ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முரளி உடல் தகனம் செய்யப்பட்டது

2 posters

Go down

 முரளி உடல் தகனம் செய்யப்பட்டது Empty முரளி உடல் தகனம் செய்யப்பட்டது

Post by அப்புகுட்டி Fri Sep 10, 2010 4:26 am

 முரளி உடல் தகனம் செய்யப்பட்டது 24
மறைந்த நடிகர் முரளியின் உடல் இன்று சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் நெப்போலியன் மற்றும் திரையுலகினர் இன்று அஞ்சலி செலுத்தினர்.

மாரடைப்பு காரணமாக நேற்று காலை நடிகர் முரளி அகால மரணமடைந்தார். திரையுலகை பெரும் அதிர்ச்சியிலும்,சோகத்திலும் ஆழ்த்தியுள்ள இந்த மரணம் அவரது குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் முரளியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த் , சரத்குமார் , வாகை சந்திரசேகர், ராதாரவி, சிவக்குமார், பார்த்திபன், சூர்யா, ஆனந்த்பாபு, அர்ஜூன்,கார்த்திக், சுரேஷ், மோகன், பிரசன்னா, ஷாம், கரண், சரவணன், விவேக், நாசர், ராஜேஷ், இளவரசு, சின்னி ஜெயந்த்,தியாகு, தலைவாசல் விஜய், நடிகைகள் குயிலி, ராதிகா, பாத்திமா பாபு, சத்யப்பிரியா, ரேவதி, சினேகா உள்ளிட்டோரும்,

இயக்குநர்கள் சேரன், அகத்தியன், லிங்குச்சாமி, ஹரி, பாலாஜி சக்திவேல், தருண் கோபி, களஞ்சியம், விக்கிரமன் உள்ளிட்டோரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் கமல்ஹாசன் மன்மதன் அம்பு படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் அவர் நேரில் வர முடியவில்லை. இதனால் தொலைபேசி மூலம் முரளியின் மகன் அதர்வாவிடம் பேசி இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

மு.க.ஸ்டாலின் அஞ்சலி:

இன்று காலை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முரளி வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.அவருடன் மத்திய இணை அமைச்சர் நெப்போலியனும் உடன் சென்றிருந்தார்.

சரத்குமார், ராதாரவி, நடிகர்கள் சிவக்குமார், விக்ரம், வடிவேலு, அலெக்ஸ், இயக்குநர் கள் மணிரத்னம், பாலா, தயாரிப்பாளர்கள் காஜா மைதீன், கே.எஸ். சீனிவாசன், சித்ரா லட்சுமணன், எச். முரளி. நடிகைகள் கோவைசரளா, ரேகா ஆகியோரும் இன்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இறுதிச் சடங்குகள் நடந்தன. அதன்பின்னர் முரளியின் உடல் அலங்கரிக்கப்பட்ட வேனில் ஏற்றப்பட்டது. பிறகு இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்போது துக்கம் தாங்க முடியாமல் முரளியின் மனைவி ஷோபா, மகள் காவ்யா, மகன்கள் அதர்வா, ஆகாஷ் ஆகியோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

முரளியின் உடல் அடங்கி டிரக் முதலில் செல்ல நடிகர், நடிகையர்ஏறிக் கொண்ட இன்னொரு டிரக் பின்னால் சென்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்களும், பொதுமக்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பெசன்ட் நகர் மின் மயானத்தை அடைந்ததும் அதர்வா இறுதிச் சடங்குளைச் செய்து தந்தையின் சிதைக்கு தீ மூட்டினார். பின்னர் மின்சார டிரேயில் வைத்து முரளியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மயங்கி விழுந்த தங்கர் பச்சான்:

முன்னதாக நேற்று முரளிக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர் தங்கர்பச்சான் மயக்கமடைந்தார். தங்கர், முரளியின் மிகநெருங்கிய நண்பர் ஆவார். நேற்று இறுதி அஞ்சலி செலுத்த அவர் வந்தபோது துக்கம் தாங்காமல் கதறி அழுதார். இதனால் அந்த இடமே உருக்கமாகிப் போனது. துக்கம் அதிகரித்து கதறி அழுததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வெளியே அழைத்து வந்து அமர வைத்து மயக்கம் தெளிவித்தனர்.

படப்பிடிப்புகள் ரத்து:

முரளியின் இறுதிச் சடங்கையொட்டி இன்று முழுவதும் தமிழ்த் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் கவுன்சில் அறிவித்திருந்தது. அதன்படி படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை.

தென்னிந்திய நடிகர் சங்கம் முரளியின் மறைவு குறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில்,

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவருமான நடிகர் முரளி எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தியது குறித்து தமிழ் திரைப்பட உலகம் மீளா துயரத்தில் மூழ்கியுள்ளது.

ஈடுசெய்ய முடியாத இழப்பினால் வாடும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோரின் வேதனையில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்குகொண்டு, கனத்த நெஞ்சத்துடன் எங்கள் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.


 முரளி உடல் தகனம் செய்யப்பட்டது Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 முரளி உடல் தகனம் செய்யப்பட்டது Empty Re: முரளி உடல் தகனம் செய்யப்பட்டது

Post by kalaimoon70 Fri Sep 10, 2010 5:02 am

அழுகை


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வீரம் விளைந்த மண்ணில் வீரத் தந்தையின் வித்துடல் தகனம் செய்யப்பட்டது
» நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் உடல் தகனம் சென்னையில் இன்று நடக்கிறது
» பால்தாக்கரே மரணம் மும்பையில் இன்று மாலை உடல் தகனம்
» 21 குண்டுகள் முழங்க குஜ்ரால் உடல் தகனம் தலைவர்கள் இறுதி அஞ்சலி
» டெல்லியில் இன்று உடல் தகனம் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum