ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி

Go down

அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி Empty அதிகரித்து வரும் நிலமோசடி கும்பல்: நில உரிமையாளர்கள் பீதி

Post by நவீன் Thu Aug 19, 2010 5:34 pm

சாத்தான்குளம் வட்டாரத்தில் நிலமோசடி கும்பல் அதிகரித்துள்ளதால் நில
உடைமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். பல மாவட்டங்களில் உள்ளவர்களும்
சம்பந்தப்பட்டிருப்பதால் புகார் வாங்க போலீசார் தயங்குகின்றனர். எனவே
மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என
பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளம்
தாலுகாவில் அம்பலசேரி, கட்டாரிமங்கலம், பேய்க்குளம், பன்னம்பாறை,
பழங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் தரிசு
நிலங்கள் உள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் பலர் தொழில் சம்பந்தமாக பல
ஊர்களில் குடியேறி நிரந்தமாக வசிக்கின்றனர். சிலர் வெளிநாடுகளிலும்
வசிக்கின்றனர். கோயில் விசேஷங்கள், திருமணம் மற்றும் சில நிகழ்வுகளுக்காக
எப்பொழுதாவது ஊருக்கு வருவர். இந்த பகுதியில் பல உடை மரங்கள் மட்டுமே
உள்ளதால் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை உடைமரங்களை உறவினர்கள்
மூலம் விற்று வருகின்றனர்.

மற்ற நாட்களில் அந்த இடங்களை பலர் போய் பார்ப்பதே இல்லை. இதை
பயன்படுத்திய சிலர் வெளியூரில் இருக்கும் நில உடைமையாளர்களைத் தொடர்பு
கொண்டு நிலத்தை விற்க முயற்சி செய்து வருகின்றனர். டாட்டா நிறுவனத்தினர்
டைட்டானியம் தொழிற்சாலை ஆரம்பிக்க முயற்சி செய்ததும், சாத்தான்குளத்தின்
தென்பகுதியான செம்மண் தேரி நிலங்கள் பல மடங்கு விலை உயர்ந்தது. டாட்டா
நிறுவனம் வந்தால் அவர்கள் குடியிருப்பதற்கும் மற்றும் பட்டா நிலத்தில்
உள்ளவர்களை வேறு இடத்தில் குடியமர்த்துவதற்காகவும் நிலம் தேவைப்படும் என்ற
எண்ணத்தில் அதன் அருகில் உள்ள இடங்களின் நில விலை அதிகரித்தது. டாட்டா
நிறுவனம் தொடங்கப்படுவது கிடப்பில் போடப்பட்ட நிலையில் சாஸ்தாவிநல்லூர்,
பள்ளக்குறிச்சி பஞ்., பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்க இடம்
வாங்கியவுடன் சாத்தான்குளத்தில் மற்ற தரிசு நிலங்களின் விலையும்
உயர்ந்தது. இதனால் பல நில உடைமையாளர்கள் தங்களது நிலத்திற்கு கூடுதல் விலை
கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் நிலங்களை விற்க தயங்கினர். இவர்களில் பலர்
தங்களது இடங்களை வருடத்திற்கு ஒருமுறை கூட வந்து பார்ப்பது என்பது அரிதான
செயலாகும். இதைப் பயன்படுத்தி போலியாக ரிக்கார்டு தயாரித்து பட்டா மற்றும்
பவர் ஆவணங்கள் தயார் செய்து மோசடியாக நிலங்களை விற்று வருகின்றனர். இது
சம்பந்தமாக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் சிறிதுகாலம்
ஓய்ந்திருந்த இந்த கும்பல் மீண்டும் தங்களது மோசடி வேலைகளில்
இறங்கியுள்ளது. தற்போது ஒருவருடைய நிலத்தை விற்பனை செய்யவும், அடமானம்
வைக்கவும் பவர் ஏஜெண்ட் நியமனம் செய்ய வேண்டுமென்றால் சொத்து எந்த
பத்திரப்பதிவு அலுவலக ஏரியாவில் வருகிறதோ அந்த அலுவலகத்தில்தான் பவர்
எழுதிக் கொடுக்க முடியும். பவர் எழுதி வாங்குபவர், எழுதிக் கொடுப்பவர்
மற்றும் சாட்சிகள் அனைவரும் புகைப்படம் மற்றும் அடையாள அட்டையுடன் வந்தால்
மட்டுமே பதிவு செய்ய இயலும் என சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம்
அமலாவதற்கு முன் பவர் எழுதிக் கொடுப்பவர் மற்றும் சாட்சிகள் போட்டோ
தேவையில்லை. எந்த பத்திரப்பதிவு அலுவலகத்திலும் 100 ரூபாய் பத்திரத்தில்
பவர் எழுதிக் கொடுத்துவிடலாம் என்பது தான் பழைய நடைமுறை. இதை பயன்படுத்தி
புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதைத் தெரிந்து கொண்டு சிலர் அதற்கு முன்பே
போலியாக பவர் பத்திரம் வேறு மாவட்டங்களில் பதிவு செய்துள்ளனர். தற்போது
அந்த சொத்தை கிரையமாகவோ, அடமானமாகவோ வைத்து விடுகின்றனர். உண்மையான நில
உடைமையாளர்கள் வில்லங்க சான்றிதழ் பார்க்கும் பொழுது தங்களது நிலம்
போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதை அறிந்து
அதிர்ச்சியடைந்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்போனால் போலீசார் புகார்
வாங்க தயங்குகின்றனர். அவர்களிடம் கேட்டால் பவர் பத்திரம் எங்கள்
எல்கைக்குள் பதிவு செய்யப்படவில்லை என கூறுகின்றனர். இதனால்
பாதிக்கப்பட்டவர்கள் கட்டப் பஞ்சாயத்தை அணுகுகின்றனர். இதுவும் போலீசாரின்
கவனத்திற்கு வருகிறது. இது சம்பந்தமாக போலீசாரிடம் கேட்டால் வேலைப்பளு
அதிகமாக உள்ளது. அந்த அளவிற்கு போலீசார் எண்ணிக்கை இல்லை. மிகக் குறைவான
போலீசாரை வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் இரவு ரோந்து
செல்ல வேண்டியுள்ளது. சொந்த குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூட
விடுப்பு கிடைப்பதில்லை. இந்த லட்சணத்தில் இரண்டு, மூன்று மாவட்டங்களில்
உள்ள குற்றவாளிகளை பிடிக்க என்று போலீசார்களை எங்கிருந்து அனுப்ப முடியும்
என கேள்வி எழுப்புகின்றனர். குறைந்த பட்சம் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும்
10 முதல் 15 போலீசார்களை கூடுதலாக பணியமர்த்தினால் சிறப்பாக குற்ற
நடவடிக்கைகளை தடுக்கவும், விரைந்து குற்றவாளிகளை பிடிக்கவும் முடியும் என
தங்கள் மனக்குமுறல்களை கொட்டி தீர்க்கின்றனர். எனவே இது போன்ற சொத்து
மோசடி வழக்குகளை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரே தங்களது பொறுப்பில்
எடுத்து விசாரித்தால் விரைந்து நீதி கிடைக்கும். மேலும் சொத்தையும் இழந்து
புகார் கொடுக்க செல்லும் போது ஏச்சும் பேச்சும் வாங்கி கடைசியில்
கட்டப்பஞ்சாயத்தை அணுக வேண்டிய அவல நிலை ஏற்படாது என பாதிக்கப்பட்டவர்கள்
பரிதாப குரல் எழுப்புகின்றனர். நிலமோசடியை தடுக்க குற்றவாளிகளுக்கு
கடுமையாக தண்டனை வழங்க சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும்
எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிகரித்து வரும் "பிஞ்சு' பிச்சைக்காரர்கள்
» காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை
» நீர்கொழும்பில் அதிகரித்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் தொல்லை
» அதிகரித்து வரும் மின்வெட்டு - தொலைக்காட்சி பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது!
» அண்ணா நகரில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு: சென்னையில் மண்டலவாரியாக விவரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum