ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாரி சொல்ல பயணி மறுத்ததால் வேலையை உதறிய‌ விமான ஊழியர்.!

Go down

சாரி சொல்ல பயணி மறுத்ததால் வேலையை உதறிய‌ விமான ஊழியர்.!  Empty சாரி சொல்ல பயணி மறுத்ததால் வேலையை உதறிய‌ விமான ஊழியர்.!

Post by நிசாந்தன் Fri Aug 13, 2010 11:22 am

நியூயார்க் : பஸ், ரயில் நிற்பதற்குள் படியில் இருந்து குதிக்கும் பயணி போலிருக்கிறது. பழக்கதோஷத்தில் விமானம் நிற்பதற்குள் லக்கேஜை எடுக்க முயன்று, ஊழியரின் தலையில் இடித்தார். ‘சாரி’ சொல்லாமல் தன்னையே திட்டியதால் வெறுத்த ஊழியர், விமானத்தை மட்டுமின்றி வேலையிலிருந்தே இறங்கிச் சென்று விட்டார்.

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இந்த ருசிகர சம்பவம் நடந்தது. நேற்று மதியம் ஜெட்ப்ளூ விமானம் தரையிறங்கியது. அதன் வாசலை நோக்கி விமானம் மெதுவாக ஓடியது. அனுமதியின்றி ஒரு பயணி எழுந்தார். தலைக்குமேல் கம்பார்ட்மென்டை திறந்து லக்கேஜை இழுத்தார். ஊழியர் ஸ்லேட்டர் (38) ஓடி வந்தார். விமானம் ஓடுவதால் உட்காருமாறு கூறினார். கேட்கவில்லை பயணி. அவர் இழுத்த லக்கேஜ், ஸ்லேட்டரின் தலையில் மோதியது. ‘சாரி’ கேட்கும்படி கூறினார் ஸ்லேட்டர். மறுத்தார் பயணி.

தவறு செய்ததுடன் ‘சாரி’ கூட சொல்லாத பயணியால் வெறுத்தார் ஊழியர். அறிவிப்பு செய்யும் மைக்கை பிடித்தார். பயணியின் நடத்தை பற்றி ஆவேசமாக பேசினார். ‘‘இதுபோன்ற பயணிகளுடன் இனியும் பணியாற்ற விரும்பவில்லை. 20 ஆண்டு சர்வீஸ் போதும். குட் பை’’ என்று கூறினார். விமானம் நின்ற விநாடியில் அவசரகால கதவை திறந்தார். போகும் வழியில் பெட்டியில் இருந்து ஒரு பீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே குதித்தார் ஊழியர் ஸ்லேட்டர். அவசர வழி, வழியாக சறுக்கியபடி விமானத்தில் இருந்து இறங்கியவர், பார்க்கிங் பகுதிக்கு விரைந்து பைக்கை கிளப்பி வீடு போய் சேர்ந்தார். பயணிகள் திகைத்தனர்.

தவறு செய்த பயணியை முறைத்தனர்.பைலட் மூலமாக ஜெட்ப்ளூ விமான நிறுவனத்துக்கு தகவல் பறந்தது. அங்கிருந்து போலீசுக்கு புகார் போனது. பயணிகள் இறங்கும் முன் அவசரகால கதவை திறந்து ஊழியர் வெளியேறியது சேவை குறைபாடு. கதவை திறக்கும்போது கீழே யாராவது இருந்திருந்தால் இறந்திருக்கலாம் என்பதால் பாதுகாப்பு அலட்சியம் என பல பிரிவுகளில் வழக்குகள் தயாராகின. வீடு வந்து சேர்ந்திருந்த ஸ்லேட்டரை, காலிங் பெல் அடித்து அழைத்தது போலீஸ். புன்னகையுடன் வெளியே வந்தார் அவர். ‘என் அம்மா, அப்பா இருவருமே விமான பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அப்போதெல்லாம் பயணிகள் இப்படி இல்லை. இப்போது எல்லாமே மாறிப் போச்சு’ என்று கூறியபடி போலீசுடன் நடந்தார்.

விசாரணை தொடர்வதால் பெயர் கூற விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘விமான பயணிகள், ஊழியர்கள் இடையே சுமுக உறவு குறைந்து வருகிறது வருத்தமானது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொறுமையும், சகிப்புத்தன்மை இல்லாததுமே காரணம்’’ என்றார். பாதுகாப்பு விதிகளை பயணிகள் மதித்து நடப்பதில்லை என்பது விமான நிறுவனங்கள் தரப்பு குற்றச்சாட்டு. ஊழியர்கள் முரட்டுத்தனமாக நடப்பதாக இதற்கு பயணிகள் தரும் பதிலடி. சில வாரங்கள் முன்புதான் முதல் வகுப்பு பயணிகளின் பர்ஸ்களை திருடியதாக ஏர் பிரான்ஸ் ஊழியர் கைதானார்.

விமானத்தில் தனது கிடாரை ஊழியர்கள் உடைத்ததாக யூட்யூப் இணைய தளத்தில் கனடா நாட்டு பாடகி வீடியோ வெளியிட்டார். கிடாரை விடாமல் விமானத்தில் வாசித்து தொல்லை கொடுத்ததாக விமான நிறுவனம் பதிலடி கொடுத்தது. இதுபோன்ற பல ‘பறக்கும் அனுபவங்களை’ ப்ளாகுகளில் பலர் கொட்டியுள்ளது சுவாரசியமானது
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum