ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமன்வெல்த் போட்டியில் பங்குபெறும் சென்னை ராகவி,இவரை வாழ்த்துவோம் வாங்க .

3 posters

Go down

காமன்வெல்த் போட்டியில் பங்குபெறும் சென்னை   ராகவி,இவரை வாழ்த்துவோம் வாங்க . Empty காமன்வெல்த் போட்டியில் பங்குபெறும் சென்னை ராகவி,இவரை வாழ்த்துவோம் வாங்க .

Post by kalaimoon70 Tue Sep 21, 2010 2:08 pm

காமன்வெல்த் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்காக சென்னை அயோத்திக்குப்பம் குடிசை பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடும்ப வறுமையைக் கடந்து சாதித்த மாணவி, இன்னொரு நீச்சல் வீரரின் தந்தையின் உதவி மூலம் நேற்று டில்லி புறப்பட்டு சென்றார். சென்னை அயோத்திக்குப்பம் குடிசை பகுதியில் பிறந்து, வறுமையில் "நீந்திய' பெண், "முயற்சி திருவினையாக்கும்' என்ற பழமொழிக்கேற்ப இன்று, இந்தியாவின் சார்பில் காமென்வெல்த் போட்டியில் "நீந்த' தகுதியும் பெற்றுவிட்டார். அந்த வீராங்கனையின் பெயர் ராகவி(16). சென்னை மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலையில் இயங்கும் பள்ளியின் பிளஸ் டூ மாணவி. இவரது தந்தை மணிபால். சென்னை மாநகராட்சி துப்புரவு மேஸ்திரி. இவரது மனைவி ஈஸ்வரி, குடும்பத் தலைவி. இரண்டாவது மகளான ராகவிக்கு சிறுவயது முதலே நீச்சலில் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது. கடந்த 1998ம் ஆண்டு முதல் சென்னை மெரீனா கடற்கரை நீச்சல் குளத்தில் இவர் நீச்சல் பழக ஆரம்பித்தார். அங்கு நடந்த போட்டியில், 3 மணி நேரம் 12 நிமிடங்கள் நீந்தி இவர் சாதனை படைத்தார். அப்போது மேயராக இருந்த துணை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி பரிசு வழங்கியுள்ளார். அதன் பிறகு, ராகவிக்கு நீந்துவதில் மேலும் ஆர்வம் அதிகரித்தது. பள்ளி மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்தார். மாநில, தேசிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் அவருக்கு ஏற்பட்டது. மகளின் ஆர்வத்தை உணர்ந்த மணிபால், கடன் வாங்கி தனது மகளை பல்வேறு போட்டிகளுக்கு அனுப்பி வைத்தார். இப்படி வறுமையில் நீந்திய ராகவி, கடந்த ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த தேசிய அளவிலான நீச்சல் போட்டி உட்பட தொடர்ந்து மூன்று முக்கிய போட்டிகளில், "தங்கப் பதக்கம்' வென்று சாதித்தார்; இவரது திறமையைக் கண்டு மற்றொரு நீச்சல் வீரரான அக்னீஸ்வரின் தந்தை ஜெயபிரகாஷ், உதவ முன்வந்தார். அவரது உதவியுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று பயிற்சி பெற்று, போட்டிகளிலும் பங்கேற்று ராகவி பதக்கங்கள் குவித்தார். இதுபோல், சிறுவயது முதல் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்த ராகவி, காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் சாதிக்கும் கனவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். நாடு முழுவதும் நிறைய திறமைசாலிகள் இருக்கும் போது, இப்போட்டியில் பங்கேற்க தனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆதங்கமும் ராகவிக்கு ஏற்பட்டது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கான முறைப்படியான அழைப்பு நேற்று முன்தினம் இரவு ராகவிக்கு கிடைத்தது. நேற்றே புறப்பட்டு, டில்லி வருமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதை கேள்விப்பட்டதும் ராகவிக்கும், அவரது பெற்றோருக்கும் ஒரு புறம் அளவு கடந்த ஆனந்தமும், மறுபுறம் சோகமும் ஏற்பட்டது.இதற்கு காரணம், அங்கு சென்று பல நாட்கள் தங்கி பயிற்சி எடுப்பதற்கு நிறைய செலவாகும் என்பது தான். உறவினர்கள் மற்றும் நண்பர்களும் கஷ்டத்தில் இருப்பதால் அவர்களிடமும் பணம் கேட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்த விவரத்தை கேள்விப்பட்ட ஜெயபிரகாஷ், தனது சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்தார். அதன் மூலம் நேற்று மாலை 5 மணிக்கு, சென்னையில் இருந்து ராகவி டில்லி புறப்பட்டு சென்றார். வறுமையைக் கடந்து சாதித்த ராகவி, காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் சார்பில் சாதிப்பார் என்பதை நம்பலாம். ராகவி தாய் பேட்டி: இதுகுறித்து ராகவியின் தாய் ஈஸ்வரி கூறுகையில், "நீச்சல் போட்டியில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், "பிரஸ்ட் ஸ்ட்ரோக்' என்பது மிகக் கடினமாக போட்டி. அந்த பிரிவில் தான் ராகவி பங்கேற்கிறார். முன்னர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தான் ராகவி பயிற்சி எடுத்தார். கட்டடப் பணிக்கு நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளதால், மெரீனா கடற்கரை அண்ணா சமாதி நீச்சல் குளத்தில் தான் பயிற்சி எடுத்து வந்தார். காமன்வெல்த் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து மிக திறமை வாய்ந்த வீரர்கள் பங்கேற்பர். இருப்பினும் என்னால் முடிந்த அளவு போராடி நாட்டிற்காக பதக்கம் வெல்வேன் என எங்களிடம் ராகவி நம்பிக்கையுடன் கூறினார். அவர் சொன்னதை நிறைவேற்றுவார் என நாங்கள் நம்புகிறோம்; அதற்காக இறைவனையும் வேண்டிக்கொள்வோம்.

வெற்றி பெற ஈகரை சார்பாக வாழ்த்துவோம்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

காமன்வெல்த் போட்டியில் பங்குபெறும் சென்னை   ராகவி,இவரை வாழ்த்துவோம் வாங்க . Empty Re: காமன்வெல்த் போட்டியில் பங்குபெறும் சென்னை ராகவி,இவரை வாழ்த்துவோம் வாங்க .

Post by உமா Tue Sep 21, 2010 2:32 pm

16 வயதில் இத்தகைய சாதனையை புரிந்த ராகவி வெற்றி பெற ஈகரயோடு சேர்ந்து வாழ்த்தி இறைவனை வேண்டி கொள்கிறோம்....
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காமன்வெல்த் போட்டியில் பங்குபெறும் சென்னை   ராகவி,இவரை வாழ்த்துவோம் வாங்க . Empty Re: காமன்வெல்த் போட்டியில் பங்குபெறும் சென்னை ராகவி,இவரை வாழ்த்துவோம் வாங்க .

Post by சிவா Fri Sep 24, 2010 7:56 pm

ராகவிக்கு வாழ்த்துகள்!


காமன்வெல்த் போட்டியில் பங்குபெறும் சென்னை   ராகவி,இவரை வாழ்த்துவோம் வாங்க . Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காமன்வெல்த் போட்டியில் பங்குபெறும் சென்னை   ராகவி,இவரை வாழ்த்துவோம் வாங்க . Empty Re: காமன்வெல்த் போட்டியில் பங்குபெறும் சென்னை ராகவி,இவரை வாழ்த்துவோம் வாங்க .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20
» காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி: 66 பதக்கங்கள்
» காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் ஓம்பிரகாஷ் மிதர்வால்
»  » காமன்வெல்த் போட்டியில் தங்க வேட்டையாடும் இந்தியா: 6 தங்கங்களுடன் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்
» எஸ்.பி.பி. அவர்களை வாழ்த்துவோம்..வாங்க...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum