ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் நூலுக்கான முன்னுரை – நூலாசிரியர் ம. வெங்கடேசன் 2004ல் எழுதியது

Go down

ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் நூலுக்கான முன்னுரை – நூலாசிரியர் ம. வெங்கடேசன் 2004ல் எழுதியது Empty ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் நூலுக்கான முன்னுரை – நூலாசிரியர் ம. வெங்கடேசன் 2004ல் எழுதியது

Post by அன்பு தளபதி Thu Sep 02, 2010 3:35 pm

உங்களிடம் சில வார்த்தைகள்…!



இந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன் இதை எழுதியிருப்பவர் கண்டிப்பாக ஒரு பிராமணராகத்தான் இருக்க முடியும் என்ற எண்ணம்தான் முதலில் உங்களுக்குத் தோன்றியிருக்கும். அது தவறு. ஈ.வே.ராமசாமி நாயக்கரைப் பற்றி எழுதியிருக்கும் நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன்.



நான் முதன்முதலில் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த எண்ணம் இதுதான்:



* ஈ.வே. ராமசாமி நாயக்கர் தமிழுக்காகப் பாடுபட்டவர்



* தாழ்த்தப்பட்டவர்களுக்காகத் தொண்டாற்றியவர்



* பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்



* பொய் பேசாதவர்; முரண்பாடு இல்லாதவர்



இந்த எண்ணத்தின் காரணமாக ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்தேன். பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் வெளியிட்டுள்ள, கிட்டதட்ட 90 சதவீத புத்தகங்களைப் படித்தேன்.



அது மட்டுமல்லாமல், ஈ.வே. ராமசாமி நாயக்கரின் சமகாலத்தோடு வாழ்ந்த ம.பொ. சிவஞானம், ப. ஜீவானந்தம், தெ.பொ. மீனாட்சி சுந்தரம், உ. முத்துராமலிங்கத் தேவர், கி. ஆ. பெ. விசுவநாதம், அண்ணாத்துரை, காமராஜர், பாவாணர் போன்றவர்களெல்லாம் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் முரண்பாட்டை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுடைய புத்தகங்களையும் படித்தேன்.



அதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ- அந்த கருத்திற்கு-அந்த எண்ணத்திற்கு முரண்பாடாக ஈ.வே. ராமசாமி நாயக்கர் செயல்பாடும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டேன்.



அடுத்து, தாழ்த்தப்பட்ட சமூகத்துக்காக உழைத்த, ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பற்றி விமர்சித்து ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் எழுதலாமா?- இந்த எண்ணமும் சிலருக்குத் தோன்றும். அது இயற்கை.



ஈ.வே. ராமசாமி நாயக்கர் உயிருடன் இருக்கும்போது தலித் தலைவர்கள், தலித் எழுத்தாளர்கள் ஈ.வே. ராமசாமி நாயக்கரை தாழத்தப்பட்டவர்களுக்கு விரோதி என்ற தன்மையில் சாடி வந்திருக்கின்றனர். இப்பொழுதும் தலித் தலைவர்கள், தலித் எழுத்தாளர்கள் அவரை தாழத்தப்பட்டவர்களுக்கு விரோதி என்ற தன்மையில் சாடி வருகின்றனர்.



ஈ.வே. ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார் என்று சொல்லும்போது, அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தாருக்கு எதுவுமே செய்யவில்லை என்று சொல்ல தாழத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த எனக்கு உரிமையுண்டு.



அதேபோல ஈ.வே. ராமசாமி நாயக்கரால்தான் தாழ்த்தப்பட்டவர்கள் சமூகக் கொடுமைகளிலிருந்து விடுதலையடைந்தார்கள், சமூகத்தில் முன்னேற்றம் கண்டார்கள் என்று சொல்வார்களேயானால் அது வடிகட்டினப் பொய் என்பதை என்னால் ஆதாரத்தோடு நிரூபிக்க முடியும். ஷட்டாவதானம் வைரக்கண் வேலாயுத புலவர், பண்டிதர் அரங்கையதாஸ், பண்டிதர் க. அயோத்திதாஸ், வேம்புலி பண்டிதர், ஏ. பி. பெரியசாமி புலவர், முத்துவீர நாவலர், ராஜேந்திரம் பிள்ளை, திருசிபுரம் பெருமாள், தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், ஜான் ரத்தினம் கோலார் ஜி. அப்பாதுரை, புதுவை ரா. கனகலிங்கம், என். சிவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்) டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களெல்லாம் தாழத்தப்பட்டவர்களுக்கு செய்த நன்மைகளில் 1 சதவீதம்கூட ஈ.வே. ராமசாமி நாயக்கர் செய்ததில்லை என்பதுதான் சரித்திரம் நமக்குக் காட்டுகிறது.



ஆகவே தாழ்த்தப்பட்ட சமூகத்தவனாகிய நான் ஈ.வே. ராமசாமி நாயக்கரைப்பற்றி எழுதலாமா என்ற கேள்வி எழும்பினால் அந்தக் கேள்வி வெறுப்பினால் எழுப்பப்பட்ட கேள்வியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இந்தக் கேள்வியை விட்டுவிட்டு நான் ஆதாரம் இல்லாமல் எழுதியதாக யாராவது கருதினால் அவற்றைச் சுட்டிக் காட்டலாம்.



ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஒரு பக்கத்தை மட்டுமே காண்பித்துள்ள அவரது அடியார்கள் அவருடைய மறுபக்கத்தை மூடிமறைத்து விட்டார்கள்.



ஆகவே, அவர்கள் மூடிமறைத்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மறுபக்கத்தை நான் பாரத தேசத்தின் ஒரு நல்ல குடிமகனின் கடமையெனக் கருதி இந்தப் பண்யை மேற்கொண்டு வெளிச்சத்திற்கு இன்று கொண்டுவந்திருக்கிறேன். மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் காலத்திலேயே அவரை விமர்சித்த ம. பொ. சிவஞானம், ப. ஜீவானந்தம், தெ. பொ. மீனாட்சி சுந்தரம், உ. முத்துராமலிங்கத் தேவர், கி. ஆ. பெ. விசுவநாதம், அண்ணாதுரை, காமராஜர், பாவாணர் ஆகியோர்களின் எழுத்துக்களை கட்டுரைகளின் நடுவிலும், பின்னிணைப்பாகவும் தந்திருக்கிறேன். இவை எல்லாம் என்னுடைய கருத்துக்களுக்கு ஆதாரம் சேர்ப்பவை.



இந்த நூலைப் படித்து நான் எழுதியிருப்பது சரிதான் என்று திராவிடர் கழக மாயையில் இருக்கும் தோழர்கள் ஒருவராவது ஏற்றுக் கொள்வாரானால் அதுவே இந்த நூலுக்கு உண்மையான வெற்றியாகும்.



ஈ.வே. ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் என்ற நூல் ஒன்று வெளிவர இருக்கிறது என்பதை அறிந்து, ஈ.வே. ராமசாமி நாயக்கரை கடைசிவரை எதிர்த்த ஆன்மீகத் தங்கம் முத்துராமலிங்கத் தேவரின் அடியை ஓற்றி, இந்த புத்தகம் வெளிவர உதவியவர் பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் கே. ஏ. முருகன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள் உரித்தாகுக.



நான் இந்த நூல் எழுத எண்ணம் கொண்டதிலிருந்து பல நூல்களை எனக்கு வாங்கித் தந்து பல உதவிகளைச் செய்த எனது நண்பர் திரு. பிரகாஷ் எம். நாயர் அவர்களுக்கும், எனது ஆசான் என்று சொல்லக்கூடியவரும் என்னை ஊக்கப்படுத்தியவருமான திரு. பாலசுப்ரமணியன் அவர்களுக்கும், மற்றும் எனது நண்பர்கள் ஜி. சுரேஷ்குமார், சி. அரிசங்கர், ஆர். நாகராஜ், எம். மணிகண்டன், ஏ. நெப்போலியன் ஆகியோர்களுக்கும் என்னுடைய நன்றிகள்.



- ம. வெங்கடேசன்.



(ஈ.வே.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம் நூலுக்கான முன்னுரை – நூலாசிரியர் ம. வெங்கடேசன் 2004ல் எழுதியது.)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum