புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_m10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10 
49 Posts - 52%
heezulia
பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_m10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_m10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_m10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_m10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10 
91 Posts - 56%
heezulia
பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_m10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_m10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_m10பயணத்தை தொடர்ந்த ஆவி! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணத்தை தொடர்ந்த ஆவி!


   
   
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Sun Aug 15, 2010 6:35 pm



பயணத்தை தொடர்ந்த ஆவி!

நாம் பேய்கள் என்று சொல்பவை எல்லாம் தங்களின் பரு உடலை விட்டு பிரிந்தப் பின் ஒளிமயமான வானுலக பாதையை நோக்கி தங்கள் பயணத்தை தொடராத ஆவிகள்தான். மேல் கொண்டு பயணத்தை தொடராமல் இந்த பூமியிலேயே இருப்பதற்கு பல காரணங்கள் இருப்பினும் முதன்மையானது பயம்தான். இந்த பயத்தின் காரணமாகவே பல ஆவிகள் தங்களுக்கு பரிச்சயமான இடங்களில், பழகிய மக்களிடையே ஒளிந்து வாழ்கிறார்கள்.

பெரும்பாலான ஆவிகள், நாம் உடம்பை விட்டு பிரிந்து விட்டோம், இனி அதற்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உணராமலும், குடும்பத்தினரை விட்டு பிரிய முடியாமலும் பல விதமான குழப்பமான உணர்வுகளுடன், தங்களின் நிறைவேறாத, தவறான எண்ணங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் பூமியை விட்டு போகாமல் பேயாக உலவுகிறார்கள்.

சரியான வழிகாட்டுதல் அவர்களுக்கு கிடைக்கும் போது, பெரும்பாலான ஆவிகள் தங்கள் முறையான பயணத்தை தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த மாதிரியான ஆவிகளுக்கு சரியான வழி காட்டி, மேற்கொண்டு பயணத்தை தொடர செய்வதற்கு மிகுந்த பிரயாசையும் பொறுமையும் தேவை. அப்படியும் சில ஆவிகள் திருந்தாமல் தொடர்ந்து பூமியில் அலையும் போதுதான் அவைகளை நாம் பேய்கள் என்று சொல்கிறோம்.

சில உயர்ந்த மனிதர்கள் தூய ஆவிகளின் துணையுடன் இதை மிக இலகுவாக, தலை சிறந்த மனோதத்துவ டாக்டர்களை போன்று செயல்பட்டு, அலையும் ஆவிகளுக்கு வழிகாட்டி அவைகளை உரிய பாதையில் அனுப்பி வைப்பார்கள்.

இதற்கு உதாரணமாக என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை சொல்லுகிறேன்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நான், என் மனைவியுடன் இரண்டு மகள்களுடன் காஞ்சிபுரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தேன். எனது வலது புறத்தில் நடேசன் என்பவர் தன் மனைவியுடனும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். அதில் இரண்டாவது பையன் சற்று மன நலம் குறைந்தவன். நடேசன் சுமார் 50 வயது கொண்டவர். அவர் உடல் நலம் சரியில்லை என்பது மட்டும் எங்களுக்கு தெரியும்.

நடேசனின் இரண்டு பையன்களும் எங்கள் வீட்டில் வந்து விளையாடுவார்கள். ஒருமுறை அவரின் சிறிய பையன் என் பெரிய மகள் உட்கார்ந்து இருந்த நாற்காலியை எதிர்பாராமல் இழுத்து விட அவள் கீழே விழுந்து பலத்த அடிப்பட்டாள். தலையில் எட்டு தையல் போட வேண்டியிருந்தது.

அது முதல் அந்த பையன்களை எங்கள் வீட்டில் விளையாட சேர்ப்பது இல்லை. இதனால் நடேசன் எங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டார். பல விதங்களில் எங்களுக்கு சிரமங்களை கொடுத்து வந்தார்.

நாங்கள் வீட்டை காலி பண்ணிவிடலாம் என்று யோசிக்கையில் திடீரென்று ஒருநாள் அவர்களாகவே வீட்டை காலி பண்ணி போய்விட்டார்கள். நடேசன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக எனக்கு தெரியவந்தது.

சுமார் இரண்டு மாதம் காலியாக இருந்த பக்கத்து போர்ஷனுக்கு வேறு ஒரு குடும்பம் வந்தது. அந்த குடும்பம் குடி வந்ததில் இருந்து நான் வீட்டில் இருக்கும் போது எல்லாம் ஏதோ ஒரு மன அழுத்தமும் இனம் புரியாத வேதனையும் என்னை பாடாய் படுத்த ஆரம்பித்தது.

நானும் என் குடும்பத்தாரும் ஒரு விதமான இருக்கமான மன நிலையில் இருக்க பக்கத்து வீட்டில் இருந்த 11 மாத குழந்தை இரவு முழுவதும் தூங்காமல் அழுவதாகவும், பகலில் அமைதியில்லாமல் இருப்பதாகவும் என் மனைவி சொன்னாள்.

அவர்கள் குடும்பமும் அமைதியாக இல்லை. நாங்களும் நிம்மதியில்லாமல் வாழ்ந்து வந்தோம். காரணம்தான் புரியவில்லை.

அப்போதுதான் நடேசன் மாரடைப்பால் திடீரென்று 20 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார் என்று எங்கள் வீட்டு சொந்தக்காரர் சொன்னார்.

முதலில் பக்கத்து வீட்டிற்கு புதிதாக குடிவந்தவர்கள்தான் எனது பிரச்சனைக்கு காரணம் என்று நினைத்தேன். இப்போது அவர்கள் குடும்பமும் அவஸ்தைபடுவதை அறிந்த போது ஒன்றும் புரியாமல் திகைத்தேன்.

இப்போது ந்டேசன் இறந்ததை கேள்விப்பட்டதும் ஏதோ "பொறி" தட்டியது போல இருந்தது. நடேசன் மரணத்திற்கும் எங்கள் பிரச்சனைகளுக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல தோன்றியது.

மிகவும் படித்த, யோக நெறிகளில் தீவிர பயிற்சி பெற்ற நரசிம்மன் என்பவருடன் எனக்கு பரிச்சயம் உண்டு. நான் அவரிடம் சென்று நடந்தவைகளை முழுமையாக சொன்னேன். மிகுந்த யோசனை பண்ணிய அவர் ஒரு நாளை குறிப்பிட்டு காலை எட்டு மணிக்கு என் வீட்டிற்கு வருவதாக சொன்னார்.

குறிப்பிட்ட தினத்தன்று நாங்கள் வீட்டை கழுவி சுத்தப்படுத்தி பூஜையறையில் மலர்களை வைத்து காத்திருந்தோம். சரியாக 8 மணிக்கு நரசிம்மன் வந்தார். வந்தவர் அமைதியாக வீடு முழுவதும் சுற்றிப் பார்த்தார். பிறகு பூஜை அறையில் சற்று நேரம் கண்களை மூடி அமர்ந்திருந்தார்.

பக்கத்து வீட்டை பார்க்க வேண்டும் என்றார். அவர்களை கேட்டப் போது சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டனர். நரசிம்மன் அவர்கள் வீட்டை சுற்றி பார்த்த பின்பு ஒரு செப்பு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் கொண்டு வர சொன்னார்.

அந்த தண்ணீர் பாத்திரத்தை ஒரு மனையின் மீது வைத்து தனது வலது கைவிரல்களை அந்த தண்ணீரில் வைத்து ஏதோ மந்திரங்களை சொன்னார். பிறகு எங்கள் அனைவரையும் உட்கார சொல்லிவிட்டு பாத்திரத்தை எடுத்து தண்ணீரை வீடு முழுவதும் தெளித்தார்.

ஹாலில் மனையை போட்டு அதில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார். சற்று நேரத்தில் பல திசைகளில் இருந்து காற்று உள்ளே வேகமாக வருவது போல இருந்தது. என் உடல் சிலிர்த்தது. காற்றின் வேகம் குறைந்து அமைதி நிலைவியது.

அப்போது நரசிம்மன் ஏதோ ஒரு நண்பருடன் பேசுவது போல பேச ஆரம்பித்தார்.

"அன்புள்ள மிஸ்டர் நடேசன், நீங்கள் நான் சொல்லுவதை பொறுமையுடன் கேட்டு புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் பூத உடலை விட்டு பிரிந்து இப்போது ஆவியாக இருக்கிறீர்கள். உங்கள் மனைவியும் குழந்தைகளும் இப்போது நலமாக ஹைதராபாத்தில் இருக்கிறார்கள். நீங்கள் இந்த ஆவி உருவத்தில் இங்கு அலைவதால் அவர்களுக்கு எந்த பயனும் இல்லை. மாறாக இங்கு இருப்பவர்களுக்கு துன்பத்தை கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஒளி உலகை நோக்கி செல்ல வேண்டிய பயணம் காத்துக் கொண்டு இருக்கிறது. நீங்கள் மேற்கொண்டு உங்கள் ஆவியுலக பயணத்தை தொடர்வதுதான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நலத்தை தரும். அமைதியை தரும். புரிந்துக் கொண்டு உங்கள் பயணத்தை தொடருங்கள்."

இதை சொல்லிவிட்டு நரசிம்மன் அப்படியே அமர்ந்து இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அறையில் இருந்த அழுத்தம் குறைவது போல இருந்தது. ஜன்னல் திரைகள் எல்லாம் காற்று வெளியே போனால் எப்படி அசையுமோ அது போல ஆடியது.

சுமார் பத்து நிமிடங்களில் அறையில் அமைதி முழுவதுமாக ஆட்கொண்டது. நரசிம்மன் கண்களை திறந்து பார்த்து சிரித்தார்.

"நல்ல ஆத்மா! உண்மையை, தான் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அது ஒளியை நோக்கி பயணம் மேற்கொண்டு விட்டது. இனிமேல் நீங்கள் அமைதியாக வாழலாம்" என்ற் சொல்லி விடைப் பெற்றார்.

நிஜமாகவே அப்போது முதல் எங்களின் எல்லா பிரச்சனைகளும் நீங்கி அமைதியான வாழ்க்கையை தொடர்ந்தோம்.


"ஆவிகள் உலகம்" - பிப்ரவரி 2010


நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Aug 15, 2010 11:12 pm

பயணத்தை தொடர்ந்த ஆவி! Icon_eek பயணத்தை தொடர்ந்த ஆவி! Icon_eek பயணத்தை தொடர்ந்த ஆவி! Icon_eek பயணத்தை தொடர்ந்த ஆவி! Icon_eek பயணத்தை தொடர்ந்த ஆவி! Icon_eek பயணத்தை தொடர்ந்த ஆவி! Icon_eek பயணத்தை தொடர்ந்த ஆவி! Icon_eek பயணத்தை தொடர்ந்த ஆவி! Icon_eek பயணத்தை தொடர்ந்த ஆவி! 678642

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Aug 16, 2010 9:52 am

எச்சூஸ்மி பிரதர் இது வெறும் கதை தான பயணத்தை தொடர்ந்த ஆவி! Icon_eek பயணத்தை தொடர்ந்த ஆவி! Icon_eek பயணத்தை தொடர்ந்த ஆவி! Icon_eek பயணத்தை தொடர்ந்த ஆவி! Affraid பயணத்தை தொடர்ந்த ஆவி! Affraid



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Aug 16, 2010 9:58 am

இதில் என்ன சந்தேகம் செந்தில்.இது வெறும் கதைதான்.
அப்படி ஆவி இருப்பது உண்மையானால் அநியாயமாக கொல்லப்பட்டவர்கள் எல்லாரும் தங்களை கொன்னவர்களை பலி வாங்கணுமே.



பயணத்தை தொடர்ந்த ஆவி! Uபயணத்தை தொடர்ந்த ஆவி! Dபயணத்தை தொடர்ந்த ஆவி! Aபயணத்தை தொடர்ந்த ஆவி! Yபயணத்தை தொடர்ந்த ஆவி! Aபயணத்தை தொடர்ந்த ஆவி! Sபயணத்தை தொடர்ந்த ஆவி! Uபயணத்தை தொடர்ந்த ஆவி! Dபயணத்தை தொடர்ந்த ஆவி! Hபயணத்தை தொடர்ந்த ஆவி! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக