ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

Top posting users this week
ayyasamy ram
சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  Poll_c10சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  Poll_m10சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  Poll_c10 
heezulia
சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  Poll_c10சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  Poll_m10சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன்னலில் ஒரு சிறுமி - இறையன்பு

4 posters

Go down

சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  Empty சன்னலில் ஒரு சிறுமி - இறையன்பு

Post by தமிழ் Fri Aug 20, 2010 1:51 pm

டோட்டோ சான்: ஜன்னலில் ஒரு சிறுமி’ என்கின்ற நூலை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. அது டோமோயி என்கின்ற பள்ளியைப் பற்றிய நிகழ்வுகளைப் பதிவு செய்த நூல். வழக்கமான ஒரு பள்ளியில் தூக்கியடிக்கப்பட்ட டோட்டோ சான் என்கின்ற சிறுமி அந்தப் பள்ளியில் எப்படி மிகச் சிறந்த பெண்ணாக வளர்ந்தாள் என்பது தான் அந்நூலின் மூலக் கருத்து.

குழந்தைகளைப் பாடத்திட்டத்திற்குள் முக்கி எடுக்காத பள்ளி அது. அந்த பள்ளி குழந்தைகளுக்கு மிருகக் காட்சி சாலையாக இல்லாமல் சரணாலயமாக இருந்தது. கூண்டாக இல்லாமல் கூடாக இருந்தது. அந்தப் பள்ளியில் பள்ளி நேரம் முடிந்தபின் கூட குழந்தைகள் வீட்டிற்குப் போக விரும்பியதில்லை. பள்ளி முடிவதற்குக் காத்திருக்கும் மாணவர்கள் மத்தியில் அந்தப் பள்ளி தொடங்குகின்ற நேரத்திற்காக அவர்கள் எதிர்பார்ப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டு காத்திருந்தார்கள்.

அங்கே சக மாணவர்கள் முதல் இடத்திற்கு முந்துகின்ற பந்தயக் குதிரைகள் அல்ல. அவர்கள் ஒரே இலக்கு நோக்கிப் பயணம் செல்லும் ஒரே தேரின் சக குதிரைகள். அங்கு கனத்த மழையிலும் இயற்கை கை குவித்துப் பாதுகாக்கும் தளிர்களைப் போல பள்ளி சுயமரியாதையையும், குழந்தைகளின் தனித்தன்மையையும் வளர்க்க ஆதரவுக் கரங்களாய் ஆனது.

காலை நேரம் கற்பதற்கு - மாலை நேரம் உலவவும், உரையாற்றவும், பாடவும், படம் வரையவும் பயன்பட்டது. பயிர்களைப் பாதுகாக்கவும், மிருகங்களை சிநேகிக்கவும் அங்கு சொல்லித் தரப்பட்டது.

இரண்டாம் உலகப் போரில் டோமாயி மீதும் குண்டு வீசப்பட்டன. பள்ளி அறைகளாகப் பயன்பட்ட ரயில்பெட்டி வகுப்புகளின் மீது விமானங்கள் ஏராளமான குண்டுகளை வீசின. குழந்தைகளின் சிரிப்பு, குழந்தைகளின் பாடல் சத்தம் ஆகியவை அந்த ராட்சதக் குண்டுகள் வெடிக்கும் ஓசையில் கரைந்து போயின.

வீழ்ந்தது ஒரு பள்ளி மட்டுமல்ல - ஒரு பாடமும் கூட.

எரிந்தது கட்டடங்கள் மட்டுமல்ல - ஒரு கனவும் கூட.

இடிந்தது ஒரு இடம் மட்டுமல்ல - ஓர் இலக்கும் கூட.

அது எரியும் போது கூட அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் கோபயாஷி தன் கால்சட்டைக்குள் கைகளை நுழைத்தவண்ணம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

அவலம் அதிகமாகும் போது அழுகை வியர்த்தமாகும். புழுக்கம் புகும் போது புலம்பல் வீணாகப் படும்.

‘நீங்கள் உங்கள் சக்தியைக் காட்ட பிஞ்சுகள் கனிகளாகும் இந்தப் பூந்தோட்டம் தானா உங்களுக்கு கிடைத்தது’ என அவர் நினைத்திருக்கக் கூடும். இந்தக் குழந்தைகளின் முகத்தில் நீங்கள் ஏன் முத்திரைகளைக் குத்துகிறீர்கள்? அந்தப் பள்ளியில் ஆங்கில மாணவர்களும் இருந்தார்கள். அந்நியர்களாக இல்லாமல் தோழர்களாக.

உங்கள் வெடிமருந்தின் கனத்தில் சில பென்சில் டப்பாக்கள் நசுக்கப்பட வேண்டுமா? உங்கள் ஏவுகணைகளின் எடை தாங்காமல் சில பிஞ்சுகளின் விரல்களின் நடுவில் இருக்கும் பேனா முனைகள் முறிந்து போக வேண்டுமா?

வெளியீட்டில் இந்தப் புத்தகம் 45 இலட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாம். புத்தகங்கள் விற்கலாம் - எத்தனை லட்சம் வேண்டுமானால்.

ஆனால் நம்மிடமிருந்து ஒரு கோபயாஷியும், ஒரு டோமோயியும் எப்போது உருவாகப் போகிறார்கள்? இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

நன்றி
கீற்று


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  Empty Re: சன்னலில் ஒரு சிறுமி - இறையன்பு

Post by பிளேடு பக்கிரி Fri Aug 20, 2010 2:56 pm

மகிழ்ச்சி நன்றி



சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  Empty Re: சன்னலில் ஒரு சிறுமி - இறையன்பு

Post by நவீன் Fri Aug 20, 2010 3:05 pm

சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  677196 சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  677196 சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  677196 சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  677196 சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  677196 சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  677196 சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  677196 சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  677196 சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  Empty Re: சன்னலில் ஒரு சிறுமி - இறையன்பு

Post by ரபீக் Fri Aug 20, 2010 3:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சன்னலில் ஒரு சிறுமி  - இறையன்பு  Empty Re: சன்னலில் ஒரு சிறுமி - இறையன்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum