புதிய பதிவுகள்
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
120 Posts - 76%
heezulia
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
1 Post - 1%
Guna.D
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
1 Post - 1%
Pampu
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
285 Posts - 77%
heezulia
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
8 Posts - 2%
prajai
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_m10பொம்மையாக வளரும் குழந்தை... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொம்மையாக வளரும் குழந்தை...


   
   
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed 15 Sep 2010 - 14:23

பொம்மையாக வளரும் குழந்தை...

அந்நிய மண்ணில் வசதியாக வாழும் நம்மவர்கள், அதற்காகக் கொடுக்கும் விலையும் மிகப் பெரியது. சொந்தங்கள் விலகியிருக்க, பண்பாட்டு வேர் அறுந்திருக்க, அந்த சூழலில் தன் குழந்தை வளரும் சோகத்தை விவரிக்கிறார், அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் விலாசினி ஜெயக்குமார்

'ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்...' என்று 'கௌரவம்' படத்தில் ஒரு பாடல் வரி வரும். நானும் அப்படித்தான் மன நிம்மதியை இழந்து நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கிறேன். அந்த அளவுக்கு என் மன அமைதியைக் குலைக்கும் விஷயம், என் குழந்தை வளரும் விதம் பற்றியது.

நான் இருப்பது, பூலோக சொர்க்கம் என்று பலராலும் கருதப்படும் கனவு பூமியான அமெரிக்காவில்தான். உண்மையைச் சொல்வதானால் நானே எப்படியாவது இந்த சொர்க்கத்தில் வந்து வாழும் வாய்ப்பு கிடைக்காதா என்று கனவு கண்டவள்தான். அமெரிக்காவில் ஒரு வேலை தேடிக்கொண்டு செட்டில் ஆகிவிட வேண்டும்; அல்லது அமெரிக்காவில் வாழும் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு போய்விட வேண்டும் என்று நினைக்கும் தலைமுறையைச் சேர்ந்தவள்தான் நான்.

பெரிதாக மெனக்கெடாமலேயே அமெரிக்க வாழ்க்கை என்னைத் தேடி வந்தது, என் கணவர் மூலம்! கல்யாணம் ஆகும்போது அவர் இந்தியாவில்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் எப்படியும் அமெரிக்கா போய்விடலாம் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். 'கிழிச்சீங்க...' என்று நான் அவரை வெறுப்பேற்றுவேன். ஆனால் திறமைசாலியான அவருக்கு, திருமணமான ஒரே ஆண்டில் அமெரிக்காவில் வேலை கிடைத்தது. புதிய சூழலில் அவரை நிலைப்படுத்திக்கொள்ள ஒரு வருஷம் ஆனது. அதன்பிறகு உடனே என்னை அங்கு அழைத்தார். அடுத்த ஆண்டே நானும் அமெரிக்கா வந்துவிட்டேன்.

இதோ... கனவு போல ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. என் கணவர் நியூஜெர்சியில் மென்பொருள் துறையில் பணிபுரிகிறார். வந்த புதிதில் இந்தக் கனவு பூமி பற்றி என்னுள் இருந்த கற்பனைகள் பலவும் கலைந்துவிட்டன. இப்போதெல்லாம் என்னால் என் சந்தோஷத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. என் சந்தோஷத்துக்காக நான் என் குழந்தையின் நலனை விட்டுக் கொடுக்கிறேனோ என்ற சந்தேகம் வருகிறது.

நான் சொல்வது, சொல்லப்போவது எல்லாம் என் பையனைப் பற்றி. அமெரிக்கக் குடிமகனாக வளரும் இரண்டு வயதுக் குழந்தை பிரணவ் பற்றி.

குழந்தை எல்லா வசதிகளுடனும் வளர்கிறான். விளையாட எத்தனையோவிதமான பொம்மைகள், பெரிய டிவி ஸ்கிரீனில் கார்ட்டூன், பாஸ் அதிரும் இசை, குளிருக்கு இதமாக ஹீட்டர் என்று பல வசதிகள். சின்ன வயசில் நமக்குக் கிடைக்காத பல வசதிகள் நம் குழந்தைக்குக் கிடைக்கிறதே என்று எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தேன்... சமீபத்தில் என் சொந்த ஊரான திருமங்கலத்துக்குப் போய்வருவது வரையிலும்!

என் அப்பாவின் சஷ்டியப்த பூர்த்திக்காக சமீபத்தில் திருமங்கலத்துக்குப் போனோம். எங்கள் குடும்பம், உறவு வட்டம் எல்லாமே பெரியது. என் அண்ணன், தம்பி, அக்கா எல்லாரும் அவரவர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். ஒரு வயதிலிருந்து 16 வயதுவரை பத்து, பதினைந்து குழந்தைகள் வந்திருந்தார்கள். ஒரே ஆட்டம், பாட்டம், கலகலப்பு. அந்தப் பசங்களுடன் என் பையனைப் பார்த்தபோது எனக்கு மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவன் முகத்தில் அப்படி ஒரு பிரகாசத்தை நான் பார்த்ததே இல்லை. அவன் அந்த அளவுக்குச் சிரித்தும் நான் பார்த்ததில்லை.

அமெரிக்காவில் எப்போதும் நானும் அவனும் தனியாக இருப்போம். நான் அவனோடு விளையாடுவேன்; கதை சொல்வேன்; பாடுவேன். நான் வேலையாக இருக்கும்போது அவன் பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருப்பான். பகலில் எங்கள் குடியிருப்பில் மனித வாடையே இருக்காது; சத்தம் கேட்காது. சில சமயம் பொம்மைகளைப் பார்த்தபடி சும்மா இருப்பான். என்னைப் பார்த்ததும் வந்து காலைக் கட்டிக்கொள்வான். நான் அவனைத் தூங்கவைக்க முயற்சி செய்வேன். இரவு ஏழு மணிக்கு மேல் என் கணவர் வந்த பிறகுதான் சூழ்நிலை மாறும். வாரக் கடைசிகளில் இந்திய நண்பர்கள் வீடுகளுக்குப் போவோம். அதில் சிலருக்குக் குழந்தை இல்லை. சிலர் வீடுகளில் ஒரே ஒரு குழந்தை. அந்தக் குழந்தையும் கையில் எலெக்ட்ரானிக் பொம்மையை வைத்துக்கொண்டிருக்கும், அல்லது டி.வி. பார்த்துக்கொண்டிருக்கும்.

அப்போதெல்லாம் இந்த விஷயம் என்னைப் பெரிதாக பாதித்ததில்லை. ஆனால் திருமங்கலத்தில் எங்கள் அம்மா வீட்டில் அவன் ஆடிய ஆட்டத்தையும், சிரித்த சிரிப்பையும், அவனை மற்ற பிள்ளைகள் கொண்டாடியதையும் கண்ட எனக்கு அழுகையே வந்துவிட்டது.

இந்தச் சூழலில்தான் அவன் குஷியாக இருக்கிறான். அமெரிக்காவில் நாங்கள் செய்து கொடுத்திருக்கும் வசதிகள் எதுவும் அவனுக்கு இந்த அளவுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இத்தனைக்கும் இங்கே ஏ.சி. இல்லை. எல்லா அறைகளிலும் பாத்ரூமோ, குழாய்களோ இல்லை. தெருவிலிருந்து ஒரே இரைச்சல். ஆனால் எதைப் பற்றியும் இந்தக் குழந்தைகள் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஒரே சத்தம், சிரிப்பு, ஓட்டம். என் குழந்தையை ஒரு நாள் மதியத்திலிருந்து இரவுவரை நான் பார்க்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு ஐயா பிசி. எப்போதும் என் காலைக் கட்டிக்கொண்டிருக்கும் பிரணவா இவன்?

அந்தக் குழந்தைகளுடன் பேச்சுக்கொடுத்தேன். அதில் நான்கு பேர் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகள். அமெரிக்காவில் இவ்வளவு சுவாதீனமாகப் பக்கத்து வீட்டுக்குப் போய் அதகளம் பண்ண முடியாது. கொஞ்ச நேரத்துக்கு மேல் யாரும் என்னோடு பேசிக்கொண்டிருக்கவில்லை. அவர்களுக்கு விளையாட எவ்வளவோ இருக்கின்றன. எதற்கு வெட்டியாக என்னை மாதிரி பெரிசுகளுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என நினைத்தோ என்னவோ, என்னோடு பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை இன்னொரு பெண் சைகையால் அழைத்ததைக் கவனித்தேன். 'சரி, நீ போய் விளையாடு' என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டேன். என் பையன் ஊஞ்சலில் வேறு ஒரு பையனோடு ஆடிக்கொண்டிருந்தான். முகமெல்லாம் உற்சாகம்.

இதுவல்லவோ குழந்தைகளுக்குத் தேவையான சூழ்நிலை என்று தோன்றியது. பணத்தை வைத்து எல்லாவற்றையும் வாங்கலாம்; சந்தோஷத்தை வாங்கிவிட முடியுமா? ஏ.சி. ரூம் இருந்தால் உடல் குளிரும்; மனம் குளிருமா? பொம்மைகளால் இந்த உயிரோட்டத்தைத் தர முடியுமா? அமெரிக்கா சொர்க்க பூமிதான். ஆனால் குழந்தைகளின் சொர்க்கம் அது இல்லை... பிற குழந்தைகளுடன் சுதந்திரமாக விளையாடும் சூழலில்தான் அவர்களது சொர்க்கபூமி இருக்கிறது.

திரும்பவும் அமெரிக்க வாழ்க்கையில் செட்டிலானபோது, என் பையனின் முகத்திலும் குரலிலும் இதற்குமுன் எப்போதும் உணர்ந்திராத ஏக்கம் பரவியிருப்பதை உணர முடிந்தது. சம்பாதிப்பது குறைவாக இருந்தாலும் பரவாயில்லை; வசதிகள் இல்லாத சூழலாயினும் பரவாயில்லை; எல்லாவற்றையும்விட குழந்தையின் சந்தோஷம்தானே முக்கியம்! இப்போதெல்லாம், 'தமிழ்நாட்டுக்கு நாம் எப்போது திரும்பப் போகிறோம்' என கணவரை நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

நன்றி நம் தோழி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed 15 Sep 2010 - 14:42

நன்றி நன்றி நன்றி



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed 15 Sep 2010 - 14:44

உண்மை அருமையான பகிர்வு நன்றி நன்றி




பொம்மையாக வளரும் குழந்தை... Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed 15 Sep 2010 - 14:44

நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக