ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையின் குறும்பு

Go down

குழந்தையின் குறும்பு Empty குழந்தையின் குறும்பு

Post by சிவா Wed Jul 29, 2009 3:19 am

அக்பர் சக்கரவர்த்தி சபையில் வந்து, தமது சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

அமைச்சர், பிரதானிகள் யாவரும் சக்கரவர்த்தியை வணங்கிவிட்டு அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர்.

ஆனால், பீர்பால் மட்டும் வரவில்லை; அவருடைய ஆசனம் காலியாக இருந்தது. அக்பரின் பார்வை அங்கே சென்றது. பீர்பால் காணப்படாமையால் அக்பருக்கு உற்சாகம் இல்லை. சிறிது நேரம் பொறுத்திருந்தார்: அப்பொழுதும் பீர்பால் வரவில்லை.

ஒரு சேவகனை பீர்பால் இல்லத்துக்கு அனுப்பி அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்அக்பர்.

' இதோ வருகிறேன்' எனச் சொல்லி அனுப்பினார் பீர்பால்.

நேரம் கடந்தது; ஆனால் அவரோ வரவில்லை.

மறுபடியும் சேவகனை அனுப்பிவைத்தார் அரசர்.

முதலில் கூறியபடியே, ' இதோ வருகிறேன்' எனக் கூறினார் பீர்பால்.

ஒரு மணி நேரம் கடந்தது!

சபையில் வீற்றிருந்தவர்கள் பலதிறத்தினர்; பீர்பாலை விரும்பாத பொறாமைக்காரர்களும் அங்கே இருந்தனர். அவர்கள் இந்தச் சந்தர்ப்பதைதைப் பயன்படுத்திக் கொண்டனர்.

'சக்கரவர்த்தி இருமுறை கூப்பிட்டு அனுப்பியும்கூட அவர் வரவில்லையே, அவருக்கு எவ்வளவு கர்வம்' எனக் கூறி தூபம் போட்டு அக்பருக்குக் கோபத்தை உண்டாக்கத் தொடங்கினர்.

பலரும் சொன்னவுடன் உண்மையிலேயே அக்பருக்குக் கோபம் பொங்கியது.

பீர்பாலைக் கைது செய்து கொண்டு வரும்படி சேவகர்களை அனுப்பினார் அக்பர்.

சேவகர்கள் பீர்பாலிடம் சென்று அரசர் உத்தரவை தெரிவித்தனர்.

பீர்பால் உடனே அரண்மனையை நோக்கிப் புறப்பட்டு வந்தார். அக்பரை வணங்கிவிட்டு தமது ஆசனத்தில் அமர்ந்தார்.

அக்பருக்குக் கோபம் தணியவில்லை. ' இரண்டு முறை சேவகர்களை அனுப்பியும்கூட ஏன் உடனே வரவில்லை?' எனக் கேட்டார்.

'சக்கரவர்த்தியே, என் குழந்தை அழுது தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. அதனால் உடனே வர இயலவில்லை. இப்பொழுதும்கூட அழுது கொண்டிருக்கும் குழந்தையை அப்படியே விட்டுவிட்டுத்தான் இங்கே விரைவாக வந்தேன்' எனப் பதில் கூறினார்.

' இவ்வளவு நேரம் எங்கேயாவது குழந்தை அழுது கொண்டிருக்குமா? இப்படி நான் கேள்விப்பட்டதுகூட இல்லையே?' என்றார் அக்பர்.

'என் வார்த்தையைச் சிறிது பொறுமையோடு அரசர் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் உண்மை விளங்கும். சபைக்கு நான் புறப்படும் சமயம் குழந்தை அழத் தொடங்கியது; 'என்ன வேண்டும்? ஏன் அழுகிறாய்?' என்றேன் பதில் கூறாமல் அழுது கொண்டே இருந்தது; என்ன கேட்டும் பதில் கூறவில்லை. நானும் சமாதானம் கூறிக்கூறி அலுத்துப் போனேன். ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. பிறகு, 'கரும்பு வேண்டும்' என்று கேட்டது 'வாங்கி வரச் சொல்லிக் கொடுத்தேன். மறுபடியும் அழுகை; 'கரும்பை நறுக்கித் துண்டுகளாக்கித் தருமாறு' கேட்டது. அப்படியே செய்து கொடுத்தேன். தின்று கொண்டே இருந்த குழந்தை மறுபடியும் அழத் தொடங்கியது. மறுபடியும் ஏன் அழுகிறாய்? என்று கேட்டேன்; குழந்தையின் கோரிக்கை விநோதமாயிருந்தது. சுவைத்துத் துப்பிய சக்கைகளை எல்லாம் எடுத்து மறுபடியும் முழுக் கரும்பாக ஆக்கித் தருமாறு அடம் பிடித்தது.

நான் என்ன செய்வேன்? அற்புதங்கள் செய்யும் மந்திர சக்தி என்னிடம் இருக்கிறதா? எதுவும் தோன்றாமல் திகைத்துப் போனேன்; குழந்தையின் தொந்தரவு தாங்க இயலவில்லை!

இந்தக் குழந்தைகளே இப்படித்தான். நினைத்த நேரத்தில் எதையாவது கேட்டு அழுது, அழுது துன்புறுத்துகின்றன. நல்ல வேளையாக சேவகர்கள் வந்தார்கள்; நான் தப்பித்தேன் என வந்து விட்டேன்' என்றார்.

சபையில் இருந்தோர், பீர்பால் கூறுவது உண்மைதான் என்பதைப் போல் மெளனமாகத் தலையை அசைத்தார்கள்.

அக்பரின் கோபமும் ஒருவாறு தணிந்தது. 'எந்த வீட்டிலும் குழந்தைகளின் தொந்தரவு பொறுக்க முடியவில்லைதான். முடிவில் குழந்தைகளின் பிடிவாதமே வெற்றி பெறுகின்றது; தாய்க்குத்தான் பொறுமை அதிகம்; தந்தைக்குக் குறைவுதான். கரும்புச் சக்கையை மீண்டும் கரும்பாக்க பீர்பால் என்ன, தெய்வமா?' என்றார் அக்பர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum