புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
1 Post - 1%
Shivanya
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
12 Posts - 2%
prajai
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
9 Posts - 2%
jairam
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
4 Posts - 1%
Jenila
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
4 Posts - 1%
Rutu
சண்முகம் MBA Poll_c10சண்முகம் MBA Poll_m10சண்முகம் MBA Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சண்முகம் MBA


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 24, 2010 12:07 pm

சண்முகம் MBA

ஆசிரியர் அறையில் ஏதோ வேளையாக இருந்த போது வணங்கியவாறே வந்தான் அந்தப் பையன். நிமிர்ந்து பார்த்தேன். வெளிர் நீலத்தில் ஜீன்ஸ், வெள்ளை சட்டை, டை, ஷூ, வதைக்காத வாசனை திரவியம் என்று அமர்க்கலமாக இருந்த அவனுக்கு இருபத்தி ஐந்திற்குன் ஒன்றிரண்டு குறைச்சலாக இருக்கலாம். நன்கு பரிச்சயமான முகமாகத்தான் இருந்தது.ஆனாலும் சட்டென யாரென்று ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. என் தடுமாற்றத்தை ரசித்தவாறே புன்னகைத்துக் கொண்டிருந்தான்.

எவ்வளவோ வற்புறுத்தியும் அமர மறுத்தான். வற்புறுத்தியும் அமராமல் நிற்கும் அவனது மரியாதை (அமர மறுத்து நிற்பதில் மரியாதை எதுவும் இல்லை என்பதுதான் எனது நிலை) "என்ன வேணும்?" அல்லது " யாரைப் பார்க்கணும்?" என்று முகத்திலடித்துவிடக் கூடாது என்று என்னை பக்குவப் படுத்தியது.

எனவே "என்னப்பா செய்ற? " என்ற வழக்கமான கேள்வியைப் போட்டேன். தான் MBA முடித்து விட்டு ஏதோ ஒரு தனியர் நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும் மாதம் 26000 ரூபாய் சம்பளம் பெருவதாகவும் கூறினான். " எல்லத்தையும் எறச்சிடாம கொஞ்சம் சேத்து வை. இல்லாட்டி என்ன மாதிரி சிரமப் பட வேண்டி இருக்கும்" முடிப்பதற்குள் ரெண்டு ரூபா சீட்டு ஒன்னு போட்டுடுட்டு வரேன் சார்" என்று சொல்லிக் கொண்டே வந்தவன்"என்னத் தெரியுதுங்களா சார்" என்றவாறே புன்னகைத்தான்.

நிணைவுக் குகைக்குள் மீண்டும் நுழைந்து எவ்வளவோ சிரமப்பட்டு முயன்றும் பயனில்லை. எனவே " வயசாகுதேப்பா, அதுதான் கொஞ்சம் தடுமாறுது. ரொம்ப நல்லா பரிச்சயமான முகமாத்தான் தெரியுது. ஆனா சட்டுன்னு யாருன்னு புடிபட மாடேங்குதுப்பா" என்று சொன்னால் "உங்களால என்ன மறக்கவே முடியாதுங்க சார்" என்று புன்னகைக்கிறான். நமது பலவீனம் கண்டு புன்னகைக்கிறானா, அல்லது புன்னகைக்காமல் அவனால் இருக்கவே இயலாதா தெரியவில்லை. இவனால் சிரிக்காமல் அழக்கூட முடியாது என்றே தோன்றியது.

அப்போது "வாடா சண்முகம், என்ன திடீர்னு பள்ளிக்கூடதத்துப் பக்கம். எட்வின் சாரப் பாக்கனுமா?" என்றவாறே நுழைந்தார் தட்டச்சு ஆசிரியர் தெய்வீகன்.அவன் என்னருகில் நின்று கொண்டிருந்ததால் என்னைப் பார்க்கத்தான் வந்திருக்கிறான் என்று அவர் நிணைத்திருக்கக் கூடும்.

"என்ன யாருன்னே சாருக்கு தெரியலீங்க சார்"

"என்னதிது எட்வின்,நம்ம சண்முகத்த தெரியல?"

ஆமாம் எஸ்.டி, ரொம்பப் பரிச்சயமான முகம், அதைவிட ரொம்பப் பரிச்சயமான புன்னகை. ஆனாலும் யாருன்னு புடிபட மாட்டேங்குது. எந்த செட் இவன்?"

"அடப் போங்க நீங்க எட்வின். ஒரு வருஷம் உங்க பாடத்துக்கு ப்ராக்டிகல்ஸ் இருந்துதே ஞாபகம் இருக்கா? அப்ப ஒரு பையன காணாம வண்டி எடுத்து வண்டி எடுத்துட்டு போய் தெருத் தெருவா சுத்தினோமே. அதுவாவது ஞாபகம் இருக்கா?. .."

" அடப் பாவி, சண்முக சுந்தரமாடா நீ...?. " இப்போது முற்றாய் முழுதாய் எல்லாம் நிணைவுக்கு வந்து விட்டன. பழைய நிணைவுகளை அசை போட அசை போட அவனது புன்னகை என்னைத் தொற்றிக் கொண்டது.

பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப் பாடங்களுக்கு செய்முறைத் தேர்விற்கென்று இருபது மதிப்பெண்கள் உண்டு. வழக்கமாக நாங்களே தேர்வு மாதிரி ஏதாவது வைத்து உள் மதிப்பீடு முறையில் மதிப்பெண்களைப் போட்டு விடுவோம். ஒரே ஒரு ஆண்டு மட்டும் புறத் தேர்வர்களைக் கொண்டு நடத்தப் பட்டன.

அந்த ஆண்டு எங்கள் பள்ளிக்கு வேறு பள்ளியிலிருந்து புறத் தேர்வராக ஒரு ஆசிரியை வந்திருந்தார். மொத்தம் உள்ள நூற்றி எட்டு மாணவர்களை இருபத்திஏழு மாணவர்கள் வீதம் நான்கு குழுக்களாகப் பிரித்திருந்தோம். ஒரே ஒரு மாணவனை மட்டும் காணோம். அவன் தொழிற் கல்வியில் தட்டச்சு பிரிவில் படிக்கும் மாணவன். எங்கள் பள்ளி கிராமத்துப் பள்ளி என்பதாலும் பெரும்பான்மை மாணவர்கள் முதல் தலைமுறையை சேர்ந்தவர்கள் என்பதாலும் ஆங்கிலத்தைக் கற்பதில் அவர்களுக்கு சிரமம் இருந்தது. அதுமட்டுமல்ல பொதுவாகவே பத்தாம் வகுப்பில் குறைச்சலான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைத்தான் தொழிற் பிரிவில் சேர்ப்பது வழக்கம். எனவே அவர்கள் செய்முறைத் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவது கடினம் என்றுகூட சொல்ல இயலாது. தேர்ச்சி பெறவே இயலாது. எனவேதான் முதல் நாளே ஒவ்வொரு பிரிவாக சென்று அனைத்து மாணவர்களும் அடுத்த நாள் அவசியம் வந்துவிட வேண்டும் என்றும் வராத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அடுத்த நாள் அவசியம் வரச் சொல்லிவிடுமாறும் சொல்லியிருந்தேன்.

இதற்குள் முதல் பேச் மாணவர்கள் அறைக்குள் சென்றிருந்தனர். புறத் தேர்வாளராக வந்திருந்த ஆசிரியை மாணவர்களை அமரச் செய்து தேர்வின் நெறிகள் பற்ரி சொல்லிக் கொண்டிருந்தார். பன்னிரண்டு அல்லது பன்னிரண்டரைக்குள் நான்காவது பேச் தொடங்கி விடும்.

" நேத்து அவ்வளவு நேரம் படிச்சு படிச்சு சொன்னேனே. எங்கடா தொலஞ்சான்?"

எல்லோரும் மௌனமாக நின்றார்கள். அதற்குள் விஷயம் கேள்விபட்டு தெய்வீகன் வந்து விட்டர். அவரைக் கண்டதும் தட்டச்சு மாணவர்கள் அவரைச் சுற்றி தனியாக ஒதுங்கினர்.

"உண்மைய சொல்லுங்க. இப்ப எங்கடா இருப்பான்?" கொஞ்சம் அதட்டலாகவே தெறித்தார்.

"ஆதி மாரியம்மன் கொவில்ட்ட சீட்டு விளையாடிட்டு இருப்பான் சார்" என்னிடம் மௌனித்த மாணவர்கள் அவர்கள் ஆசிரியரைப் பார்த்ததும் தயங்கித் தயங்கி மௌனம் கலைத்தனர்.

என்னை நெருங்கினார்." என்ன செய்யலாம் எட்வின்?"

வண்டிய எடுங்க எஸ்.டி முடிப்பதற்குள் வண்டியை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். ஏறி அமர்ந்ததும் விரட்டினார். " அவுங்க அம்மாவ பாத்தீங்கன்னா பாத்த மாத்திரத்துல கண்ணுல தண்ணி வந்துடும் எட்வின். கோவில்ல தட்டேந்தி கண்னடக்கம் வித்து இவன படிக்க வைக்குது இந்தம்மா. இந்த நாயி என்னடான்னா இப்படி பன்னுது பாருங்க எட்வின்" புலம்பிக் கொண்டே வந்தார்.

அது ஒரு பழைய இற்றுப் போன கீற்றுக் கொட்டகை. ரவுண்டு கட்டி சீட்டாடிக் கொண்டிருந்தனர். அழுக்காய் இருந்தான். ஆனால் நல்ல வேளையாக பள்ளிச் சீருடையில் இருந்தான்.

எங்களைக் கண்டதும் எழுந்தான். "வாடாத் தாயோளி வாடா. ஆயி அங்க கஞ்சிக்கு உசிர விக்குது. இங்க சீட்டாட்டம் கேக்குதாடா ஒனக்கு, பொறம்போக்கு" கையை ஓங்கிக் கொண்டு அடிக்கப் போனார். அவரது குரலும் கைகளும் நடுங்குவதைப் பார்த்தேன். இப்ப விழலாமா இன்னுங் கொஞ்ச நேரம் கழித்து விழலாமா? என்பது மாதிரி இரண்டு கண்களிலும் ததும்பி நின்றது கண்ணீர். படிக்கும் மாணவனுக்கான அவரது அக்கறையும் , கண்ணீரும், கோவமும், பதட்டமும் அவர் மீது இருந்த அபிப்ராயத்தையும் மரியாதையையும் கணிசமாக கூட்டியது.

"வாடா இங்க"

வந்தான். ஒரே புகையிலை நெடி. ஒரே அறை. காலரைப் பிடித்து இழுத்து சட்டைப் பையில் கையை நுழைத்தார். "ஹான்ஸ்" பொட்டலம் இருந்தது. "பொழைக்கறப் பொழப்புக்கு இது ஒன்னுதான் கொறச்ச மசுறு." மீண்டும் இரண்டு மூன்று விழுந்தது அவனுக்கு. கையைக் கட்டிக் கொண்டு புள்ளப் பூச்சி மாதிரி நின்றான்.

எனக்கும் அவருக்குமிடையில் அவனைத் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பினோம். வழியெல்லாம் வசவிக் கொண்டே வந்தார். இறங்கியதும் கூட்டம் கூடிவிட்டது. ஆசிரியர்களில் பலர் எங்களை கோவித்துக் கொண்டார்கள். இப்படியெலாம் இறங்கி செய்வதனால்தான் பசங்களுக்கு துளிர் விட்டுப் போகிறது என்பது அவர்கள் வாதம். ஒருத்தன் ஒழிந்தால்தான் பசங்களுக்கு புத்தி வந்து ஒழுங்கா இருப்பங்க என்பது சிலரது கருத்து.

இதில் எதிலும் கவனம் செலுத்தாது அவனை முகம் கழுவ வைத்து , பேனாவை கையில் கொடுத்து ஒரு வழியாய் அவனை அறைக்குள் தள்ளிவிட்டு வந்தோம்.

அந்தப் பையன்தான் இபோது என்னெதிரே நிற்கிறான். ஒரே ஆச்சரியம். என்னையுமறியாமல் எழுந்து நின்று கை குலுக்கினேன்.

அன்ன்னைக்கு விட்டுட்டு போயிருந்தீங்கன்னா இன்னைக்கும் அதே கொட்டகையில ஒக்காந்து சீட்டு விளையாட்டுதான் சார் இருந்திருபேன். அவனோடு சேர்ந்து என் கண்களிலும் ஈரம். தோளில் கை போட்டு "வாப்பா போய் ஒரு டீ சாப்ட்டுட்டு வரலாம்" , இருவரும் தெய்வீகனைப் பார்க்க அவரும் கிளம்புகிறார்.

ஆக ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நம் வாழ்க்கையிலும் இருக்கு.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 24, 2010 1:12 pm

சண்முகம் MBA 678642 சண்முகம் MBA 678642 சண்முகம் MBA 154550 நன்றி எட்வின் ..............

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 24, 2010 1:20 pm

ராஜா wrote:சண்முகம் MBA 678642 சண்முகம் MBA 678642 சண்முகம் MBA 154550 நன்றி எட்வின் ..............

வணக்கம் ராஜா,

நானல்ல்வா நன்றி சொல்ல வேண்டும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jul 24, 2010 1:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் சண்முகம் MBA 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jul 24, 2010 2:00 pm

உங்க கட்டுரை நல்லா இருக்கு எட்வின்.

ஆனா உங்க கிட்ட படிச்ச பையன பார்த்து யாருன்னு தெரியாம தடுமாறும் அளவுக்கு உங்களுக்கு வயசாயிட்டா?
சிரி சிரி சிரி



சண்முகம் MBA Uசண்முகம் MBA Dசண்முகம் MBA Aசண்முகம் MBA Yசண்முகம் MBA Aசண்முகம் MBA Sசண்முகம் MBA Uசண்முகம் MBA Dசண்முகம் MBA Hசண்முகம் MBA A
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 24, 2010 3:43 pm

balakarthik wrote: சண்முகம் MBA 677196 சண்முகம் MBA 677196 சண்முகம் MBA 677196 சண்முகம் MBA 677196 சண்முகம் MBA 677196 சண்முகம் MBA 677196 சண்முகம் MBA 677196 சண்முகம் MBA 677196 சண்முகம் MBA 677196 சண்முகம் MBA 677196 சண்முகம் MBA 677196 சண்முகம் MBA 677196 சண்முகம் MBA 677196

நன்றி தோழர்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Jul 24, 2010 3:46 pm

உதயசுதா wrote:உங்க கட்டுரை நல்லா இருக்கு எட்வின்.

ஆனா உங்க கிட்ட படிச்ச பையன பார்த்து யாருன்னு தெரியாம தடுமாறும் அளவுக்கு உங்களுக்கு வயசாயிட்டா?
சண்முகம் MBA Icon_lol சண்முகம் MBA Icon_lol சண்முகம் MBA Icon_lol

அடையாளம் தெரியாத அளவு அவனது உருவம் மெருகேறி இருந்தது.நான் இன்றும் சின்னப் பையன்தான்

தீபா
தீபா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 25/07/2010

Postதீபா Wed Jul 28, 2010 1:25 am

நானும் ஆசிரியைதான்.

ஒரு நல்ல ஆசிரியைக்கு எவ்வளவு சகிப்புத் தன்மை தேவை என்பதை கற்றுக் கொள்ள முடிந்தது.
முயற்சி செய்வேன். நன்றி.

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 28, 2010 7:31 am

பலர் நினைக்கிறார்கள் ஆசிரியர் கற்பித்தாலும் , மாணவன் படித்தால் தான் அவன் படிப்பான் என்று , ஆனால் மாணவனின் கவனத்தினை படிப்பின் பக்கம் திருப்பும் பனி ஆசிரியரை சார்ந்தது , ஆதாவது கல்வி கற்பிக்கும் முறையில் அவனது கவனத்தினை ஈர்க்க வேண்டும் . மகிழ்ச்சி



thiva
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed Jul 28, 2010 8:22 pm

திவா wrote:பலர் நினைக்கிறார்கள் ஆசிரியர் கற்பித்தாலும் , மாணவன் படித்தால் தான் அவன் படிப்பான் என்று , ஆனால் மாணவனின் கவனத்தினை படிப்பின் பக்கம் திருப்பும் பனி ஆசிரியரை சார்ந்தது , ஆதாவது கல்வி கற்பிக்கும் முறையில் அவனது கவனத்தினை ஈர்க்க வேண்டும் . சண்முகம் MBA 677196

நன்றி திவா.ஆமாம் ரஷ்யாவில் என்ன செய்கிறீர்கள்?

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக