ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலுறவு குறைகளும் சிகிச்சை முறைகளும்

Go down

பாலுறவு குறைகளும் சிகிச்சை முறைகளும் Empty பாலுறவு குறைகளும் சிகிச்சை முறைகளும்

Post by சிவா Sun Sep 21, 2008 5:21 am

திருமணத்தின் ஓர் அங்கமாக இருப்பது பாலுறவு. இது தம்பதியர் ஒரு வருக்கு ஒருவர் இன்பத்தைப் பரிமாறிக் கொள்வதற்காக மட்டுமின்றி, எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கும் ஓர் கருவியாகச் செயல்படுகிறது.
இந்த பாலுறவை இருவருமே திருப்தியாக தரவேண்டும், பெறவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குள் சிக்கல்கள் தோன்றிவிடும்.

இதற்கு இருவருக்குமே உடல் நலமும், மன நலமும் சரியாக இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் குறைபாடு இருந்தால் குடும்பத்தில் பிணக்குகள் தோன்றும். என்னென்ன பிரச்சினைகள் என தெரிந்துகொள்ளுங்கள்.

ஆணுக்குத் தோன்றும் பாலுறவுக் குறைபாடுகள்

ஆணுக்குத் தோன்றும் பாலுறவுக் குறைபாடுகளில் முக்கியமானது விந்து முந்துதல், ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி, நோய், மந்த நிலை அல்லது முரட்டுத்தனம், தூண்டல் முறைகளை அறியாதது ஆகியவற்றைக் கூறலாம்.

பெரும்பாலான போலி மருத்துவர்கள் ஆண்களின் இந்தக் குறைபாட்டை விளம்பரமாக்கி நிறைய காசு சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

விந்து முந்துதல் ஏற்படுவதற்குக் காரணம் ஆண்களின் மனநிலையில் ஏற்படும் மிகையான தூண்டல்கள். இயல் பாகவே ஆண் தான் அடையும் பாலுறவைவிட அதைப் பற்றி மிகையாக நினைப்பதுதான் அதிகம். இவ்வாறே தனது மனைவியைவிட நடிகையை அல்லது பிற பெண்களை நினைத்துக் கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது விரைவாக விந்து வெளியேறி விடுகிறது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் விந்து முந்துதல் ஏற்பட்டால் பெண்ணுக்கு பாலுறவின் மீதே வெறுப்பு ஏற்பட ஆரம்பித்துவிடும். இதனால் பலர் தனக்கு ஆண்மையில்லையோ என நினைத்துக் கொண்டு பல மருத்துவர்களை நாடி ஓடுகிறார்கள்.

இது தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை. ஆண் மேற்புறமாகவும், பெண் கீழ்ப்புற மாகவும் இருந்து தாம்பத்ய உறவு கொண்டால் விந்து முந்துதல் அதிகமாக இருக்கும். இந்த நிலையை மாற்றி ஆண்-கீழ், பெண்-மேல் நிலையில் பாலுறவு கொண்டால் பிரச்சினையை தீர்க்கலாம். தவிர தாம்பத்திய உறவின் போது படபடப்பு, அச்சம், வேறு விதமான உணர்வுகளைக் காட்டுவது, செயலைவிட மனதை அதிகம் தூண்டுவது ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் இந்தப் பிரச்சினையை தீர்க்கலாம்.

ஆண்மையின்மை

ஆண் உறுப்பு விரைப்படையாத நிலைக்குத் தள்ளப்படுவதை ஆண்மை யின்மை என்கிறார்கள். ஆண் களைப்பாகவோ, நோயாகவோ அல்லது மனம் சார்ந்த பாதிப்புகள், நரம்பு மண்டலக் கோளாறுகள், சில மருந்து மாத்திரைகள், புதிய சூழல்கள் போன்றவற்றால் விரைப்புத் தன்மையை இழந்துவிடும் போது இந்த நிலை உண்டாகிறது.

விந்து முந்துதலும், எழுச்சியற்ற நிலையும் பலருக்கு முதலிரவு நேரத்தில் உண்டாகிவிடுவதால், தனக்கு ஆண்மை போய்விட்டதோ என ஆணும், இவ னுக்கு ஆண்மையே இல்லை போலும் என பெண்ணும் நினைத்துக் கொண்டு பிரச்சினையை வளர்த்துக் கொள்வார்கள்.

முதலிரவு நேரத்தில், அல்லது தற்காலிகமாக இத்தகையப் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பு. இதை பயிற்சிகள் மூலமும், தம்பதியர் மனம் விட்டுப் பேசுவதன் மூலமும் தவிர்த்துக் கொள்ளலாம்.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
நரம்புத் தளர்ச்சி பெரும்பாலும் நரம்பு மண்டல பாதிப்பு, மருந்து மாத்திரைகளின் பக்க விளைவுகள், பழக்க வழக்கங்கள், கடுமையான உழைப்பு போன்றவற்றால் ஏற்படுகிறது. இதனால் விரைப்பு இல்லாமை, போதுமான தாம்பத்ய உறவு கொள்ள இயலாமை போன்றவை ஏற்படும். இந்தப் பிரச்சினையை மருத்துவரின் ஆலோசனைப்படி தீர்த்துக் கொள்ளலாம்.

நோய்

ஆண் அடிக்கடி நோய் வாய்ப்படும் போதும், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் போன்ற உள்ளுறுப்பு சார்ந்த நோய்களால் பாதிக்கப்படும்போதும், உளவியல் காரணங்கள் அழுத்தும் போதும் இயல்பாக செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும்.

மந்த நிலை அல்லது முரட்டுத் தனம்

தாம்பத்திய உறவில் ஈடு படும்போது மந்த நிலையும் இல்லாமல் முரட்டுத் தனமாகவும் செயல்படாமல் கவனமாக இருக்க வேண்டும். இரண்டுமே பெண்ணின் பாலின்பத்திற்கு உடல் மற்றும் உள்ள அளவில் இடையூறாக இருக்கும்.

தூண்டல் முறை அறியாதது

ஆணுக்கு பாலுறவு பற்றி நினைத்தாலே உறுப்பு எழுச்சியடையும். ஆனால் பெண்ணுக்கு தொடுதல், தழுவுதல், பேசுதல் போன்றவற்றின் மூலமே எழுச்சி யடையும். அதன் பிறகு பாலுறவு கொண்டால் பெண் திருப்தியடைவாள். இல்லாவிட்டால் விரக்தி நிலையை அடைந்து பாலுறவை வெறுக்க ஆரம்பிப்பாள்.

ஆண் பாலுறவுக்குப் பின்னால் திருப்தியடைகிறான்;, பெண் பாலுறவுக்கு முன்னால் திருப்தியாக இருக்கிறாள் என இதைப் பற்றி ஒரு பழமொழி உண்டு.

அதனால்தான் பாலுறவுக்கு முன்பு நீண்ட நேரம் முன்விளையாட்டு எனப் படும் தூண்டல் முறைகளில் ஈடுபட வேண்டும் என கணவர்களை மருத்து வர்கள் வற்புறுத்துகிறார்கள். இப்போது உள்ள வாழ்க்கைச் சூழல், இட நெருக்கம் போன்றவற்றால் தூண்டல் முறை அவ்வளவு சாத்தியமாக இருப்பதில்லை என்றாலும், கூடுமானவரை இவற்றில் ஈடுபடுவது நல்லது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாலுறவு குறைகளும் சிகிச்சை முறைகளும் Empty Re: பாலுறவு குறைகளும் சிகிச்சை முறைகளும்

Post by சிவா Sun Sep 21, 2008 5:22 am


பெண்ணுக்குத் தோன்றும் குறைபாடுகள்


தாழ்வு மனப்பான்மை, இயற்கையாக அமைந்த உடலமைப்பு, உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பு, பயம் போன்ற உணர்வுகள், இனி குழந்தை பிறக்காது என்ற விரக்தி, மிகுந்த களைப்பு, அதிக அலைச்சல், வயோதிகமாகிவிட்டது என்ற நினைப்பு போன்றவை பெண்ணுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி கிளர்ச்சியின்மை ஏற்படுத்துகிறது.

உடல் சார்ந்த பிரச்சினைகள்

மாதவிலக்கு காலங்களில் பெண்கள் ஒதுங்கியிருப்பது நல்லது. இக்காலத்தில் உறவு கொண்டால் கருப்பை உள்வரிச் சவ்வு அழற்சி உண்டாகும். இந்தக் காலத்தில் பாலுறவு கொள்வது அசுத்தம் என நினைப்பதால் பெண்கள் திருப்தியாக பாலுறவில் ஈடுபட இயலுவதில்லை.

நோய்கள்

பெண்கள் எப்போதுமே கவர்ச்சியாக இருக்க விரும்புபவர்கள். தனது கவர்ச்சியால் ஆடவனை கவிழ்த்துவிட வேண்டும் என நினைப்பவர்கள்.
சில பெண்கள் தங்களுக்கு கவர்ச்சியான உடலோ, எடுப்பான மார்பகங் களோ இல்லையே என தாழ்வு மனப்பாண்மையோடு இருப்பார்கள். இதனால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாது.

பிறவியிலேயே புணர்புழை போதுமான அளவு விரிந்திராத நிலை, கெட்டி யான கன்னித்திரை போன்றவை இருந்தாலும் தாம்பத்திய உறவில் ஈடுபட சிரமமாக இருக்கும். இதை அறியாத கணவன் அவள் மீது கோபித்துக்கொண்டு பிரச்சினைக்கு வித்திடுவான்.

சில பெண்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும்போதும், நோயின் போதும் தாம்பத்திய உறவை தவிர்க்க விரும்புவார்கள்.

கட்டை போல கிடக்கிறாள், எப்போதும் நோய் நோய் என நோயாளியாக இருக்கிறாள் என்ற வெறுப்பு போன்றவை மனைவி மீது கணவனுக்கு எரிச்சல் வந்துவிடுகிறது. அதுவே பிரச்சினையாகவும் முடிகிறது.
இதைத் தவிர, மலட்டுத் தன்மை, கருவுறுப்புகள் வளராமையால் குழந்தை பேறின்மை போன்றவையும் பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன.

தீர்வு

தம்பதியருக்குள் இத்தகைய பிரச் சினைகள் இருப்பதை ஒருவருக்கு ஒருவர் தெரிந்துகொள்ள நேரிடும் போது தான் அதற்கு என்ன தீர்வு என்பதை தெரிந்துகொள்ளவும், பிரச்சினையை போக்கிக் கொள்ளவும் முடியும்.
ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுதல் மூலம் மனம் சார்ந்த பிரச்சினை கள் அனைத்தும் தீர்வதால் பாலுறவு பிரச்சினையில்லாமல் நகரும்.

தற்போது உடல் ரீதியான குறைகளை போக்குவதற்காக பல்வேறு அதிநவீன சிகிச்சைமுறைகள் உள்ளன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum