ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Empty இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).

Post by Aathira Wed Aug 18, 2010 10:56 pm

First topic message reminder :


இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).



இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Images?q=tbn:ANd9GcSH1aZa5GOLwW3MSg_BHe7m0djyYRlN3Hl7VebWvBdFuXn7vpo&t=1&usg=__rxKeZ4oUdE9mGRuvGg1JxTctoaw=


காலையில் தினமும் கண்விழித்தவுடன் கும்பிடும் தெய்வம் இது. இன்னும்
பொருத்தமாகக் கூற வேண்டுமானால் கண் விழிக்கும் முன் மூக்கால் கண்டு
(நுகர்ந்து) கும்பிடும் தெய்வம் என்றும் கூறலாம். எத்துனை முக்கியமானதாக
இது இருந்திருந்தால் இதற்கென டீ டைம் என்று இரு நேரத்தை காலையிலும்
மாலையிலும் ஒதுக்கி வைத்திருப்பர் எல்லா வேலை இடங்களிலும். எந்த
இடத்திற்குப் போனாலும் எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இது
கிடைக்காமல் இருக்கவே இருக்காது. அவ்வாறு எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது
இது. வாழ்வில் மக்கள் உற்சாகமாகவும் ஊக்கமாகவும் செயல்பட உதவிடும்
காரணிகளில் முக்கியமானது இது.. இல்லம் தொடங்கி, பணி புரியும் அலுவலகங்கள் மட்டுமன்றி ஓட்டுநர், நடத்துநர், இழுப்பவர்(வண்டி) சாதி மதம் பாட்டாளி,பணக்காரன் என்று பேதமின்றி அனைவருக்கும் சக்தி கொடுக்கும் ஒரே பாணம் இது. முக்கியமாகப் பாட்டாளிகளின் ஊக்க டானிக் இது. அலுவலங்களில் பலரின் வெளிநடப்புக்கும் அதே வேளையில் விரைவான பணி முடிப்புக்கும் பெரிதும் உதவுவது இதுவே. அதுதான் டீ என்று நம்மால் விரும்பி அழைக்கபடும் தேயிலை.

தேயிலையின் தோற்றம் சீனா, பர்மா என்று கருதப்பட்டாலும் இது உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

ஆண்டுக்கொரு முறை விளையும் தாவர வகையான். இதன் ஃபேமிலி பெயர் கெமிலா சினசிஸ் (Camellia sinensis). இதில் சுவை என்னவென்றால் இந்தப் பெயர் ஒரு கிறித்துவ பாதிரியாரின் பெயர். செரொக் காமெல் என்ற இப்பாதிரியார்
தேயிலையை உருவாக்கவும் இல்லை. கண்டு பிடிக்கவும் இல்லை. பின் இவரின் பெயர் எதற்கு? தாவரவியல் அறிஞரான இவர் அறிவியலுக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டும் வகையில் இவர் பெயர் அதிகமாக விளையும் இந்த தாவர இனத்திற்கு வைக்கப்பட்டது.


டீ இலை அதாவது தேயிலை ஒன்றுதான் ..ஆனால் அது வெள்ளை தேயிலை, கருப்புத் தேயிலை , மஞ்சள் தேயிலை, பச்சைத் தேயிலை என்று இதற்கும் வண்ணம் பூசி அழைப்பர்..

இது ஆண்டுக்கொரு முறை விளையும் பச்சைத்தாவர வகை. பச்சைத் தேயிலை என்பது டீ என்று மூச்சுக்கு முந்நூறு முறை நம்மால் அழைக்கப்படும் சாதாரனத்
தேயிலையின் வேறுபட்ட பக்குவ நிலையே ஆகும் பொதுவாக பறிக்கப்படும் தேயிலை சரியாக உலர்த்தப்படாவிட்டால் அதில் உள்ள ஆகிஸிஜன் வெளியேறி அதில் உள்ள குளோரோஃபில் எனப்படும் பச்சயம் அழிந்து விடும். அப்போது அதிலிருந்து டானின் என்றதொரு இரசாயானம் வெளிவருகிறது. இதனால் டீ ஒரு விதமான துவர்ப்புச் சுவையை அடைகிறது. இதனை தமிழில் நொதித்தல் என்பர்.

நாம் அயல் நாட்டில் இருந்து கொண்டு வரும் கீரீன் டீயை மிகச்சுவையானது
என்று அருந்த விரும்புகிறோம். அதில் பிற தேயிலையைப் போல நொதித்தல்
இருக்காது. அதற்கு முன்னரே அதன் இலைகளை இளம் குருத்துகளுடன் மிதமாகச் சூடாக்குவர். இதனால் இதில் உள்ள நொதிகளின் நிலை மந்தமாக்கப்படுவதால் இயல்பாக இருக்கும் துவர்ப்புச்சுவை குறைந்து ஒரு கசப்புச்சுவை வருகிறது. இதில் உள்ள ஃபாலி ஃபினாலின் சிதைவது இல்லை.


மூளைக்கும் உடலுக்கும் சுறுசுறுப்பு அளித்து உற்சாகமூட்டுவது ஒருபுறம்
இருக்க, இது இதயத்தைக் காக்கிறது என்பது இன்றைய மருத்துவ ஆயவு கண்டறிந்த உண்மை. அதனால் உயிர்காக்கும் பாணம் இது என்றும் தயங்காமல் கூறலாம் என்கின்றனர் கிரீக் நாட்டின் மருத்துவ ஆய்வுக்குழு. பச்சைத் தேயிலயில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு துணைபுரிகிறது. .

நம் உடலுக்குத்தேவையான ஆண்டி ஆக்ஸெண்ட் கிரீன் டீயில் அதிகமாக இது உள்ளது. இது வைட்டமின் சியில் இருந்து கிடைப்பதைவிடவும், வைட்டமின் டியில் இருந்து கிடைப்பதைவிடவும் முறையே 100 சதவீதமும் 25 சதவீதமும் அதிகம் கிடைக்கிறதாம். இரத்தத்தில் உள்ள டிரை கிளிசரைடுகளின் அளவைக்
கட்டுப்படுத்தி (LDL கெட்ட கொழுப்புச்சத்து) நல்ல கொழுப்புச்சத்து அளவை
அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் இதயத்தைப் பசுமையாக வைத்திருக்க உதவுகிறது இந்த பச்சை தேயிலை.

கிரீன் டீயில் ஃபாலிஃபினால்கள் அதிகம் கிடைக்கின்றன. இவை டியூமர் எனப்படும் மூளைக்கட்டி செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

கேன்ஸர் செல்களின் டிஎன் ஏ உருவாக்கத்தைத் தடுப்பதுடன் நல்ல திசுக்களுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி கேன்ஸர் திசுக்களை அழிக்கின்றன.

கிரீன் டீயில் உள்ள ஃபாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும்
சர்க்கரையைத் தடுத்து சர்க்கரையை மெதுவாகச் சிதைவடையச் செய்வதால்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.

இது மட்டுமல்ல இது எலும்பு நோய்களுக்கும் அழும்பாக பயன் தந்தே தீர்வேன்
என்கிறது. ஒரு நல்ல செய்தி ஆர்தரைடீஸ் எனப்படும் மூட்டு வாதம்
இதைக்கண்டால் ஓடிப்போகும் என்கிறார்கள்.

எலும்பு என்று கூறியவுடன் அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது என்ன?
பற்கள்தானே. ஆம் அதற்கும் மருந்தான ஃபுளூரைடு பற்சிதைவு, பற்குழி

ஆகியவற்றில் இருந்து பற்களைக் காக்கிறது.

இதைக் குடிப்பவர்களுக்குப் பசி வராது. அப்படியென்றால் என்ன?
மாவுப்பொருள்களின் செரிமானம் குறைவு படுகிறது என்பதே. இதனாலும் ஒரு பயன் உண்டே. உடல் எடை கூடும் (குண்டு நோயும் மன்னிக்கவும் அது நோய் அல்ல) விளைவும் இதனால் கட்டுப்படுத்தப் படுகிறதாம்.. இதனால் தான் பச்சை தேயிலை அதிகம் அருந்தும் வெள்ளை அழகிகள் (Forigners) பெரும்பாலும் ஒல்லியாக இருக்கிறார்களோ!!

பொதுவாக காபி குடிப்பவர்களை நாம் காபி குடிப்பதை விட தேநீராவது
அருந்துங்கள் என்போம். அதிலும் பிற தேயிலையை விட பச்சைத் தேயிலை
வயதாவதையும் தடுக்கும் அதியனின் நெல்லிக்கனி போன்றது. ஒளவை இளைமையாக இல்லை. வாழ்நாள் மட்டும் அந்த நெல்லிக்கனி கூட்டியது என்றறிகிறோம். ஆனால் இந்த இலை நெல்லி அதாவது தேயிலை இளமையையும் அழகையும் கூட்டுகிறதாம். முகப்பொலிவை அதிகரிக்கிறதாம்.


ஒரு சுவையான வரலாற்றுச் செய்தியும் உண்டு. காந்தியடிகள்
உப்புச்சத்தியாகிரகம் செய்வதற்கு முன்னோடியாக இருந்தது பாஸ்டன் தேநீர்
விருந்து என்பர். அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போது தேயிலைகளைக்
கப்பல்களில் இருந்து துறைமுகத்திற்கு இறக்கிக் கொண்டு வராமல் கடலில்
தூக்கி வீசினராம். இந்த உத்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உப்புச்
ச்த்தியாகிரகமாக மாற்றம் பெற்றது என்பர்..

அடடா உற்சாகமாகத் தேயிலையைப் பற்றி பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. தேயிலை குடிக்கும் நேரம் ஆயிடுச்சே....பச்சை..... பச்சை....
ஆமாங்க பச்சைத் தேயிலைதான் (கிரீன் டீ) நான் கிளம்புகிறேன்..... நீங்களும்.......



ஆதிரா...


Last edited by Aathira on Wed Aug 18, 2010 11:05 pm; edited 1 time in total


இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Tஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Hஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Iஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Rஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Empty Re: இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).

Post by Aathira Sat Aug 21, 2010 4:11 am

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:
ஆமாம..பாட்டிலைப் பார்த்தவுடன்........

ஹைய்யோ... ஹைய்யோ....!!!

பாத்ததுக்கே இப்படியா? இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Drunken_smilie
நாங்க என்ன தலயா?? 4 ஃபுல் அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க... இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 403484

இதெல்லாம் சகஷமப்பா...!!!
இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 56667 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 56667 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 56667 இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 56667


இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Tஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Hஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Iஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Rஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Empty Re: இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).

Post by kalaimoon70 Sat Aug 21, 2010 4:25 am

தருப்போது கிரீன் டீ தான் பெரும்பாலும் குடிக்கிறார்கள் (இன்னும் நான் குடித்து பழகவில்லை .)உங்கள் கட்டுரை வழக்கம்போல,
நன்மையின் எண்ணத்தில் தொடுத்த தாயின் நிலை .
நன்றி தோழியே !கிரீன் டீ க்கும் இந்த கட்டுரைக்கும் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Empty Re: இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).

Post by Aathira Sat Aug 21, 2010 5:42 am

kalaimoon70 wrote:தருப்போது கிரீன் டீ தான் பெரும்பாலும் குடிக்கிறார்கள் (இன்னும் நான் குடித்து பழகவில்லை .)உங்கள் கட்டுரை வழக்கம்போல,
நன்மையின் எண்ணத்தில் தொடுத்த தாயின் நிலை .
நன்றி தோழியே !கிரீன் டீ க்கும் இந்த கட்டுரைக்கும் .
தங்கள் தாய்மைப் பாசத்திற்கு, தூய்மை நட்புக்கு, வாய்மைப் பாராட்டுக்கு மிக்க நன்றி கலைநிலா..


இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Tஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Hஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Iஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Rஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Aஇதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை). - Page 3 Empty Re: இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum