ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன் Poll_c10தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன் Poll_m10தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன் Poll_c10 
heezulia
தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன் Poll_c10தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன் Poll_m10தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன் Poll_c10 
mohamed nizamudeen
தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன் Poll_c10தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன் Poll_m10தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன்

Go down

தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன் Empty தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன்

Post by vishnupuramsaravanan Wed Aug 25, 2010 12:39 pm

இடைவெளிகளில் மிதக்கும்
நாற்காலிகளில்
இருள் வந்து குந்தியிருக்கிறது.

தீபச்செல்வன் [பதுங்கு குழியில் பிறந்த குழந்தை தொகுப்பில்].

முதலில் ஒன்றை சொல்லிவிட விரும்புகிறேன். ஈழப்போராட்டம் குறித்து அடிமுதல் நுனிவரை அறிந்த அறிவுஜீவி அல்ல நான்.தேடிகிடைத்தவற்றை வாசித்து, அரிதாய் கிடைக்கிற ஈழத்து உறவுகளிடம் பேசி அறிந்த வரையில், ஈழப்போரின்போதும் அதன்பின்னான நாட்களிலும் போருக்கு ஆதரவான படைப்பாளர்கள் மீது ஏவப்படும் குரல் குறித்த என் பகிர்வாக இதை எழுத துவங்குகிறேன்.

ஈழம் சார்ந்த தங்களது நிலைப்பாடுகளில் பொதுவாக விடுதலைப்புலி ஆதரவு அல்லது எதிர்ப்பு என்கிற தொனியிலே பேசப்பட்டுவருவது தெரிந்ததே. புலிகளுக்கு ஆதரவாக பேசுவோர் மற்றும் இயங்குவோர் மீது கடந்த ஓராண்டுக்கு முன்வரை அவர்கள் புலிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு பேசுவதாகவும் எழுதுவதாகவும் திரும்பதிரும்ப சொல்லப்பட்டது. அதையே புலியெதிர்ப்பாளர்களை நோக்கி நீங்கள் சிங்களவனிடமிருந்து பணம் பெற்று இந்த புலியெதிர்ப்பு வேலையை செய்கிறீர்களா எனக்கேட்டதும் கோபம் பொத்துக்கொண்டு மக்கள் பற்றியெல்லாம் நாங்கள் பேசுகிறோம் என ஆதாரங்களை காட்டுகின்றனர். ஆம் நண்பர்களே.. இவர்கள் புலி எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதில் ஒருபங்கு கூட அங்கு அல்லுறும் மக்கள் குறித்து கவலை கொண்டு அதை எழுதுவதில்லை.

புலி எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாண்மையோர் தொடக்கத்தில் ஏதேனும் ஆயுத குழுக்களிலோ அல்லது விடுதலை புலிகள் அமைப்பிலோ இருந்தவர்கள்தாம். அவர்கள் இயங்கிய அமைப்பு குலைந்த/குலைக்கப்பட்ட பிறகு , புலிகளோடு முரண்பட்டு வெளியேறியவர்களாக இருப்பதை நாம் காணமுடிகிறது. எனவே ஆயுதப்போராட்டத்தை இவர்கள் ஒருவகையில் ஏற்றுக்கொண்டவர்கள் என்றே நாம் கருதலாம்.

ஆனால் இவர்கள்ஆயுதபோராட்டம் குறித்து இப்போது எழுதுவதும் காந்தியத்தை தூக்கி பிடிப்பதை போன்ற தோற்றத்தை தருவதும் நமக்கு சந்தேகங்களை வரவழைப்பவையே. சரி இவர்களின் பரிணாம வளர்ச்சியா அல்லது வேறெதுவுமா என்பதை காலம் விடுவிக்கும். ஆனால் ஈழப்போராட்டம் குறித்து ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் எழுத்தாளர்களையும் இயக்கத்தினரையும் குறிவைத்து இவர்கள் எழுதுவது குறித்து நாம் கவனத்துடன் பார்க்கவேண்டும். அவர்களின் மனநிலையை சோர்வடையச்செய்து இயங்குவதிலிருந்தும் எழுதுவதிலிருந்து தளர்ந்துபோகச்செய்யும் நோக்கம் முன்னிருத்தப்படுவதன் அடையாளமாய் தனிமனித தாக்குதல் பல விவாதங்களில் புகுத்தினார்கள்.

போர் உச்சமாக நடந்துக்கொண்டிருந்தபோது இவர்களின் பணியும் முடுக்கிவிட்டதை போல திடுமென புலியெதிர்ப்புநிலை புத்தகங்கள் கொண்டு வருவதும், நேர்காணலில் தோன்றுவதும் அருள்வாக்கு சித்தர் போல குறி சொல்வதுமாக நிகழ்ந்து வந்தன. "தமிழக எழுத்தாளர்கள் ஏன் ஈழப்போர் குறித்து அதிகம் பேசவில்லை" என தமிழ்நதி கேட்கையில் பல்முனைகளிலிருந்து குரல்களும் கட்டுரைகளும் வந்தவண்ணமிருந்தன. தமிழ்நதியின் நண்பர்களின் சாதி சான்றிதழ் பரிசோதிக்கப்பட்டு இணயத்தளங்களில் முடிவு அறிவிக்கப்பட்டது. அரசியல் இயக்கங்களாக செயல்பட்டவர்கள் மீதும் அவதூறுகள் பொழிப்பட்டன/பட்டுவருகின்றன.

தற்போது கவிஞர் தீபச்செல்வனின் நேர்காணலை தொடர்ந்து தனது காழ்ப்புணர்வுகளை பதிவு செய்யும் வேலை தொடர்ந்துவிட்டது, ஒருவரே பற்பல அவதாரமெடுக்கும் அற்புதங்கள் நிகழ்வது புதுசெய்தி அல்ல. அவைகளின் நோக்கம் என்ன என்பதே நமக்கு முக்கியமானது. அவர்களின் குரல் இப்பவும் புலி எதிர்ர்பின் தீவிரத்தை போல முகாமிலிருக்கும் மக்களின் அவலத்தையோ, சரணடைந்த 12000 ஆயிரம் பேர்களின் தற்போதைய நிலையையோ தீண்டவில்லை. சேரன் எழுதாதையே இவர் எழுதிவிட்டார் எனகேட்கிறார்கள். சேரனின் புகலிட வாழ்வை கேலிசெய்யும் இவர்கள் தீபச்செல்வன் ஈழத்திலிருந்து எழுதினாலும் அதற்கொருவிதமான கேலியை வைத்திருக்கிறார்கள். எங்கிருந்து எழுதினால் இவர்களின் கருணையை பெறமுடியுமென்று எமக்கு தெரியவில்லை. அவர்களுக்காவது தெரியுமா என்றும் புரியவில்லை.மேலும் லும்பினி தளத்தின் இந்நேர்காணலை ஏன் வெளியிட்டார்கள் என குதிப்பதும் விசித்திரமாக இருக்கிறது. அந்த தளத்தில் மாற்றுகருத்துகள் வெளியிடக்கூடாதென மறைமுகமாக ஆணையிடவிரும்புகிறாரா என்ன?

தீபச்செல்வன் தற்கால படைப்பாளின் முக்கியமான ஒருவர். இன்றும் இலங்கையிலிருந்துக்கொண்டு தனது வாழ்வினை படைப்பாக்கி கொண்டிருப்பவர். அவரின் பட்டைப்புகள் நிகழ்காலத்தை வரலாற்றில் பதிவுசெய்வன. தமிழ்நதியின் சொற்களில் சொவதென்றால்..

""கொடுங்கொலைக் காலமொன்றிற்குச் சாட்சியாயிருக்கும் தீபச்செல்வன் அவற்றை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். பயமும் பதட்டமும் கோபமும் இயலாமையும் எல்லாக் கவிதைகளிலும் பரவிக்கிடக்கின்றன."

முகாம்களின் நிலைகளையும், முகாமிலிருந்து வெளியேற்றுதல் நாடகங்களையும் , இன்றும் புதிதாக மக்கள் கொண்டுவந்து விடப்படுகின்றனர் போன்ற செய்திகளை அவரது படைப்புகள் வழியே வெளிக்கொணர்கிறார். அதுவும் எத்தகைய சூழல் என்பது கவனிப்பது அவசியமானது.அவரே தனது முன்னுரையொன்றில்..

எதைப்பற்றியும் பேசமுடியாத மலச்சூழலில் நான் எழுதிக்கொண்டிருப்பது அம்மாவிலிருந்து நண்பர்கள் வரை தேவையற்றதாக கூறப்படுகிறது."
[பதுங்கு குழியில் பிறந்த குழந்தை " ]

தீபச்செல்வனின் நேர்காணல் பற்றி பேசுகிறேன் என்று அவர் பேசத்தவிர்ப்பதை மீண்டும் மீண்டும் கேட்பதன் நோக்கம் என்னவாக இருக்கமுடியும். இவர்கள் விரும்புகிற அந்த பதில்களிடமிருந்து என்ன கிடைத்துவிடும்? தீபச்செல்வன் வாழ்கின்ற நெருக்கடியான வாழ்வினை இன்னும் சிக்கலாக்கிவிடும் முயற்சியாகக்கூட அது அமையலாம். தொடர்ந்து அவர் ஈடுபட்டு வரும் பணிகளும் முடக்கப்படலாம். அவ்வாறில்லை என யாரேனும் சொல்லமுயன்றால் புலியெதிர்ப்பு நடவடிக்கைகளை கழித்து இவர்களின் செயற்பாடுகளை நாம் கவனித்தாலே நமக்கு விரிவாக விளங்கும்.

துன்புறும் மக்களுக்கான குரல்களை தனது படைப்பின் கருவாக்கும் இம்மாதிரியான படைப்பாளிகளின் படைப்புகள் பயணிக்கும் வெளியை விரிவாக்குவதே நமது சரியான பங்களிப்பாக இருக்கமுடியும்.


விஷ்ணுபுரம் சரவணன்
vishnupuramsaravanan
vishnupuramsaravanan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன் Empty Re: தீபச்செல்வன் - துயரத்தை பங்கிடும் கவிஞன்

Post by vishnupuramsaravanan Wed Aug 25, 2010 9:51 pm

vishnupuramsaravanan
vishnupuramsaravanan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum