ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

+10
சரவணன்
ரா.ரமேஷ்குமார்
Dr.சுந்தரராஜ் தயாளன்
கேசவன்
பேகன்
பிளேடு பக்கிரி
புவனா
அன்பு தளபதி
ராஜா
சிவா
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Empty தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by சிவா Mon Aug 30, 2010 2:58 pm

First topic message reminder :

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளாடு முந்தோன்றிய மூத்தக் குடியினர்" எனக் கூறப்படுகிறது. இது கற்பாறைகள் தோன்றிய காலத்திற்குப் பின்னும், அது மழை பெய்து, பெய்து கரைந்து மணலாகத் தோன்றிய காலத்திற்கு முன்னும் உள்ள காலத்தைக் குறிப்பிடுவதாகும். இத்தகைய மக்கள் பேசிய மொழியே தமிழ்மொழியாகும்.

உலக மொழி ஆராய்ச்சியாளர்களில் சிலர் "தமிழ் மொழியே உலக முதன் மொழி" எனக் கூறுவர். இன்னும் சிலர் ' இலத்தின்', 'கிரிக்' மொழிகளுக்கு முந்திய மொழி எனக் கூறுவர்.

முற்காலத்திய சீன யாத்திரிகர் திரு. யுவாங் சுவாங் முதல் பிற்காலத்தில் ஜி.யு.போப், ரோபட் கால்வெல் முதலான வேற்று நாட்டினர்; வேற்று மதத்தினர்; வேற்று மொழியினர் ஆகிய பலரால் தமிழின் பண்பட்ட தன்மை போற்றிப் பாராட்டப்படுகிறது.

1700 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் மலாயாவை, கெடாவை, சயாமை (தாய்லாந்து) கைப்பற்றி ஆண்ட செய்திகளும், முதலாம் குலோத்துக்க மன்னன் பர்மாவை ( மியன்மார்) ஆண்ட செய்தியும், சோழன் கரிகாலன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட செய்தியும் இலக்கியங்கள்-வரலாறுகள் - கல்வெட்டுகள் ஆகியவற்றின் வழி அறியப்படுகின்ற உண்மைகளாகும்.

2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ்ப் பெயர்கள் காணப்படுகின்றன.

2300 ஆண்டுகளுக்கு முந்தைய சில பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன.

2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் "நற்றிணை" என்னும் இலக்கண நூல் தோன்றியிருக்கிறது.

2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்களில் தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ்நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டுசென்று தமிழில் விலைபேசி விற்று வந்திருக்கின்றனர். அப்பொருட்களுக்கு இன்றளவும் தமிழ்ச்சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி -"ரைஸ்", மயில் தோகை - "டோ-கை", சந்தனம் - "சாண்டல்", தேக்கு -"டீக்கு", கட்டுமரம்- "கட்டமாரன்", இஞ்சி - "ஜிஞ்சர்", ஓலை - "ஒல்லா", கயிறு - " காயார்" என வழங்கி வருகின்றன. இத்தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்சு, ஆங்கிலம் அகராதிகளில் இடம்பெற்றுள்ளன.

3000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூலான தொல்காப்பியமும் இன்றும் நம்மிடையே உள்ளது. அதற்கு முன்னும் பல இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்பதை தொல்காப்பியமே கூறுகின்றது.

தமிழ் மக்களின் தாயகமான குமரிநாட்டில் மூன்று கடற்கோள்கள்(சுனாமி) 3000ஆம், 5000ஆம், 9000ஆம், ஆண்டுகளில் நடந்துள்ளன. இந்தப் பேரிடரில் கடல்நீர் நாட்டிற்குள் புகுந்து நிலப்பரப்பையும் மக்களயும், தமிழ் செல்வங்களையும் அழித்துவிட்டன.

தமிழியல் ஆய்வுக் கழகம்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Empty Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Feb 01, 2012 9:08 pm

சதாசிவம் wrote:தமிழ் - வடமொழி வேறுபாடுகள்

2. பேச்சு மொழியாகவும் உயிருள்ளது - செயற்கையான கிளை மொழி, பேச்சு வழக்கற்றது

இந்தியாவில் இன்னும் முழு சமஸ்திரத்தில் பேசும் கிராமம் கர்நாடகாவில் உள்ளது. எண்ணிக்கை குறைவு, ஆனால் இது இன்னும் அழிந்து விட வில்லை

அன்புள்ள தம்பி சதாசிவம், நீங்கள் கூறிய பல கருத்துக்களை ஆராய்ச்சியின் அடிப்படியில் ஏற்றுக்கொண்டாலும், மேற்சொன்ன செய்தியை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது ஒரு பொய்யான தகவல் ஆகும். நீங்கள் குறிப்பிட்ட இந்த கிராமம் பெயர் 'மருதூர்' என்பதாகும். இது சிமோகா என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். மலைசார்ந்த பகுதியாக இருப்பதால் பெரும்பாலும் சிற்றூர்களே அதிகம். இங்கு வேடிக்கை என்னவென்றால், இங்குள்ளவர்கள் அனைவருமே பிராமணர்கள். தாய்மொழி கன்னடம்தான் என்றாலும் எல்லோருக்கும் சமஸ்கிருதம் நன்றாகத் தெரியும். ஆகவே சமஸ்க்ருதத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் அந்த மொழியில் பேச ஆரம்பித்தார்கள். இதை மீடியா, பத்திரிகைகள் பெரிது படுத்தி கர்நாடகத்தில் ஒரு ஊரில் எல்லோரும் சமஸ்கிருதத்தில்தான் பேசுகிறார்கள் என்றும், தாய்மொழி சமஸ்க்ருதம் என்றும் பொய்ப்பிரசாரம் ஆகிவிட்டது. இதே ஊரைச்சேர்ந்த ஸ்ரீநிவாசமுர்த்தி என்பவர் எனது நண்பர். மண்வள ஆய்வில் பேராசிரியராக உள்ளார். அவர் மிக அருமையாகவும், அழகாகவும் கன்னடத்தில் பேசுவார். சில வருடம் முன்பு நான் வேடிக்கையாக அவரிடத்தில் கேட்டேன் '' இங்கு இவ்வளவு அழகாக கன்னடம் பேசுகிறீர்களே, உங்கள் ஊரில் போனால் சமஸ்கிருதமும் இதேபோல் விரைவாகப் பேசுவீர்களா'' என்று. அதற்க்கு அவர் பதில் வேடிக்கையாக இருந்தது. '' நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து ஒருவனைக் கன்னத்தில் அறைந்தால், அவன் வாயில் இருந்து முதலில் வரும் சொற்கள் 'ஐயோ, அம்மா' என்ற சுத்தமான கன்னடம்தான்!" நீங்கள், மத்திய அரசாங்கத்தின் மக்கள்தொகை கணக்கெடுப்பு புத்தகத்தைப் பாருங்களேன். அதில் சமஸ்கிருதத்தை என் தாய்மொழி என்று தெரிவித்திருப்பவர்கள், வெறும் 14000 பேர்கள் தான். இதையும் நன்கு கூர்ந்து கவனித்தால், அவர்களும் இந்த கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டம் மருதூர் கிராமத்தில் உள்ள பிராமணர்களைப் போன்ற பண்டிதர்களாகத்தான் இருப்பார்கள். சமஸ்கிருதத்தின் மேலுள்ள அதி ஆசையால், அன்பால், வெறியால் அப்படிச் சொல்லியிருப்பார்களே அல்லாமல், சமஸ்கிருதம் அவர்களின் உண்மையான தாய்மொழியாய் இருக்க எந்தவொரு சாத்தியக்கூறுகளும் இல்லை என்பதே திண்ணம். சமஸ்கிருதம் பேச்சு வழக்கு அழிந்துவிட்டது என்பது முற்றிலும் உண்மை.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Empty Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by சதாசிவம் Thu Feb 02, 2012 11:00 am

ஐயா உங்கள் கருத்தை ஏற்கிறேன்.

இந்த கிராமத்தில் இருப்பவருக்கு இது தாய்மொழி இல்லை. ஆனால் சமஸ்கிதம் முற்றிலும் பேச்சு வழக்கு அழிந்த மொழி அல்ல. எப்படி நாம் ஆங்கிலம் அறிந்து தேவையின் போது அதுபோல் சமஸ்கிரதம் பாவிக்கப்படுகிறது. இன்றும் சமஸ்க்ரித பாரதியின் கிளைகளில் நடக்கும் வகுப்புகள், உபன்யாசகங்கள் முழுவதும் சமஸ்கிரத்தில் நடைபெறுகிறது. மக்கள் வருகிறார்கள், கேட்கிறார்கள். சென்னையில் இது போன்ற சொற்பொழிவுகளுக்கு நான் சென்றுள்ளேன். புரிதல் கடினமில்லை. ஒரு லக்ஷத்திருக்கும் அதிகமான மாணவர்கள் சமஸ்க்ரிதத்தில் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ் மொழி உயர்வானது அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்து இல்லை. ஒப்புமை இல்லாதது.

சமஸ்க்ரிதம் என்ற இனிய மொழி ஒரு சில பிரமானர்களால் வளம் குறைந்தது. அதை காலம் கழித்து மீண்டும் மலர பாடுபடுகின்றனர்.
ஒரு மொழியை உயர்த்த இன்னொரு மொழியைத் தாழ்த்தக்கூடாது. இதை செய்தால் நமக்கும் இப்படி செய்த ஒரு சில பிரமணர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும். தமிழன் உயர்ந்தவன், இது போன்ற ஒப்பீடுகள் சரியல்ல என்பது தான் என் கருத்து.

தமிழ் மொழியைப் போல் பிற மொழிகளையும் நாம் வாசிக்க வேண்டும், வாசித்து அங்கு உள்ள விஷயங்களையும் இங்கு கொண்டு வர வேண்டும். அர்த்த சாஸ்திரம், வீதுர நீதி போன்றவைகள் நம் மக்கள் படிக்க வேண்டும். ரகு வம்சம், குமார சம்பவம் போன்றவைகளும் நம் இலக்கியவாதிகள் படிக்க வேண்டும். காளிடாசனையும் படித்து விட்டு கம்பன் சிறந்தவன் என்று சொல்ல வேண்டும். அப்போது தான் அனைவரின் வாயை அடக்க முடியும். பாரதி செய்தானே அதைப்போல்.


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Empty Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by THIYAAGOOHOOL Thu Jan 24, 2013 9:40 pm

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடியினர். அருமையான தகவல்கள். நன்றி.
THIYAAGOOHOOL
THIYAAGOOHOOL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......! - Page 3 Empty Re: தமிழைப்பற்றி வரலாற்றுக் குறிப்புகள் சில......!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum