புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
5 Posts - 13%
heezulia
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
7 Posts - 2%
prajai
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_m10குடியா - குழந்தைகளா எது முக்கியம் ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியா - குழந்தைகளா எது முக்கியம் ?

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Sun Sep 05, 2010 9:37 pm

நான் கதவை தட்டும் போது மணி இரவு 10.30 தை தாண்டிவிட்டது. ஆனாலும் கதவை திறந்த என் மனைவியின் பின்னால் பெரியவள் 12 வயது சாருமதியும் 10 வயது மணிமாறனும் நின்றுக்கொண்டு குதித்தனர். சாரு ஒடி வந்து என் கையில் சூட்கேஸை வாங்கிக் கொண்டாள்.

நான் உள்ளே நுழைந்து சச்சுவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன். அடுத்து குழந்தைகளை அணைத்து முத்தமிட்டேன். இரண்டும் என்னை இழுத்துக் கொண்டு போய் சோபாவில் உட்கார வைத்தன.

"சாப்பிட்டீங்களா, செல்லங்களா?" என்று கேட்டேன். "சாப்பிட்டு விட்டோம் அப்பா" இரண்டு பேரும் கோரஸாக சொன்னார்கள்.

"அப்படியென்றால் போய் படுத்துக் கொள்ளுங்கள். நாளை பள்ளிக்கூடம் இருக்கிறதல்லவா? காலையில் பேசலாம்" என்றேன். "சரியப்பா" மீண்டும் ஒரு ரவுண்டு முத்தங்கள். குழந்தைகள் அவர்கள் ரூமுக்கு போய்விட்டார்கள்.

"இந்த மாதிரி குழந்தைகள் பிறக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் சொன்னதும் எவ்வளவு பதுவிசாக போய்விட்டன பாருங்கள்." என்று பெருமையாக சொன்னாள் சச்சு.

"ஆமாம். நீ சொல்வது உண்மைதான். அது இருக்கட்டும். சாப்பிட கொஞ்சம் ரசம் சாதம் இருந்தால் தயார் பண்ணு. நான் போய் உடை மாற்றிக் கொண்டு வருகிறேன்." என்று சொல்லி விட்டு என் அறைக்கு போய் லுங்கியை கட்டிக்கொண்டு வந்தேன்.

சாப்பிட்டு முடித்ததும் சொன்னாள். "ஒரு சோகமான செய்தி. உங்கள் அருமை நண்பர் கோபி 15 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். நாளைக்கு அவருக்கு காரியம். நீங்கள் ஒரு மாதம் எந்த காரணம் கொண்டும் சென்னைக்கு வரமுடியாது என்று கட்டிப்பாக சொல்லி போனதால் செய்தியை உங்களுக்கு தெரியப்படுத்தவில்லை."

நான் அதிர்ச்சியோடு அவளை பார்த்தேன். கோபியாவது, இறப்பதாவது? 39 வயது இளைஞன் அவன். அவன் எப்படி?

"என்ன நடந்தது" என்று கேட்டேன்.

"சம்பவம் நடந்த அன்று கோபி அவருடைய இன்னொரு நண்பர் ரமேஷுடன் காரில் வந்துக் கொண்டிருந்த போது மார் வலிப்பதாக சொல்லியிருக்கிறார். ரமேஷ் அவரை உடனே அப்போல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். அங்கு அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அவருடைய மனைவி, அப்பா, அம்மா அனைவரும் பதறிக் கொண்டு போயிருக்கிறார்கள்.

டாக்டர் உடனடியாக ஒரு விலை உயர்ந்த ஊசி போடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் 4500 ரூபாய் கொடுத்து வாங்கி கொடுத்து இருக்கிறார்கள். அதை போட்டதும் ரியேக்ஷன் ஆகி உயிர் போய்விட்டது. பிறகுதான் தெரிந்தது அவர் இரத்தத்தில் ஆல்கஹால் பர்சண்டேஜ் மிக அதிமாக இருந்தது என்று. அவர் குடிப்பார் என்பதை டாகடர்களிடம் யாருமே சொல்லவில்லையாம். குடி அவரின் உயிரை வாங்கிவிட்டது" என்று முடித்தாள்.

அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை.

அடுத்த நாள் நான் கோபியின் வீட்டிற்கு சென்றேன். அன்று அவனுக்கு 'காரியம்' என்பதால் உறவினர் நிறைய பேர் கூடியிருந்தார்கள். வெளியே போட்டிருந்த சேர்களில் ஒன்றில் போய் உட்கார்ந்தேன்.

பக்கத்தில் உட்கார்ந்து இருந்த ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டு இருந்தார்
"கோபிக்கு அவனுடைய இரண்டு குழந்தைகளின் மேல் உயிர். மனைவியையும் குழந்தைகளையும் கண்களை போல காத்து வந்தான். அவனுடைய ஒரே வீக்னஸ் இந்த குடிதான். இப்போது அந்த மூன்று பேரும் நடுதெருவில் நிற்கிறார்கள். அந்த குடியா இப்போது அவர்களை வந்து காப்பாற்ற போகிறது?"

எனக்கோ காதை பொத்திக்கொள்ள வேண்டும் போல இருந்தது.

சற்று நேரத்தில் எல்லாரும் குளக்கரைக்கு புறப்பட்டோம். குளக்கரையில் ஏதோதோ சடங்குகள். கோபியின் 13 வயது பையன் தான் என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே ஐயர் சொல்லுவதை அப்படியே செய்துக் கொண்டு இருந்தான்.

அதென்னவோ தெரியவில்லை. இங்கும் என் பக்கத்தில் அதே பெரியவர் உட்கார்ந்து இருந்தார். இப்போதும் அதேப்போல் கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார்.

"அந்த பையனை பாருங்கள். பாவம் பொம்மையை போல சொன்னதையெல்லாம் செய்துக் கொண்டிருக்கிறான். கோபி இருந்த போது இவன் எவ்வளவு சூட்டிகையாக இருப்பான் தெரியுமா? இனிமேல் இவன் வாழ்க்கை என்ன ஆகுமோ? கோபி உயிரோடு இருந்து இதையெல்லாம் பார்த்தால் தாங்குவானா?"

கோபி தாங்குவது இருக்கட்டும். என்னாலேயே தாங்க முடியவில்லையே!

இன்னொருவர் கேட்டார். "இந்த குடியை எப்போதுதான் ஒழிக்க போகிறார்களோ?".

அதற்கு ஒருவர் சொன்னார் "குடியை எல்லாம் இனிமேல் ஒழிக்க முடியாது ஐயா. குடிப்பவர்களாக பார்த்து திருந்தினால்தான் இந்த மாதிரி குடும்பங்கள் பிழைக்கும்"

"இல்லமலா சொன்னார்கள், திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று!" பெரியவர் சொன்னார்.

காரிய வேலைகள் முடிந்து எல்லாரும் கிளம்பினார்கள். நான் தனியே காரில் கிளம்பினேன். காரை யோசனையோடு மெதுவாக ஓட்டிக்கொண்டு போனேன்.

நாட்கள் ஓடின. வெள்ளிக்கிழமை வந்தது. எங்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை சாயங்காலம் வந்தாலே ஒரு குஷி வந்து விடும்.

அன்றும் டேவிட் சரியாக நான்கு மணிக்கு கதவை தட்டி விட்டு அறைக்குள் நுழைந்தான். நான் நிமிர்ந்து பார்த்தேன். "உம் எடு, உன் ஷேர் ஐநூறு ரூபாயை" என்றான்.

நான் பர்ஸில் இருந்து 500 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். டேவிட் அதை வாங்கிக் கொண்டு திரும்பினான்.

"கொஞ்சம் இரு டேவிட். நான் என் பங்கை கொடுத்து விட்டேன். ஆனால் இன்று முதல் நான் குடிப்பதை விட்டுவிட்டேன். என் குடியை விட, என் தனிப்பட்ட சந்தோஷத்தை விட, என் குழந்தைகளின் எதிர்காலம்தான் முக்கியம் என்பதை உணர்ந்து விட்டேன்.

இனிமேல் நான் குடிக்கப்போவதில்லை. இது என் குழந்தைகளின் மீது ஆணை" என்று திட்டவட்டமாக சொன்னேன்.

கொஞ்ச நேரம் என்னையே உற்றுப்பார்த்த டேவிட் 500 ரூபாய் நோட்டை என் டேபுள் மீது வைத்து விட்டு போய்விட்டான்.

நான் வீட்டிற்கு 7 மணிக்குள் திரும்பியது கண்டு சச்சுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அதில் அவளுக்கு எல்லையற்ற சந்தோஷம் என்பதை அவள் முகமே காட்டியது.

"நீங்கள் போய் உடை மாற்றி வாருங்கள். நான் போய் தோசை ரெடி பண்ணுகிறேன்" என்றவள் "ஏய் குட்டிகளா, சீக்கிரம் வாருங்கள், அப்பாவோடு இன்றும் சாப்பிடலாம்" என்று குரல் கொடுத்தாள். நான் மிகுந்த திருப்தியுடன் ரூமுக்கு போனேன்.

நாட்கள் ஓடின. அடுத்த வெள்ளிக்கிழமையும் வந்தது. நான்கு மணிக்கு டேவிட் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.

நான் வியப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தேன்.

"ம்.... 500 ரூபாய் எடு" என்றான்.

"என்னடா டேவிட், நான்தான் போன வாரமே இனிமேல் குடிக்க வரமாட்டேன் என்று சொன்னேனே, ஞாபகம் இல்லையா?" என்று கோபமாக கேட்டேன்.

"அடடே, கோபத்தை பாருடா. நாட்டில் நீ மட்டும்தான் திருந்தனுமா? எங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இல்லையா? நாங்களும் குடிப்பதை விடுவதாக முடிவு பண்ணி விட்டோம். இன்று மாலை 7 மணிக்கு வசந்தபவன் மாடிபூங்காவில் குடும்ப பார்ட்டி! நீ போய் உன் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து விடு" என்றான்.

என்னால் என் மனதில் பொங்கி வழிந்த மகிழ்ச்சியை கட்டுப்படுத்தவே முடியவில்லை. எழுந்து டேவிடை கட்டிப்பிடித்துக் கொண்டேன்.

நாங்கள் உணர்ந்து விட்டோம், திருந்தி விட்டோம். ம்ம்ம்ம்...................

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக