ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டுத்தொகை

5 posters

Go down

எட்டுத்தொகை  Empty எட்டுத்தொகை

Post by தமிழ் Thu Aug 19, 2010 3:40 pm

தமிழ் நாகரிக வளர்ச்சியாலும், தமிழரின் பேணாப் பேதமையாலும் எண்ணற்ற தமிழ் நூல்கள் அழிந்து போயின. இந்நிலையில் சிதறிக்கிடந்த சங்கத் தமிழ் பாக்கள் எல்லாம் எட்டுத்தொகைகலாக தொகுக்கப்பட்டன.

நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த
பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏற்றும் கலியோடு அகம் புறம்
என்றித்திறத்த எட்டுத்தொகை


எட்டுத்தொகை
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
பதிற்றுப்பத்து
பரிபாடல்

1. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு - இவை ஐந்தும் அகப்பொருள் பற்றியது.
2. புறநானூறு , பதிற்றுப்பத்து - இவ்விரண்டும் புறம் பற்றியது
3. பரிபாடல் - இதில் எட்டு பாடல்கள் அகம பற்றியது. மீதமுள்ள பாடல்கள் புறம் பற்றியது

நற்றிணை

இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். இதில் உள்ள நானூறு பாடல்களில் 234 ஆம் பாடலும், 385 ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கவில்லை.

குறுந்தொகை

குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல்களைப் பாடியவர்கள் யாரெனத் தெரியவில்லை.


ஐங்குறுநூறு
ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன.

மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்

பதிற்றுப்பத்து

இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பே பதிற்றுப் பத்தாகும். இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன.
இந்த 80 பாடல்களும் எட்டு சேர மன்னர்களின் வரலாற்றைக் குறிக்கின்றன.

கலித்தொகை
பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன.

பரிபாடல்
கடைச் சங்கத்துப் புலவர்கள் அருளியச் செய்த பரிபாடல்கள் எழுபது எனத் தெரிந்தாலும் நமக்கும் கிடைத்துள்ளவை 22 முழுப்பாடல்களும், பழைய உரைகளிலிருந்தும் புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் இரண்டு பாடல்களும், சில பாடல்களின் உறுப்புகளும் ஆகும். இதில்,
திருமாலுக்குரியவை ஆறு (1, 2, 3, 4, 13, 15)
முருகனுக்குரியவை எட்டு(5, 8, 9, 14, 17, 18, 19, 21)
வையைக்குரியவை எட்டு (6, 7, 10, 11, 12, 16, 20, 22)

புறநானூறு

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட பபுறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும்.இதில் உள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால், பல்வேறு காலங்களில் பாடப்பட்டது.

அகநானூறு

இது அகத்திணை சார்ந்த நூல் என்பதுடன் நானூறு பாடல்கள் உள்ளதால் அகநானூறு என வழங்கப்படுகிறது. புறநானூறு போலவே அகநானூறும் பல்வேறு புலவர்களால், பல்வேறு காலங்களில் பாடப்பட்டது.இதில் உள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாகப் 13 அடிகளையும், கூடிய அளவு 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன.

இதில் முக்கியமானவை
ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 6 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.


வாழ்க்கையின் இரு வகைகள்

பண்டையத் தமிழர்கள் வாழ்க்கையை அகம், புறம் என்று இரு வகைகளாக பிரித்திருன்தனர்.

அகம்
உள்ளம ஒத்த தலைவனும் தலைவியும் ஊழால் ஒன்று கூடி தாம் பெற்ற இன்பம் இத்தகையது என்று பிறருக்குச் சொல்ல முடியாததாய் உள்ளத்தினுள் அனுபவிக்கும் உணர்ச்சி 'அகம்' எனப்படும்

புறம்
'இத்தகையது' என்று பிறருக்கு உணர்த்தப்படும் உணர்ச்சிகள், ஒழுக்கங்கள் 'புறம்' எனப்படும்.

அகஒழுக்கத்தின் திணைகள்

ஒழுக்கம் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந்திணை என ஏழு வகைப்படும்.
அகப்பொருள் பற்றிய ஐந்து நூல்களும் சிதைவில்லாமல் முழுமையாக கிடைத்துள்ளன.

.குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல், பாலை = அன்பின் ஐந்தினைகள்
பெருந்திணை = பொருந்தா காதல்
கைக்கிளை = ஒருதலைக் காதல்

புறஒழுக்கத்தின் திணைகள்

வெட்சி, வாகை, வஞ்சி, உழிஞை, தும்பை, காஞ்சி, பாடாண்

புறப்பொருள் பற்றிய நூல்களில் சில பாடல்கள் சிதைந்தும், அழிந்தும், பாடபேதங்கள் மிகுந்தும் காணப்படுகின்றன .

வெட்சித்தினை
ஒரு மன்னன், வேறொரு நாட்டின் மேல் படையெடுக்கும் முன் அந்நாட்டின் பசுக்களைக் கவர்வது வழக்கம். இதன் மூலம் அவர்கள் அந்நாட்டின் மேல் போர்த் தொடுக்கப் போகிறார்கள் என்று பொருள். வீரர்கள் வெட்சிப் பூமாலையை அணிந்து சென்றுப் பசுக்களைக் கவர்ந்து வருவர்.

கரந்தைத் திணை

தன் நாட்டு பசுக்களை வேற்றுநாட்டு மன்னன் கவர்ந்து விட்டால், அவர்கள் அப்படியே விட்டுவிடுவதில்லை. கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்கச் செல்லும் நாட்டு வீரர்கள் கரந்தை பூமாலையை அணிந்து செல்வர்.

வஞ்சித் திணை
ஒரு நாட்டைக் கைப்பற்ற வேண்டி, அந்நாட்டின் மேல் போருக்குச் செல்லும் வீரர்கள் வஞ்சிப் பூவைச் சூடிச் செல்வர்.

காஞ்சித் திணை

தன் நாட்டைக் கைப்பற்ற வந்த பகைவர்களுடன் போரிடுவான். தன் நாட்டின் மீது போர்புரிவதற்காக வந்த பகைவேந்தனை எதிர்த்து நின்று போர் புரிவது காஞ்சித்திணை ஆகும். இவர்கள் காஞ்சிப் பூமாலை அணிந்து போர்புரிவர்.

நொச்சித் திணை
பகைவர்கள், மதிலை வளைத்துக் கொள்ளும் போது,மன்னன் கோட்டைக்குள்ளேயே இருந்து கொண்டு அவர்களை எதிர்த்து போரிட்டு மதிலைச் சுற்றியுள்ள வீரர்களை விரட்டி, கோட்டையைக் காப்பது நொச்சித் திணை ஆகும். மதில் காக்கும் வீரர்கள் நொச்சி மலர் மாலைச் சூடுவர்.

உழிஞைத் திணை
மதிலை முற்றிலும் வளைத்துவிட்ட அரசன், தன் படைகளுடன் மேலும் முன்னேறிச் சென்று கோட்டையைக் கைப்பற்றுவது உழிஞைத் திணை ஆகும். கோட்டையை முற்றுகையிடும் வீரர்கள் உழிஞை மலர் மாலை அணிந்துகொள்வர்.

தும்பைத்திணை

தன் நாட்டின் மீது படையெடுத்து வந்த பகை அரசனை, போர்க்களத்தில் நேருக்கு நேராக எதிர்த்து நின்று போரிடுவது தும்பைத்திணை ஆகும். போர்க்களத்தில் எதிர்த்து நின்று போர்புரியும் வீரர்கள் தும்பை மலர் மாலையை அணிவர்.

வாகைத்திணை
போர்க்களத்தில், போரிடும் மன்னர்களில் வெற்றி பெறும் பிரிவினர் வாகைப் பூமாலையை அணிந்து மகிழ்வர். போரில் வெற்றிபெறுதல் வாகைத்திணை ஆகும்.

பாடாண்திணை

பாடப்பெருபவருடைய வீரம், கொடை, கல்வி புகழ் ஆகியவற்றை பற்றி கூறுவது பாடாண் திணை ஆகும்


எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட பின்


குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, புறநானூறு ஆகிய ஐந்துக்கும் அவ்வத் தொகை நூல் பாடலின் அமைப்பில் ஒவ்வொரு கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடி இணைத்தார் பாரதம் பாடிய பெருந்தேவனார்.

தொல்காப்பிய உரையில் நச்சினார்க்கினியர் கட்டும் 'எரி எள்ளு அன்ன நிறைத்தன' எனத் தொடங்கும் பாடலை , பதிற்றுப்பத்தி கடவுள் வாழ்த்துப் பாடலாகக் கொள்வர்.


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

எட்டுத்தொகை  Empty Re: எட்டுத்தொகை

Post by சிவா Thu Aug 19, 2010 4:50 pm

இலக்கியப் பதிவுகளில் ஆர்வம் காட்டியதற்கு நன்றி தமிழ்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எட்டுத்தொகை  Empty Re: எட்டுத்தொகை

Post by தமிழ் Thu Aug 19, 2010 4:58 pm

சிவா wrote:இலக்கியப் பதிவுகளில் ஆர்வம் காட்டியதற்கு நன்றி தமிழ்!

நன்றி நன்றி நன்றி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

எட்டுத்தொகை  Empty Re: எட்டுத்தொகை

Post by நவீன் Thu Aug 19, 2010 5:02 pm

[You must be registered and logged in to see this image.]
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

எட்டுத்தொகை  Empty Re: எட்டுத்தொகை

Post by தமிழ் Thu Aug 19, 2010 5:11 pm

நவீன் wrote:[You must be registered and logged in to see this image.]

நன்றி நன்றி நன்றி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

எட்டுத்தொகை  Empty Re: எட்டுத்தொகை

Post by karpahapriyan Sat Oct 02, 2010 10:01 am

தமிழுக்கு இனை வேறில்லை


கற்பகப்ரியன்

[You must be registered and logged in to see this link.]
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

எட்டுத்தொகை  Empty Re: எட்டுத்தொகை

Post by Aathira Sat Oct 02, 2010 10:31 am

தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை, வாழ்வியலை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிற, தமிழுக்கு செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத்தந்த தலையாய இலக்கியமான எட்டுத்தொகை என்ற இலக்கியச் செல்வத்தை ஈகரையில் சேர்த்தமைக்கு எம் மனமார்ந்த நன்றியும் அன்பும்..... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எட்டுத்தொகை  Empty Re: எட்டுத்தொகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum