புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
3 Posts - 43%
ayyasamy ram
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
3 Posts - 43%
வேல்முருகன் காசி
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_m10 வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்  Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வ.கௌதமனின் மகிழ்ச்சி – படமாகும் நாவல்


   
   
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun 19 Sep 2010 - 15:29



WDகனவே கலையாதே படத்துக்குப் பிறகு வ.கௌதமன் இயக்கியிருக்கும் படம் மகிழ்ச்சி. படத்தை இயக்கி நடித்திருக்கும் வ.கௌதமன், இன்னொரு கதை நாயகனாக நடித்திருக்கும் சீமான், படத்தை தயா‌ரித்திருக்கும் அதிர்வு திரைப்பட்டறை மணிவண்ணன் என இப்படத்தைச் சார்ந்த அனைவருமே தமிழ் உணர்வாளர்கள் என்பது நமது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் செய்தி.

எழுத்தாளர் நீல.பத்மநாபன் 1968 எழுதிய தலைமுறைகள் நாவலையே மகிழ்ச்சி என்ற பெய‌ரில் கௌதமன் திரைப்படமாக்கியிருக்கிறார். இதற்காக அவர் 12 வருடங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டார் என்பது சிலருக்கு ஆச்ச‌ரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

தலைமுறைகள் நீல.பத்மநாபனின் முதல் நாவல். இந்த நாவல் தீவிர இலக்கிய பரப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தமிழின் சிறந்த யதார்த்தவகை நாவல்களில் தலைமுறைகள் முக்கியமானது என எழுத்தாளரும் விமர்சகருமான க.நா.சு. கொண்டாடினார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிறுகதை, நாவல், நாடகம் போன்ற இலக்கிய வடிவங்கள் அ‌ரிதாகவே படமாக்கப்பட்டுள்ளன. அதுவும் கடந்த பத்து வருடங்களில் இப்படியான முயற்சிகள் ஒன்றிரண்டு மட்டுமே சாத்தியமாகியுள்ளன. இது தமிழ் சினிமாவின் மிகப்பெ‌ரிய குறை என்றே சொல்ல வேண்டும்.

உலக அளவில் சிறந்த திரைப்படங்கள் எனக் கூறப்படுபவை பெரும்பாலும் நாவலை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் ஆகச்சிறந்த திரைப்படமாகக் கருதப்படும் பதேர் பாஞ்சாலியும் விபூதி பூஷணின் பதேர் பாஞ்சாலி நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே. தமிழின் சிறந்த திரைப்படமாகக் கருதப்படும் மகேந்திரனின் உதி‌ரிப்பூக்கள் கூட புதுமைப்பித்தனின் சிற்றன்னை கதையின் பாதிப்பில் எடுக்கப்பட்டதே.

இந்த ச‌ரித்திர உண்மைகள் வெளிப்படையானவை. இருந்தும் இலக்கியத்தை திரைப்படமாக்கும் போக்கு தமிழில் ஒரு பழக்கமாக உருக்கொள்ளவில்லை. இலக்கியத்துக்கும் திரைப்படத்துக்கும் நெருக்கமான உறவும் கொடுக்கல் வாங்கலும் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் கமல்ஹாசனும்கூட நாவலையோ, சிறுகதையையோ திரைப்படமாக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை. சில இலக்கியவாதிகளை தனது கமர்ஷியல் படங்களுக்கு வசனம் எழுதச் செய்வதுடன் அவரது இலக்கிய தேடல் முடிந்துவிடுகிறது.

இலக்கியத்தைப் பற்றி சதா பேசிக்கொண்டிருக்கும் கமல்ஹாசனின் நிலையே இப்படி என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

இந்த‌ச் சூழலின் அடிப்படையில் பார்க்கும் போதுதான் மகிழ்ச்சி எத்தனை மகத்தான முயற்சி என்பதை பு‌ரிந்து கொள்ள முடியும். தலைமுறைகள் கன்னியாகும‌ரி மாவட்டம் இரணியல் பகுதியை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. அப்பகுதி மக்களின் வாழ்வை, குணாம்சத்தை நெருக்கமாகவும் நுணுக்கமாகவும் விவ‌ரிக்கும் கதை. நாவலை அப்படியே திரைப்படமாக்குவது என்பது இயலாத விஷயம். தலைமுறைகள் என்றில்லை எந்தவொரு இலக்கிய படைப்பையும் திரைப்படமாக்குவது என்பது ஒரு படத்தை ‌ரிமேக் செய்வதைப் போன்று எளிதானதல்ல. அது சிக்கலானது, சவாலானது.

விபூதி பூஷணின் பதேர் பாஞ்சாலி நாவலை சத்ய‌ஜித்ரே அப்படியே திரைப்படமாக்கவில்லை. நாவலில் உள்ள கிளைக்கதைகள் பலவும் படத்தில் இல்லை. நாவலின் ஆன்மாவை வெளிப்படுத்தக் கூடிய நிகழ்வுகளை மட்டுமே சத்ய‌ஜித்ரே தனது படத்தில் பயன்படுத்திக் கொண்டார். அதனாலேயே அப்படம் இன்றும் கொண்டாடப்படடுகிறது. மாறாக நாவலை பிரதியெடுத்திருந்தால் திரைப்படம் தோற்றுப் போயிருக்கும்.

இலக்கியத்தை திரைப்படமாக்கும் போது இயக்குனர் எதிர்கொள்ளும் முதல் சவால் நாவலில் இருந்து எதனை எடுத்துக் கொள்வது, எதனை தவிர்ப்பது என்பதை முடிவு செய்வதாகும். இது சாதாரணமானதல்ல. நுட்பமான அறிவும், ஆழ்ந்த தேடலும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். நாற்பது நாட்கள் படப்பிடிப்பு அறுபதாவது நாள் பட வெளியீடு, எண்பதாவது நாள் லாபம் என கலெ‌க்சனை குறி வைத்து நாலுகால் பாய்ச்சலில் செல்லும் மனங்களால் ஒரு இலக்கிய படைப்பை திரைப்படமாக்க இயலாது. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் இல்லாமல் போனதற்கு இந்த நாலுகால் பாய்ச்சலே முதல் காரணம்.


WDஒரு படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மூன்றையும் சொந்தமாக எழுதினால் மட்டுமே இயக்குனருக்கு பெருமை என்பதான ஒரு போலி மனப்பதிவு தமிழ் திரையுலகில் நிலவுகிறது. வேறொருவ‌ரின் கதை, திரைக்கதை, வசனத்தில் படம் இயக்கினாலும் இயக்குன‌ரின் புகழ் மாய்ந்து போவதில்லை என்பதை நாம் இன்னும் உணர்வதாக இல்லை. இதன் காரணமாகவே அடுத்தவர்களின் படைப்பை திரைப்படமாக்குவது என்ற எண்ணமே நமக்கு தோன்றுவதில்லை. தமிழில் இலக்கியங்கள் திரைப்படமாகாததற்கு இது இன்னொரு காரணம்.

இந்த இரு காரணங்களையும் கௌதமன் தாண்டி வந்திருக்கிறார். அவரது இலக்கிய ஆர்வமும், நல்ல கதையை படமாக்க வேண்டும் என்ற உறுதியுமே இதனை சாத்தியமாக்கியிருக்கிறது. கனவே கலையாதே திரைப்படத்துக்குப் பிறகு ஆட்டோ சங்கர், சந்தனக்காடு போன்ற தொலைக்காட்சி தொடர்களை கௌதமன் இயக்கினார். இவை மிகுந்த கவனம் பெற்றன. இந்த காலகட்டத்தில் அவர் ஜெயகாந்தனின் சினிமாவுக்குப் போன சித்தாளு கதையை குறும்படமாக எடுத்தார். அப்படம் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது.

எம்.‌ஜி.ஆ‌ரின் அளவுக்கு மீறிய தனி மனித வழிபாட்டை விமர்சனம் செய்யும் விதமாக ஜெயகாந்தன் எழுதிய கதையே சினிமாவுக்குப் போன சித்தாளு. அன்றைய சூழல்தான் அந்தக் கதையின் மிகப்பெ‌ரிய பலம். கௌதமன் அதனை படமாக்கும் போது தனி மனித வழிபாடுகள் இருந்தாலும் சூழல் பொருத்தமாக இல்லாததால் படம் ஒரு பிரச்சாரம் போலவே தோற்றமிளித்தது.

அத்தகைய சறுக்கல்கள் ஏதும் நீல.பத்மநாபனின் நாவலுக்கு நேராது என நம்புவோம்.

நன்றி வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக