Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? - ச.நாகராஜன்
+7
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
yarlpavanan
Tamilzhan
புவனா
அன்பு தளபதி
gunashan
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? - ச.நாகராஜன்
First topic message reminder :
தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?
- ச.நாகராஜன்
தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் துவக்கம்! இதை மாற்றிய தமிழக அரசின் அறிவிப்பு சரியா?
புத்தாண்டின் துவக்கத்தையே தடுமாற வைத்த தமிழக அரசின் பார்வை சரியா? தமிழரின் வானவியல் அறிவியல் நோக்கில் ஒரு சிறிய பார்வை :-
உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு பாகங்களும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின.
பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையை சூரியனை மையமாக வைத்து தமிழன் 12 பாகங்களாகப் பிரித்தான். உண்மையில் பார்க்கப் போனால் பூமியே இந்தப் பகுதிகளில் நுழைகிறது. பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு சூரியன் இவற்றில் நுழைவது போலத் தோற்றமளிக்கிறது. இதை ஒப்புமை நகர்தல் (Relative Motion) என்று கூறுகிறோம். ஆகவேதான், சூரியன் இவற்றில் நுழைகிறான் என்று சொல்கிறோம்.
இந்த வான வீதியை மேஷத்தைத் தொடக்கமாகக் கொண்டு 12 பாகங்களாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பிரித்தான். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன.
மேஷம் என்பது பூஜ்யம் டிகிரியில் (அதாவது பாகையில்) ஆரம்பிக்கிறது. மொத்தம் 360 டிகிரிகள் (அல்லது பாகைகள்) என்பதால் ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரிகள் உண்டு.
சூரியன் மேஷத்திற்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழன் ஆரம்பித்தான்.
அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினான். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதாலும் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.
அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாகத் தமிழன் பிரித்தான். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார் காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன் பனிக்காலம் (மார்கழி, தை) பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில் வசந்த காலம் எனப்படும் இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது. உற்சாக ஊற்றாக விளங்கும் இந்தக் காலத்தில் (மதுரை) சித்திரைத் திருவிழா, திருவிடை மருதூர் தேரோட்டம் மற்றும் திருச்சி, காஞ்சி உள்ளிட்ட நகர்களில் கோலாகலத் திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றன. கோலாகலமான விழாக் காலத்தில் புத்தாண்டின் துவக்கம் அமைக்கப்பட்டது அறிவு பூர்வமானது; உணர்ச்சி பூர்வமானதும் கூட!
இத்துடன் சூரியன் மேஷத்தில் உச்சமாக விளங்குகிறான். ஆகவே பிரகாசமான சித்திரையை 'பிறக்க இருக்கும் புத்தாண்டு' ஒளி வீசும் ஆண்டாகத் துலங்கும் வண்ணம் ஆண்டுத் துவக்கமாக அமைத்தது மிக்க பொருத்தமாக உள்ளது அல்லவா?
சூரியனைப் பிரதானமாகக் கொண்ட இந்த வாழ்க்கை முறை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் ஈர்த்தது. ஆகவேதான் மலையாளம், மணிபூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையையே புத்தாண்டாக ஏற்றுள்ளன.
அது மட்டுமல்ல, இது உலகின் பல நாடுகளையும் கவர்ந்தது. நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரையிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன!
இன்னொரு சுவையான செய்தியும் உண்டு! வரலாற்றை ஊன்றிக் கவனித்தால் மேலை நாடுகளும் முன் காலத்தில் ஏப்ரலையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டிருந்தது தெரிய வரும். ஆனால் கிறிஸ்தவ மதம் தோன்றிய பின்னர், மாதத்தில் உள்ள நாட்களெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு ஜனவரியே ஆண்டின் முதல் மாதம் என்று கொள்ளப்பட்டது.
மகரத்தில் சூரியன் நுழையும் தை மாதம் மிகுந்த புண்ய காலமாகக் கொள்ளப்படுகிறது. காரணம், உத்தராயணம் என்னும் வடக்கு நோக்கி சூரியன் பயணம் துவக்கும் காலம் அது! அது மட்டுமின்றி அறுவடை செய்யப்படும் மன மகிழ்ச்சியான காலம் இது.
ஆக, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கல் கொண்டாட்டம் ஏற்பட்டது.
சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி!
வான வீதியை 12 பாகமாகக் கொண்டால் மகரம் 270 டிகிரியில் (அல்லது பாகையில்) வரும்.
270 டிகிரியில் பயணத்தை ஆரம்பிக்கச் சொல்லும் தமிழக அரசின் உத்தரவு காலத்தின் விசித்திரமே. ஓட்டப் பந்தய தூரத்தில் முக்கால் பகுதி கடந்த இடத்தை ஆரம்ப இடமாக நிர்ணயிப்பது போன்றது இது!
இரு முறை சனி சூரியனை சுற்ற ஆகும் காலம் 60 ஆண்டுகள். ஐந்து முறை வியாழன் சூரியனைச் சுற்ற ஆகும் காலம் 60 ஆண்டுகள். ஆகவே அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி முறையை அறிவியல் ரீதியாக அமைத்து அறுபது ஆண்டுகளை தமிழன் அமைத்தான், இவை தமிழ் ஆண்டுகள் என்றே இன்று வரை அழைக்கப்படுகின்றன.
இப்படி இன்னும் ஏராளமான அதிசய உண்மைகள் தமிழரின் வானவியல் அறிவின் மூலமாக அறிவியல் ரீதியாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வல்லார் வாய் கேட்டு உணரலாம். ஆனந்திக்கலாம்.

gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? - ச.நாகராஜன்
yarlpavanan wrote:சிறந்த பதிவிது. வணிக ஆண்டிறுதிக் கணக்கு முடிப்பது கூட சித்திரையில் இடம் பெற்று வந்திருக்கிறதே!
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? - ச.நாகராஜன்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:yarlpavanan wrote:சிறந்த பதிவிது. வணிக ஆண்டிறுதிக் கணக்கு முடிப்பது கூட சித்திரையில் இடம் பெற்று வந்திருக்கிறதே!
தாங்கள் பதிவு செய்த இணைப்புப் பயனுள்ளது.
நன்றி.
உங்கள் யாழ்பாவாணன்
Re: தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? - ச.நாகராஜன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? - ச.நாகராஜன்
நல்ல பதிவு. சிந்தனைகளை தூண்டுகிறது. சிறப்பு.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? - ச.நாகராஜன்
புவனா wrote:கலைஞருக்கு அது தெரிஞ்ச சரி....
தமி புத்தாண்டு 'தை ஒன்று' என்று கலைஞர் கண்டுபிடித்தது இல்லை.
தமிழறிஞர்கள் ஆராய்ந்து சொன்னது. அதை கலைஞர் அமுல்படுத்தினார்.
தமிழறிஞர்கள் என்ன சொன்னார்கள் என்பதை படிக்காமல் இந்த தகவலை
ஆதரிப்பது தவறு!
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Re: தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? - ச.நாகராஜன்
//சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கல் கொண்டாட்டம் ஏற்பட்டது. சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி!//
ரொம்ப சரி
ரொம்ப சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? - ச.நாகராஜன்
சித்திரை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு என்று விளக்கும் இந்த பதிவை மேலே கொண்டுவருகிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? - ச.நாகராஜன்
இதெல்லாம் ஒரு சில அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக அமைத்துக்கொண்ட அறிவிப்புகள். பல ஆண்டுகளாக இருந்த சித்திரைப் புத்தாண்டு இப்பொழுது மட்டும் மாற்றம் காண வேண்டிய அவசியம் என்ன? முதலில் தமிழ்நாட்டில் நல்ல தமிழை வளர்க்க வேண்டிய இந்த ஈன அரசியல்வாதிகள் தங்களது கட்சிக்கும் தங்களுக்கும் சாதகமாக சில நடவடிக்கைகள் எடுப்பது எல்லாம் சுயநலத்திற்காகத்தான். தமிழால் தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்த்தவர்கள் வளர்த்துக் கொண்டவர்கள் இதையும் செய்வார்கள், இதற்கும் மேலையும் சொல்லுவார்கள். எல்லாம் சுயநலம். எனக்கு சித்திரைதான் புத்தாண்டு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மாறிவிட்டது தமிழ் புத்தாண்டு : மாறுமா தமிழ் ஆண்டுகள்?
» தமிழ் புத்தாண்டு!
» மீண்டும் தமிழ் புத்தாண்டு
» தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
» தமிழ் புத்தாண்டு - கவிதை ...!
» தமிழ் புத்தாண்டு!
» மீண்டும் தமிழ் புத்தாண்டு
» தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
» தமிழ் புத்தாண்டு - கவிதை ...!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum