புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_m10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_m10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_m10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_m10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_m10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10 
19 Posts - 3%
prajai
பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_m10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_m10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_m10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_m10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_m10பசுமைப் புரட்சியின் கதை - 14 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசுமைப் புரட்சியின் கதை - 14


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Sep 13, 2010 5:22 pm

மாயச் சுழலில் மாட்டிக்கொண்ட விவசாயம்
சங்கீதா ஸ்ரீராம்
(ஃபெர்டிலைசர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, 2003/04)
ஆண்டு

என். பி. கே. உரங்களின்
மொத்தப் பயன்பாடு
(கோடி டன்)


ஹெக்டேர்
1969-70 0.198 11.04
1979-80 0.526 30.99
1989-90 1.157 63.47
1999-2000 1.807 94.90



பசுமைப் புரட்சியின் விளைவுகள் ஒன்றல்ல இரண்டல்ல. வகைவகையாகப் பிரித்து, எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்று தெரியாமல் திணறும் அளவுக்கு அவை பரந்துபட்டவை. அவற்றை ஒரு கட்டுரையில் அடக்க வேண்டும் என்றால் மேலோட்டமான தகவல்களை மட்டுமே அளிக்க முடியும்.

பசுமைப் புரட்சியைத் தொடக்கிவைத்த விதைகள், இரசாயன உரங்களைக் கொட்டிப் பயிர்செய்தபோது மட்டுமே உயர்விளைச்சலைக் கொடுத்தன. நிலத்தில் உப்பு தங்கிவிட, இயல்பாகவே மண்வளத்தைப் பாதுகாத்துவந்த நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்களின் உலகம் சிறிது சிறிதாகச் சுருங்கி, காணாமல்போனது. இதனால், இரசாயன உரங்களின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்துக்கொண்டேபோனது.

புதிய விதைகளுக்கு நோய் மற்றும் பூச்சி எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்ததால், பூச்சிக்கொல்லிகளும் காளான்கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. உப்பு உரங்களைப் பயன்படுத்தியதால் செடிகளின் தண்டுகள் பொத்தலாகி, மேலும் பூச்சிகளின் தாக்கம் அதிகரித்து, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்தது. பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை உட்கொண்டு, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இயற்கையிலேயே இருந்த பூச்சிகளும் பறவைகளும் தவளைகளும் இந்த இரசாயனங்களால் அழிந்துவிட்டன. அவற்றின் வேலைகளையும் சேர்த்துச் செய்ய மேலும் அதிகமாக இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டன. தொழில்சார் வேளாண்மை (Industrial Agriculture) அணுகுமுறையில், ஒரே பயிரை நூற்றுக்கணக்கான ஏக்கரில் (இயற்கைக்குப் புறம்பாகப்) பயிர் செய்ததன் விளைவாகப் பூச்சிகளின் தாக்கம் அதிகரித்து மேலும் பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்பட்டன; சிறிய அளவிலான நோய்த் தாக்குதல்கள் பெரும் தொற்று நோய்களாக வெடித்தன. மேலும் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியதால், பூச்சிகளும் தலைமுறை தலைமுறையாகப் பூச்சிக்கொல்லிகளுக்கான எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கிக்கொண்டு வந்தன. 1954இல் 15 கோடி டன்னிலிருந்து 2000இல் 8,800 கோடி டன்னாக இந்தியாவின் இரசாயனப் பூச்சிக்கொல்லியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

மேலும் புதிய “வீரிய” ரக விதைகள் விளைவதற்காக, நாட்டு ரகங்களைவிடப் பல மடங்கு அதிகமான நீர்ப்பாசனம் தேவைப்பட்டது. உதாரணத்திற்கு, புதிய கோதுமை ரகங்களுக்குப் பாரம்பரிய ரகங்களைவிட ஐந்து மடங்கு நீர் தேவைப்பட்டது. இலவச மின்சார வசதி பெற்ற விவசாயிகள், நீரை வீணாக்க நீர் உபயோகம் மேலும் அதிகரித்தது. விளைச்சலை அதிகரிக்க வேண்டும் என்று சொல்லி, பெரிய அணைகளும் கட்டப்பட்டன.

இப்படி விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், நீர்ப் பாசனம், டிராக்டர்கள் என்று எல்லாவற்றையும் (உலக வங்கியின் கடனுதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட மானியங்களைக் கொண்டு) வாங்கி, இந்த மாயச் சுழலில் மாட்டிக்கொண்டது நமது விவசாயம்.

1. சூழலியல்

உப்புகளைக் கொட்டக் கொட்ட, மண்ணில் வாழும் உயிரினங்கள் அழிந்தன. பூச்சிக்கொல்லிகளால் மற்ற பறவை, சிலந்தி, தவளை, பாம்பு, போன்ற நன்மை செய்யும் உயிரினங்களும் கூடவே காணாமல்போயின. மண் மலடானது. இரசாயன உரங்கள் நீரோடைகளைச் சென்றடைய, அங்கே வளர்ந்துவந்த பாசிகள் அதிகமாகி, நீரினங்களுக்குப் பிராணவாயு கிடைக்காமல் செய்து, அவை மாண்டுபோகக் காரணமாயின. பூச்சிக்கொல்லிகளும் இவ்வாறே நீரோடைகளைச் சென்றடைந்து அவற்றுள் இருக்கும் உயிரினங்களைக் கொன்றன. உயிரினப்பன்மை அழிந்துபோனது. ஒரு சில நெல், கோதுமை ரகங்கள் மட்டுமே பரவலாக்கப்பட்ட காரணத்தால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாகச் சேகரித்துவைக்கப்பட்ட பாரம்பரிய ரகங்கள் பயிர்செய்யப்படாமல் அழிந்துபோயின. நீர்ப்பாசன வசதிகளால் (முக்கியமாகப் பெரிய அணைகள், கால்வாய்களால்) நிலம் உப்புத் தன்மை அடைந்தது. ICARஇன் கணக்கின்படி, இந்தியாவில் 2.3 கோடி ஹெக்டேர்களுக்கு மேல் நிலம் இவ்வகையில் உப்புத்தன்மை அடைந்து வீணாகியுள்ளது. மேலும் இயற்கை வெள்ளங்கள் கரைகளில் கொண்டுவந்து சேர்த்துக்கொண்டிருந்த வளமான சேற்றுப் படிவுகள் அணைகளிலேயே தங்கியதால், மேலும் உரங்கள் தேவைப்பட்டன. நீரின் உபயோகம் அதிகரித்ததால், நிலத்தடி நீர் குறையத் தொடங்கியது. எங்கெல்லாம் பயிர்கள் நிலத்தடி நீரை நம்பியிருக்கின்றனவோ அங்கெல்லாம் ஆழம் ஒவ்வோர் ஆண்டும் ஒன்றிலிருந்து இரண்டடிவரை கீழே இறங்கிக்கொண்டிருக்கின்றது. பஞ்சாப்பின் நிலத்தடி நீர் இந்த நாற்பதாண்டுகளில் 35 அடிக்கு மேல் கீழே இறங்கியுள்ளது.

2. உடல்நலம்

உண்ணும் உணவில் இரசாயனங்கள் அதிகரித்ததால், புற்றுநோய், பார்கின்ஸன்ஸ் போன்ற பல பயங்கரமான வியாதிகளை வர வழைத்துக்கொண்டிருக்கிறோம். பசுமைப் புரட்சியின் ‘வெற்றிக்’ கொடியை முதலில் நாட்டிய (இந்தியாவிலேயே மிக அதிகமான அளவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்திவருகிற) பஞ்சாபிலுள்ள பட்டிண்டா எனும் மாவட்டத்தில், “புற்று நோய் விரைவு ரயில்” (cancer express) என்றழைக்கப்படும் ரயில், தினமும் சராசரியாக 70 புற்று நோயாளிகளை ஏற்றிக்கொண்டு ராஜஸ்தானிலுள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கிறது. எண்டோசல்ஃபான் எனும், நாம் தினசரி உண்ணும் உணவுப் பயிர்களில் நம் விவசாயிகள் சர்வசாதாரணமாக உபயோகிக்கும் பூச்சிக் கொல்லியை, 20 ஆண்டுகள் காசர்கோட்டின் முந்திரித் தோட்டத்தின்மேல் விண்ணிலிருந்து தெளித்ததால் இப்போது அங்கே குழந்தைகள் கடுமையாக ஊனமுற்றும் மனவளர்ச்சி குன்றியும் பிறக்கின்றன.

பயிர்களை மாசுபடுத்தும் பூச்சிக் கொல்லிகளில் ஒரு வகையானது (persistent organic pollutants) பல நூற்றாண்டுகள் ஆனாலும் அழியாமல் நம் உணவுச் சங்கிலியிலேயே குடியிருக்கும். ‘பாப்ஸ்’ (POPs) என்றழைக்கப்படும் DDT, எண்டோசல் ஃபான், ஆல்ட்ரின், லிண்டேன், என்ட்ரின், டைஎன்ட்ரின் ஆகிய இரசாயனங்களுக்கு மேற்கத்திய நாடுகளில் தடைவிதிக்கப்பட்டாலும், அவை இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் தாராளமாக விநியோகமாகின்றன. இவற்றின் விற்பனை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை.

இப்போதெல்லாம் பூச்சிகள் ஒரு பூச்சிக்கொல்லிக்குக் கட்டுப்படுவதில்லை என்பதால், இரண்டு மூன்று பூச்சிக்கொல்லிகளைச் சேர்த்துக் கலந்து தெளிப்பது வழக்கமாகிவிட்டது. இப்படிப் பல பூச்சிக்கொல்லிகளைக் கலந்து பயன்படுத்துவது (pesticide cocktails) ஒரேயொரு இரசாயனத்தைப் பயன்படுத்துவதைவிடப் பல மடங்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

3. சமூகப் பொருளாதாரம்

பலர் முன்னெச்சரிக்கை செய்திருந்ததுபோலவே, பசுமைப் புரட்சியின் பலன்கள் பணக்கார விவசாயிகள், நில உரிமையாளர்களை மட்டுமே சென்றடைந்தன. இதனால், பெரிய சிறிய விவசாயிகளுக்கிடையே இருந்த இடைவெளி பன்மடங்கு அதிகரித்து, வர்க்கபேதம் அதிகமாகி, வன்முறையும் வளர்ந்தது. வந்தனா சிவாவின் பசுமைப் புரட்சியின் வன்முறை எனும் நூல், பஞ்சாப்பில் ஏற்படும் வன்முறையை இவ்வாறு விளக்குகிறது.

விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள் போன்ற இடுபொருட்களின் விலை ஒரு பக்கம் அதிகரிக்க, மற்றொரு பக்கம் அவற்றின் உபயோ கிப்பும் அதிகரித்துக்கொண்டேபோக, இதில் சிக்கிய விவசாயிகள் அனைவரும் கடனாளிகளாயினர். இதற்கும் மேல், விதைகள் தரமானவையாக இல்லாவிட்டால், பயிர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்து, மேலும் நஷ்டமாகி, கடனை அடைக்க முடியாமல் பல்லாயிரக்கணக்கில் மாண்டுகொண்டிருக்கும் செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்னும் வள்ளுவன் வாக்கைக் கேலிக்குரிய ஒன்றாக்கிவிட்டது பசுமைப் புரட்சி! கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே கிட்டத்தட்ட இரண்டு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். “எங்கள் நிலங்களில் எல்லாம் கோதுமையை மட்டுமே பயிரிட்டு நாங்கள் நிறையப் பணத்தை இழந்துவிட்டோம். இந்தியா முழுமைக்கும் உணவு அளிப்பதற்காக எங்களைப் பலியாக்கிவிட்டார்கள்” என்று பஞ்சாப் விவசாயி ஒருவர் கூறியிருக்கிறார்.

இந்தக் காரணத்தாலும் மலிவு விலையில் அதிக உணவு நகர்ப்புறங்களில் கிடைத்ததாலும் ஏழை விவசாயிகளும் நிலமற்ற கூலியாட்களும் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து மேலும் தொழில்மயமாக்கல் வளரக் காரணமாயினர்.

4. அரசியல்

பாசனத்தைத் தீவிரப்படுத்தியதால் சேமிப்புக்கான வசதிகளைப் பெரிய அளவில் அதிகரிக்க வேண்டிய அவசியம் எழுந்தது. நீர் விநியோகத்தின் கட்டுப்பாடு மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தின் கீழே கொண்டுவரப்பட்டது. அக்கம்பக்கத்து ஊர்களுக்கு இடையிலும் அண்டை மாநிலங்களுக்கிடையிலும் தண்ணீருக்கான மோதல் அதிகரித்தது. தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவிற்கும் இடையேயுள்ள காவிரி நீர்ப் பிரச்சினையைப் போன்று, இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையே பிரச்சினையைக் கிளப்பி வன்முறையைத் தூண்டிவிட்டதும் இந்தப் பசுமைப் புரட்சியின் வேலைதான்! உதாரணத்திற்கு, ஹரியானாவில் மூன்று லட்சம் ஹெக்டேர் நிலத்திற்குப் பாசன வசதி அளிப்பதற்காகக் கட்டப்பட்ட சட்லஜ்-யமுனா இணைப்புக் கால்வாயின் கட்டுமானத்தைத் தடுத்து நிறுத்த, பஞ்சாப் விவசாயிகள் ஒரு பெரும் போராட்டத்தில் இறங்கினர். பலவந்தமாக வேலையை நிறுத்தினார்கள். அப்போது வெடித்த வன்முறையில் 30 கட்டுமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

ஆனால் இவை அனைத்தாலும் பெரிதாக வளர்ச்சி பெற்றது விதை, இரசாயன உரம், பூச்சிமருந்து, வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், தண்ணீரையும், நீர் நிலைகளையும் வியாபாரம் செய்யும் தனியார் நிறுவனங்கள் ஆகியவைதாம். இவையனைத்தும் பல நூறு கோடி டாலர்களைக் கொட்டிக்குவிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள். இந்த நிறுவனங்களின் செல்வாக்கு எப்படிப்பட்டதென்றால், தங்கள் பணபலத்தால் கொள்கை வகுப்பாளர்களையே தங்கள் கைகளுக்குள் போட்டுக்கொண்டு, அரசாங்கங்களையே விலைக்கு வாங்கி மறைமுகமாகக் கொடுங்கோல் ஆட்சிசெய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை.

o

பசுமைப் புரட்சியாளர்கள் பரப்பிய இரண்டு பொய்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவராமல், இந்தக் கட்டுரை நிறைவுபெற முடியாது.

உணவுப் பொருட்களின் உற்பத்தித் திறன் உண்மையில் அதிகரித்ததா?

முதலில், நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, புதிய ரகங்கள் உயர்விளைச்சல் ரகங்களே அல்ல. அவை இரசாயன உரங்களுக்கு நன்கு எதிர்வினை புரிந்த ரகங்கள். பாரம்பரிய ரகங்கள், கதிர்களின் எடை தாங்காமல் சாய ஆரம்பிக்கும்வரை அவையே உயர்விளைச்சலைக் கொடுத்தன.

இரண்டாவதாக, உற்பத்தித் திறனை எவ்வாறு பொருள்கொள்வது, கணக்கிடுவது என்பதையே நாம் அடிப்படையில் ஆராய வேண்டியுள்ளது. “எவ்வளவு இடுபொருளைக்கொண்டு எவ்வளவு உற்பத்தி” என்கிறபடி பார்த்தால், பசுமைப் புரட்சி ரகங்கள் பாரம்பரிய ரகங்களைவிடக் குறைவான உற்பத்தித் திறன் கொண்டவையே என்பது தெளிவாகும். பாரம்பரிய விவசாயத்தில், “அடி நாட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு” என்று கூறி, ஒரு பயிரின் விளைச்சலை அதன் மூன்று பாகங்களின் ஒட்டு மொத்த விளைச்சலைக் கொண்டே கணக்கிட்டனர். ஆனால் இவையெல்லாவற்றையும் தானிய வளர்ச்சி என்ற ஒன்றுக்காக மட்டுமே தியாகம் செய்தது பசுமைப் புரட்சி.

ஒரு வாதத்திற்காக, இந்தப் புதிய ரகங்கள் விளைச்சலை அதிகரித்தன என்றே வைத்துக்கொள்வோம். நம் விவசாயிகள் அனைவரின் அனுபவத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் இரசாயன இடுபொருட்களின் அளவு கூடிக்கொண்டும் நிலத்தடி நீரின் ஆழம் அதிகரித்துக்கொண்டும் (அதனால், மின்சாரமும் அதிகரிக்க) பயிர் விளைச்சல் குறைந்துகொண்டும்தான் போகின்றன. இவற்றைக்கொண்டு ஓராண்டுக் கால உற்பத்தித் திறனைக் கணக்கிடுவதா? பத்தாண்டுக் காலச் சராசரி உற்பத்தித் திறனைக் கணக்கிடுவதா? நியாயமாகப் பார்த்தால், பசுமைப் புரட்சி தொடங்கிய 40 ஆண்டுக் காலத்தின் சராசரி உற்பத்தித் திறனைத்தான் பார்க்க வேண்டும். இன்றுவரை பல லட்சங்கள் நஷ்டமாகித் தற்கொலை செய்துகொண்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், வளர்ச்சிக்குப் பதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

மூன்றாவதாக, பாரம்பரிய முறையில் பலவகைப்பட்ட பயிர்களைச் சேர்த்து விளைவித்த நிலங்களின் உற்பத்தித் திறன் பன்மடங்கு அதிகமாக இருந்தது. உதாரணத்திற்கு, தென்னந்தோப்பில் நடுநடுவே வாழையை நட்டால், இரட்டிப்பு உற்பத்தி கிடைக்கும். ஓரினப் பயிர் முறையில், இது சாத்தியமல்ல. அதே போல, வெள்ளப் பாசனம் செய்த காலத்தில், நெல் பண்ணைகளில் மீன் குஞ்சுகள் பெருகி, அவையும் உணவாகப் பயன்பட்டன. ஆனால் இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால் இது சாத்தியமல்ல.

உணவுப் பற்றாக்குறை தீர்ந்து, உணவில் தற்சார்பு அடைந்தோமா?

முதலில், உணவு என்றால் ‘அரிசி, கோதுமை’ என்று பொருளல்ல. இவை நம் வயிறுகளை வேண்டுமானால், தற்காலிகமாக நிரப்பலாம். ஆனால் நமக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்க முடியாது. ஒருவேளை நாம் ‘தானிய உற்பத்தியில் தற்சார்பு அடைந்தோம்’ எனச் சொன்னாலும்கூட, உணவு உற்பத்தியில் தற்சார்பு அடைந்ததாகச் சொல்லிக்கொள்ள முடியாது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு, ஊட்டச் சத்து நிறைந்த பருப்பு வகைகள், சிறுதானியங்களின் உற்பத்தி படிப்படியாகக் குறைந்துகொண்டு வந்தது. அதற்கு மாறாக, பணப்பயிர்களான கரும்பு, பருத்தியின் உற்பத்தி அதிகரித்தது. வளரும் நாடுகளில் ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளின் மரணத்தில் 60 சதவிகிதம் ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படுபவை. தானியங்களைப் பொருத்த வரையிலும்கூடப் பாரம்பரிய ரகங்களில் இருந்த ஊட்டச்சத்து, கலப்பின ரகங்களில் இல்லை என்பதுதான் உண்மை. ராஜஸ்தான் மாநிலத்தில் வறுமை நிரம்பிய மாவட்டங்களில் கிராமப் புறங்களைவிட நகர்ப்புறங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைந்தவர்களாக இருப்பது அதிகமென அரசாங்கத்தின் சுகாதார ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேலும் பெரிய அணைகள், கால்வாய்கள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியன மீன் வளங்களை அழித்து உணவு இருப்பைக் குறைத்துள்ளன.

இரசாயன உரங்களை உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருளான பெட்ரோலியத்தை நாம் இறக்குமதிசெய்யும்வரையில், உணவில் தற்சார்பு அடைந்துவிட்டதாக எவ்வாறு கூறிக்கொள்ள முடியும்? உற்பத்தியில் தன்னிறைவு என்பது மூலப்பொருள்களின் தன்னிறைவையும் உள்ளடக்கியதாகத்தானே இருக்க முடியும்?

o

விவசாய வாழ்க்கை முறை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வியாபாரமாக மாற ஆரம்பித்தது. அப்போது சூடுபிடித்த இந்த அடிப்படை மாற்றம், பசுமைப் புரட்சியின் ‘வெற்றி’க்குப் பிறகு, மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றது. “நவீனத் தொழில்நுட்பம், தொழில் மயமாக்கல், நவீனக் கல்வி இவை இருந்ததால், நாம் பிழைத்தோம்!” எனச் சொல்லிக்கொண்டு, உண்மையை ஆராயாமல், இந்த விபரீதப் பாதையில் மேலும் அவசரமாக, மேலும் வேகமாகச் செல்ல ஆரம்பித்தோம். போலியான இந்தப் “பசுமைப் புரட்சி மனோபாவம்” நம்மை இன்று எத்தகைய விபரீதத்தில் கொண்டு தள்ளியிருக்கிறது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

நன்றி: http://www.kalachuvadu.com/issue-129/page68.ஆசப்




- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 13, 2010 5:33 pm

அருமையான கட்டுரை பார்க்கிற்கு நன்றி மணி மற்றும் காலச்சுவடு.

பழங்காலத்தில் மனிதர்கள் திடகாத்திரமாக நீண்ட காலம் வாழ்தார்கள்
ஆனால் இன்று இருபத்தைந்து வயதிலேயே சர்க்கரை வியாதி,
குறைந்த நோய் எதிர்ப்பு திறன், குறைவான ஆயுள் என்று பல்வேறு பிரச்சனைகளுக்கு மாறிவரும் உணவு பழக்க வழக்கமே முக்கிய காரணம்.
நாம் எல்லை மீறி போய்விட்டோம்..இனி என்ன செய்ய?




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Sep 13, 2010 5:40 pm

இனி என்ன செய்ய??

ஏர் தூக்கி உழவு செய்க...




- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக