புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
61 Posts - 80%
heezulia
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
10 Posts - 13%
E KUMARAN
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
397 Posts - 79%
heezulia
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
56 Posts - 11%
mohamed nizamudeen
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
E KUMARAN
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_lcapமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_voting_barமனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள். - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனத்தோட்டத்தில் மலர் செடிகளை நடுங்கள்.


   
   

Page 2 of 2 Previous  1, 2

tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Thu Aug 26, 2010 11:35 pm

First topic message reminder :

பத்மனாபன் எனனுடன் கல்லூரியில் படித்தவன். நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்த அவன் வேறு ஜாதிப் பெண்ணை விரும்பி கல்யாணம் பண்ணிக் கொண்டதால், வீட்டின் உறவு முறிந்து போய் விட்டது. அவனும் அதைப் பற்றி கவலைப்படாமல் தன் மனைவியின் உதவியுடன் அவர்களின் குடும்ப தொழிலான துணிக்கடை வைத்தான்.

அவன் நேரமோ அல்லது அவன் மனைவியின் ராசியோ தெரியவில்லை, கடை மிகுந்த நஷ்டத்தில் நடக்கவே கடையை மூடிவிட்டான்.

பின்பு மாமனாரிடம் பணம் பெற்றும் கடன்கள் வாங்கியும் மளிகை கடை ஒன்று திறந்தான். ஆனால் அதுவும் சுகப்படாமல் போகவே கடையை மூடிவிட்டு, மாத சம்பளத்தில் ஒரு பெரிய துணிக்கடையில் வேலை செய்து வந்தான்.

தற்செயலாக ஒருநாள் என்னை சந்தித்த அவன் தன் குறைகளை எல்லாம் சொல்லி தீர்த்தான்.

"ராஜி, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் என்ன செய்தால் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும்?" என்றான்.

"இது போன்ற சூழ்நிலைகள் எல்லாருக்கும் வருவதுதான். இதை எதிர்கொண்டு வெற்றி பெறத்தான் நாம் இங்கு வந்து இருக்கிறோம். உதவி வேண்டுமானால் நல்ல ஞானம் கொண்டவரை அணுகி வழி கேட்கலாம்" என்றேன்.

"அப்படி யாரும் எனக்கு தெரியாதே! நான் என்ன செய்வது?" என்றான்.

"என்னுடைய குருவான "சின்ன யோகீஸ்வரர்" மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்பு நடத்துகிறார். இதில் நமக்கு உபயோகமான, வாழ்வில் முன்னேறக் கூடிய வழிகளை சொல்லி தருகிறார். முக்கியமாக நாம் கேட்காமலே நம்முடைய பிரச்சனைக்கு வழிகிடைக்கும். உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உனக்கு வழி பிறக்கும், வருகிறாயா?" என்று கேட்டேன்.

"முதல் ஞாயிற்றுக்கிழமையா? இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன, நான் லீவு போட்டு விட்டு வருகிறேன். எப்போது, எங்கு வரவேண்டும்?"

"ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணிக்கு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிடு. நான் வந்து உன்னை அழைத்து போகிறேன்" என்று சொல்லிவிட்டு பிரிந்தேன்.

அதேப்போல ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு அவனை தாம்பரம் இரயில் நிலையத்தில் சந்தித்தேன். அங்கிருந்து பெருங்களத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி இருக்கும் இடம் சென்றோம். அங்கே ஏற்கனவே சுமார் 15 பேர்கள் வந்து கூடியிருந்தார்கள். பத்மநாபனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.

பிறகு எல்லாரும் சென்று உள்ளே இருந்த ஒரு பெரிய ஹாலில் விரித்து இருந்த இருக்கைகளின் மீது அமர்ந்தோம். ஹால் முழுவதும் ஊதுபத்திகளின் இனிய வாசம் பரவியிருந்தது.

சரியாக 9 மணிக்கு குருவானவர் வந்து அவருடைய துண்டின் மீது அமர்ந்தார். ஏற்கனவே அறிமுகமானவர்களை குசலம் விசாரித்தார். அவருக்கு நான் பத்மநாபனை அறிமுகப்படுத்தினேன்.

பத்மநாபன் கைகளை குவித்து வணங்கினான். அவன் ஏதும் பேசவில்லை. குருவும் ஏதும் சொல்லவில்லை.

குருவானவர் சற்று நேரம் அமைதியாக எல்லார் முகத்தையும் ஒருமுறை தீர்க்கமாக பார்த்தார். கண்களை மூடிக் கொண்டார். பேச ஆரம்பித்தார்.

"இன்று எல்லாருக்கும் வாழ்வில் பலவிதமான கஷ்டங்கள், துன்பங்கள் வருகின்றன. அதை எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பது தெரியாமல் பலர் விழிக்கிறார்கள். முதலில் பிரச்சனையை தீர்க்க வேண்டுமானால், அது நமக்கு ஏன் வருகிறது என்று யோசனைப் பண்ண வேண்டும். காரணம் இல்லாமல் எந்த காரியமும் நடப்பது இல்லை.

நம் வாழ்வில் நடைபெறும் எல்லா செயல்களும் முதலில் நமது மனதில் ஒத்திகைப் பார்த்துவிட்டு பிறகுதான் உலகமேடையில் அரங்கேறுகிறது.

எப்படி ஒரு அசுத்தமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சினால் அது கெட்டு போகிறதோ அது போல கசடுகள் நிறைந்த நம் மனதில் எதை திட்டமிட்டாலும்
அது குறைபாடுகளுடன் தான் செயல் படும்.

எனவே நம்முடைய முதல் வேலை நம்முடைய மனதை கழுவி சுத்தம் பண்ணுவதுதான். அது எப்படி ?

ஒரு காட்டில் போய் ஒரு நந்தவனம் வைக்க விரும்பினால், என்ன
செய்கிறோம் ?

முதலில் அங்கே இருக்கும்முட்செடிகள், புதர்கள், பயனில்லா மரங்கள் ஆகிய
வேண்டாதவைகளை வெட்டி அப்புறப்படுத்துகிறோம்அல்லவா ? அதேப்போல் நம் மனதில் என்ன என்ன இருக்கின்றன என்பதை ஆராய வேண்டும்.

அங்கே நிறைய கோபம் இருக்கும். ஆத்திரம், வெறுப்பு இருக்கும். நம்மை
ஏமாற்றிய அண்ணன், தம்பிகள்,நம்மை பாரபட்சமாக நடத்திய பெற்றோர்கள்,
உறவினர்கள்,கூட வேலை செய்பவர்கள், நம் முதுகில் குத்திய நண்பர்கள் என பலபேர் மீது நமக்கு மிகுந்த வெறுப்பு இருக்கும். அவர்களில்
எவரேனும் ஒருவரை பார்த்ததும் நமக்கு உடம்பே பற்றி எரிவது போல
இருக்கும். மனம் புழுங்கும். ஆத்திரத்தில் துடிக்கும். அவர்களை பழிவாங்க பலவிதமான யோசனைகள் தோன்றும்.

இப்படிப்பட்ட மாறுபாடான எண்ணங்களுடன் நமது மனம் உழலும் போது, நல்ல
எண்ணங்கள், யோசனைகள்எப்படி நம் மனதில் எழக்கூடும் ? நாம் திட்டமிடும்
செயல்கள் எப்படி வெற்றியடையும் ? வாழ்க்கை எப்படிசிறக்கும் ?

என்ன செய்வது என்று கேட்பீர்கள்.

வேண்டியது எல்லாம் முயற்சியும் வைராக்கியமும் தான். நம் மனதை
முழுவதுமாக அடைத்துக் கொண்டுஇருக்கும் இத்தகைய "நெகடிவ்"
உணர்ச்சிகளை முதலில் அடையாளம் காண வேண்டும். ஒவ்வொன்றும் ஓர்
எண்ண குவியலாக நம் மனதில் புதர்களை போல, முட்செடிகளை போல குவிந்து கிடக்கின்றன. அவைகளைஎல்லாம் நீக்கி விட்டு அந்த இடத்தில் அன்பு, கருணை, தயாளம், மன்னிப்பு போன்ற "பாஸிடிவ்" உணர்வு
குவியல்களை பதிப்பிக்க வேண்டும்.

உதாரணம் சொல்லட்டுமா ?

ஒரு நண்பர் உங்களிடம் பெரிய அளவு பணத்தை கடன் வாங்கினார் என்று
வைத்துக் கொள்வோம். சிலகாலம் கழித்து, அவர் திருப்பி தருவதாக சொன்ன
காலம் முடிந்தபின், உங்களுக்கு ஒரு தேவை ஏற்படுகிறது. அப்போது போய்
அவரை கேட்டால், அவர் ஏதோ சாக்கு போக்கு சொல்லி உங்களை ஏமாற்றி
வருகிறார்என்றும் வைத்துக் கொள்வோம்.

உங்கள் மனம் என்ன பாடுபடும். அவர் மீது உங்களுக்கு எவ்வளவு வெறுப்பு, கோபம் ஏற்படும். இந்தகோபமும், வெறுப்பும் பன்மடங்காக பெருகி, மனதை முழுவதுமாக வியாபித்துக் கொண்டு, மற்றகோபதாபங்களோடு சேர்ந்து உங்களின் எல்லா
காரியங்களையும் ஒரு விதஎரிச்சலோடு, பதற்றத்தோடு செய்யவைக்கும்.

நாம் என்ன செய்ய வேண்டும் ?

அமைதியாக உட்காருங்கள். உங்கள் நண்பரை நினைவு கூறுங்கள். அவர்
ஆபத்தில் உங்களிடம் பணம் கேட்டபோது நீங்கள் அன்போடு பணம் கொடுத்ததை நினைத்துப் பாருங்கள். நீங்கள் திருப்பி பணம் கேட்ட போதுகொடுக்க முடியாமல் போனதற்கு ஏதேனும் காரணம் இருக்க கூடுமா என்பதையும் யோசியுங்கள்.

உங்கள் நண்பர் நல்லவர். சந்தர்ப்ப சூழ்நிலையால் பணத்தை கொடுக்கவில்லை.
ஆனாலும் திருப்பிகொடுப்பார் என்று நம்புங்கள். அவர் மீது நீங்கள் எவ்வளவு அன்பு கொண்டிருந்தீர்கள் என்பதை நினைத்துஅவரை மன்னியுங்கள். அவர் நிலைமைமுன்னேறி அவரே பணத்தை கொண்டு வந்து தருவார் என்று நம்புங்கள்.

அவரை மனமாற மன்னித்து விடுங்கள். அதையே நினைத்துக் கொண்டு
இப்போதைய வாழ்க்கையை ஏன்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

உங்கள் மனதில் உங்கள் நண்பர் ஒரு கள்ளிச் செடியாக இருப்பது போல
தோன்றினால், அதை பிடுங்கிபோடுங்கள். அவர் மீது கொண்ட பழைய அன்போடு அங்கே ஒரு மல்லிகை செடியை நடுவதாக பாவனைபண்ணுங்கள். உங்கள் மனதில் உங்கள் நண்பர் மல்லிகை செடியாக இருப்பதாக நினைத்து நாள்தோறும்அன்பெனும் நீரை ஊற்றுங்கள்.

இப்படியே உங்கள் மனதில் உள்ள வேண்டாத மனிதர்களின் நினைவுகளை,
அதாவது முட்புதர்களாக இருக்கும் "நெகடிவ்" எண்ணங்களை எடுத்து விட்டு
விதம் விதமான மலர் செடிகளை, (ஏமாற்றிய) நண்பர் என்னும்மல்லிகை செடி, (துரோகம் பண்ண) பார்ட்னர் என்கிற பவழ மல்லி மரம், (கொடுமைக்காரி) மாமியார் என்கிற சம்பங்கி கொடி என்று பலவிதமான மலர்
செடிகளை நட்டு, தினமும் உட்கார்ந்து அன்பெனும் நீரூற்றிவாருங்கள்.

உங்கள் மனத்தோட்டம் வளர, வளர, உங்கள் வாழ்வில் வசந்தம் வீசுவதை நீங்களே பார்ப்பீர்கள்.

எல்லார் வாழ்வும் வளம் பெற என் வாழ்த்துக்கள்" குரு வகுப்பை முடித்து
கண்ணைத் திறந்தார்.

நானும் பத்மநாபனும் விடைப் பெற்று வெளியே வந்தோம்.

"அவருடைய பேச்சு உனக்கு உதவியாக இருந்ததா ?" என்று கேட்டேன்.

"மிகவும் அற்புதமாக இருந்தது. சரியான நேரத்தில் கிடைத்த அறிவுரை. இதை நான் என் வாழ்க்கையில்செயல்படுத்த போகிறேன். உனக்கு மிகுந்த நன்றி" என்று கூறி விடைப் பெற்றான்.

இது நடந்து சுமார் 3 வருடங்கள் கழித்து ஒரு நாள் கார் ஒன்று என் வீட்டு வாசலில் வந்து நின்றது.அதிலிருந்து பதமநாபன், அவன் மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் நிறைய பைகளுடன் இறங்கி உள்ளேவந்தனர்.

மூன்று வருடங்களுக்கு முன்பு பார்த்த பத்மநாபனுக்கும் இப்போது எதிரில்
பார்க்கும் பத்மநாபனுக்கும்எவ்வளவு வித்தியாசம். ஒரு பெரிய மனிதனின்
கம்பீரமும், வசதியான தோற்றமும், முகத்தில் ஒருசந்தோழக் களையும்
ஆளையே மாற்றி காண்பித்தது.

"வாங்க, வாங்க" என்று அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். எல்லாரும்
ஹாலில் உட்கார்ந்து காபிசாப்பிட், நானும் பத்மநாபனும் என் அறைக்கு
சென்றோம்.

பத்மநாபன் என் கைகளை பிடித்துக் கொண்டான். " உன் குருவின் அறிவுரையால் என் வாழ்க்கையே மாறிவிட்டது. அன்று அவர் சொன்னது போலவே, ஒவ்வொருவராக, என் தந்தை, என் அண்ணன், என் அண்ணி என்று
அனைவரையும் நினைத்து, அவர்களை மனதார மன்னித்து, அவர்கள் மீது எனக்கு இருந்த வெறுப்புக்களை களைந்தேன். அவர்களை அன்போடு பார்க்க பழகி கொண்டேன்.

உன் குரு சொன்னது போலவே என் மனதில் மலர் செடிகளை, அன்பால் வளரும் பூச்செடிகளை வளர்த்தேன்.

ஒரு வருடம் கழித்து என் தந்தை என்னை அழைத்து அவருடைய பெரிய
துணிக்கடையை என்னிட்ம்ஒப்படைத்தார். என் அண்ணனுக்கு மூளையில்
ஏற்பட்ட ஒரு கோளாறால் அவருடைய கையின் இயக்கம் குறைப் பட்டு போக,
அவருக்கு பதிலாக கடையை என்னை பார்த்துக் கொள்ள சொன்னார்.

போன வருடம் என் மனைவி பெயரில் தனியாக ஒரு கடையும் ஆரம்பித்துள்ளேன். இரண்டு கடைகளும்லாபகரமாக நடந்துக்கொண்டு இருக்கின்றன."

என் கையை ப்டித்துக் கொண்டிருந்த அவன் சட்டென்று சட்டைப் பையிலிருந்து
ஒரு தங்க மோதிரத்தைஎடுத்து என் விரலில் அணிவித்தான். "இதை என்
நினைவாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று அன்போடு சொன்னான்.

"நாளை முதல்ஞாயிற்று கிழமை அல்லவா ? நீயும் என்னுடன் வந்தால்
குருவிற்கு நன்றி சொல்லிவிட்டுஆசீர்வாதம் பெற விரும்புகிறேன்." என்றான்.

"அப்படியானால் இன்று எல்லாரும் இங்கேயே தங்குங்கள்" என்று கூறி அவனை ஹாலுக்கு அழைத்துவந்தேன்.

மனோசக்தி - மே 2010



tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Sat Aug 28, 2010 3:08 pm

அன்பு நண்பர் சாந்தன் அவர்களுக்கு

நான் எப்போதும் சென்னையில்தான் இருப்பேன். நீங்கள் எப்போதும் என்னுடன் போனில் தொடர்பு கொள்ளலாம். என்னுடைய நம்பர் 044 9884952652.

மற்றப்படி என்னுடைய கட்டுரை உங்களின் பழைய நினைவுகளை தூண்டின என்று நீங்கள் சொன்னப்போது, நானும் ஒரு காலத்தில் வ றுமையிலும் கஷ்டத்திலும் இருந்து மீண்டு வர காரணமாக இருந்த என் குருவின் ஞாபகங்கள் வந்தன.

மிகுந்த நன்றி, வணக்கம்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Aug 28, 2010 3:13 pm

T.N.Balasubramanian wrote:திரு ராஜேஸ்வரன் அவர்களுக்கு,
உங்களுடைய இந்த பதிவு / மீனா அவர்களுக்கு எழுதிய பதிவைப் பார்த்தேன். நல்லதோர் பதிவுகள்.
"மனத்தோட்டத்தில்-------------" பதிவை படித்து கருத்தை கூறவில்லை என்று மனத்தாங்கல் இருப்பது தெரிந்தது.
எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு. சிறிது யோசித்து பாருங்கள். நீங்கள் பதிவிட்ட சமயம், ஈகரை வலையை யாரும் பார்க்காத சமயமாக இருக்கலாம். பிறகு, அடுத்துஅடுத்து பற்பல தலைப்புகளில், பலர் விஷயதானம் செய்யும் போது, முதலில் வந்த தலைப்புக்கள் மறைய கூடிய சாத்ய கூறுகள் அதிகம் உண்டு அல்லவா? இது எந்தன் கருத்து. எந்தன் கருத்து சரி எனப் படுகிறதா? உங்களால் முடிந்த ,நற்பதிவுகள் என நினைப்பதை தொடர்ந்து பதியுங்கள்.
உங்கள் மனத்தோட்டம் பதிவு, நல்லதொரு கருத்தை கூறுகிறது.ரசித்தேன். நன்றி. அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன்.


சியர்ஸ்
அய்யா கூறியது முற்றிலும் உண்மை தான்...
நாங்கள் உங்கள் பதிவை கவனிக்கவில்லை .....
உங்கள் மனத்தோட்டம் பதிவு, மிகவும் அருமை...
தொடருங்கள் தோழரே ....அன்பு வாழ்த்துக்கள் !!!!
நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக