புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
6 Posts - 46%
heezulia
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
372 Posts - 49%
heezulia
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
25 Posts - 3%
prajai
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_m10மரணம் பற்றிய இலக்கியப் பார்வை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணம் பற்றிய இலக்கியப் பார்வை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 02, 2010 10:30 pm

"ஆனாலும் புவியின் மிசை உயிர்க ளெல்லாம்
அநியாய மரணமெய்தல் கொடுமை யன்றோ?"

(திருமகள்)

காவோலை விழக் குருத்தோலை சிரிச்சுதாம் என்பது தமிழில் உள்ள ஒரு பழமொழி. இந்தப் பழமொழியை நாம் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறோம். தானும் கால ஓட்டத்தில் காவோலையாக மாறி விழுந்தே தீரவேண்டும் என்பது குருத்தோலைக்குத் தெரியவில்லை. அதன் சிரிப்பிற்குக் காரணம் அதுதான்.

வயதுபோன பெரியவர்களைப் பார்த்து சில சந்தர்ப்பங்களில் வயதில் சிறியவர்கள் கைகொட்டிச் சிரிப்பதுண்டு. அந்த நேரத்தில் பெரியவர்களுக்கு இந்தப் பழமொழி கைகொடுக்கும்.

மரணம் என்ற சிக்கலை அவிழ்க்க இந்த விதிக் கோட்பாடு (The theory of karma or fate) சற்று உதவுகிறது. விதிக் கோட்பாடு மூடத்தனம்தான். ஆனால் தலையிடிக்கு "பனடோல்" போட்டால் தலையிடி நிற்பது போல் ( தலையிடி உண்மையில் நிற்பதில்லை. மூளைக்கு அந்தத் தலைநோ நரம்புவழி எட்டாமல் தடுக்கப்படுகிறது. அவ்வளவுதான்.) இந்த விதிக் கொள்கை மனக் கவலைக்கு ஒத்தடம் கொடுக்கிறது.

"அவனுக்கு விதித்தது அவ்வளவுதான்!" "அன்றெழுதியதை யாரும் அழித்து எழுத முடியாது!" "இன்னாருக்கு இன்னவாறு எழுதிவிட்டானே" "என் கையில் என்ன இருக்கிறது. எல்லாம் ஆண்டவன் விட்ட வழி" இப்படிப்பட்ட பழமொழிகள் வாழ்க்கை அவரவர் தலைவிதி போல்தான் அமையும். அதனை அழித்தெழுத முடியாது என்பதை வலியுறுத்துவன.

இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் "ஊழ்வினை உகுத்துவந்து ஊட்டும்" என்பதை நிலைநாட்ட எழுதிய காப்பியம்தான். எழுதியதென்றால் ஆணியால் மண்டையில் எழுதப்படுவது அல்ல. "தலைவிதி" என்பது ஆள் விதியே! ஆளுக்கான விதியே! "தலைக்கு ஒன்று கொடு" என்றால் ஆளுக்கொன்று கொடு என்பதே பொருள்.

மரணம் என்பது இயற்கை. தோன்றிய பொருள் யாவும் அழிந்தே ஆகவேண்டும் என்பது நியதி. காலங்கள் இரண்டுதான் உண்டு. அவை இறந்தகாலம் எதிர்காலம். நிகழ்காலம் என்றொன்று இல்லை. இப்படிப் போதித்தவர் புத்தர். அவரது வாழ்க்கையில் ஒரு சம்பவம். ஒரு ஊரில் ஒரு தாய். அவளுக்கும் கோமகன் போல் ஒரு பிள்ளை. அவன் இறந்து விட்டான். புத்தரிடம் ஓடோடிச் சென்று இறந்த தன் மகனை எழுப்பித் தரவேண்டும் என்று மன்றாடுகிறாள். உலகத்தில் இறப்பு என்பது இயற்கையானதுதான். எனவே அதற்கு வருந்துவது அஞ்ஞானம். இந்த அஞ்ஞானத்தைப் போக்கி அத்தாயின் கவலையைப் போக்க நினைத்தார். அத்தாயை நோக்கி-

தாயே நின் மனக் கவலை - ஒழிந்திடத்
தக்க மருந்து நான் அளிப்பேன்
சேயினை எழுப்பிடுவேன்- விளையாடித்
திரியவும் செய்திடுவேன்
நாவிய கடுகு வேண்டும்-அதுவுமோர்
நாவுரி தானும் வேண்டும்
சாவினை அறியாத - வீட்டினில்
தந்ததாய் யிருக்க வேண்டும். (ஆசியசோதி -9,35)

அந்தத் தாய் சென்று வீடு வீடாக ஏறி இறங்கினார். சாவினை சந்திக்காத வீடு ஒன்று கூட அந்த ஊரில் இருக்கவில்லை. மீண்டும் புத்தரிடம் வந்தார். கடுகு கிடைக்கவில்லை என்றார். அப்போது புத்தர் சொன்னார் " தாயே! மரணம் இயற்கை. அதை யாரும் வெல்ல முடியாது. கவலை தீர்க" என்றார்.

மகாகவி பாரதியார் மரணத்தை வெல்லும் வழி கூறியவர். "பார் மீது நான் சாகா திருப்பேன், காண்பீர்" என்று சூளுரைத்தார். அப்படிப் பட்டவரே -

ஆனாலும் புவியின் மிசை உயிர்க ளெல்லாம்
அநியாய மரணமெய்தல் கொடுமை யன்றோ?
தேனான உயிரைவிட்டுச் சாக லாமோ?

என்று மனம் நொந்து பாடினார்.

நோய்நொடி வந்து படுக்கையில் விழுந்து, மருத்துவர்களது மருத்துவத்திற்கு குணமாகாது அவர்கள் கைவிட்ட பிறகு கோமகன் இறந்திருந்தால் அதனைச் கொஞ்சம் செரித்திருக்கலாம். "ஆறுமனமே ஆறு ஆண்டவன் கட்டளை ஆறு" என்ற கண்ணதாசனின் கவிதை மனதுக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.

வெளியில் போன பிள்ளை நேரகாலத்தோடு வீடு திரும்புவான் என்று அம்மாவும் அப்பாவும் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்க அவன் இந்த உலகத்தை விட்டே நிரந்தரமாகப் போய்விட்டான் என்ற செய்தி வந்தால் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? இது "விதி" என்றால் யார் எழுதிய விதி? படைத்தவன் எழுதிய விதியா?

சித்தர்களும் முக்தர்களும் மரணம் இயற்கை என்றார்கள். பிறப்பு எப்படி இயற்கையோ அதே போல் பிறந்தவை யாவும் இறப்பதும் இயற்கை என்றார்கள் ஞானிகளும் யோகிகளும்.

உலகில் பிறந்தவர் யாரும் இருந்ததில்லை. எல்லோரும் இறந்தே போனார்கள். சித்தர், முக்தர், ஞானிகள், யோகிகள், முனிவர்கள் எல்லோரும் மரணத்தை வெல்ல எதையெதையோ செய்து பார்த்தார்கள். மூச்சை அடக்கிப் பார்த்தார்கள். மோனத்தில் இருந்து பார்த்தார்கள். காயகல்ப்பம் உண்டு பார்த்தார்கள். ஆனால் மரணத்தை வெல்ல முடியவில்லை.

"புத்தன், யேசு, முகமதுநபி, இராமன், சங்கரர், இராமநுஜர் எல்லோருமே மாண்டு போனார்கள். நான் மட்டும் பார் மீது சாகாதிருப்பேன்"என்று பாரதி முழங்கினார்.

"காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன்! - என்றன்
காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்"

என்று காலனுடன் வீரம் பேசினார். ஆனால் 'மரணத்தை வெல்வது எப்படி?' என்று உபாயம் சொன்ன மகாகவி பாரதி கூட அந்த மரணத்தை வெல்ல முடியவில்லை! அவரது முப்பத்தொன்பதாவது அகவையில் அந்தக் காலன் என்;ற பாபி கூட்டிச் சென்றான்.

நொந்த புண்ணைக் குத்துவதால் பயனொன்றில்லை
நோ யாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்
அந்தணனாம் சங்கராச் சார்யன் மாண்டான்
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்!
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்!
பார்மீது நான் சகா திருப்பேன், காண்பீர்! (பாரதியார் சுயசரிதை)

மரணம் மனிதனுக்கு உலகம் தொடங்கிய காலம் தொட்டே ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அந்தப் புதிரை யாரும் இன்னும் அவிழ்த்த பாடாக இல்லை. மரணத்தின் பின் (மறு) பிறப்பு உண்டா? உண்டு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார் மறுபிறப்பு இல்லை என்று அடித்துச் சொல்கிறார்.

கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும் போய் மரம்புகா,
இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லைஇல்லை இல்லையே! (சித்தர் பாடல்கள்)

எது எப்படியோ இறந்தவர் யாரும் மீண்டு வந்து இந்தக் கேள்விக்கு இதுவரை விடை சொல்லவில்லை!

மனிதன், உலகம், அண்டசராசரம், கடவுள் இவற்றுக்கு இடையில் உள்ள உறவை விளக்க எழுந்தவையே வேதாந்தங்களும் சித்தாந்தங்களும்.

வேதாந்தங்களும், சித்தாந்தங்களும், ஆகமங்களும் இந்தச் சிக்கலான முடிச்சை அவிழ்க்க மனிதனால் எழுதப் பட்டவையே. மனிதனை நம்ப வைக்க அவை கடவுளால் அருளப்பட்டன எனப் பொய் சொன்னார்கள். கடவுளால் அருளப்பட்டிருந்தால் ஒரு சமயம், ஒரு கடவுள், ஒரு வேதம், ஒரு சித்தாந்தம் மட்டுமே இருந்திருக்கும்.

மரணத்தின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள, அதனால் ஏற்படும் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள சமய தத்துவவாதிகள் பல தத்துவங்களையும் கோட்பாடுகளையும் எழுதி வைத்துள்ளார்கள்.

1) மனிதன் இறக்கும் போது அவனது உடல்தான் அழிகிறது. அவனது ஆன்மா அழிவதில்லை.

2) ஆன்மா இறைவனோடு ஒன்றாகக் கலக்கிறது. அல்லது

3) ஆன்மா தனது இருவினை (நல்வினை தீவினை) காரணமாக மீண்டும் பிறக்கிறது.

4) கடவுள் எப்படி அநாதியோ அப்படியே ஆன்மாவும் அநாதியானது.

பதிபசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி
பதியினைச் சென்றணுகாப் பசுபாசம்
பதியணு கிற், பசு பாசம் நிலாவே! (திருமந்திரம்)

இப்படி எல்லாச் சமயங்களும் ஒரே குரலில் சொல்வதில்லை. ஒவ்வொரு சமயமும் ஒவ்வொருவிதமாகச் சொல்கின்றன. பௌத்த சமயம் நீங்கலாக ஆன்மா இருப்பதை மற்றச் சமயங்கள் ஒப்புக் கொள்கின்றன. ஆனால் ஆன்மா, கடவுள் இரண்டும் இல்லையென்று சொல்லும் பௌத்தம் மறுபிறப்பு உண்டென்கிறது. ஆன்மா உள்ளது என்று சொல்லும் கிறித்தவமும், இசுலாமும் மறுபிறப்பை ஒத்துக் கொள்ளவில்லை. இந்து சமயம் மட்டுமே கடவுள், ஆன்மா, மறுபிறப்பு இந்த மூன்றையும் நம்புகின்றது. உடல் அநித்தியம் ஆனால் ஆன்மா நித்தியம். அத்வைத வேதாந்திகள் நாம் பார்க்கும் இந்த உலகமே மாயை என்கிறார்கள். பரம்பொருள் ஒன்றே உண்மை என்கிறார்கள்.

புண்ணுக்கு மருந்து தடவுவது போல மரணத்துக்கு மருந்து தடவ முற்பட்டதே உலக நிலையாமைத் தத்துவமாகும். திருமூலர் பாடிய திருமந்திரத்தின் ஒன்பது மந்திரங்களில் முதல் மந்திரமே இந்த யாக்கை நிலையாமை பற்றியதுதான்.

ஊரெல்லாங் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடை கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. (திருமந்திரம்)

உயிரானது உடம்பினின்று ஆடம்பரமும் ஆரவாரமும் இன்றி இரகசியமாக நீங்கிவிடுகிறது. இவ்வளவு இரகசியமாக அது நீங்கினாலும் அதனைச் உறவினர்கள் ஊரெல்லாம் அம்பலப்படுத்துகிறார்கள். மேலும் யாக்கை நிலையாமையை அன்றாட நிகழ்ச்சியோடு அறிவிக்கிறார்.

அடம்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரொடு மந்தணம் கொண்டார்
இடப் பக்க மேஇறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே! (திருமந்திரம்)

மனித வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் இம் மந்திரம் நாடக பாணியில் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. சமைக்கச் சொன்னார் மனைவியை. அறுசுவையான சமையல் ஆயிற்று, சமைக்கும் பொழுதே நல்ல மணம் வீசியது. நன்றாகச் சுவைத்துச் சாதத்தைச் சாப்பிட்டார். இளமையான கொடிபோன்ற மனைவியோடு தனித்து உரையாடினார். ஐயோ! இடப்பக்கத்திலே சிறிது வலிக்கிறதே என்றார். கீழே படுத்தார். அவ்வளவுதான். எழுந்திருக்கவே இல்லை. ஒரு நொடியில் உயிர் பிரிந்து விட்டது.

திருவள்ளுவரும் நிலையாமை என்ற அதிகாரத்தில் உயிருக்கும் உடம்புக்கும் உள்ள உறவை முட்டைக்கும் அதில் இருந்து வெளியேறிப் பறக்கும் பறவைக்கும் உவமானம் சொல்லி உள்ளார்.

குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு (குறள் 338)

பருவம் வந்ததும் முட்டை தனியே கிடக்க அதனுள் இருந்த பறவை பறந்து போவதைப் போன்றதே உயிருக்கும் உடம்புக்கும் உள்ள நட்பு. "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்று தொடங்கும் புறநானூற்றப் பாடலைப் பாடிய சங்ககாலப் புலவர் பூங்குன்றனார் சாதல் புதியதன்று என்று சொல்கிறார்.

யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னாதென்றாலு மிலமே ..................................." (புறநானூறு - 192)

சாதலும் புதுவதன்று - கருவில் தோன்றிய நாளே அது தொடங்கிவிட்டது. அது இயற்கை.
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலம் - வாழ்தலை இனிதென்று உவந்ததும் இல்லை.
முனிவின் இன்னாதென்றாலு மிலமே .ஒரு வெறுப்பு வந்தயிடத்து இன்னாதென்று இருத்தலும் இல்லை.
வாழ்க்கையில் இறப்பு - பிறப்பு, இன்ப -துன்பம் எல்லாவற்றையும் ஒரே சீராகப் பார்க்கும் மனப்பக்குவம் மனிதர்களுக்கு வேண்டும் என்பது சங்கப் புலவரின் அறிவுறுத்தல்.

கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கையை நன்றாக அனுபவித்தவர். ஐம்பது வயதிலும் காதல் வரும் என்று பாடியதோடு நிற்கவில்லை. செய்தும் காட்டினார்.

மதுவே வா! மயிலே வா!
எப்போதும் என்னுடன் நீங்கள் இருப்பீராகில்
பொன்னுலகம் காண்பேன், பொங்கும் கவி மழையில்
மண்ணுலகம் தோய்ந்து மயக்கம் பெற வைப்பேன்
சம்சாரமும் மதுச்சாரமும் உள்ளவரை தழுவாது மரணபயமே!"

என்று பாடினார். ஆனால் அவரது இளமைக் கால லீலைகள் முதுமையில் நோய்வடிவில் அறுவடையான போது கவிஞர் கண்ணதாசனை மரணபயம் கவ்விக் கொண்டது. பாரதி நீண்ட நாள் வாழ ஆசைப்பட்டார். "இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே" தான் வாழ ஆசைப்பட்டார். கண்ணதாசனுக்கு ஆசை அதைவிட அதிகம். நூறு வயது வாழ ஆசைப்பட்டார்.

எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனதில் சலனம் இல்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந்திட நீ செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறுவயதிலையும்
தர நீ கடவையே!

நூறுவய தாகும்வரை ஓடி விளையாட ஒரு
நோயிலா உடல் வேண்டும்;
நுண்ணறிவு ஊறி இள வெண்ணிலவு போல ஒரு
நூலை எழுத வேண்டும்
பண்ணிசையில் என் தமிழைப் பால்போல் தெளித்து நான்
பரமார்த்த னாக வேண்டும்
பக்தியொடு நின்னடியைப் பற்றிஇதை கேட்கிறேன்
பாரதச் சக்தி உமையே! (கண்ணதாசன் பாடல்கள்)

மரணம் பலருக்கு பயத்தைக் கொடுக்கிறது. சிலருக்கு (சடலை) ஞானத்தைக் கொடுக்கிறது. கவிஞர்க்கு அது தத்துவம்பற்றிப் பேச வழி சமைக்கிறது.

வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும்
மரணம் என்பது செலவாகும்

பொதுவாக இறந்தபின்தான் இரங்கல்பா பாடுகிறோம். ஆனால் கண்ணதாசன் தான் வாழ்ந்த காலத்திலேயே தனக்கு இரங்கல்பா பாடிக்கொண்டான்.

தேனார் செந்தமிழமுதைத் திகட்டாமல்
செய்தவன்மெய் தீயில் வேக
போனால் போகட்டுமெனப் பொழிந்ததிரு
வாய் தீயில் புகைந்து போக
மானார்தம் முத்தமொடும் மதுக் கோப்பை
மாந்தியவன் மறைந்து போக
தானே எந்தமிழினிமேல் தடம் பார்த்துப்
போகுமிடம் தனிமைதானே!

இந்தத் தத்துவங்கள் எல்லாம் மெத்த நல்லவைதான். ஆனால் மரணம் வந்து எம் வீட்டின் முன்கதவை தட்டும்போது தத்துவங்கள் பின் கதவால் விடைபெற்று வெளியேறி விடுகிறது. பகுத்தறிவும் பயன் அற்றுப் போகிறது. "விதி" எம்மைப் பார்த்து கோரமாகச் சிரிக்கிறது.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்ட கோமகன் திரும்பி வரப்போவதில்லை. இந்தத் தத்துவ விசாரணை எல்லாம் அவனைப் பெற்று வளர்த்த தந்தை-தாயின் கவலைக்கு தலைநோய் மருந்துபோலப் பயன் படட்டும் என்ற (நப்)ஆசைதான். காலதேவன் ஒருவனே அவர்களது காயப்பட்ட இதயத்துக்கு மருந்தாக முடியும். அவர்களது கவலை தோய்ந்த மனதுக்கு பச்சிலையாக முடியும். அவர்களது கண்ணில் சொரியும் பூக்களுக்கு அணையாக முடியும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
madhumathi91158
madhumathi91158
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 22/09/2010

Postmadhumathi91158 Mon Sep 27, 2010 8:20 am

சிவா wrote:"ஆனாலும் புவியின் மிசை உயிர்க ளெல்லாம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக