புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
72 Posts - 65%
heezulia
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
24 Posts - 22%
வேல்முருகன் காசி
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
264 Posts - 45%
heezulia
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
18 Posts - 3%
prajai
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_m10இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 30 Aug 2010 - 11:40

விடுதலைப் போரில் இந்திய முஸ்லிம்கள்

(இந்த கட்டுரையின் ஆசிரியர் முஸ்லிமாக இருந்தால் ஒரு தலைபட்சமாக முஸ்லிம்களுக்கு சாதகமாக எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் தோன்றும். ஆனால் இந்த கட்டுரையின் ஆசிரியர் வி.என்.சாமி என்ற முஸ்லிமல்லாதவர், இவர் எழுதிய ‘கடற்போர்கள்’ ‘பார்வை விஞ்ஞானம்’ பரிசுகளைப் பெற்ற நூற்களாகும். இப்போது இவர் ‘விடுதலைப் போரில் இஸ்லாமியர்’ என்ற நூலை எழுதி வருகிறார். இந்த கட்டுரை ‘ஒற்றுமை’ என்ற பத்திரிக்கையில் வெளிவந்ததாகும்.)

இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர் குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.

‘இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களுடைய மக்கள் தொகை விகிதாச்சாரத்தைவிட விடுதலைப்போரில் உயிர் துறந்த முஸ்லிம்களின் விகிதாச்சாரம் அதிகம்’ என்று அந்தப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்

இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 30 Aug 2010 - 11:40

வரி தர மறுத்த வரிப்புலிகள்

இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று பாடினார் மகாகவி பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரியத்துல்லா 1781ம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.

வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தை தோற்றுவித்தவர் சையது அஹமது என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரச் சுவாசிக்க வழிவகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் அமரகவி பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனி தான் காரணம் என்று உகிக்க முடிகிறது.

கதி கலக்கிய கான் சாஹிபு

ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான்சாஹிப். இவர் யூசுப்கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுப், கும்மந்தான், கம்மந்தான் சாகிபு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுப் கான் சாஹிபு மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 30 Aug 2010 - 11:41

ஷா அப்துல் அஜீஸ்

இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை ‘தாருல் ஹர்ப்’ ஆகப் பிரகடனம் செய்தார்.

ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் ‘பத்வா’ எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.

அஞ்சாத புலி ஹைதர் அலி

18ம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலி. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் ‘முதலாம் மைசூர் போர்’ எனப்படுகிறது. ஹைதர் அலியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.

தீரன் திப்பு சுல்தான்

‘மைசூர் புலி’ திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலியின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.

1790ம் ஆண்டு முதல் 1792ம் ஆண்டு வரை நடை பெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் ‘முடியாது’ என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.

வங்கத்துச் சிங்கங்கள்

வங்காளத்தில் 1776ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலியைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரை கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.

தென்னாட்டு வேங்கைகள்

தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது. ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்ரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்தியத் தாயின் விடுதலைக்குத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.

குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மகபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதியன்று தூக்கிலிடப் பட்டனர்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 30 Aug 2010 - 11:41

முஃப்தீ இனாயத் அஹ்மது

தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ‘நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?’ என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.

‘ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்’ என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

அன்றும்… அயோத்தி அவலம்…

தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் பைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து பைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மத்துல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறு வேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசை பெற்றான்.

புதைந்து போன புரட்சி மலர்கள்

வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாபர் அலி என்பவர் தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப்பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும் படி ஜாபர் அலியை சித்ரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாபர் அலி ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலி வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 30 Aug 2010 - 11:42

அன்றும் ஒரு பொடோ

இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது ‘ரௌலட் சட்டம்’. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைபுதீன் கிச்சுலு. இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணை ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.

அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். ‘கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது’ என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். ‘எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்’ என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மன சாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.

இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. ‘நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்’ என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று ‘லப்பைக் லப்பைக்’ என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்திலே மாட்டிக் கொண்டார். அஷ்பகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.

முஹம்மதலி, ஷெளகத் அலி, அபுல்கலாம் அஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடை தான் அணிந்திருந்தார்.

விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர் – கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.

சிலையை உடைத்த சீலர்

தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், ‘மேடை முதலாளி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந.அப்துர்ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாக கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார். ‘மேடை முதலாளி’ அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாக கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.

கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாகவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.

ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது உசேன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 30 Aug 2010 - 11:43

பிரமிக்க வைத்த வள்ளல் ஹபீப்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர்.

பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துக்கள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ‘நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை’ என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.

ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும்பணியாற்றினார்கள்.

பெண் போராளிகள்

இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியப் பெண்களும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.

அயோத்தி மன்னர் வஸீர் அலிஷாவிடமிருந்து ஆங்கிலேயர் அயோத்தியைக் கைப்பற்றினர். அப்போது மன்னரின் மனைவி பேகம் ஹசரத் மஹல் லக்னோவில் தங்கியிருந்தார். அயோத்தியை ஆங்கிலேயர் கைப்பற்றியதை எதிர்த்து மக்களைத் திரட்டி அவர் புரட்சியில் ஈடுபட்டார். ஒன்பது மாத காலம் புரட்சியாளர்கள் பேகம் ஹசரத் மஹல் தலைமையில் ஆங்கிலேயப் படையை எதிர்த்துப் போர் புரிந்தனர். இறுதியில் ஆங்கிலேய இராணுவத்தின் கை ஓங்கியது. பேகம் ஹசரத் மஹல் தனது மகன் பிரிஜிஸ் காதிருடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்றார். நேபாள எல்லையில் ஆங்கிலேயர்களால் அவரும் அவரது மகனும் கொல்லப்பட்டனர்.

அபுல் கலாம் ஆசாத் மீது ஆங்கிலேய அரசு 1922ம் ஆண்டு ராஜ நிந்தனை குற்றம் சாட்டி கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் ஒரு வருடக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனை பற்றி ஆசாத்தின் மனைவி ஸுலைஹா பேகம் கீழ்க்கண்டவாறு காந்திஜிக்கு தந்தி அனுப்பினார்.

‘என் கணவர் அபுல் கலாம் ஆசாத்திற்க நீதி மன்றம் ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது. இந்தத் தண்டனை நாங்கள் எதிர் பார்த்ததை விடக் குறைவு. தேசத் தொண்டுக்கு வழங்கப்படும் பரிசு சிறைத் தண்டனை என்றால் இப்போது வழங்கப்பட்டுள்ள ஓராண்டுக் கடுங்காவல் தண்டனை மிகவும் அற்பமான பரிசு’.

வெளிநாடுகளில் தங்கியிருந்து இந்திய விடுதலைக்கு உழைத்த இஸ்லாமியர்கள் பலர்.

பஞ்சாபில் பிறந்த உபைதுல்லாஹ் சிந்தி காபூலில் ஏழு ஆண்டுகள் தங்கி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். 1923ம் ஆண்டு காங்கிரஸ் மகா சபையின் ஒரு கிளையை இவர் காபூலில் ஏற்படுத்தினார். பின்னர் துருக்கியின் தலைநகரான ஆங்காரா சென்று அங்கு மூன்று ஆண்டுகள் தங்கி பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்.

சிங்கை சிங்கம்

1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர்.

1915 – ம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப்படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயில் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார். இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச் சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915 – ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச் சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலி, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915 ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதியன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இஸ்லாம்தளம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Mon 30 Aug 2010 - 12:10

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
அன்பு நண்பர் சபீர் அவர்களே !!
நம்முடைய இஸ்லாமிய விடுதலை போராளிகளை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு என்னுடைய மன மார்ந்த நன்றிய தெரிவித்துகொள்கிறேன்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 27 Sep 2010 - 12:12

masthan wrote:அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
அன்பு நண்பர் சபீர் அவர்களே !!
நம்முடைய இஸ்லாமிய விடுதலை போராளிகளை வெளிச்சம் போட்டு காட்டியதற்கு என்னுடைய மன மார்ந்த நன்றிய தெரிவித்துகொள்கிறேன்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 27 Sep 2010 - 12:30

புதிய தகவல்களை அளிக்கும் தங்களுக்கு என்னுடைய நன்றிகள் பல



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue 28 Sep 2010 - 3:56

இன்று தான் இந்த படைப்பை படித்தேன்.சுதந்திர போராட்டத்தின்,இந்திய முஸ்லிம்களின் பங்கு பற்றி,ஏற்கனவே நான் படித்திருந்தாலும்,இந்த தகவல்கள் அறியாதவை தோழரே.
பகிர்வுக்கு நன்றி தோழரே .வரும் தலைமுறை அரசிவாதிகள் சொல்லும் சொல்லிவரும் பொய்களை நம்பாமல்,இது போல
அரிய தகவல்கள் மூலம் ,அறிய தந்தமைக்கு நன்றி தோழரே .





இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக