ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேர்ட் டிப்ஸ்

Go down

வேர்ட் டிப்ஸ் Empty வேர்ட் டிப்ஸ்

Post by கார்த்திக் Tue Sep 21, 2010 9:29 am

வேர்ட் மினி டூல் பார்
வேர்ட் தொகுப்பு 2007 மற்றும் 2010 பயன்படுத்துபவர்கள், ஒரு புதிய வசதியினை அறிந்திருப்பார்கள். அதுதான் மினி டூல்பார். ஆவணத்தில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தால், உடனே அந்த சொல்லின் மேலாக, வேர்ட் இந்த மினி டூல்பாரினைக் காட்டுகிறது. நீங்கள் அந்த சொல்லை பார்மட் செய்வதற்காக (அழுத்தமாக, அடிக்கோடிட, சாய்வாக அமைக்க) எனில், இந்த டூல்பார் மிகவும் வசதியாக இருக்கும். சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பின், கர்சரை எடுத்து, மேலே மெனு பாருக்குச் செல்ல வேண்டியதில்லை. இந்த மினி டூல்பாரிலேயே அதற்கான பட்டன்கள், ஐகான்கள் கிடைக்கின்றன.
ஆனால் பலர் இந்த மினி டூல்பாரினை வெறுக்கின்றனர். ஏனென்றால், டெக்ஸ்ட் செலக்ட் செய்வது எப்போதும் பார்மட்டிங் பணிகளுக்காக இல்லையே. மற்ற பணிகளுக்காகவும் டெக்ஸ்ட் செலக்ட் செய்கிறோம். அப்போதெல்லாம் இந்த மினி டூல் பார் தேவையற்றதாகிறது. நமக்குத் தேவை என்றால், தேவைப்படும்போது, மேலே மினி டூல்பார் சென்று, செட் செய்திடலாமே என்று எண்ணலாம். எனவே இந்த மினி டூல்பாரினை வரவிடாமல், செட் செய்திடலாம்.
ஆபீஸ் 2007 தொகுப்பில்
1.Office பட்டன் கிளிக் செய்திடவும்.
2. Word Options கிளிக் செய்க.
3. இடது பக்கம் உள்ள பிரிவில் Popular என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு கிடைக்கும் பிரிவில் Show Mini Toolbar என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
ஆபீஸ் 2010 தொகுப்பில்
1. File டேப்பில் கிளிக் செய்திடவும்.
2. இடது பக்கம் உள்ள பிரிவில் Help என்பதன் கீழாக உள்ள Options என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு General என்பதில் கிளிக் செய்திடுக.
4. இங்கு User Interface Options என்ற பிரிவில், Selection என்ற தலைப்பில், என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
5. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
டேபிள் முழுவதும் வசமாக்க
எம்.எஸ். வேர்டில் ஆவணம் ஒன்றைத் தயாரிக்கையில் டேபிள் ஒன்றையும் இணைத்து அமைக்கிறீர்கள். சரி. இந்த டேபிள் முழுவதையும் அப்படியே தேர்ந்தெடுக்க என்ன செய்திடலாம். எளிய வழி ஒன்று உண்டு. அந்த டேபிள் மீது கர்சரை வைத்துக் கொண்டு ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸால் இரு முறை கிளிக் செய்திடவும். இப்போது டேபிள் முழுவதும் உங்கள் வசம். அதனை எங்கு வேண்டு மென்றாலும் அப்படியே எடுத்துச் செல்லலாம்.





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வேர்ட் டிப்ஸ் Empty எக்ஸெல் டிப்ஸ்

Post by கார்த்திக் Tue Sep 21, 2010 9:30 am

எழுத்துவகையை நிலையாக மாற்ற
ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள புரோகிராம்களைப் பயன்படுத்துகையில், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த எழுத்து வகையினப் பயன்படுத்த விரும்புவார்கள். எடுத்துக் காட்டாக, எக்ஸெல் தொகுப்பில் மாறா நிலையில் கொடுக்கப்பட்டிருக்கும் பாண்ட் வகை ஏரியல்; அளவு 10. இந்த எழுத்து வகைக்குப் பதிலாக, வெறு எழுத்துவகை, ஏன் தமிழ் எழுத்தே, வேண்டும் என விரும்பினால், அப்போது மாற்றி செயல்படுத்தலாம். ஆனால் மீண்டும் எக்ஸெல் திறக்கும் போது, மாறா நிலையில் இருந்த அதே பழைய எழுத்து வகைதான் கிடைக்கும். அவ்வாறு இல்லாமல், தாங்கள் விரும்பி மாற்றிய எழுத்துவகையே தொடர்ந்து கிடைக்க வேண்டும் என விரும்பினால், அதற்கான சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
முதலில்“Tools” என்னும் பகுதியைக் கிளிக் செய்து அதில் “Options” என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். பல டேப்கள் கொண்ட“Options” விண்டோ கிடைக்கும். இதில் “General” என்னும் டேபினைக் கிளிக் செய்திடவும். இதில் “Standard font” என்பதற்கு அடுத்தபடியாக உள்ள மெனுவினை விரிக்கவும். கிடைக்கும் மெனுவில் உங்களுக்குப் பிடித்த எழுத்துவகையினைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து மூடவும். இனி எக்ஸெல் உங்களுக்குப் பிடித்த எழுத்துவகையினயே டைப் செய்திடத் தரும். மீண்டும் வேறு ஒரு எழுத்துவகை உங்களுக்குப் பிடித்தால் மேலே சொன்ன வழிகளில் மாற்றிக் கொள்ளலாம்.
செல்லில் டெக்ஸ்ட்
எக்செல் செல் ஒன்றில் டெக்ஸ்ட் ஒன்றை டைப் செய்கையில் அது செல்லையும் தாண்டி வெளியே செல்வது பலருக்கு எரிச்சலை வர வழைக்கும். செல்லுக்குள்ளாகவே டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதுவே உங்களின் விருப்பம். என்ன செய்யலாம்? கவலைப்படாமல் முதலில் டெக்ஸ்ட்டை டைப் செய்திடுங்கள். டெக்ஸ்ட் முழுவதும் டைப் செய்தவுடன் செல்லைக் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். இப்போது Format என்னும் பிரிவிற்குச் சென்று கிளிக் செய்திடுங்கள். அதில் Cells பிரிவைத் தேர்ந்தெடுத்து அதன்பின் அதில் உள்ள Alignment டேபை அழுத்துங்கள். இப்போது கிடைக்கும் பிரிவுகளில் Wrap Text என்ற செக் பாக்ஸைத் தேர்ந்தெடுங்கள். அதில் டிக் மார்க் செய்து ஓகே கொடுத்து வெளியேறுங்கள். இப்போது நீங்கள் அடித்த டெக்ஸ்ட் அதே செல்லில் ஒழுங்கு படுத்தப் பட்டிப்பதைப் பார்க்கலாம். ஒரு சிலர் டெக்ஸ்ட்டை செல்லினுள் அடிக்கையில் ஆல்ட் + என்டர் தட்டி வரிகளை அமைப்பார்கள். அது நேரத்தையும் நம் உழைப்பையும் வீணாக்கும்.
ஒரு பக்கத்தில் அச்சிட
எக்ஸெல் ஒர்க்ஷீட் பிரிண்ட் செய்கையில், பலர் அச்செடுப்பதில் அளவுகளை எப்படி அமைப்பது என்று அறியாமல், பல அச்சு தாள்களை வீணாக்குவார்கள். ஏனென்றால் வேர்ட் தொகுப்பில் அச்சிடுவதற்கும், எக்ஸெல் தொகுப்பில் அச்சிடுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சில வேளைகளில் நெட்டு வரிசைகளில் ஒன்றிரண்டு அடுத்த பக்கத்தில் அச்சாகும். அல்லது கடைசி இரண்டு படுக்கை வரிசை, தலைப்பு ஏதும் இன்றி, தனியே அடுத்த பக்கத்திற்குச் செல்லும். நாம் விரும்பும் வகையில், குறிப்பிட்ட பக்கங்களுக்குள், ஒர்க் ஷீட்டினை அச்சிட, எக்ஸெல் வழி கொண்டுள்ளது. ஒர்க்ஷீட் எத்தனை பக்கங்களுக்குள் அச்சாக வேண்டும் என எக்ஸெல் தொகுப்பிற்கு நாம் செட் செய்திடலாம். எத்தனை பக்கங்கள் என்பதனை மட்டும் தெரிவித்தால் போதும். எக்ஸெல் அதற்குள்ளாக டேட்டாவினைச் சுருங்க வைத்துக் கொள்ளும். இந்த வழியை எப்படி செட் செய்வது என இங்கு பார்க்கலாம்.
1. முதலில் ஒர்க்ஷீட்டைத் திறந்து வைத்துக் கொள்ளவும்.
2. பின்னர், பேஜ் செட் அப் (Page Setup) தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது பேஜ் செட் அப் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. இதில் பேஜ் (Page) டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. இதில் Fit To option என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் அருகே எத்தனை பக்கங்களில் நீங்கள் விரும்பும் ஒர்க்ஷீட் பகுதி அச்சில் வர வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி வழக்கம்போல பிரிண்ட் கட்டளை கொடுத்து பிரிண்ட் எடுக்கவும். நான் பொதுவாக, கட்டத்தில் அகலம் 1 பக்கம் எனவும் உயரம் 99 பக்கம் எனவும் அமைத்துக் கொள்வேன். இதனால், ஒரு பக்கத்தில் அவுட்புட் இருக்கும். நிச்சயம் மொத்த பக்கங்கள் எண்ணிக்கை 99 ஐத் தாண்டாது. இதனால் டேட்டா சுருக்கப்படாமல் எனக்கு அச்சில் கிடைக்கும். ஒரு பக்க அகலத்தில், நீளம் எத்தனை பக்கங்களானாலும் இருக்கும்.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum