Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓய்ந்தேன் என மகிழாதே!
Page 1 of 1
ஓய்ந்தேன் என மகிழாதே!
தமிழக மீனவர்கள் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், சகலதுறைகளிலும் பரவியிருக்கும் ஊழல், கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் உள்ளிட்ட தமிழக மக்களின் ஆதாரமான வாழ்வியல் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியாத திமுக அரசாங்கத்தைக் கண்டித்து ஜூலை 13 கோவையிலும் ஆகஸ்டு 13ஆம் தேதி திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் பெருந்திரளான மக்களின் பங்கேற்பு காரணமாக முக்கியமான அரசியல் நிகழ்வுகளாகியிருக்கின்றன. 2009இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தில்லுமுல்லுத் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு சோர்வடைந்திருந்த அதிமுகவினருக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் நிகழ்வுகள் இவை.
உள்ளூர்த் தலைவர்கள் சிலரை விலைக்கு வாங்கிவிட்டு அதிமுக பலவீனப்பட்டுள்ளதாகக் கருதிய திமுகவுக்கு இப்பேரணிகள் துன்ப அதிர்ச்சிகளாக வந்துசேர்ந்திருக்கின்றன. அதிமுகவை அழித்துவிட மு.க. அழகிரி கண்ட கனவுகள் இப்போது அடுத்து வரவிருக்கும் அதிமுகவின் மதுரைப் பேரணியைக் கருதிக் கொடுங்கனவுகளாக மாறியிருக்கின்றன. திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தனது பண, அதிகார பலங்களைக்கொண்டு ஜனநாயக நெறிமுறைகளை வெளிப்படையாக மீறிவரும் திமுகவை அரசியல்ரீதியில் எதிர்கொள்ள முடியாத நிலைக்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டன. அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கையும் கருணாநிதியின் குடும்பங்களின் ஆதிக்கத்தையும் அம்பலப்படுத்த வேண்டிய ஊடகங்களும் பெரிதும் மௌனமாக்கப்பட்டன. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் சேதுக்கால்வாய்த் திட்டம், மூன்று அப்பாவி மனிதர்களின் உயிரையும் கருத்துச் சுதந்திரத்தையும் பலிகொண்ட மதுரைத் தினகரன் அலுவலக எரிப்பு, காவல் துறை அத்துமீறல்கள், போலிமோதல் சாவுகள், சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் என வர்ணிக்கப்படும் ஆ. ராசாவின் ‘ஸ்பெக்ட்ரம்’ முறைகேடு, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் அரசாங்கத்தின் நேரடியான, மறைமுகமான நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, தொடரும் மின்வெட்டு, காவிரி நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை, வளர்ச்சியின் பெயரால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது, சென்னை முதலான நகரங்களில் வசிக்கும் விளிம்புநிலை மக்கள் அப்புறப்படுத்தப்படுதல், தலித்துகளின் மீதான தொடர் தாக்குதல்கள் ஆகிய எண்ணற்ற பிரச்சினைகளை அதிமுக உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சிகள் எவையும் பொறுப்புடன் கையாளவில்லை. தொண்டு நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புகளும் எதிர்வினையாற்றிய அளவுக்குக்கூட எதிர்க்கட்சிகளால் செயல்பட முடியாதது துரதிருஷ்டவசமானது.
திமுக அரசாங்கத்தின் இத்தகைய மக்கள் விரோத, ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டிப்பதற்கான வெளி முற்றாக அழிக்கப்பட்டிருந்த பின்னணியில் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளரான ஜெயலலிதா தோழி சசிகலாவுடன் ஓய்வுக்கு ஒதுக்கிய நேரங்கள் அதிகம்; அரசியல் கடமைகளை ஆற்றுவதற்கு ஒதுக்கிய நேரம் குறைவு. முக்கியமான தருணங்களின்போது அவர் ஒன்று மௌனமாக இருந்தார் அல்லது அறிக்கைகள் வெளியிட்டார். சரியான வழிகாட்டுதல்களற்ற கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்றக் குழுக்கள் செயல்படாமல் முடங்கிக்கிடந்தன. அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் கம்யூனிஸ்ட்களுங்கூடத் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு அரசியல் நடவடிக்கையையும் ஒருங்கிணைக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் இச்செயலற்ற தன்மை கருணாநிதி, தன் குடும்ப மேலாண்மையை நிறுவும் நடவடிக்கைகளை எதிர்ப்பே இல்லாமல் முன்னெடுத்துச் செல்வதற்கே துணைபுரிந்துள்ளமை வெளிப்படை.
கோவையிலும் திருச்சியிலும் அதிமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்களுக்குப் பெருமளவிலான மக்களின் ஆதரவு கிடைத்திருப்பது திமுக அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியின் அடையாளம். ஊடகச் செய்திகள் இக்கூட்டங்களில் அதிமுக ஆதரவாளர்களைத் தவிரப் பெருமளவிலான பொதுமக்களும் பங்கெடுத்திருக்கின்றனர் எனத் தெரிவிக்கின்றன. இது ஏமாற்றத்துக்குள்ளாக்கப்பட்ட மக்கள் தமக்காகப் போராட முன்வரும் எந்தவொரு அமைப்புக்கும் அதன் கடந்தகாலச் செயல்பாடுகளின் மீதான அதிருப்தியைப் பொருட்படுத்தாமல் ஆதரவளிக்கவும் அதன் தலைமையை ஏற்கவும் தயாராக இருக்கிறார்கள் என்பதற்குச் சான்று. விலைவாசி உயர்வு, மீனவர்மீதான தாக்குதல், காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை ஆகியவற்றைக் குறித்த அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை ஆதாரங்களுடன் மக்கள் முன்வைத்து, அவற்றைத் தீர்ப்பதில் அக்கறையற்ற திமுக அரசாங்கத்தை இக்கூட்டங்களில் கடுமையாக விமர்சித்த ஜெயலலிதா, கருணாநிதி குடும்ப ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். தமக்குள்ள வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தி அதிகாரபலத்துக்கும் பணபலத்துக்கும் அடிபணியாமல், திமுகவின் ஊழலில் பங்கெடுத்துக்கொள்ளாமல் இந்த அரசாங்கத்தை மாற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட அவருடைய உரை தமிழக அரசியல் வரலாற்றில் அதன் கடுமைக்காகவும் அவர் வீசிய முரட்டுக் கேள்விக்கணைகளுக்காகவும் இடம்பெறும்.
மக்கள் நலன், ஜனநாயகம் ஆகியவை சார்ந்து உருவாகியுள்ள ஜெயலலிதாவின் இந்தத் திடீர் கரிசனத்துக்குப் பின்னால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிற சட்டப் பேரவைத் தேர்தல்கள் பற்றிய கணக்குகள் இருக்கின்றன என்பது ரகசியம் அல்ல. காங்கிரசுடன் சேர்ந்து திமுகவுக்கு எதிராக ஒரு ‘வெற்றிக் கூட்டணி’யை உருவாக்குவதற்கு அவர் முயன்றுவருவதாக ஊடகங்களின் செய்தித் தொகுப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரசுடன் கைகோக்கும்போது அவரது தற்போதைய நிலைப்பாடுகளில் பல மாற்றங்கள் ஏற்படும்.
முந்தைய ஜெயலலிதா அரசாங்கத்தின் மக்கள் விரோத, ஜனநாயக விரோதப் போக்குக்கு 2004இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் அதிமுகவைக் கடுமையாகத் தண்டித்தனர். குறிப்பாக மதமாற்றத் தடைச் சட்டமும் பலித் தடைச்சட்டமும் அவரது ஆட்சிக்கு முடிவு கட்டிய அபத்தங்கள். அடுத்த இரண்டாண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் அக்கட்சி 60க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற முடிந்ததற்குக் காரணம் ஜெயலலிதா அரசாங்கம் தன் போக்கை ஓரளவுக்கு மாற்றிக்கொண்டது தான். திமுகவின் பணபலத்தையும் அதிகாரபலத்தையும் மீறி 2009இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில்கூட அக்கட்சியால் ஓரளவுக்குக் கணிசமான இடங்களை வெல்ல முடிந்தது. இது வாக்காளர்கள் அக்கட்சியை முற்றாகப் புறக்கணித்துவிடவில்லை என்பதற்கான ஆதாரம். ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்களின் விருப்பப்படி ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அதிமுக தன் கடமையை ஆற்றவில்லை என்பது வெளிப்படை.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள் ஆற்ற வேண்டிய பங்கு ஆளுங்கட்சியின் பங்களிப்புக்கு எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. வாக்காளர்களுக்கு எண்ணற்ற வாக்குறுதிகள் அளித்துத் தேர்தல்களில் வெற்றிகளை ஈட்டுபவர்கள் அதிகாரம் கைக்குக் கிடைத்தவுடன் அவற்றைச் சரியான முறையில் நிறைவேற்றுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதோடு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை நாடாளு மன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்படுத்த வேண்டிய முக்கியக் கடமை எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. கடந்த சில பத்தாண்டுகளாக அதிமுக உள்ளிட்ட தமிழகத்தின் எந்தவொரு எதிர்க்கட்சியும் அந்தக் கடமையைச் சரியாகச் செய்ததாகச் சொல்ல முடியாது. ஈழப் பிரச்சினையில் காட்டிய தீவிரத்தைத் தமிழக மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளில் தமிழகத்தின் எந்தவொரு எதிர்க்கட்சியும் காட்டவில்லை என்பது கசப்பான உண்மை. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கெதிராகக் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் நடத்திய முழு அடைப்புப் போராட்டம் தமிழகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாததற்குக் காரணம் தமிழகக் கட்சிகள் தொலைநோக்குப் பார்வையுடன் வலுவான எதிர்ப்பு அணியை உருவாக்காததே. இடைத் தேர்தல்களில் திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தபோது எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நின்று அதை முறியடிக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதற்குப் பதில் திமுகவுக்குப் போட்டியாகத் தாங்களும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தனர். மாற்று என்பது இத்தகைய பண்பின்மைகளைக் கொண்டதாக இருக்க முடியாது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் திமுகவின் செயலைத் தடுக்க முடியாத அரசு இயந்திரத்தின் போக்கைக் கண்டித்துக் கடந்த வருடம் நடைபெற்ற சில இடைத்தேர்தல்களைப் புறக்கணிப்பதாக அறிவித்த அதிமுக, களத்திலிருந்து முற்றாக விலகிக்கொண்டு திமுகவினர் மிகச் சுதந்திரமான முறையில் முறைகேடுகளைச் செய்வதற்கு வழிவகுத்துக்கொடுத்தது. புறக்கணிப்பு என்பது ஒரு போராட்ட முறை, அதில் மக்களைப் பங்கேற்கச் செய்யும்போதே அது வெற்றிகரமானதாக இருக்க முடியும் என்னும் அரசியல் பார்வை ஜெயலலிதாவுக்கு இல்லாததன் விளைவு இது.
மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள தலைவர் ஒருவர் அவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்வது அவசியம். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக, அவருக்குப் பிறகு கருணாநிதியின் தலைமையில் கோட்பாட்டுரீதியிலும் நடைமுறையிலும் நீர்த்துப்போய், இப்போது கருணாநிதியின் குடும்பச் சொத்தாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் போக்கைத் தொடக்கத்திலேயே இனம் கண்டு அக்கட்சியிலிருந்து வெளியேறி அதிமுகவை உருவாக்கிப் பத்தாண்டுக் காலம் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக விளங்கிய எம்ஜிஆருக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ஜெயலலிதா தன் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றாததாலேயே கட்சியின் மூத்த தலைவர்களில் பலர் விலைபோய்க்கொண்டிருக்கின்றனர்.
எனினும் ஜெயலலிதா தமிழக அரசியல் அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாகவே தென்படுகிறார். சமீபத்தில் குடிசைப் பகுதி மக்களின் உரிமைகளுக்காகவும் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குள்ளாகித் தற்போது, தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கருக்கு ஆதரவாகவும் அவர் குரல் கொடுத்திருப்பது முக்கியமானது. திருச்சிப் பொதுக் கூட்டத்தில் காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சினையில் திமுக அரசு தமிழக மக்களுக்கு இழைத்த துரோகங்கள் பற்றிப் புள்ளிவிவரங்களோடு அம்பலப்படுத்தினார். மணல்கொள்ளை, வளர்ச்சியைக் காரணங்காட்டி விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்படுவது, ஊழலில் மக்களைப் பங்காளிகளாக்கும் திமுகவின் செயல்பாடு குறித்தெல்லாம் ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துகள் அவர் ஒரு மாற்று அணுகுமுறைகொண்ட அரசியல் தலைவர் என்னும் தோற்றத்தை உருவாக்குகின்றன. தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தமிழக மக்களை வாட்டிவதைத்த கந்துவட்டிக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கடும் நடவடிக்கை எடுத்த, லாட்டரிச் சீட்டைத் தடைசெய்த ஜெயலலிதாதான் ஊடகங்களின் மீதும் அரசியல் எதிரிகளின் மீதும் அடக்குமுறையையும் ஏவிவிட்டார். அரசு ஊழியர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களது போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கி அவர்களில் மூன்று லட்சம் பேரை ஒரே அரசாணையின் மூலம் பணிநீக்கம் செய்தார்.
ஜெயலலிதா அரசியல்ரீதியில் கருணாநிதிக்கு மாற்று என நம்புவதற்கு நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதிமுகவும் திமுகவுக்குச் சரியான மாற்று அல்ல. தேர்ந்தெடுப்பதற்கு மக்கள் முன்பாக உள்ளவை இரு தீமைகள் மட்டுமே. ஜெயலலிதா ஒப்பீட்டளவில் குறைவான தீமையாகத் தென்படுவதற்குக் காரணம் திமுக அரசாங்கத்தின் நான்கரை ஆண்டுக் கால ஆட்சிதான். கடந்த அதிமுக ஆட்சிக்குப் பிறகு 2005இல் திமுக ஒரு மாற்றாகத் தென்பட்டது போன்ற ஒரு காட்சிப் பிழைதான் இது. தமிழக அரசியல் வானில் ஒளி ஆண்டுகளின் தொலைவில்கூட அத்தகைய விடிவெள்ளிகள் எதுவும் தென்படவில்லை. ஆனால் திமுக அரசாங்கத்தின் மீது மக்கள் மத்தியில் நிலவும் பிற அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் உணரத் தவறிய வெறுப்பையும் எதிர்ப்புணர்வையும் அடையாளம் கண்டு கொண்டு அதை ஒருங்கிணைக்கும் முகமாக உடனடியாகச் செயலில் இறங்கியிருப்பதுதான் ஒரு தலைவி என்னும் ரீதியில் ஜெயலலிதா புரிந்துள்ள சாதனை. ஜெயலலிதா கடந்தகாலத் தவறுகளைத் திருத்திக்கொண்டு மக்கள் நலனை, ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்தினால் அக்கட்சிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதே இக்கூட்டங்களுக்குப் பெருமளவில் திரண்டுவந்த மக்கள் திரள் உணர்த்தியிருக்கும் செய்தி. இந்தச் செய்தியை ஜெயலலிதா எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதே அவருடைய அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
நன்றி: காலச்சுவடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum