புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்நீர் போடுவது எப்படி? Poll_c10வெந்நீர் போடுவது எப்படி? Poll_m10வெந்நீர் போடுவது எப்படி? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
வெந்நீர் போடுவது எப்படி? Poll_c10வெந்நீர் போடுவது எப்படி? Poll_m10வெந்நீர் போடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 8%
heezulia
வெந்நீர் போடுவது எப்படி? Poll_c10வெந்நீர் போடுவது எப்படி? Poll_m10வெந்நீர் போடுவது எப்படி? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வெந்நீர் போடுவது எப்படி? Poll_c10வெந்நீர் போடுவது எப்படி? Poll_m10வெந்நீர் போடுவது எப்படி? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
வெந்நீர் போடுவது எப்படி? Poll_c10வெந்நீர் போடுவது எப்படி? Poll_m10வெந்நீர் போடுவது எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்நீர் போடுவது எப்படி?


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jul 27, 2009 7:08 pm

வெந்நீர் போடுவது எப்படி?


தமிழில் ’வெந்நீர்’ எனப்படுவது ஆங்கிலத்தில் ’ஹாட் வாட்டர்,’ என்றும், ஹிந்தியில் ’கரம் பானி,’ என்றும் ஜப்பானிய மொழியில் ’ஹை-யை-யோ’ என்றும் அழைக்கப்படுகிறது. எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வெந்நீர் சுடும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும். ஆண்களாகிய நமக்கும் அவ்வப்போது சவரம் மற்றும் குளியல் வரைக்கும் தேவைப்படுகிற இந்த வெந்நீரானது நமது வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாததாகி விட்டது என்றால் மிகையாகாது. வெந்நீர் போடுவது எப்படியென்பதை அறிந்து கொள்வதற்குள்ளாக, வெந்நீர் குறித்த சில சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எனவே, அவசர அவசரமாக அடுக்களை சென்ற ஆண்கள், திரும்பி வந்து, ஆற அமர இந்தப் பதிவைப் படிப்பது ’வெந்நீர்’ குறித்த அவர்களது பொது அறிவை வளர்க்கும்.
வெந்நீர் மனிதனின் கண்டுபிடிப்பில் மிக அரியது.’ என்று கி.பி.1567-ம் ஆண்டு வாழ்ந்த ஹாட்லாண்டைச் சேர்ந்த டாக்டர்.பாயில்மேன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.



இதே போல பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுக்குநீரகர் என்னும் சித்தர் இது வரை யாராலும் கண்டு பிடிக்க முடியாத தனது சுவடியில் வெந்நீரின் சிறப்பு குறித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பதைப் படித்தறிக:



"ஈரமுடன் இருப்பதற்கே எருதுகளுங்குளித்திடவே


ஊரதனில் உள்ளதன்றோ ஓர்குளமே-சாரமுறு


சொதிக்குண்டு சுடுதோசை சோறுண்ணப்போவதன்முன்


கொதிக்கின்ற நீரில் குளி"



(நன்றி: புரூடா பதிப்பகம்)



தோசையோ,சொதியோ,சோறோ உண்ணுகிற பொருள் எது சூடாயிருந்தாலும் அதை உண்பதற்கு முன்னர் சுடுதண்ணியில் குளித்திட வேண்டுமென்று வலியிறுத்தியிருப்பதைக் காண முடிகிறதல்லவா? எனவே, ஆணாகப் பிறந்த நாமெல்லாம் வீணாகக் காலத்தைக் கடத்திடாமல் வெந்நீர் போடுவதைப் பற்றி அறிந்து கொள்வது நமது தன்னம்பிக்கையை வளர்த்திடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.



வெந்நீர் போடுவதற்கு முன்னர், நாம் ஏன் வெந்நீர் போடுகிறோம் என்ற குறிக்கோள் நமக்குப் புரிந்திருத்தல் மிக அவசியம். குடிப்பதற்கா குளிப்பதற்கா என்று புரியாமல் வெந்நீர் போடுவது போன்ற விரயமான செயல்களை ஆண்கள் செய்யாதிருத்தல் நலம். ’குடிப்பதென்றால் குண்டா; குளிப்பதற்கு அண்டா,’ என்ற குளித்தலை குளியாமொழியின் கூற்றை இவ்வமயத்தில் நினைவில் நிறுத்துவது நன்று.



வெந்நீரைப் பற்றிய பல அரிய தகவல்களை அறிந்து கொண்டு விட்டபடியால், அடுத்து வெந்நீர் போடுவதற்குத் தேவையான பொருட்களைப் பற்றிப் பார்க்கலாம். ஒரு காகிதத்தில் பின்வருகிற பொருட்களின் பட்டியலைக் குறித்து வைத்தல் சாலச் சிறந்தது.





[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jul 27, 2009 7:09 pm

வெந்நீர் போடத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள்*:


1. பர்னால் அல்லது ஏதாவது ஒரு ஆயின்மென்ட்

(எசகுபிசகாக காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டு விட்டால் போட்டுக்கொள்ள)



2. டெலிபோன் டைரக்டரி- (அருகிலிருக்கிற மருத்துவமனைகள்/டாக்டர்கள்/ஆம்புலன்ஸ் சேவை போன்றவற்றின் தொலைபேசி எண்களை எழுதி வைத்துக்கொண்டாலும் போதும்)



3. பாதுகாப்பு அங்கி(கோணிப்பையையும் உபயோகிக்கலாம்)



4. ரப்பர் காலணிகள்



5. கையுறைகள் மற்றும் கால்மறைப்புகள். (மகனின் கிரிக்கெட் சமாச்சாரங்களையும் பயன்படுத்தலாம்)



6. ஹெல்மெட்(துணிச்சலானவர்கள் இதைத் தவிர்க்க விரும்பினால் பாதகமில்லை)

7.தர்மாமீட்டர்

#இது தவிர பொசுங்கலூர் வெந்தசாமி எழுதிய ’தீக்காயமா? என்ன செய்ய வேண்டும்?’ என்ற புத்தகத்தை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பதும் நன்மை பயக்கும்.


மேற்கூறிய பொருட்கள் தவிரவும், வெந்நீர் போட மேலும் சில பொருட்களும் தேவைப்படுகின்றன். அவையாவன:


1.பாத்திரம் (தேவைக்கேற்ப அண்டா அல்லது குண்டா)



2.தண்ணீர் (அதுவும் தேவைக்கேற்பவே!)



3.இடுக்கி** (இது இல்லாமல் வெந்நீர் போடுவது அபாயகரமானது)



4.நமுத்துப் போகாத ஒரு தீப்பெட்டி அல்லது நல்ல லைட்டர்.


**"இடுக்கியொன் றிருப்பின் இன்முகங்கொண்டுதினம்

அடுக்களை போவான் ஆண்" என்ற திரிக்குறளை நினைவில் கொள்ளுக.


மேற்கூறிய பாதுகாப்பு சங்கதிகளை அணிந்து கொண்டபின், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றவும். பிறகு, அடுப்பைப் பற்ற வைத்து விட்டு தண்ணீர்ப் பாத்திரத்தை அடுப்பின் மீது வைக்கவும். அல்லது அடுப்பைப் பற்ற வைத்து, பாத்திரத்தை அதன் மேல் வைத்து அப்புறமாக அதில் தண்ணீரை ஊற்றுவதாலும் பாதகமில்லை. இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், உங்களுக்கும் அடுப்புக்கும் இடையே குறைந்தபட்சம் ஒன்றரையடியாவது இடைவெளியிருக்க வேண்டும். முதல் முறையாக வெந்நீர் போடுபவர்கள், தரையில் சரியான தூரத்தை அளந்து, சாக்பீஸால் கோடு போட்டு வைத்துக்கொள்வது நல்லது.


சிறிது நேரத்திலேயே தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சிறியதும் பெரியதுமாகக் கொப்பளங்கள் வருவதைக் கண்டு பயந்து விடக்கூடாது. பயந்த சுபாவமுள்ளவர்கள் வெந்நீர் தயாராகும் வரையில் ’அச்சம் என்பது மடமையடா.’ என்ற பழைய பாடலையோ, ’அச்சம் தவிர்,’ என்ற புதிய பாடலையோ முணுமுணுத்துக்கொண்டிருக்கலாம். (அவரவர் நம்பிக்கைப்படி ’கந்தர்சஷ்டி கவசம்’ அல்லது ’மிருத்யஞ்சய சுலோகம்’ போன்றவற்றையும் சொல்லலாம்.)


நிமிடத்துக்கொரு முறையாவது கொதிக்கின்ற பாத்திரத்துக்கு நேராக, சுமார் ஒண்ணேகால் அடி தூர உயரத்தில் தர்மாமீட்டரை வைத்து, வெந்நீர் எவ்வளவு சூடாகியிருக்கிறது என்று பரிசோதித்துக்கொள்வது நலம். உங்களுக்கு எவ்வளவு சூடான வெந்நீர் வேண்டுமென்பது, உங்களுக்கு இருக்கிற தனிப்பட்ட (அ)சூடு, (ஆ)சொரணை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதால் தேவைக்கேற்பக் கொதிக்க வைக்கவும். ((அ) மற்றும் (ஆ) இவையிரண்டும் இல்லாதவர்கள் கட்டுரையாசிரியரைப் போல வெந்நீர் போட்டு நேரத்தை விரயம் செய்யாமல், குளிர்ந்த நீரில் குளிப்பதே சாலச் சிறந்தது.)


உங்களுக்குத் தேவையான சூட்டோடு வெந்நீர் தயாரானதும் மறக்காமல் அடுப்பை அணைத்து விட்டு, இடுக்கியால் பாத்திரத்தை இறுக்கமாகப் பிடித்து இறக்கி வைக்கவும்.


இதோ, சுடச்சுட வெந்நீர் தயார்!





[You must be registered and logged in to see this link.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 7:11 pm

ரொம்ப கஷ்டமா இருக்கு...ரெடி மேடா எந்த
கடையில் சுடுதநீர் கிடைக்கும்....

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jul 27, 2009 7:14 pm

நிலாசகி wrote:ரொம்ப கஷ்டமா இருக்கு...ரெடி மேடா எந்த
கடையில் சுடுதநீர் கிடைக்கும்....
ஹலோ இது ஆண்களுக்கு மட்டும்..!



[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 27, 2009 7:15 pm

இது pizza hut -ல கிடைக்குமா ??

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 7:16 pm

இதுக்கு பிரச்சனையே இல்லாம தண்ணிய எடுத்து வெயில்ல காய வைக்கலாம்......

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Mon Jul 27, 2009 7:18 pm

Tamilzhan wrote:
நிலாசகி wrote:ரொம்ப கஷ்டமா இருக்கு...ரெடி மேடா எந்த
கடையில் சுடுதநீர் கிடைக்கும்....
ஹலோ இது ஆண்களுக்கு மட்டும்..!

இது ஆண்கள் பகுதியில் இல்லே உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jul 27, 2009 7:18 pm

நிலாசகி wrote:இதுக்கு பிரச்சனையே இல்லாம தண்ணிய எடுத்து வெயில்ல காய வைக்கலாம்......
சூட்ல பாட்டில் உடஞ்சுடும்..!



[You must be registered and logged in to see this link.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 7:20 pm

ஐயோ இது அந்த தண்ணியா
அய்யோ, நான் இல்லை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 27, 2009 7:21 pm

நிலாசகி wrote:ஐயோ இது அந்த தண்ணியா
அய்யோ, நான் இல்லை

தல இது வெந்நீர் , காச்சுறது இல்லை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக