புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆலய வரலாறு - நல்லூர் ஆலயத்தில் அருளாட்சிபுரியும் கந்தப் பெருமாள் Poll_c10ஆலய வரலாறு - நல்லூர் ஆலயத்தில் அருளாட்சிபுரியும் கந்தப் பெருமாள் Poll_m10ஆலய வரலாறு - நல்லூர் ஆலயத்தில் அருளாட்சிபுரியும் கந்தப் பெருமாள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலய வரலாறு - நல்லூர் ஆலயத்தில் அருளாட்சிபுரியும் கந்தப் பெருமாள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jul 28, 2009 7:42 am

யாழ்ப்பாணத்தில் ஆலய உற்சவம் என்றாலே நம் கண்முன்னே விரிவது நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழா என்றால் அது மிகையல்ல. இன்று திங்கட்கிழமை நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் இன்றைய கொடியேற்றத்துடன் பெரும் ஆரவாரமாக ஆரம்பமாகிறது.

யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்லாது, உலகெங்கும் வியாபித்து வாழும் நம் உறவுகள் மத்தியிலும் கூட நல்லைக் கந்தனின் அழகுத் திருக்கோலம் மனக்கண் முன்தோன்றும். அவனைத் துதிக்கவும் விரதமனுட்டிக்கவும் நிச்சயம் அவர்கள் தவறுவதில்லையே?

இன்று முதல் ஆலயம் காலம் தவறாத பூசைகளினாலும் கண்ணுக்கினிய காட்சிகளினாலும் சிறப்புப் பெற்றுத் திகழும் என்பதே உண்மை.

இன்றைய கொடியேற்றம், மஞ்சத் திருவிழா, திருக்கார்த்திகைத் திருவிழா, தங்க ரதத் திருவிழா, கைலாச வாகன விழா, பூஞ்சப்பறத் திருவிழா, சப்பறத் திருவிழா, தண்டாயுதபாணி உற்சவமான மாம்பழத் திருவிழா, தேர், தீர்த்தம், பூங்காவனம் ஆகிய உற்சவ நாட்கள் மிக சிறப்பானவை. பக்தர்களின் மனதைப் பரவசப்படுத்துபவை. ஆலயத்தின் உள் மற்றும் புறத்தோற்றம் கண்களையும் மனதையும் கருத்தையும் கவர்ந்து நிற்கின்றன. இதற்கெல்லாம் மூல காரணமாக அமைபவை ஆலய நிர்வாகத்தின் ஆளுமையும் அரும் பணியுமாகும்.

ஆலய வரலாறு

தமிழ் மன்னன் ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம அமைச்சரான செண்பகப் பெருமாள் என்றழைக்கப்பட்ட புவனேகபாகு என்பவனால் 884ஆம் ஆண்டளவில் இவ்வாலயம் கட்டப் பெற்றதாக வரலாறு கூறுகிறது. இவனது பெயரே இவ்வாலயத்தின் கட்டிடத்தில் 'ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு' என பொறிக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

ஆரியச் சக்கரவர்த்திகள் நல்லூரிலிருந்து ஆட்சி புரிந்த காலத்திலே. மன்னருடன் அரசவையும் சென்று தலை வணங்கிய தலைசிறந்த ஆலயமாக இது விளங்கியதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

1478ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த கனகசூரியனின் மகனான சிங்கைப் பரராஜசேகரன் மேலும் இவ்வாலயத்தை வளமாக்கினான். வடக்கே சட்டநாதர் ஆலயத்தையும் கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் ஆலயத்தையும் தெற்கே கைலாயநாதர் ஆலயத்தையும் மேற்கே வீரமாகாளி அம்மன் ஆலயத்தையும் கட்டுவித்து நல்லையம்பதியில் அருளாட்சி பெருகச் செய்தான் என வரலாறு கூறுகிறது.

வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு

அந்நாளில் வர்த்தக நோக்கமாக இலங்கை வந்தடைந்த போர்த்துக்கேயர் சிறிது சிறிதாக நாட்டினுள்ளும் பிரவேசித்தனர். இதுவே அன்றைய ஆக்கிரமிப்பாகக் கருதப்பட்டது. பறங்கியர்ப் படை கொழும்புத்துறையில் காலடி பதித்தபோது, யாழ். அரசன் அதனைத் தடுக்க முயன்றான். ஆனால் அவனால் முடியாமல் போனது. சைவத்தின் அரணாக அமைந்திருந்த குன்றனைய குமரன் கோயில் போர்த்துக்கேயத் தளபதி பிலிப் ஒலிவேறா என்பவனால் அழித்தொழிக்கப்பட்டது. ஆனால் கோயில் பூசகரும் ஆலய மெய்க் காப்பாளனும் சேர்ந்து தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது ஆலயத்தின் செப்புச் சாதனங்கள், திரு ஆபரணங்கள், சிவலிங்கங்கள் ஆகியவற்றை வெளியே எடுத்துச் சென்று காப்பாற்றி விட்டனர். இதுவும் நல்லைக் கந்தனின் இன்னருள் என்றுதான் கூற வேண்டும்.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி இடம்பெற்றது. அன்றைய காலகட்டத்தில் நல்லைக் கந்தன் ஆலயம் அமைந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று ஒல்லாந்தரால் அமைக்கப்பட்டது.

காலங்கள் மாறின. நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்னரிலும் பார்க்க மிகச்சிறப்பாக அதே இடத்தில் அமைக்கப் பெற்றது. இதுவும் அழகன் முருகனின் நல்லருள் என்றே பக்தர்களால் போற்றப்பட்டது.

மாப்பாண முதலியார் பரம்பரை

இவ்வாலயத்தை அமைத்த பெருமை மாப்பாண முதலியார் பரம்பரையையே சாரும். இவர்களில் முன்னிப்பவர் இரகுநாத மாப்பாண முதலியார் ஆவார். இதற்கு 'யாழ்ப்பாண வைபவம்' என்னும் நூலும் சைவத்தையும் தமிழையும் அன்று நிலைபெறச் செய்த நல்லை ஸ்ரீ ஆறுமுக நாவலர் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களுமே சான்றுகளாக அமைகின்றன.

இன்று மிகச் சிறப்பாக ஆலயத்தை நிர்வகித்து வரும் குமாரதாஸ மாப்பணார் குடும்பத்தினரது அரிய சேவைகள் சொல்லுந்தரமன்று. இவர்களது அயரா முயற்சியே இன்று புதுப்பொலிவுடன் காட்சி தரும் இன்றைய நல்லைக் கந்தன் ஆலயம். இலங்கையின் நல்லையம்பதி சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும், யோகர் சுவாமிகளும் அருள் உலா வந்த மண்.

ஆலய உற்சவத்தின்போது யாழ். நகரமே விழாக் கோலம் பூண்டிருக்கும். மக்கள் யாவரும் விரதமிருந்து ஆசார சீலர்களாய் நல்லைக் கந்தனது நினைவிலும் தொழுதலிலும் தமது பொழுதை இனிதே கழிப்பர்.

தேர்த் திருவிழாவான இன்று நல்லூர் ஆலயத்தின் உள்ளும் புறமும் பக்தர்களின் வெள்ளம் அலை மோதும் காட்சியே ஒரு தனி அழகுதான். தினமும் காலைப் பொழுதினிலே, பக்தர் கோஷ்டிகளின் "நல்லைக் கந்தனுக்கு அரோகரா'' என்னும் ஒலி வானளாவ எழ பஜனைக் கோஷ்டிகள் பின் தொடர கொடி, குடை, ஆலவட்டம் சூழ எழில்மிக்க சித்திரத் தேரிலே ஆறுமுகப் பெருமான் ஆரோகணித்து வீதி உலா வருவார்.

தீர்த்தோற்சவம்

தேர்த் திருவிழாவை அடுத்து இடம்பெறும் தீர்த்தத் திருவிழா பஞ்ச கிருத்தியத்தின் அருளைக் குறிக்கின்றது. தீர்த்தோற்சவமன்று ஷண்முகப் பெருமான் தங்க மயிலேறி வள்ளி, தெய்வயானை சமேதராய் விநாயகப் பெருமானும் சண்டேஸ்வர மூர்த்தியும் உடன் எழுந்தருள பஞ்ச மூர்த்திகளாக கோயிற்றிருக்கேணியின் முன்றலில் உலாவந்து நிற்பர். முதலில் அத்திர தேவர் தீர்த்தமாடுவர். பின்னர் கோயில் எஜமானும் முருக பக்தர்களும் தீர்த்தமாடுவர். பின்னர் பஞ்ச மூர்த்திகளும் மஞ்சள் பட்டு, மஞ்சள் மலர் மாலை அலங்காரத்தோடு வெளி வீதி உலா வரும் காட்சி.....மனதைக் கொள்ளை கொள்வதாகும்.

மறுநாள் பூங்காவனத் திருவிழா வெகுகோலாகலமாக இடம்பெறும். ஆலய நந்தவனத்தில் திருக்கல்யாண வைபவம் இடம்பெற்று முத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வயானை சமேதராய் மூன்று தண்டிகைகளில் அழகு பவனி வந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பர். இக்கல்யாண வைபவத்தோடு இவ்வாண்டுக்குரிய ஆலய உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

வடக்கில் போர்ச் சூழல் மறைந்து சமாதானம் தோன்றியிருக்கும் இக்கால கட்டத்தில் நாட்டில் நிரந்தர அமைதியும் மக்களிடையே ஒற்றுமையும் நிலவ, ஆட்சியிலிருப்போர் நல்லதோர் தீர்வை வழங்கிட நல்லைக் கந்தன் இன்னருள் புரிவானாக.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக