ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சலுகைகள்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கருணாநிதி அறிவிப்பு

Go down

புதிய சலுகைகள்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கருணாநிதி அறிவிப்பு Empty புதிய சலுகைகள்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கருணாநிதி அறிவிப்பு

Post by நவீன் Tue Aug 17, 2010 4:18 pm

புதிய சலுகைகள்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கருணாநிதி அறிவிப்பு 0a57313e-008b-457f-8876-0c0e1247c59b_S_secvpf




சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2006
ஆம் ஆண்டு இந்த அரசு பதவியேற்றபின் டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை
விற்பனைப் பிரிவு பணியாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இவர்களுக்கு
2007 ஜூலை மாதம் மற்றும் 2009 ஆகஸ்ட் மாதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
இவ்விரு ஊதிய உயர்வுகள் மூலம் மாதம் ஒன்றுக்கு ஏற்கெனவே பெற்று வந்ததைவிட
மேற்பார் வையாளர்கள் ரூபாய் 1000, விற்பனையாளர்கள் ரூபாய் 800 மற்றும்
மதுக்கூட உதவியாளர்கள் ரூபாய் 600 கூடுதலாகப் பெற்று வருகிறார்கள்.

முந்தைய
ஆட்சிக் காலத்தில் 10 சதவீதமாக வழங்கப்பட்ட போனஸ் மற்றும் கருணைத் தொகையை
இந்த அரசு 20 சதவீதமாக உயர்த்தி கடந்த மூன்று வருடங்களாக வழங்கி வருகிறது.


பணியாளர்களிடமிருந்து
பெறப்பட்ட காப்புத்தொகைக்கு முந்தைய ஆட்சியில் வட்டி ஏதும்
வழங்கப்படவில்லை. இந்த அரசால் 3.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

முந்தைய
ஆட்சிக் காலத்தில் நடைமுறையிலிருந்த ஊக்கத் தொகைத் திட்டம், இந்த
ஆட்சியில் அனைத்துப் பணியாளர்களும் பயன் பெறும் வகையில் மாற்
றியமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த
ஆட்சியில் தான் முதல் முறையாக மேற்பார்வையாளர்களுக்கு மாதாந்திரப்
பயணப்படி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல் படுத்தப்பட்டு
வருகிறது. மேலும், இந்த ஆட்சிக்காலத்தில் தான் பணியாளர் இறக்க நேரிட்டால்
குடும்ப நல நிதியிலிருந்து வழங்கப்படும் தொகை ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து
ஒன்றரை இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தஉண்மைநிலையை
அறிந்திருந்த போதிலும், அரசியல் காரணங்களுக் காகவும், நிர்ப் பந்தங்களுக்
காகவும், சில தொழிற் சங்கங்கள் அறிவித்த ஒருநாள் வேலை நிறுத்தத்தில் மிகக்
குறைந்த எண்ணிக் கையிலான பணியாளர்களே பங்கேற்றனர்.

தொழிலாளர்
நலனில் என்றென்றும் அக்கறை கொண்டுள்ள முதல்- அமைச்சர் கருணாநிதி டாஸ்மாக்
பணியாளர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாகப் பல சலுகைகளை தானாகவே முன்வந்து
வழங்கியதைப்போல, பின்வரும் சலுகைகளை தற்போது வழங்கி ஆணையிட்டுள்ளார்.
அவையாவன:-

மேற்பார்வையாளர்களின்
மாத தொகுப்பு ஊதியம் ரூபாய் 4000- லிருந்து 4500 ஆகவும்,
விற்பனையாளர்களின் தொகுப்பு ஊதியம் ரூபாய் 2800-லிருந்து 3200 ஆகவும்,
மதுக்கூட உதவியாளர்களின் தொகுப்பு ஊதியம் ரூபாய் 2100-லிருந்து
2400-ஆகவும் உயர்த்தப்படும். இதனால் 30,000 பணியாளர்கள் பயன்பெறுவர்.

டாஸ்மாக்
பணியாளர் களின்காப்புத் தொகைக்கான வட்டி 3.5 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக
உயர்த்தி வழங்கப்படும். இதனால் வருடம் ஒன்றிற்கு மேற்பார்வையாளர்கள்
ரூபாய் 1250, விற்பனையாளர்கள் ரூபாய் 375, மதுக்கூட உதவியாளர்கள் ரூபாய்
250 கூடுதலாகப் பெற்று பயனடைவர்.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை 1.5 சதவீதத்திலிருந்து 1.75 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

காலி அட்டைப்பெட்டி சேதத்திற்கான இழப்பை பணியாளர்கள் மீது சாட்டப்படுவதற்குப் பதிலாக நிர்வாகமே ஏற்கும்

மதுபான
விற்பனைக்குப்பின் கடைகளில் தேங்கும் காலி அட்டைப்பெட்டிகள் பணியாளர்களால்
ஒப்பந்த தாரர்களுக்கு விற்கப்படுகிறது. இந்த அட்டைப் பெட்டிகளில் ஏற்படும்
சேதம் சுமார் 2.5 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அது தற்போது
பணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்படுகிறது. இனி அட்டைப் பெட்டிகள்
சேதத்தினால் ஏற்படும் இழப்பை நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். இச்சலுகைகள்
1.9.2010 முதல் நடைமுறைக்கு வரும்.

தூண்டுவோருக்குத்
துணையாக நிற்காமல், இந்த அரசின் தூய நோக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து,
தொடர்ந்து பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இந்த அரசு உரிய
நேரத்தில் சலுகைகளையும், உரிமைகளையும் அளிக்கும் என்பதற்கு இது ஒரு
எடுத்துக்காட்டு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum