புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_c10'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_m10'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_c10'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_m10'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_c10'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_m10'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_c10'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_m10'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_c10'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_m10'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி. Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பிரபாகரன் மரணச் செய்தியைக் கேட்டதும் வைகோ குலுங்கி அழுதார்': கே.பி.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 24, 2010 10:47 am

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மரணச் செய்தி கேட்டதும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குலுங்கி அழுதார் என்று கூறியுள்ளார் கேபி என்கிற குமரன் பத்மநாதன்.

இதுதொடர்பாக டெய்லி மிர்ரர் இதழுக்கு கேபி கொடுத்துள்ள பேட்டி...

தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது உண்மை. ஆனால் தலைவர் இருப்பதாக பிரசாரம் செய்து வருவோர் புலிகள் இயக்கத்துப் பணத்தை மனதில் கொண்டுதான் அவ்வாறு பேசி வருகின்றனர்.

தலைவர் இருந்தபோது வசூலிக்கப்பட்ட பணமும், தலைவர் இறந்த பின்னர், இருக்கிறார் என்று கூறி வசூலிக்கப்பட்ட பணமும் பெருமளவில் குவிந்திருக்கிறது. இந்தப் பணம் எல்லாம் நெடியவனிடம்தான் உள்ளது.

தலைவர் இறந்து விட்டது வைகோவுக்கு நன்றாகத் தெரியும். நான் அவரது மரணச் செய்தியை வைகோவுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தபோது வைகோ குலுங்கி அழுதார். ஆனால் மேடைகளில் தலைவர் இருக்கிறார் என்று பொய்யாகப் பேசி வருகிறார்.

உண்மையில் ஈழப் போரை முடிவுக்குக் கொண்டு வர நான் மேற்கொண்ட முயற்சிகளைத் தடுத்தவர் வைகோ. இதற்குக் காரணம், திமுகவுக்கு நல்ல பெயர் போய் விடக் கூடாதே என்பதற்காக இவ்வாறு செய்தார் வைகோ.

ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் பல்வேறு இந்தியத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டார்.

முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஆகியோருடன் அவர் தொடர்பு கொண்டார். அவர்கள் மூலம் மத்திய அரசை சமாதானப்படுத்தி, இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி போரை நிறுத்த முயற்சித்து வந்தார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதன் மூலம், பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும் மற்றவர்களையும் உயிருடன் காக்க நினைத்து முயற்சித்தார் நடேசன்.

இந்த முயற்சிக்கு டெல்லியும் இணங்கி வந்தது. காரணம், அப்போது நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு பெரும் அடி விழுந்து விடுமோ என்று அவர்கள் பயந்தனர். ஜெயலலிதா வேறு புலிகளுக்கு ஆதரவான நிலையை எடுத்ததால் அவர்களது பயம் அதிகரித்தது.

இதையடுத்து மத்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைத்து வந்தார். போரை நிறுத்துவதாகவும், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைவதாகவும், ஈழத்திற்கு மாற்றான அரசியல் தீர்வுக்கு சம்மதிப்பதாகவும் அறிவிக்குமாறு புலிகள் இயக்கத்திற்கு ப.சிதம்பரம் யோசனை தெரிவித்தார்.

மேலும் புலிகள் இயக்கத்திற்காக தானே ஒரு அறிக்கையையும் அவர் தயார் செய்தார். இப்படி அறிவிப்பு வெளியான பின்னர் இலங்கையை நிர்ப்பந்தித்து போரை நிறுத்த இந்தியா தீவிர முயற்சிகள் எடுக்கும் என்பது பேச்சுவார்த்தையின் முடிவாகும்.

இந்தத் திட்டத்தை நெடுமாறனிடமோ அல்லது வைகோவிடமோ தெரிவிக்கக் கூடாது என்றும் நடேசன் அறிவுறுத்தப்பட்டார். ஆனால் நடேசனோ, இந்தத் திட்டம் குறித்து சிபிஎம் எம்.எல்.ஏ கே.மகேந்திரனுடன் ஆலோசித்துள்ளார். இதையடுத்து மகேந்திரன் இந்த தகவலை வைகோவிடம் கொண்டு சென்று விட்டார்.

இதைக் கேட்ட வைகோ அதிர்ச்சி அடைந்தார். எங்கே போர் நிறுத்தம் நடந்து விட்டால், அந்தப் பெருமை திமுக, காங்கிரஸுக்குப் போய் விடுமோ என அவர் அஞ்சினார். இதையடுத்து ஈழத்திற்கு மாற்றான தீர்வுக்கு புலிகள் சம்மதித்தால், தமிழகத்தில் எங்களுடைய ஆதரவை நீங்கள் இழக்க நேரிடும் என்று நடேசனை எச்சரித்தார்.

இதைக் கேட்டதும், எங்கே அதிமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று, மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமையுமோ என்று நம்பிய நடேசன் தனது திட்டத்தைக் கைவிட்டு விட்டார்.

காரியத்தைக் கெடுத்த நெடியவன்-காஸ்ட்ரோ

இதேபோல, நெடியவனும், காஸ்ட்ரோவும், பிரபாகரனைக் காக்க நான் எடுத்த துணிகரமான நடவடிக்கைகளை கெடுத்து விட்டனர்.

ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தி பிரபாகரனை நான் காப்பாற்ற திட்டமிட்டேன். இதற்காக எனக்கு 10.5 மில்லியன் டாலர் பணம் தேவைபப்ட்டது. இதை தருவதாக காஸ்ட்ரோ தெரிவித்திருந்தார். இந்தப் பணத்தை நார்வேயிலிருந்து நெடியவன் அனுப்பி வைப்பார் எனவும் கூறியிருந்தார்.

ஆனால் நெடியவன் பணத்தை அனுப்பவில்லை. எனது திட்டத்தைக் கேட்டு பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தார். தந்தை, தாயார் மற்றும் சகோதரன், சகோதரி ஆகியோரை எப்படியாவது வெளியில் அனுப்பி வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார். ஆனால் நெடியவனால் அந்தத் திட்டம் நிறைவேற முடியாமல் போய் விட்டது.

எனது திட்டம் என்னவென்றால், ஒரு ஹெலிகாப்டரை எடுத்துக் கொண்டு, அதை வான் புலிகள் அமைப்பின் தலைவரான அச்சுதன் வன்னிப் பகுதிக்கு செல்வது, ஹெலிகாப்டர் மூலம் பிரபாகரன் உள்ளிட்டோரை மீட்டு கடலில் தயாராக நிறுத்தி வைக்கப்படும் கப்பலுக்குக் கொண்டு சென்று காப்பாற்றுவது என்பது.

ஆனால் நெடியவன் பணத்தைத் தராததோடு மட்டுமல்லாமல், அச்சுதனையும் தடுத்து விட்டார். இதனால் அச்சுதன் என்னுடன் வைத்திருந்த தொடர்புகளை அப்படியே துண்டித்துக் கொண்டார்.

தலைவரைக் காப்பாற்றி அந்தப் பெருமை எனக்கு வருவதை நெடியவனும், காஸ்ட்ரோவும் விரும்பாததே இதற்குக் காரணம்.

இப்படி அனைத்தும் தாமதாமாகியதால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியை ராணுவம் முற்றுகையிட்டு விட்டது. இதனால் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலை. இதனால் பெரும் துயரத்துடன் எனது மீட்புத் திட்டங்களை கைவிடும் முடிவை எடுத்தேன்.

பொட்டு உடலை எரித்து விட்டார் பிரபாகரன்!:

போரின்போது யாருமே மிஞ்சவில்லை. பொட்டு அம்மனும் கூட கொல்லப்பட்டு விட்டார். நந்திக்கடல் பகுதி வழியாக வன்னி காட்டுக்குள் தப்ப முயன்றபோது பொட்டு அம்மன் கொல்லப்பட்டார்.

பிரபாகரன், பொட்டு அம்மன் உள்பட 60 பேர் இலங்கை பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு தப்ப முயன்றனர். பிரபாகரன் கிட்டத்தட்ட தப்பி விட்டார். ஆனால் பொட்டு அம்மனால் வர முடியவில்லை. கொல்லப்பட்டு விட்டார். இதையடுத்து ராணுவத்தின் கைக்கு பொட்டுவின் உடல் போய் விடக் கூடாது என்பதற்காக பிரபாகரனே, பொட்டு அம்மான் உடலை தீயிட்டு எரித்திருக்க வாய்ப்புகள் உள்ளன.

குடும்பத்தில் யாரும் தப்பவில்லை:

போரின்போது தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே கொல்லப்பட்டு விட்டனர்.

பிரபாகரனின் மனைவி மதிவதணி, பிரபாகரன் வன்னிக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதற்கு முன்பே கொல்லப்பட்டு விட்டார். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், எப்போதும் தாயாருடனேயே ஒட்டிக் கொண்டிருப்பார். எனவே அவரும் தாயாருடன் சேர்ந்து கொல்லப்பட்டிருப்பார்.

போராளிகளுன் இணைந்து போராடி வந்தவர்கள் மகள் துவாரகாவும், மூத்த மகன் சார்லஸ் அந்தோணியும். எனவே அவர்களும் கொல்லப்பட்டு விட்டனர். துவாரகா மே 14ம் தேதி கொல்லப்பட்டார்.

பிரபாகரன் உடலைப் பெற முன்வராத சகோதரர்கள்:

பிரபாகரன் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும், நான் இயக்கத்தை உயிர்ப்புடன் வைக்க தீவிர முயற்சிகள் எடுத்தேன். இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றேன். பின்னர் தலைவரின் உடலுக்கு முறைப்படி உரிமை கோருமாறு அவரது குடும்பத்தினரை கேட்டுக் கொண்டேன்.

பிரபாகரனின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோரைத் தொடர்பு கொண்டு உடலைப் பெற உரிமை கோருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர்.

குறிப்பாக, பிரபாகரன் சகோதரியின் கணவர் தனது மனைவியிடமிருந்து போனை வாங்கி என்னிடம் கோபமாகப் பேசினார். இனிமேல் போன் செய்ய வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி வைத்து விட்டார்.

இதனால் தலைவரின் உடலை யாரும் உரிமை கோர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதையடுத்து ராணுவமே உடலை எரித்து சாம்பலை கடலில் வீசி விட்டது என்று கூறியுள்ளார் கேபி.

நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக