புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Today at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உனக்குள் உள்ளது சக்தி Poll_c10உனக்குள் உள்ளது சக்தி Poll_m10உனக்குள் உள்ளது சக்தி Poll_c10 
5 Posts - 71%
mohamed nizamudeen
உனக்குள் உள்ளது சக்தி Poll_c10உனக்குள் உள்ளது சக்தி Poll_m10உனக்குள் உள்ளது சக்தி Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்குள் உள்ளது சக்தி Poll_c10உனக்குள் உள்ளது சக்தி Poll_m10உனக்குள் உள்ளது சக்தி Poll_c10 
423 Posts - 73%
heezulia
உனக்குள் உள்ளது சக்தி Poll_c10உனக்குள் உள்ளது சக்தி Poll_m10உனக்குள் உள்ளது சக்தி Poll_c10 
91 Posts - 16%
mohamed nizamudeen
உனக்குள் உள்ளது சக்தி Poll_c10உனக்குள் உள்ளது சக்தி Poll_m10உனக்குள் உள்ளது சக்தி Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
உனக்குள் உள்ளது சக்தி Poll_c10உனக்குள் உள்ளது சக்தி Poll_m10உனக்குள் உள்ளது சக்தி Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
உனக்குள் உள்ளது சக்தி Poll_c10உனக்குள் உள்ளது சக்தி Poll_m10உனக்குள் உள்ளது சக்தி Poll_c10 
8 Posts - 1%
prajai
உனக்குள் உள்ளது சக்தி Poll_c10உனக்குள் உள்ளது சக்தி Poll_m10உனக்குள் உள்ளது சக்தி Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
உனக்குள் உள்ளது சக்தி Poll_c10உனக்குள் உள்ளது சக்தி Poll_m10உனக்குள் உள்ளது சக்தி Poll_c10 
6 Posts - 1%
kaysudha
உனக்குள் உள்ளது சக்தி Poll_c10உனக்குள் உள்ளது சக்தி Poll_m10உனக்குள் உள்ளது சக்தி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உனக்குள் உள்ளது சக்தி Poll_c10உனக்குள் உள்ளது சக்தி Poll_m10உனக்குள் உள்ளது சக்தி Poll_c10 
4 Posts - 1%
Shivanya
உனக்குள் உள்ளது சக்தி Poll_c10உனக்குள் உள்ளது சக்தி Poll_m10உனக்குள் உள்ளது சக்தி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்குள் உள்ளது சக்தி


   
   
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 09, 2010 7:04 am

உனக்குள் உள்ளது சக்தி
- சித்ரா பாலு


நாம் வாழ்க்கையில் தினசரி எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம். அவர்களிடம் 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது?' என்று கேளுங்கள். அவர்களுடைய பதில் என்னவாக இருக்கும் தெரியுமா? 'ஏதோ போகிறது', 'என்னவோ ஓடிக்கிட்டு இருக்கு', 'எப்படியோ தள்ளிக்கிட்டு இருக்கேன்' என்ற தொனியில்தான் இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் இது மாதிரியான பதில் சொல்கின்றவர்கள் 60 வயதினர் மட்டுமல்ல; பதினேழு பதினெட்டு வயது கல்லூரி மாணவர்களும்தான்!

இதற்குக் காரணம் என்ன என்று யோசிப்போமா?...

அம்மாவுக்குப் பிடித்த டிரஸைப் போட்டுக் கொண்டு, அப்பாவுக்குப் பிடித்த பாடத்தைப் படித்துக் கொண்டு, கணவனின் விருப்பத்திற்கேற்ப பிள்ளை பெற்றுக்கொண்டு, குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப வாழ்ந்துகொண்டு... இப்படி அடுத்தவர்களுக்காக வாழும் மனப்பான்மையினால் இந்தச் சலிப்பு ஏற்படுகின்றதா? இருக்கலாம்.

ஒவ்வொரு மனிதனும் தன் மனதிற்குப் பிடித்த மன நிறைவான, தன்னிறைவான வாழ்க்கையை வாழத்தான் விரும்புகிறான்.ஒரு திருப்தியான - எதிர்பார்த்து விரும்பிய வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்கிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பலருக்கு எது தன்னிறைவான வாழ்க்கை என்று தெரிவதில்லை. பணமாக இருக்குமோ, பதவியாக இருக்குமோ, அதிகாரமாக இருக்குமோ என்று ஒவ்வொன்றாகத் தேடித் தேடி, கானல்நீரைத் தேடி ஓடும் மான்கள் போல ஏமாந்து நிற்கின்றனர்.

தன்னிறைவான - மனத்திற்குப பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வது எப்படி?

முதலில் உங்களுக்கு உங்களைப் பற்றிய தெளிவான பார்வை வேண்டும்!

என்ன தெளிவு?

உங்களுள் ஒளிந்திருக்கும் தனித்திறமைகள் என்னென்ன, உங்களுடைய ஆழ்மன ஆர்வம் என்ன, நீங்கள் மதித்துப் போற்றக் கூடியவை என்னென்ன என்பவை பற்றித் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

கண்டுபிடித்து விட்டீர்களா?

இப்போது அவற்றை எப்படி ஆக்கபூர்வமாக ஆதாய வழியில் பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள்.

இந்தக் கண்டுபிடிப்புகளில் நீங்கள் வெற்றி அடைந்தால், அதுவே உங்களை உயர்த்தக் கூடிய ஒரு நெம்புகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

சரி.. உங்கள் மனதில் உடனடியாக ஒரு வினா எழ வேண்டுமே!

ஏன் உங்களுடைய திறமை அல்லது ஆழ்மன ஆர்வத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்?

இதற்கு பதில் யோசிப்பதற்கு முன் இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்!

ஆழ்மன ஆர்வம் என்பது என்ன?

அதுதான் சக்தி... வீரியம். இப்போது புரிந்ததா? உங்கள் ஆழ்மன ஆர்வம் கண்டுபிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை!

ஆம்! உங்களுடைய அடிமனதில் ஒளிந்திருக்கும் பேரார்வம்தான் சக்தியை எழுப்புகிறது! அந்த சக்தி, நீங்கள் விரும்பக்கூடிய மனநிறைவான வாழ்க்கையைத் தரும்.

எப்படி இந்த ஆழ்மன ஆர்வத்தை அறிந்து கொள்வது?

உங்களுக்குள் பல கேள்விகளை எழுப்பி விடை காண்பதன் மூலம் உணரலாம்.

நீங்களும் வாழ்க்கையில் கேள்வி கேட்டிருப்பீர்கள்! வாழ்க்கையில் 'எனக்கு வேண்டியன யாவை' என்று. இந்தத் தவறான கேள்விதான் மனித சமுதாயத்தின் பொருள் தேடலுக்குக் காரணமாக அமைகின்றது. இந்தத் தேடலில் நீங்கள் எதிர்பார்க்கும் மனநிறைவு கிடைக்கின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. அதனால்தான் வீட்டிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் மனம் நிறைவு அடையாமல் போராட்டத்தில் இருக்கிறது.

ஆழ்மன ஆர்வத்தைத் தெரிந்து கொள்ள நீங்கள் உங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் எவையெவை தெரியுமா?

1. நான் யார்? எதற்காகப் படைக்கப்பட்டுள்ளேன்?

2. நான் மற்றவர்களுக்கு அதிகமாக கொடுக்க விரும்புவது எது?

3. எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செயல் எது?

4. மற்றவர்கள் என்னை எதற்காக நாடுகின்றனர்?

5. நான் எதற்காகப் பாராட்டப்படுகின்றேன்?

6. என்னுடன் நெருக்கமாக உள்ளவர்கள் என்னுடைய ஆழ்மன ஆர்வம் எது என்று கூறுகின்றனர்?

7. எந்த மனிதரால், எந்த இடத்தால், எந்தப் பொருளினால், எந்தச் சிந்தனையால் கவரப்படுகின்றேன்?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் உங்களைப் பற்றி நீங்கள் உணர்ந்து கொள்ள ஓரளவு துணையாக இருக்கும்.

இத்தனை பாடுபட்டு ஆழ்மன ஆர்வத்தை அறிந்து கொண்டு என்ன செய்யப்போகிறோம்?

இறைவனின் படைப்புகளில் எதுவுமே குறிக்கோள் இன்றி படைக்கப்பட்டதல்ல. ஒரு உதாரணத்தைப் பாருங்கள்!

மனம் ஒன்றி அன்போடு வாழ்ந்த தம்பதியருள் மனைவி இறந்து விடுகின்றாள். மனதைக் கல்லாக்கிக் கொண்டு கொள்ளி வைக்கும் கணவன், ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு மனைவியைப் பற்றி யோசிக்கின்றான். 'என் மீது முழுமையாக அன்பு வைத்திருந்தாய். என்னுடைய கனவுகளுக்கு உறுதுணையாக இருந்ததோடு அவற்றை செயல்படுத்த முழுச் சுதந்திரம் கொடுத்தாய். உன்னைப் பிரிந்திருப்பது எனக்குத் துன்பந்தான். ஆனால் உன்னுடைய அன்பு, அரவணைப்பு, ஆன்மா இவையனைத்தும் என்னைச் சுற்றியே இருக்கும்' என்று நினைத்தவாறு கொள்ளி வைக்கிறான்.

அந்த மனைவி இறந்த பின்னரும், கணவனுக்கும் அவள் குழந்தைகளுக்கும் இனிமையான நினைவுகளை விட்டுச் சென்றிருக்கிறாள்.

இறந்த பின்னரும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் ஒரு ஈடுகட்ட முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்றால் அதுதான் உங்கள் வாழ்வின் பயனாகும்.

சித்ரா பாலு அவர்களின் இதர படைப்புகள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 09, 2010 7:09 am

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு சக்தி உள்ளது! அவற்றை வெளிக்கொண்டு வருபவனே வெற்றியாளனாகிறான்!



உனக்குள் உள்ளது சக்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 09, 2010 7:10 am

சிவா wrote:ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு சக்தி உள்ளது! அவற்றை வெளிக்கொண்டு வருபவனே வெற்றியாளனாகிறான்!

சரியாகச் சொன்னீர்கள் சிவா கண்ணு. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

fleximan
fleximan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 11/02/2009
http://try2get.blogspot.com/

Postfleximan Thu Sep 09, 2010 10:21 am

ஆமோதித்தல் புன்னகை

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 09, 2010 10:25 am

fleximan wrote: ஆமோதித்தல் புன்னகை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 10:25 am

சக்தியை வெளிபடுத்தினால்
மேலே வரலாம்
விதைபோல !!
வெளிபடுத்தவில்லை என்றால்
மண்ணிலே இருக்கும்
பத படுத்தாதா
விதை போல ....



அருமை பதிவு நன்றி பாஸ்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 09, 2010 10:27 am

சிவா wrote:ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு சக்தி உள்ளது! அவற்றை வெளிக்கொண்டு வருபவனே வெற்றியாளனாகிறான்!
உனக்குள் உள்ளது சக்தி 359383 உனக்குள் உள்ளது சக்தி 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Sep 09, 2010 10:45 am

இறந்த பின்னரும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் ஒரு ஈடுகட்ட முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் என்றால் அதுதான் உங்கள் வாழ்வின் பயனாகும்.// அருமையான கருத்து நிறைந்த பதிவு நண்பா மனதிற்கு இதமாக இருந்தது



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக