Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்ப முலிகை- உத்தாமணி
4 posters
Page 1 of 1
கற்ப முலிகை- உத்தாமணி
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப நோயில்லா பெருவாழ்வு வாழ்பவனே நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ முடியும். இன்றைய காலகட்டத்தில் 20 வயது இளைஞன் கூட தலைமுடி நரைத்து, 40 வயதைத் தாண்டியவர்போல் காட்சியளிக்கிறான். இந் நிலைக்கு முக்கிய காரணம் உணவு முறை மாறுபாடும், போதிய உடல் உழைப்பும் இல்லாததுதான். இத்தகைய நிலை மாற சித்தர்கள் தங்களின் தவப்பயனால் மனிதன் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீங்கி என்றும் இளமையுடன் வாழ வழிகண்டனர். அதுதான் காயகற்பம். பழங் காலத்தில் இந்த காயகற்பத்தைப் பயன்படுத்தி நம் முன்னோர்கள் நோயின்றி ஆரோக்கியமாக நீண்டநாள் வாழ்ந்தனர்.
இப்போது நவீன நாகரீகத்தில் இம்முறை மாறி மேலைநாட்டு மோகத்தில் திளைத்ததன் விளைவுதான் 25 வயதிலேயே நீரிழிவு, இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, இதய கோளாறு என பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகி அவதி யுறுகின்றனர். இதற்குக் காரணம் நம் முன்னோர்களும், சித்தர்களும் கூறிய அறிவுரைகளையும் மருத்துவ முறைகளையும் பின்பற்றாததே. சித்தர்கள் மனிதன் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ எண்ணற்ற வழிமுறைகளை கண்டறிந்து சொன்னார்கள். அவற்றில் ஒன்றான கற்ப முறைகளை நாமும் பின்பற்றி நம் தலைமுறைகளும் பயன்படுத்துமாறு செய்ய முனைய வேண்டும். கற்ப முறைகளில் கற்ப மூலிகைகள் மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் அற்புத மூலிகைகளாகும். அத்தகைய மூலிகைகளில் வேலிப்பருத்தி என்ற உத்தாமணியும் ஒன்று.
உத்தாமணி அதிக மருத்துவக் குணம் கொண்டது. இது தென்னிந்தியா முழுமையும் காணப்படும். வேலி ஓரங்களில் கொடி போல் படர்வதால் இதை வேலிப்பருத்தி என்று அழைக்கின்றனர். இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும். இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.
வேலிப்பருத்தி முழு தாலாற் பற்றாது வேலிப்பரு
என்கிறது சித்தர் பாடல்
உத்தாமணி வேர், கொடி, இலை, பால் இவைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்தி வந்தால் ஜலதோஷத்தினால் உண்டாகும் வாத, பித்த மாறுபாடுகள், தோஷ விடங்கள் நீங்கும்.
ரத்த அழுத்தத்தைத் தணிக்க
வேலிப்பருத்தி பித்ததத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்த (காலை 4.30 – 6.00) நேரத்தில் வேலிப் பருத்தி இலைகள் 6 எடுத்து அப்போது கறந்த ஆட்டுப்பால் அல்லது மாட்டுப்பால், இரண்டும் கிடைக்காவிட்டால், கொதிக்க வைத்த பால் அரை டம்ளர் சேர்த்து நன்றாக அரைத்து 21 நாட்கள் அல்லது 1 மண்டலம் அருந்தி வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள பித்தநீர் குறைந்து ரத்த அழுத்தம் குறையும். இம்மருந்து எத்தகைய பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்தாகும். இது பற்றி அகத்தியர் பரிபூரண நூலில் ஆரோக்கியத்திற்கு அற்புதமான மருந்து என்ற பகுதியில் கூறியுள்ளார். வர்ம பரிகார முறையில் இதுவே சிறந்த மருந்தாகும். மேலும் உடல் அசதியைப் போக்கும். நரம்புகளை புத்துணர்வு பெறச் செய்யும். நெஞ்சுலி குறையும்.
நோஞ்சான் குழந்தைகளுக்கு
சிறு குழந்தைகளுக்கு மார்பெலும்புக்கூடு முன்தள்ளி, நோஞ்சான் போல காணப்படுவார்கள். இவர்களுக்கு, வேலிப்பருத்தி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து அதனுடன் சீரகம் 1 ஸ்பூன், அருகம்புல் பொடி 1 ஸ்பூன் சேர்த்து கஷாயம் செய்து பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்து வந்தால், நோஞ்சான் தன்மை மாறி, உடல் வலுப் பெறுவார்கள்.
வயிற்றுப்புழு நீங்க
குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருந்தால், அவர்களின் வளர்ச்சி பாதிப்படைந்து நோஞ்சான் போல் காணப்படுவார்கள். இந்த வயிற்றுப் புழுக்களை நீக்க உத்தாமணியின் இலையை பறித்து நீர்விட்டு அலசி குடிநீராக செய்து வைத்துக்கொண்டு தினமும் ஒரு சங்களவு கொடுத்து வந்தால் வயிற்றுப் புழுக்கள் நீங்கும். ஒரு மண்டலம் கொடுத்தால் வயிற்றில் புழுத்தொல்லை முற்றிலும் நீங்கும்.
உத்தாமணி இலையைச் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி பின் ஆற வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 மி.லி. என 48 நாட்கள் கொடுத்து வந்தால் சுவாசகாச நோய்கள் நீங்கும்.
உத்தாமணி இலையை நன்கு அரைத்து பிளவை புண் மீது வைத்து கட்டினால் பிளைவைப் புண் எளிதில் குணமாகும்.
உத்தாமணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து ஒரு மண்டலம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும்.
பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு உத்தாமணி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.
உத்தாமணி இலைச்சாறு – 5 மி.லி.
தூதுவளைச் சாறு – 5 மி.லி.
துளசிச் சாறு – 5 மி.லி.
கற்பூரவள்ளி இலைச்சாறு – 5 மி.லி.
வெற்றிலைச்சாறு – 5 மி.லி.
எடுத்து நன்கு கொதிக்க வைத்து தினம் இருவேளை என மூன்று நாட்கள் அருந்தி வந்தால் சலதோஷம், மூக்கடைப்பு, இருமல், இரைப்பு நீரேற்றம் போன்றவை நீங்கும்.
கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
வேலிப்பருத்திச் சாறு – 100 மி.லி.
கற்பூரவள்ளி இலைச்சாறு – 200 மி.லி
தேங்காய் எண்ணெய் – 300 மி.லி.
இவற்றை ஒன்றாகச்சேர்த்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு, அடிபட்ட இடங்கள், வீக்கங்கள் மீது தடவி வந்தால் எளிதில் குணமாகும். இந்த வைத்திய முறை பழங்காலந்தொட்டே வழக்கமாக இருந்து வருகிறது.
சித்த மருத்துவத்திலும், வர்ம மருத்துவத்திலும் தயாரிக்கப்படும் மூலிகை தைலங்களில் முக்கியமாக காயத்திரிமேனி தைலத்தில் வேலிப் பருத்திச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.
நன்றி- ஹெல்த் சாய்ஸ்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: கற்ப முலிகை- உத்தாமணி
"தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்"
வேலிப்பருத்தி பற்றிய கட்டுரைக்கு நன்றி கார்த்திக்!
வேலிப்பருத்தி பற்றிய கட்டுரைக்கு நன்றி கார்த்திக்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கற்ப முலிகை- உத்தாமணி
மூலிகை மருத்துவம் அனத்து மருத்துவத்திலும் சிறந்தது.
மேலை நாட்டு மருத்துவத்தின் மோகத்தால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. இதுபோல கட்டுரைகளை படிப்பதோடில்லாமல், இதன்படி செயல் பட்டால் மூலிகை மருத்துவம் மீண்டும் தழைக்கும்.
பதிவிற்கு நன்றி கண்ணு....
இந்த மூலிகையை நான் பார்த்திருக்கேனா இல்லையானு தெரியல.....
மேலை நாட்டு மருத்துவத்தின் மோகத்தால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. இதுபோல கட்டுரைகளை படிப்பதோடில்லாமல், இதன்படி செயல் பட்டால் மூலிகை மருத்துவம் மீண்டும் தழைக்கும்.
பதிவிற்கு நன்றி கண்ணு....
இந்த மூலிகையை நான் பார்த்திருக்கேனா இல்லையானு தெரியல.....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: கற்ப முலிகை- உத்தாமணி
சிவா wrote:"தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்"
வேலிப்பருத்தி பற்றிய கட்டுரைக்கு நன்றி கார்த்திக்!
நன்றி தோழரே .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: கற்ப முலிகை- உத்தாமணி
Daemia extensa - இது தமிழகத்தில்தான் அதிகம் உள்ளது! கோலாலம்பூரில் இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கற்ப முலிகை- உத்தாமணி
சிவா wrote:"தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்"
வேலிப்பருத்தி பற்றிய கட்டுரைக்கு நன்றி கார்த்திக்!
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: கற்ப முலிகை- உத்தாமணி
gunashan wrote:மூலிகை மருத்துவம் அனத்து மருத்துவத்திலும் சிறந்தது.
மேலை நாட்டு மருத்துவத்தின் மோகத்தால் இன்று கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. இதுபோல கட்டுரைகளை படிப்பதோடில்லாமல், இதன்படி செயல் பட்டால் மூலிகை மருத்துவம் மீண்டும் தழைக்கும்.
பதிவிற்கு நன்றி கண்ணு....
இந்த மூலிகையை நான் பார்த்திருக்கேனா இல்லையானு தெரியல.....
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum