரியும் மத்திய அரசு ஏழைகளுக்கு கைப்பேசி வழங்குவதில் மும்முரம் காட்டுகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழு(டு)பவர்களின் வயிறுகள் கூழுக்கு அழுதுகொண்டிருக்க, அவர்களின் கொண்டைக்கு பூ முடியும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். ஏற்கெனவே செல்போன் நிறுவனங்களின் சேவையால் சற்றுவசதி படைத்த மற்றும் நடுத்தர மக்கள் படும்பாடு சொல்லி மாளாது. செல்போன் நிறுவனங்களின் அந்தச் சேவையை ஏழைமக்களும் பெற்றே தீர வேண்டும் என்ற தீர்க்க தரிசனத்துடன் இத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. நன்கு படித்து அரசு, தனியார் பணிகளில் இருப்போரே தங்கள் கைப்பேசியில் வரும் குறுஞ்செய்திகளைப் படித்துவிட்டு அழிக்க முற்படும்போது தவறுதலாக பொத்தான்களை அழுத்திவிட்டால், கைப்பேசியில் இருக்கும் மீதித் தொகை திடீரென பாதித் தொகையாகிவிட, பதைபதைப்பாகிவிடுகிறது. நிலைமை இப்படியிருக்க, அதிகம் படிக்காத ஏழை மக்களும் இனி கைப்பேசிகளுடன் படவிருக்கும் பாட்டை என்ன சொல்வது? வாடிக்கையாளர்களின் மனங்களில் கோபச் சாரல் விழவிழ, செல்போன் நிறுவனங்களின் காட்டில் மேலும்மேலும் அடைமழைதான்! ஒரு வீட்டுக்குள் இலவச டிவியும், இலவச கைப்பேசியும் இருந்துவிட்டால் பார்ப்போருக்கு அந்த ஏழை மக்கள் பகட்டான வாழ்க்கை வாழ்வதாகவே தென்படும். ஆனால், இந்த இரண்டையும் பயன்படுத்துவது யானையைக் கட்டி தீனி போட்ட கதை என்பதே உண்மை. அதற்காக ஏழைகள் டிவி, கைப்பேசி போன்ற நவீன வசதிகளைப் பெறக்கூடாது எனப் பொருளல்ல. மீனைக் கொடுப்பதை விடவும் மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பதுதானே ஓர் அரசுக்கு அழகான இலக்கணமாக இருக்க முடியும். வேண்டுமானால், டிவிக்களையும், கைப்பேசிகளையும் நீங்கள் வாங்குங்கள், கேபிள் இணைப்பையும், "டாப் அப்' வசதியையும் நாங்கள் தொடர்ந்து இலவசமாகத் தருகிறோம் என அரசுகள் அறிவிக்க வேண்டும். அதுதான் உண்மையான இலவசமாக இருக்க முடியும். மாறாக இப்போதைய நடைமுறை அங்குசத்தை நாங்கள் தருகிறோம். யானைகளை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்பது போலத்தானே! "ஒரு காசு பேணின் இரு காசு தேறும்' என்ற சொலவடைக்கு ஏற்ப வாழ்க்கையைச் சிரமத்துடன் நகர்த்திக் கொண்டிருக்கும் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள இவர்களிடம் அளிக்கப்படும் இந்த இலவசங்கள், இருக்கின்ற காசையும் பறிப்பதல்லாமல் வேறென்ன? அயலூரானுக்கு ஆற்றோரம் பயம்; உள்ளூரானுக்கோ மரத்தடியில் பயம் என்பார்கள். அரசியல்வாதிகளுக்கோ எப்போதுமே தேர்தல் பயம். அதனால்தான் "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்பதுபோல எதை இலவசமாகக் கொடுத்தால் வாக்குகளை எளிதாகப் பெறலாம் எனக் கணக்கிட்டு அதிலேயே குறியாக இருந்து இலவசங்களின் பட்டியல்களை நீட்டிக் கொண்டே செல்கின்றனர். பொதுமக்கள் என்ற குதிரைகளை, தங்களுக்குச் சாதகமான வெற்றி என்ற இலக்கை நோக்கி இழுத்துச் செல்ல வேண்டுமானால் இலவசங்கள் என்ற சேணமும், லகானும், கொஞ்சம் கொள்ளும், பச்சைப் புல்லும் அவசியம் என்பது ஆட்சியாளர்களுக்குப் புரிந்திருக்கிறது. ஏழைகளின் வாழ்வை முன்னேற்றி, வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன என்கிற வாதங்களெல்லாம் அவர்கள் தங்கள் சமாதானத்துக்காகச் சொல்லிக் கொள்பவையே. இலவசங்களை நிறுத்திவிட்டால் குதிரை எங்கே தங்களை குப்புறத் தள்ளி குழியும் பறித்துவிடுமோ என்பதே அவர்களின் அச்சம். இலவச மயக்கத்தில் இருக்கும் குதிரைகள் பகுத்தறியும் திறனைப் பெறும்வரை சுகமாய் சவாரி செய்வோரின் உதடுகள் இப்படித்தான் பாடும், ""சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ, சலோ!'


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics
» குதிரை சவாரியும் இலவச சேணமும்
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச ‌லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» சண்டி குதிரை நொண்டி குதிரை…
» பிடிஎப் கோப்பினை எடிட் செய்ய இலவச மென்பொருள் மற்றும் இலவச விளையாட்டு மென்பொருள் இலவச டி-ஷர்ட்
» தேர்தலை கவர புதிய இலவச திட்டம் ரெடி ; 2. 5 கோடி பேருக்கு இலவச மொபைல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum