புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
90 Posts - 77%
heezulia
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
255 Posts - 77%
heezulia
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
42 நபிமொழிகள் Poll_c1042 நபிமொழிகள் Poll_m1042 நபிமொழிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

42 நபிமொழிகள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:05 pm

அல்லாஹ்வின் தூதர் உங்களிடம் கொண்டு வந்திருப்பதை
எடுத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்
59:07)

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அவனே அகிலத்தின்
அதிபதி. ஆகாயம்
, பூமி இவைகளின் நிரந்தர பாதுகாவலன். படைக்கப்பட்டவர்களi பாதுகாப்பவன்.
பராமரிப்பவன். இறக்கச் செய்பவன். இறைவனின் வழிகாட்டுதலை வழங்குவதற்காகவும் இறைச் சட்டத்தை
தாங்கள் வழிகாட்ட வந்த மக்களுக்கு எடுத்துச் சொல்லிடவும்
, தெளிவான
அத்தாட்சிகளைத் தந்திடவும். இறை-தூதர்களை (அலலாஹ்வின் ஆசியும்
, அருளும், சாந்தியும்
சமாதானமும் இறைத்தூதர்கள் அனைவர் மீதும் உண்டாவதாகுக) அனுப்பியவன். அல்லாஹ் அருளிய
கிருபைகளுக்கு அவனையே புகழ்கிறேன். அவன் தனது அருட்கொடைகளை இன்னும் அதிகப்படுத்திட
அவனிடம் இறைஞ்சுகிறேன்.


அல்லாஹ்வைத் தவித வேறு இறைவன் இலi;
என்று நான் சாட்சியம் கூறுகிறேன். அவன் ஒருவனே
, அவனுக்கு
இணையில்லை. அவனே படைத்தவன்
, பரிபாலிப்பவன், பாதுகாப்பவன், போஷிப்பவன், அவன்
அருளாளன்
, மன்னிப்பவன். நமது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் அந்த ஏக இறைவனின் நல்லடியாராவார்கள், அவனது
தூதராவார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அன்புக்கும் அருளுக்கும்
, பாத்திரமானவர்கள்.
படைப்பினங்களிலெ
;லாம் உயர்ந்தவராவார்கள். அவர்கள், வாழும் அற்புதமாகிய திருக்குர்அனால்
பெருமைப்படுத்தப்பட்டவராவார்கள். நமது தலைவர் பெருமானார் (ஸல்) அவர்கள் சுருக்கமாகவும்
, விளக்கமாகவும்
பேசுபவர்களாக இருந்தார்கள். (இறைவனின் ஆசியும்
, அருளும், சாந்தியும், சமாதானமும்
இறைவனின் தூதர் அவர்கள்மீதும்
, இன்னும் ஏனைய இறைத்தூதர்கள்
மீதும்
, இறைவனின் நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக!)

அலி இப்னு அபீதாலிப் (ரலி)
, அப்துல்லா
இப்னு மஸ்ஊது (ரலி)
, முஆது இப்னு ஜபல் (ரலி), அபுதர்தா (ரலி), இப்னு
உமர் (ரலி)
, இப்னு அப்பாஸ் (ரலி),
அனஸ் இப்னு மாலிக் (ரலி), அபூஹ{ரைரா
(ரலி)
, அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) ஆகியோரின் ஆதாரங்களோடு பின்வரும் நபிமொழி நமக்குக் கிட்டியுள்ளது.
அதாவது
, பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் :

''என்னுடைய உம்மத்துக்களுக்காக மார்க்கம் சம்பந்தப்பட்ட நாற்பது ஹதீதுகளை எவர் மனனம்
செய்துப் பாதுகாத்து வைக்கின்றாரோ அவரை அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் மார்க்க அறிஞர்கள்
சட்ட வல்லுநர்கள் ஆகியோர்களின் கூட்டத்தில் எழச் செய்வான்"".


பிரிதொரு நபிமொழியில் ''அல்லாஹ்
அவனை மார்க்க அறிஞனாகவும்
,
மார்க்க சட்ட வல்லுநனாகவும் எழச் செய்வான்""
எனச் சொல்லப்பட்டுள்ளது.


அபுத்தர்தா அவர்களின் வார்த்தையில், ''இறுதித்
தீர்ப்பு நாளில் நான் அவருக்கு (நாற்பது நபிமொழிகளை மனனம் செய்து ஏனையோருக்கு தெரிவிப்பவர்)
சாட்சியாகவும்
, பரிந்துரை செய்பவராகவும் இருப்பேன்"", இப்னு
மஸ்ஊது (ரலி) அவர்களின் வார்த்தையில்
, நாற்பது நபிமொழிகளை மனனம் செய்து
எனது மக்களுக்காக சேகரித்து வைப்பவர்களிடம்
''சுவர்க்கத்தில் நீங்கள் விரும்பும்
வாசல் வழியே நுழையுங்கள் என்றும் சொல்லப்படும்"". இப்னு உமர் (ரலி) அவர்களின்
வார்த்தையில்
, ''அவர் (நாற்பது நபிமொழிகளை மக்களுக்கு சேகரித்து வைப்பவர்) மார்க்க அறிஞர்கள் கூட்டத்தில்
குறித்து வைக்கப்படுவார்
,
மேலும் அவர் இறைவனின் பாதையில் மடிந்த தியாகிகளின்
வரிசையில் எழுப்பப்படுவார்"" என்றும் வருகிறது. (எனினும் இந்த கடைசி ஹதீதுக்கு
ஆதாரங்கள் தரப்பட்டிருப்பினும் அது பலவீனமான ஹதீதுகளின் பட்டியலில் இடம் பெறுவதாக அறிஞர்கள்
ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளனர்).


நபிமொழிகளை தொகுத்துத் தருவதில் எண்ணற்ற மார்க்க
அறிஞர்கள் ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கின்றார்கள். எனினும் எனக்குத் தெரிந்தவரை இந்தப்
புனிதப்பணியை முதன் முதலாகச் செய்தவர்கள் அப்துல்லா இப்னு அல் முபாரக் ஆவார்கள். தொடர்ந்து
இறைஞான அறிஞராக இப்னு அஸ்லாம் அத்-தூஸி
, பின்னர் அல் ஹஸன் இப்னு சுஃப்யான்-அன்
நஸயீ
, அபூபக்ருல் ஆஜுரி,
அபூபக்ரு முஹம்மத் இப்னு இப்ராஹீம் அல் அஸ்ஃபஹானி, அத்-தாரகுத்னீ, அல்
ஹாக்கிம்
, அபூநுஐம், அபூஅப்துற்றஹ்மான் அஸ்சுலமீ, அபூ சயீதுல் மாலீனீ, அபூ
உத்மான் அஸ்-சாபூனி
, அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் அல் அன்சாரி, அபூபக்ரு அல்பைய்ஹக்கீ போன்ற
முற்காலத்தவரும்
, பிற்காலத்தவருமான எண்ணற்றொரும் இப் பணியைச் செய்திருக்கிறார்கள்.

இந்த நாற்பது நபிமொழிகளையும் மார்க்க அறிஞர்கள், இஸ்லாத்தின்
காவலர்கள் ஆகியோர் ஆக்கி வண்ணம்
, தொகுத்திட நான் இறைவனின் துணையைத்
தேடியிருக்கிறேன். நல்லவைகளை செய்வதைப் பொறுத்தவரை பலவீனமான நபிமொழியை செயல்படுத்துவதும்
அனுமதிக்கப்பட்ட ஒன்றேயென்று மார்க்க அறிஞர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள்.


இருந்த போதிலும் நான் மேலே குறிப்பிட்ட பலவீனமாக
நபிமொழிகளில் முற்றாகச் சார்ந்திருக்கவில்லை.


''
உங்களில் எவர் இங்கே என்னுடைய சாட்சியாக இருக்கின்றார்களோ அவர்கள் இங்கே இல்லாதவர்களுகு;கு
எடுத்துச் சொல்வீர்களாக"" என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் மொழியின் மீதும்
, ''நான்
சொன்னவைகளைச் கேட்டு அவைகளை மனனம் செய்து
, அவைகளை அப்படியே அடுத்தவர்களுக்குகம்
சொல்லுகின்றவர்களின் முகத்தை இறைவன் பிரகாசம் மிக்கதாக ஆக்குவானாக!"" எனற
நபிமொழியின் மீதும் ஆதரவு வைத்தே நான் இதனைத் தொகுத்திருக்கிறேன்.


இதைப் போலவே பல மார்க்க அறிஞர்கள் மார்க்கத்தில்
பல்வேறு பொருள்கள் குறித்தும் நாற்பது நபிமொழிகளை தொகுத்துத் தந்துள்ளார்கள். உதாரணமாக
, அறப்போர்
(ஜிஹாத்)
, இறைநம்பிக்கை, நல்லொழுக்கம் இவைகள் ஒவ்வொன்றும் குறித்து நாற்பது நபிமொழிகள் கொண்ட தொகுப்புகள்
வெளிவந்துள்ளதைக் குறிப்பிடலாம். இவைகள் அனைத்தும் இறைவனின் பாதையில் மேற்கொள்ளப்பட்ட
அரிய முயற்சிகளேயாகும். இறைவன் இவர்கள் அனைவருக்கும் நற்கூலியைத் தந்தருள்வானாக.


நான் இவைகளை விட முக்கியமான, இவையனைத்தையும்
பிரதிபலிக்கும் நாற்பது நபிமொழிகளைத் தொகுத்துத் தருவது சிறப்பான செயலாகும் என்று கருதினேன்.
'மார்க்கத்தின் அச்சாணி என்றும், இஸ்லாத்தின் பகுதி"என்றும்
அதில்
'மூன்றிலொரு பகுதி" என்றும் இன்னும் இதுபோல மார்க்க அறிஞர்களால் உயர்ந்தனவாகக்
கருதப்பட்ட நாற்பது நபிமொழிகளையே தேர்ந்தெடுத்து தொகுத்துள்ளேன். இந்த நாற்பது நபிமொழிகளையும்
பலமான நல்ல நபிமொழிகள் என்றே கொள்ள வேண்டும்.






இவைகளில் பெரும்பாலானவை ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ்
முஸ்லிம் ஆகிய நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.


மனனம் செய்து கொள்வதற்கு எளிதாக இருக்கவும் நிறைவான
பலன்களை அடைந்திடவும் ஆதாரங்களின் தொடர்ச்சியை சுருக்கமாகவும் தந்திருக்கிறேன்.


இறைவனுக்கு அடிபணிவது குறித்து இந்த நபிமொழிகள்
தரும் வழிகாட்டுதல்களுக்காகவும்
, இந்த நபிமொழிகள் தரும் வழிகாட்டுதல்களின்
முக்கியத்துவத்திற்காகவும் இவைகள் மறுமைப் பேற்றை விரும்பும் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க
வேண்டியது அவசியமாகும்.


இறைவனிடமிருந்தே நான் உதவி தேடுகின்றேன். அவனையே
நான் சார்ந்திருக்கின்றேன். அவனிடமே நான் அடைக்கலம் தேடுகின்றேன். எல்லாப் புகழும்
அவனுக்கே உரியது. வெற்றியும் பாதுகாவலும் அவனிடமே இருக்கின்றது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:07 pm

நபிமொழி – 1
அபூ ஹப்ஸ் உமர் இப்னுல் கத்தாப் 1 (ரலி)
அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாகச் சொல்கிறார்கள்.

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான். ஆகவே ஒருவர் இறைவனுக்காகவும்
அவனது திருத்தூதருக்காகவும் ஹிஜ்ரத்
2 செய்வாரேயானால் அது அல்லாஹ்வுக்காகவும்
அவனது திருத்தூதருக்காகவுமே இருக்கும். ஒருவர் ஹிஜ்ரத் செய்வது சில உலக இலாபங்களுக்காக
என்றால்
, அல்;லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தான் என்றால் அவர் அதற்கான பலனையே அடைவார்.
(புகாரீ
, முஸ்லிம்)

இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா (ஆட்சித்தலைவர்)
ஆவார்கள்

ஏதேனும் ஒரு இலட்சியத்திற்காக ஒரு இடம் விட்டு
இன்னொரு இடத்திற்குச் செல்வது






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:09 pm

நபிமொழி – 2
உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்
ஒருநாள் நாங்கள் எல்லோரும் இறைத்தூதர் முஹம்மத்
(ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் முன் ஒருவர் வந்து நின்றார்.
அவருடைய ஆடைகள் மிகைத்த வெளுமையுடன் காணப்பட்டன. அவருடைய தலைமுடி மிகைத்த கருமை நிறத்துடன்
காணப்பட்டது. பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில்
யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று பெருமானர் (ஸல்) அவர்களின் முன் அமர்ந்தார்.
அவரது முழங்கால்களை பெருமானார் (ஸல்) அவர்களின் முழங்கால்களுக்கு எதிராகவும் கைகளைக்
கால்களின் மீதும் வைத்து அமர்ந்தார். பின்னர் பெருமானார் (ஸல்) அவர்களை நோக்கி
'முஹம்மதே, இஸ்லாத்தைப்
பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள்
'இஸ்லாம்
என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும்
, முஹம்மது
இறைவனின் தூதர் என்று சாட்சியம் கூறுவது
, தொழுகையை நிறைவேற்றுவது. ஜகாத்2 கொடுப்பது, ரமலான்
மாதத்தில் நோன்பு நோற்பது
,
உங்களால் முடிந்தால் ஹஜ் (இறைவன் இல்லத்திற்கு
புனிதப் பயணம் மேற்கொள்வது) செய்வது இவைகளாகும் என்றார்கள். இதற்கு அவர் நீங்கள் சரியாகவே
சொன்னீர்கள் என்றார். நாங்கள் அவர் அப்படி வினவியது குறித்தும் அ வரே உண்மைப்படுத்தியது
குறித்தும் ஆச்சரியம் கொண்டோம். பின்னரவர் ஈமான்
3 குறித்து
எனக்குச் சொல்லுங்கள் என்றார்.
''அது அல்லாஹ்வின் மீதும் அவனது
வானவர்கள்
, அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின்
நாட்டப்படியே நடக்கும் என்று நம்புவதுமாகும்"" என்பதாக பெருமானார் (ஸல்)
அவர்கள் பதில் தந்தார்கள். இதைக் கேட்ட அவர் நீங்கள் சரியாகவே பேசினீர்கள் என்றார்.
தொடர்ந்து அவர் இஹ்ஸான்
4
(
நல்ல செயல்கள்) பற்றி எனக்;குச்
சொல்லுங்கள் என்றார்.

''நீங்கள் அல்லாஹ்வை பார்க்காத போதும் அவனை நேரில் பார்த்து தொழுவது போல் தொழுவதாகும்.
நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டு தான்
இருக்கின்றான்"" எனச் சொன்னார்கள். பின்னர் அவர் எனக்கு அந்த நேரம் (நியாயத்
தீர்ப்பு நாள்) குறித்துச் சொல்லுங்கள் என்றார். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள்
'இந்தக்
கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர்" என்றார்கள். (அல்லாஹ்
அதை அறிவான் என்பது கருத்து). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள்
என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாவது
, ''அடிமைப்பெண்
தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள்
5. அப்போது காலணிகளில்லாத, ஆடைகளற்ற, ஆதரவற்ற
கூட்டத்தினர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப்
பார்ப்பீர்கள். பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன். பிறகு பெருமானார்
(ஸல்) அவாகள்
, 'உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா" எனக் கேட்டார்கள்.
'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்" என்றேன் நான். பெருமானார் (ஸல்)
அவர்கள்
, அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக
வந்தார்"" என்று கூறினார்கள். - முஸ்லிம்

அடிக்குறிப்புகள் :
உமர் : இஸ்லாத்தின் இரண்டாவது கலீபாவான உமர் இப்னுல்
கத்தாப் (ரலி) அவர்களைக் குறிக்கும்.

ஜகாத் : இந்தச் சொல் ஏழைவரி என்று பொதுவாக தமிழில்
மொழி பெயர்க்கப்படுகின்றது. இஃது சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரியாகும். இந்த
வரி ஏழைகளுக்கும பகிர்ந்திளிக்கப்பட வேண்டியதாகும்.

இந்தச் சொல் இஸ்லாத்தின் அடிப்படையோடு சம்பந்தப்பட்ட
சொல்லாகும். ஆகவே இதனை தமிழில் மொழிபெயர்க்காமல் அரபி மூலத்தை அப்படியே கையாண்டிருக்கிறோம்.
இதற்கு
'அடிப்படை நம்பிக்கை" 'விசுவாசம்" 'உண்மை"
என்ற பொருள்களும் உண்டு.

இஹ்ஸான் : இந்தச் சொல்லுக்கு ஒரு சிறப்பான முக்கியத்துவம்
உண்டு. இந்தச் சொல்லை இங்கே ஒரே வார்த்தையில் மொழியாக்கம் செய்வது இந்தச் சொல்லின்
நிறைவான பொருளைத் தராது. இந்தச் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்கள் : நன்னடத்தை
, நல்லமல்கள், நன்மைகள், நல்லவைகள், நல்ல
தொண்டுகள்
, செயல்களின் சிறப்பு,
செய்யும் செயல்களில் தேர்ச்சி என்பவைகளாகும்.

இச்சொல்லின் வேர்ச் சொல்லுக்கு, ஒரு
செயலில் சிறந்த திறமையைப் பெறுதல் என்று பொருள். இந்த தொகுப்பின்
17 வது
நபிமொழியல் இந்த பொருளில் தான் இந்தச் சொல்லை அணுக வேண்டும்.


அடிமைப் பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள்
: என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் இருக்கின்றன. அன்-நவவி அவர்கள் தந்த விளக்கங்களில்
ஒன்று அடிமைப்பெண்கள் மகன்களையும்
, மகள்களையும் பெற்றார்கள். அந்தக்
குழந்தைகள் விடுதலை பெறுவார்கள் என்பதாகும்.
'அமா"
என்ற அரபிச் சொல்லைப் பொதுவாக
'அடிமைப் பெண்கள்" என்று மொழி பெயர்ப்பது
வழக்கம். இஃது எல்லாப் பெண்களையும் கூட குறிக்கலாம். அதாவது நாமெல்லோரும் இறைவனின்
அடிமைகள் என்ற முறையில்
,
அடிமைப் பெண்கள் என்ற சொல் எல்லாப் பெண்களையும்
குறிக்கலாம். இதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாம் :
''ஒரு
பெண் தனது எஜமானனை பெற்றெடுக்கின்ற நாள்"" அதாவது ஒருநாள் வரும் அதில் குழந்தைகள்
தங்களைப் பெற்ற தாயை மதிக்க மாட்டார்கள். குழந்தைகள் தங்களைப் பெற்றெடுத்து தாயை ஏவலாட்கள்
போலவே நடத்துவார்கள். இந்த நபிமொழிக்கு விளக்கம் தருகின்ற போது மார்க்க அறிஞர்கள் எஜமானி
என்பது எஜமானன் என்றும் பொருள்படும் என்று கூறுகின்றார்கள்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:11 pm

நபிமொழி – 3
இஸ்லாத்தின் தூண்கள்
உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களின் மகன் அபூஅப்துர்
ரஹ்மான் அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள் :

ஒருமுறை இறைவனின் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள்
பின்வருமாறு கூறினார்கள் :



''இஸ்லாம் ஐந்து தூண்களின்1 மீது நிறுவப்பட்டுள்ளது. அவை, அல்லாஹ்வைத்
தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் ஆவார்கள் என்றும்
சான்று பகர்தல்
, தொழுகையை நிலைநாட்டுதல், ஜகாத் கொடுத்தல், ஹஜ்
செய்தல்
, ரமலான் மாத நோன்பு நோற்றல் ஆகியவையாகும்"". - புகாரி, முஸ்லிம்


தூண்கள் என்ற சொல் அரபு மூலத்தில் இடம் பெறவில்லை.
தூண்கள் என்ற பொருள்படக் கூடிய
''அர்கான்"" என்ற சொல்
இதை விளக்கக் கூடிய ஒன்றாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:14 pm

நபிமொழி – 4


அபூஅப்துர் ரஹ்மான் அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி)
அவர்கள் சொன்னதாவது : இறைவனின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எங்களுக்கு இவ்வாறு அறிவித்தார்கள்
:



''நிச்சயமாக நீங்கள் ஒவ்வொருவரும் உங்களது தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் விதையின்
வடிவிலும்
, பின்னர் இதே கால அளவிற்கு ஒரு துண்டு சதையாகவும் இருந்தீர்கள். பின்னர் உங்களுள்
ஆவியை ஊதி உயிர் தரக் கூடிய வானவர் அனுப்பப்படுகிறார். அவர் நான்கு விஷயங்கள் குறித்து
கட்டளையிடுகின்றார். உங்களது வாழ்க்கைத் தேவைகளை தேடிக் கொள்ளும் வழிகள்
, உங்களது
ஆயுட்காலம்
, உங்களது செல்கள்,
உங்களது வாழ்க்கை நல்ல முறையில் அமையுமா அல்லது
துன்பகரமாக அமையுமா
? எவனையன்று வணக்கத்திற்குரியவர் எவருமில்லையோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக உண்மையிலேயே
உங்களில் ஒருவர் சுவர்க்கத்திற்கும் அவருக்குமிடையில் ஒரு கை அளவு தூரமே இருக்கின்ற
வகையில் சுவர்க்க வாசியைப் போல் நடந்து கொள்வார். ஆனால் அவருக்காக எழுதப்பட்டிருப்பது
அவரை முந்திக் கொள்கிறது. ஆதலால் அவர் நரக வாசியைப் போல் நடந்து கொள்ள ஆரம்பித்து
, அதனால்
அவர் நரகத்தில் நுழைகின்றார்.






இன்னும் உங்களில் ஒருவர் நரகத்திற்கும் அவருக்குமிடையில்
ஒரு கையளவு தூரமே இருக்கும் வகையில் நரக நெருப்புக்கு இரையாகும் விதத்தில் நடந்து கொள்கிறார்.
ஆனால் அவருக்காக எழுதப்பட்டிருப்பது அவரை முந்திக் கொள்கிறது. இதனால் அவர் சுவர்க்கவாசியைப்
போல் நடக்க ஆரம்பித்து அவர் சுவர்க்கத்தில் நுழைகின்றார். - புகாரி
, முஸ்லிம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:15 pm

நபிமொழி - 5


பெருமானார் (ஸல்) அவர்கள் அருளியதாக நம்பிக்கையாளர்களின்
தாயான
1 உம்மு, அப்துல்லா ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்.


நம்முடைய விஷயத்தில் (தீனில்) அதில் இல்லாததை
நுழைப்பவர்களின் செயலானது நிராகரிக்கப்படுவதாகும்.



இந்த நபிமொழி புகரீ, முஸ்லிம்
ஆகய இரு நபிமொழி தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளது.



முஸ்லிம் என்ற நபிமொழி தொகுப்பில் பின்வருமாறு
இடம் பெற்றுள்ளது.



நம்முடைய விஷயத்தோடு (மார்க்கப் போதனைகளோடு) ஒத்துப்
போகாத ஒரு செயலை எவராவது செய்யின் அது ஏற்றுக் கொள்ளப்படாது ஒதுக்கப்படும்.



பெருமானார் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு தரப்படும்
சிறப்புப் பெயராகும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:15 pm

நபிமொழி - 6



பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஅப்துல்லாஹ்
அன்நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அறிவிக்கின்றார்.




ஹலாலும் (ஆகுமானவை) தெளிவானது. ஹராமும் (தடை செய்யப்பட்டவைகள்)
தெளிவானது. இவ்விரண்டிற்குமிடையே இவை ஹலாலானவையா
, அல்லது
ஹராமானவையா என்ற சந்தேகத்திற்கிடமான காரியங்களுமுண்டு. அவற்றை அநேகர் அறிந்து கொள்ள
மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கிடமான காரியங்களிலிருந்து ஒதுங்கி இருக்கின்றாரோ
, அவர்
தனது தீனையும்
, கண்ணியத்தையும், மரியாதையையும் காப்;பாற்றிக் கொண்டவராவார். மேலும் எவர் சந்தேகத்திற்கிடமானவற்றில் வீழ்ந்து விடுகிறாரோ
அவர் ஹராமில் வீழ்ந்து விட்டவராவார். அனுமதிக்கப்படாத ஒரு மேய்ச்சல் நிலத்தின் அருகில்
தனது கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் அவை தடுக்கப்பட்ட அம்மேய்ச்சல் நிலத்தில்
சென்று மேய்ந்து விடக் கூடிய அச்சத்திற்கு எந்நேரமும் ஆளாகிக் கொண்டிருக்கும் ஓர் மேய்ப்பவனுக்கு
அவர் ஒப்பாவார். ஒவ்வோர் அரசனுக்கும் சொந்தமான ஒரு மேய்ச்சல் நிலம் உண்டு. அல்லாஹ்வுக்குச்
சொந்தமான மேய்ச்சல் நிலம் (ஹிமா)
, அவன் (அனுமதிக்காத) (ஹராமான)
காரியங்களாகும்.






உடலில் ஒரு சதைப் பகுதி உண்டு. அது சீராகி விடுமானால்
உடல் முழுவதும் செம்மையாகி விடுகின்றது. அது கெட்டு விடுமாயின் உடல் முழுவதும் கெட்டு
விடுகின்றது. அந்த சதைப் பகுதி இதயமாகும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:16 pm

நபிமொழி - 7



பெருமானார் (ஸல்) அவர்கள் மொழிந்ததாக அபூ ருக்கையா
தமீம் இப்னு அவ்ஸ் அத்-தாரீ (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் :



மார்க்கம் என்பது உண்மையுடையதாகும்.1 யாரிடம்? என
வினவிய போது பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : அல்லாஹ்
, அவனது
வேதம்
, அவனது தூதர், முஸ்லிம்களின் தலைவர் இன்னும் முஸ்லிம் பொதுமக்கள் ஆகியோரிடம் உண்மையுடன் இருத்தலாகும்.
- முஸ்லிம்



1. உண்மையுடைமை ('நஸீஹா") என்ற அரபிச் சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் இருக்கின்றன. அவைகளில்
வழக்கமாகக் கொள்வது
'நற்போதனை" என்பதாகும். இங்கே இந்தப் பொருளை கொள்வது பொருத்தமாக அமையாது.


குறிப்பிட்ட ஒரு மனிதனுக்கு அல்லது சூழ்நிலையில்
நியாயத்தை நிலைநாட்டுதல் என்றும் பொருள்படும்.



நாணயம், 'விசுவாசம்" என்பவை இதன்
இதர பொருள்களாகும்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:17 pm

நபிமொழி - 8


பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக உமர் (ரலி)
அவர்கள் சொல்கிறார்கள் :



அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்
முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் உறுதி கூறும் வரையிலும் தொழுகையை நிலைநாட்டி
ஜகாத்தை கொடுக்கும் வரையிலும் நான் (இறைமறுப்பாளர்களை) எதிர்த்துப் போராடும்படி
1 கட்டளையிடப்பட்டுள்ளேன்.
இவைகளை நிறைவேற்றுபவர்கள் இஸ்லாத்தின் சட்டப்படி தண்டனைக்குரிய செயல்களைச் செய்யாதவரை
அவர்கள் தங்களது உயிர்
,உடமை ஆகியவைகளுக்கு என்னிடம் பாதுகாப்பு பெறுவார்கள். அவர்களைப் பற்றி கணிப்பு
எல்லாம் வல்ல அல்லாஹ்வினிடத்தே இருக்கின்றது.




இஸ்லாத்தை நன்றாகப் புரிந்து கொண்டு அதனை தங்களது
வாழ்வின் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளும்படி பிறருக்கு மனதில் பதியச் செய்ய வேண்டிய
முயற்சிகளை மேற்கொள்வது பற்றியே குறிப்பிடப்படுகின்றது. புனித திருமறை
'மார்க்கத்தில்
கட்டாயமில்லை" என அறிவிக்கின்றது.




பிரிதோர் இடத்தில் இறைவன் சொல்லுகின்றான். 'அறிவார்ந்த
விவாதத்தைக் கொண்டும்
,
(
இறைவனின் எச்சரிக்கைகளை எடுத்துச் சொல்லியும்
இறைவனின் பாதையில் மக்களை அழையுங்கள்". சில குறிப்பிட்ட மக்களை மட்டும் தான் எதிர்த்துப்
போராடும்படி முஸ்லிம்கள் பணிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் : இஸ்லாமிய நாட்டைத் தாக்கிடுவோர்
, இஸ்லாத்தை
அமைதியான வழியில் போதிப்பதையும்
, பரப்புவதையும் தடுப்பவர்கள்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 2:19 pm

நபிமொழி - 9


பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹ{ரைரா
அப்துர் ரஹ்மான் இப்னு ஸக்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.



நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ
அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். நான் உங்களிடம் எதைச் செய்யுங்கள் என்று பணித்திருக்கின்றேனோ
அதில் உங்களால் எவ்வளவு அதிகமாகச் செய்ய முடியுமோ அவ்வளவு அதிகமாகச் செய்யுங்கள். அளவுக்கு
அதிகமான கேள்விகளைக் கேட்டதும்
, தங்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்களோடு
ஒத்துப் போகாததுமே உங்களுக்கு முன்னால் இருந்தவர்களை அழிவுக்கு ஆட்படுத்தியது. - புகாரி
, முஸ்லிம்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக