ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்:

3 posters

Go down

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்: Empty அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்:

Post by சபீர் Thu Sep 16, 2010 10:47 am

1. கப்றுகளின் மீது பள்ளிவாயில்கள் கட்டுவது.
அல்லாஹ்வின் சாபம் யூதர்கள் மீதும் கிருத்தவர்கள் மீதும் உண்டாகட்டும்! ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்களின் கப்றுகளை பள்ளிவாயில்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று குணமடைந்த எழாத – மரண – நோயின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா (ரழி) அறிவிக்கின்றார்கள்
(நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
அவர்கள் செய்த செயல்களை விட்டும் நபி (ஸல்) அவர்கள் நம்மை எச்சரித்துள்ளார்கள்.
இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் சிலையாக நீ ஆக்கிவிடாதே! என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்ததாகவும் ஹதீஸ் வந்துள்ளது.
எச்சரிக்கை! நிச்சயமாக உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அவர்களுடைய நபிமார்களின் கப்ர்களை பள்ளிவாயில்களாக ஆக்கிக் கொண்டார்கள். இச்செயலை விட்டும் நான் உங்களை நிச்சயமாகத் தடுக்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னால் கூற நான் கேட்டுள்ளேன் என ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் . (நூல்: முஸ்லிம்)
2. கப்ர்களில் தொழுவது
கப்ர்களின் மீது அமராதீர்கள்! அதில் தொழாதீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக மர்ஸத் அல் பகவீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
பூமியின் அனைத்து இடங்களும் மஸ்ஜித் (ஸஜ்தா செய்யுமிடம்) தான். கப்ர்களையும் குளியலறையையும் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூற்கள்: அஹமத், திர்மிதி)




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்: Empty Re: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்:

Post by சபீர் Thu Sep 16, 2010 10:54 am

3. கப்ர்களின் மீது எழுதுவது
கப்ர்களை பூசுவதையும் அதன் மீது எழுதுவதையும் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: அஹமத்)

4. கப்ர்களை பூசுவது
முன்னுள்ள நபிமொழியே இதற்கும் ஆதாரமாக உள்ளது.

5. கற்கள் அல்லது அது போன்ற பொருட்களைக் கொண்டு கப்ர்களை கட்டுவது

குப்பா – முகடு – போன்றோ கூடாரம் போன்றோ அல்லது இது போன்ற எந்த வடிவிலும் கப்ர்களைக் கட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. கப்ர்களை பூசுவதையும் அதன் மீது எழுதுவதையும் நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இதற்கு ஆதாரமாக உள்ளது. (நூல்: அபூதாவூத்)

6. கப்ரில் விளக்கேற்றுவது, சிறு விளக்குகள் அல்லது அது போன்றவைகளை அதனருகில் வைப்பது
கப்ர்களை ஜியாரத் செய்யும் பெண்களையும் அதனை பள்ளிவாயில்களாக ஆக்குபவர்களையும் அதில் விளக்கேற்றுபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூற்கள் அஹ்மத், திர்மிதி)




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்: Empty Re: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்:

Post by சபீர் Thu Sep 16, 2010 10:55 am

7. கப்ர்களை விழாக்கூடமாக்குவது

இது ஜியாரத்திற்கென வாரங்களில், மாதங்களில், வருடங்களில் குறிப்பிட்ட நாட்களை நிர்ணயிப்பதால் ஏற்படுவதாகும்.
உங்களுடைய வீடுகளை கப்ர்களாக ஆக்கிவிடாதீர்கள்! என்னுடைய கப்ரை விழாக் கூடமாக ஆக்கிவிடாதீர்கள்! என் மீது ஸலவாத்துக் கூறுங்கள்! நீங்கள் எங்கிருத்து ஸலவாத்துக் கூறினாலும் நிச்சயமாக அது எனக்கு எடுத்துச் சொல்லப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹூரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள் நூல்: அபூதாவூத்)

நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கே விழாக் கொண்டாடுவது கூடாது எனும் போது நிச்சயமாக மற்ற எவரின் கப்ருக்கும் விழாக் கொண்டாடுவது கூடாது என்பதை அறிந்து கொள்ள முடிகிறதல்லவா?

8. கப்ரை சமப்படுத்துவதும் பூமியை விட உயர்த்தாதிருப்பதும் மிக அவசியமாகும்.

எச்சரிக்கை ! நபி (ஸல்) அவர்கள் என்னை எந்த வேலைக்காக அனுப்பினார்களோ அதே வேலைக்காக நான் உம்மை அனுப்பகிறேன். நீர் எந்த உருவ –படம் மற்றும் சிலைகளை அழிக்காமல் விட்டுவிடக் கூடாது. தரையை விட்டும் உயர்ந்திருக்கும் எந்த கப்ரையும் சம்மாக்காது – தரைமட்டமாக்காது – விட்டுவிடக் கூடாது என்று அலி (ரலி) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள் என அபுல் ஹயாஜ் அல்அஸத் அவர்கள் கூறுகின்றார்கள்
(நூல்: முஸ்லிம்)




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்: Empty Re: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்:

Post by சபீர் Thu Sep 16, 2010 10:56 am

9. கப்ர்களில் பரகத் உண்டு என்று நம்புவது, அதற்காக அதனைத் தொடுவது, அதனிடம் பிரார்த்தனை செய்வது.

இவை அனைத்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்த செயல்களாகும், நிச்சயமாக இவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களி கட்டளையிடாத – மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்ட – பித்அத்தான செயலாகும். கப்ர்களில் கேட்கும் பிரார்த்தனைகளிலேயே மிகவும் அருவருப்பான – இழிவான பிரார்த்தனை கப்ரில் அடக்கப்பட்டிருப்பவரிடம் பிரார்த்திப்பதும் அவர்களிடம் தன் தேவைகளை கேட்பதும்தான். ஏனெனில் நிச்சயமாக இது பெரிய ஷிர்க எனும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் செயலாகும். இது தனக்குத் தானே நன்மையோ, தீமையோ செய்ய சக்தி பெறாதவரிடம் பிரார்த்திப்பதாகும். (நபியே!) உமக்கு பயன்தரவோ, துன்பமிழைக்கவோ முடியாத – அல்லாஹ் அல்லாதவரை நீர் அழைக்காதீர்! அவ்வாறு செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகி விடுவீர். என்று அல்லாஹ் கூறுகின்றான். (10:106)
சகோதரரே: மரண சிந்தனை மற்றும் படிப்பினை பெற இறந்தவர்களுக்காக நாம் பாவமன்னிப்புக் கேட்க, அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்க நாம் பிரார்த்திக்கத்தான் கப்ர் ஜியாரத் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள். இதை விட யாரேனும் அதிகமாக எதைச்செய்தாலும் நிச்சயமாக அவர் தவறு செய்கிறார் . நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு மாறுசெய்கிறார். நன்மைக்கு பகரமாக தீமையையே சுமந்து கொள்கிறார். நற்செயர்களின் நன்மைகள் அனைத்தையும் அழித்தொழிக்கும் கொடிய ஷிர்க்கின் பக்கம் ஷைத்தான் அவரை அழைத்துச் செல்கிறான் என்றே நாம் பயப்பட வேண்டியுள்ளது. – அல்லாஹ் நம் அனைவரையும் மரணிக்கும் வரை மார்க்கத்தின் உண்மையான வழியில் உறுதியாக நிலைத்து நிற்க கிருபை செய்வானாக!

சகோதரரே! நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் மேலே சில விஷயங்களை தவறு என்று சுட்டிக் காட்டியிருப்பதால் நாம் கப்ரில் அடக்கியிருப்பவரை தரம் தாழ்த்துகிறோம் என்றோ, நல்லடியார்களை நாம் நேசிப்பதில்லை என்றோ தயவுசெய்து தாங்கள் நினைத்து விடாதீர்கள். – சிலர் அவ்வாறு தான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். – அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவ்வாறல்ல. நாம் மேற்கூறிய விஷயங்களும் இவையல்லாத மற்ற சில செயல்களையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பதால்தான் நாமும் தவிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இதுதான் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவதும் நல்லடியார்களை நேசிப்பதுமாகும். நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அவர்களின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுவது. மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத்தை விட்டொழிப்பதுதான் நல்லடியார்களை பின்பற்றி, அவர்களை கண்ணியப்படுத்தி, மரியாதை செய்யும் முறையகும்.
இவ்வாறு செயல்படுவதுதான் அவர்கள் விரும்பிய பாதையில் செல்வதாகும் அவர்கள் வெறுத்த பாதயை விட்டும் விலகுவதுமாகும்.

சகோதரரே! நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் இருந்து நாம் பெற்ற விளக்கத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக! மனித, ஜின்களில் உள்ள ஷைத்தான்கள், நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராதவற்றில் உங்களுக்கு ஆசையூட்டி உங்களைக் கெடுத்துவிட வேண்டாம் என்று நான் உங்களுக்கு உபதேசம் செய்கிறேன்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்: Empty Re: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்:

Post by masthan Thu Sep 16, 2010 10:57 am

நலமா நண்பர் சபீர் அவர்களே !!!!
உங்கள் மீதும் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக (ஆமீன் )
உங்களுடைய இந்த ஹதிஸ் மிகவும் பயனுள்ளது இதை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதே எனது ஆசையாகும்
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்: Empty Re: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்:

Post by சபீர் Thu Sep 16, 2010 10:57 am

கண்ணியத்திற்குரிய சகோதரரே! நபி (ஸல்) அவர்கள் வணக்கம் செய்து கொண்டிருந்த ஹிரா குகை, மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்தபோது நபி (ஸல்) அவர்களும் அபூபக்கபர் ஸித்தீக் (ரலி) அவர்களும் மறைந்த ஸவ்ர் மலை. 'நான் இங்கு நிற்கின்றேன் அரஃபா அனைத்தும் தங்குமிடந்தான். பத்னு உர்னா எனும் இடத்தை விட்டும் கடந்து மேலே வந்து விடுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் மேலே ஏறி பிரசங்கம் செய்த அரஃபா மலை சகோதரரே! இவை அனைத்தும் மலைகள்தான், அங்கு செல்வதையோ, அதன் மீது ஏறுவதையோ அல்லாஹ் நமக்கு மார்க்கமாக ஆக்கவில்லை. நபி (ஸல்) அவர்களோ, அவர்களின் தோழர்களில் எவரேனும் ஒருவரோ இம்மலைகளுக்கு சென்றதோ, அதன்மீது ஏறியதோ கிடையாது. இம்மலைகளில் ஏறுவதனால் நன்மையும் சிறப்பும் இருக்குமேயானால் அவர்கள் போட்டி போட்டு முந்தியடித்துச் சென்றிருப்பார்கள், அதில் தொழ வேண்டும் என்றோ, அதன் மேலே ஏறி பரார்த்தனை செய்ய வேண்டும் என்றோ அல்லது அதனிடமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றோ அங்கு செல்வது கூடாது. இது போன்றே கற்கள் மற்றும் மரங்களைத் தொடுவது. அதில் பரகத் உண்டு என்றோ அல்லது அதன் மூலம் வேறு ஏதேனும் பலன் கிடைக்கும் என்றோ நம்புவது மரங்களின் மீது முடிச்சுப் போடுவது, அதன் மீது செருப்புக்களை தொங்க விடுவது, முடியைக் கட்டுவது அல்லது அதனை சுருட்டி மரத்திற்கு கீழே புதைத்து வைப்பது. ஏதேனும் கடிதங்கள் அல்லது போட்டோக்களை அதன்மீது வைப்பது இது போன்ற அனைத்துச் செயல்களுக்கும் மார்க்கத்தில் எந்த அனுமதியும் கிடையாது. ஏனெனில் இவைகள் மார்க்கத்தின் பெயரால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட – பித் அத்தான – செயல்களாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இச்செயல்கள் பற்றி பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்:




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்: Empty Re: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்:

Post by ரபீக் Thu Sep 16, 2010 10:58 am

அருமையான தகவலுக்கு நன்றி சபீர் ,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்: Empty Re: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்:

Post by சபீர் Thu Sep 16, 2010 11:01 am

யார் நம்முடைய இந்த – மார்க்க – விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும்.

மற்றொரு அறிவிப்பில்
யார் நமது கட்டளையல்லாத ஒரு செயலைச் செய்கிறாரோ அது அல்லாஹ்விடம் – ஏற்றுக்கொள்ளப்படாது. (நூல்: முஸ்லிம்)
சகோதரரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு உபதேசம் செய்துள்ளார்கள். அவர்கள் எந்த நன்மையான காரியத்தையும் இந்த சமுதாயத்திற்கு அறிவிக்காமலோ எந்த தீமையான காரியத்தையும் எச்ச்சரிக்காமலோ விட்டுவிடவில்லை. இந்த விஷயத்தை கடுகளவு கூட சந்தேகமில்லாமல் மிக உறுதியாக நம்பிக்கை கொள்வது தங்கள் மீது கட்டாயக் கடமையாகும்.

சகோதரரே! மார்க்கம் உபதேசமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று தடவை கூறினார்கள். அப்போது ஸஹாபாக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! யாருக்கு – உபதேசம் - ? என்று கேட்டனர்.
அல்லாஹ்வுக்கும் அவனுடைய வேதத்திற்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உபதேசமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸின் அடிப்படையில் மேற்கூறியவை நாம் தங்களுக்குச் செய்யும் உபதேசமாகும்.
அல்லாஹ் நம் அனைவரையும் சத்தியத்தைப் பின்பற்றி நடப்பவர்களாகவும் வழிகேட்டிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர்களாகவும், ஆக்கியருள்வானாக!
நமது நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர்கள், தோழர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ் அருள்புரிவானாக!

நன்மைகள் கிடைத்திட. . . . . .
நாம் செய்யும் நல்லறங்களுக்கு அல்லாஹ்விடம் கூலி கிடைக்க வேண்டுமேயானால் நாம் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஷிர்க் எனும் கொடிய பாவத்திலிருந்து விலகியிருத்தல் மிக மிக அவசியமாகும். ஏனெனில் நம்முடைய கொள்கையிலோ, அல்லது செயல்களிலோ இக்கொடிய பாவம் இடம் பெற்றிருந்தால் நம்முடைய அமல்கள் அனைத்தும். அழிந்து பயனற்றதாகிவிடும் என்றும் அவர்களுக்கு சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டதாகவும் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். பார்க்க திருக்குர்ஆனின் வசனங்கள்:
அத்தியாயம் : 39 வசனம்: 65 , அத்தியாயம்:4 வசனம்: 48 அத்தியாயம்: 5 வசனம்: 72, அத்தியாயம்: 4 வசனம்:116





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்: Empty Re: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தவைகளில் சிலவற்றைக் காண்போம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum