ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
அமுதென்றும் நஞ்சென்றும் - பிரபஞ்ச சக்தி - ஆத்மனுடன் நிலா Poll_c10அமுதென்றும் நஞ்சென்றும் - பிரபஞ்ச சக்தி - ஆத்மனுடன் நிலா Poll_m10அமுதென்றும் நஞ்சென்றும் - பிரபஞ்ச சக்தி - ஆத்மனுடன் நிலா Poll_c10 
heezulia
அமுதென்றும் நஞ்சென்றும் - பிரபஞ்ச சக்தி - ஆத்மனுடன் நிலா Poll_c10அமுதென்றும் நஞ்சென்றும் - பிரபஞ்ச சக்தி - ஆத்மனுடன் நிலா Poll_m10அமுதென்றும் நஞ்சென்றும் - பிரபஞ்ச சக்தி - ஆத்மனுடன் நிலா Poll_c10 
mohamed nizamudeen
அமுதென்றும் நஞ்சென்றும் - பிரபஞ்ச சக்தி - ஆத்மனுடன் நிலா Poll_c10அமுதென்றும் நஞ்சென்றும் - பிரபஞ்ச சக்தி - ஆத்மனுடன் நிலா Poll_m10அமுதென்றும் நஞ்சென்றும் - பிரபஞ்ச சக்தி - ஆத்மனுடன் நிலா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமுதென்றும் நஞ்சென்றும் - பிரபஞ்ச சக்தி - ஆத்மனுடன் நிலா

Go down

அமுதென்றும் நஞ்சென்றும் - பிரபஞ்ச சக்தி - ஆத்மனுடன் நிலா Empty அமுதென்றும் நஞ்சென்றும் - பிரபஞ்ச சக்தி - ஆத்மனுடன் நிலா

Post by gunashan Fri Aug 13, 2010 9:45 am

விடைபெறும் நேரம் வந்தாகிவிட்டது. முன்பெல்லாம் சாதாரண இடமாற்றம் கூட மரணம் போன்ற தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியிருக்கிறது. மரணத்தோடு ஆன்மா அழிந்துவிடுவதில்லை என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்ட பின்பு மரணம் கூட முன்பு பிரிவு ஏற்படுத்திய அதீத துக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

நாமனைவரும் ஏதோவொரு விதத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்கிற உணர்வு, பிரிவு என்பதனை அர்த்தமிழக்கச் செய்கிறது. நமக்கு இன்று கிடைத்திருக்கும் அனுபவமும் அறிவும் உலகம் தோன்றிய காலத்திலிருந்து வாழ்ந்த அத்தனை மனிதர்களின் கூட்டு பிரக்ஞையிலிருந்து வந்ததென்பதால், இதே பிரக்ஞை நம் அனைவருக்குள்ளும் பாய்ந்து பரவுகிறதென்பதால் ஒரு ஆற்றின் வெவ்வேறு நிலை போலத்தான் நாமனைவரும் என்று பல நேரங்களில் எடுத்துக் கொள்ளத் தோன்றுகிறது. ஆனால் இந்தப் புரிதலுக்கு மாறான, உணர்வு பூர்வமான வெளிப்பாடுகள் இன்னும் நடைமுறை வாழ்க்கையில் தோன்றிக் கொண்டே இருப்பதால் புரிதலுக்கும் அறிதலுக்குமுள்ள வேறுபாடு விளங்க ஆரம்பித்திருக்கிறது.

இந்த வகையில் சில ஆன்மீக குருமாரிகளின் போதனைகளைக் கேட்கும்போதோ படிக்கும்போதோ அவற்றிலிருக்கும் அதிகார தொனி சில சமயம் கேள்விகளை எழுப்புகிறது. எல்லையறியப்படாத இந்தப் பிரபஞ்ச ரகசியத்தில் கரை கண்டுவிட்டாற்போலிருக்கும் இவர்களின் தொனி அறிதலினால் ஏற்படுகிறது என்று அவர்கள் கூறிக் கொண்டாலும் கூட, இந்த அறிதல் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமாய் இருப்பதால் என்னைப் போன்ற சாமானியருக்குக் குழப்பம் ஏற்படுவது இயற்கையே.

பிரபஞ்சம் ஒரே ஒரு உண்மையின் அடிப்படையில்தான் இயங்குகிறது அல்லது இயங்க வேண்டும் என்கிற கட்டாயம் மனித மனத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து தோன்றியதாகத்தான் எனக்குப்படுகிறது. எனவே, இவர்கள் ஒவ்வொருவரின் அறிதலிலும் உண்மை இருக்கலாம். தனது உண்மை மட்டுமே சரி என்று எவரேனும் கூறும்போதுதான் அவர்களது அறிதலின் ஆழத்தின் மேல் சந்தேகம் எழுகிறது.

'க்ரையான்' என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு பிரபஞ்ச சக்தி அமெரிக்காவிலிருக்கும் லீ என்பவர் மூலம் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து கேட்ட ஒரு கதையின் தழுவல்:

ஒரு எறும்புக்கு காலம் காலமாய்த் தனது முன்னோர்கள் மூலம் கேள்விப்பட்ட ஒரு மாபெரும் ஓவியத்தைப் பற்றி முழுமையாய் அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அதற்காக ஒரு நீண்ட நெடும்பயணத்தை மேற்கொண்டது அது. ஓவியத்தில் அது நுழைந்தபோது கண்ணுக்கெட்டிய தூரம் வரை மஞ்சள் வண்ணமாய் இருந்தது. அதனால் அது தன் நண்பர்களுக்கு இந்த ஓவியம் மஞ்சள் நிறம் கொண்டதென்றும் சமதளமாக அது இருப்பதாகவும் தகவல் அனுப்பியது. மேலும் சில நாட்கள் பயணப்பட்டதும் ஓவியத்தின் வண்ணம் மெல்ல மாற ஆரம்பித்தது. சில மலைகளும் கூட அதன் கண்களுக்குத் தெரிந்தன. எனவே எறும்பு தனது நண்பர்களுக்கு ஓவியம் மேடுபள்ளங்களையும் கொண்டிருக்கலாம் எனத் தகவல் தெரிவித்தது. ஓரிடத்தில் ஓவியம் சட்டென்று வழுவழுப்பாக மாறியதால் எறும்பு அதில் சறுக்கி விழுந்தது. உடனே ஓவியத்திடம் ஏதோ மாய சக்தி இருப்பதாக தனது கூட்டத்துக்கு செய்தி சொல்லியது எறும்பு.

இந்த எறும்பு போலத்தான் நாமும். பிரபஞ்சத்தின் ஒரு துளி ரகசியத்தை அறிய நேர்ந்துவிட்டதால் பிரபஞ்சத்தை அறிந்துவிட்டதாகக் கொள்ள முடியுமா? ஓவியத்தின் மறுமூலையிலிருந்து பயணப்படும் மற்றொரு எறும்புக்கு அது ஊதா நிறமாகவும் இன்னொரு எல்லையிலிருந்து கிளம்பிய வேறொரு எறும்புக்கு ஓவியம் பழுப்பு நிறமாகவும் தெரிய வாய்ப்பிருக்கிறதே? ஒவ்வொரு எறும்பும் ஓவியம் தான் கண்ட நிறத்தில்தானிருக்கிறது என்று சாதிக்குமானால் அது அறியாமை என்றுதானே எண்ணத் தோன்றுகிறது?

காற்றினை நான் எப்படி உணர்கிறேனோ அதே போலத்தான் நீங்களும் உணர்வீர்கள் என்று என்ன நிச்சயம்? ரோஜா மலர் எனக்குள் தோற்றுவிக்கும் அதே உணர்வுகள் அனைவருக்கும் தோன்றும் என்று நான் எண்ணுவது சரியா? ஒரு வேளை ரோஜா வேறு சிலருக்கு முற்றிலும் எதிர்மாறான உணர்வுகளை ஏற்படுத்தலாம். எனில், ரோஜாவைக் காணும்போது எனக்கு ஏற்படும் பரவசத்தின் அடிப்படையில் உலகிலேயே சிறந்த மலர் ரோஜாதான் என்று வாதாடுவது சரிதானா?

வேறு எவரேனும் அல்லிதான் சிறந்தது என்று கூறுகையில், 'உனக்கு அல்லியே சிறந்ததாய் இருக்கட்டும். நான் ரோஜாவே சிறந்ததெனக் கொள்கிறேன். வேறுபட ஒப்புக் கொள்வோமே' என்று சொல்லிப்போனாலே பாதிப் பிரிவினைகள் மறைந்து போகின்றன என்பதே எனக்கு அனுபவம் கற்றுத் தந்த பாடம். பிரிவினைகள் மறையும்போது நமக்குள்ளிருக்கும் ஒற்றுமைகள் துலங்க ஆரம்பிக்கின்றன. ஒற்றுமை ஒருமைப்பாட்டையும், ஒருமைப்பாடு சமாதானத்தையும், சமாதானம் நாமனைவருமே நாடும் மகிழ்ச்சியையும் தோற்றுவிப்பதைக் காண்கிறேன்.

வெற்றியின் மூலம் அடையும் மகிழ்ச்சிக்கும் சமாதானத்தின் மூலம் அடையும் மகிழ்ச்சிக்கும் வேறுபாடுண்டு. வெற்றி கொணரும் மகிழ்ச்சி தற்காலிகமானது. அடுத்த இலக்கைப் பற்றி நினைக்கும்வரைதான் அது நிலைக்கும். உள்ளிருந்து வரும் சமாதானம் அளிக்கும் மகிழ்ச்சி நிலையானது. வெளியில் என்ன நிகழ்ந்தாலும் உள்ளே சமாதானம் இருக்கும்போது மனம் கலையாமல் இருப்பதை உணர முடிகிறது.

இந்த சமாதானத்தை வெளியிலிருந்து கொணர முடியாதென்றுதான் நான் நினைக்கிறேன். எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் நமக்கு வழிகாட்ட முடியுமே தவிர, ஞானத்தை நமக்குள் புகுத்த இயலாது. அது நமக்குள்ளே இருக்கும் புதையல். அதைக் கண்டு கொள்வது நமது சாமர்த்தியம். இதனை அவ்வப்போது கண்டு கொள்வதும் தவறவிடுவதுமான போக்கு தொடர்ந்து என்னில் காணப்படுவதால், நானும் அடர்த்தியான 'அறியாமை' நிலையில் சிக்கிக் கொண்டிருப்பது புரியவே செய்கிறது. 'அமுதென்றும் நஞ்சென்றும்' என்ற தலைப்பில் நான் இங்கே பகிர்ந்து கொண்ட எனது கருத்துக்கள் கூட இந்த 'புரிந்தும் அறியாமலும்' ஆன நிலையிலிருந்து எழுதப்பட்டவையே என்பது உங்களுக்குக் கண்டிப்பாகப் புரிந்திருக்கும்.

எனது அறியாமையின் அளவைக் குறைக்க முயற்சிக்கலாமென்றால் அதிலும் சிக்கல். 'நீ ஞானத்தை எப்போது தேடுகிறாயோ அப்போது அதனை மறுக்கிறாய்' என்கிறார் ஒரு குரு. 'தேடினால் கண்டடைவீர்கள்' என்கிறார் மற்றொரு மகான். இரண்டுமே சரியாகத் தெரிவதால் மேலும் மேலும் எழும் வலுவான கேள்விகளோடு தொடர்கிறது எனது பயணம்...

நாம் மீண்டும் சந்திக்கையில் எனது அறியாமை இருள் கொஞ்சம் அகன்றிருக்கலாம்... அல்லது இன்னும் அதிகமான கேள்விகளோடு நான் போராடிக் கொண்டிருக்கலாம்... எப்படி இருப்பினும் அதுவும் அனைவரின் நன்மைக்காகத்தானிருக்கும் என்று புரிகிறது...

இந்த இணைய யுகத்தில் விரும்பியவர்களுடன் தொடர்பிலிருப்பதொன்றும் கடினமல்ல... ஆகவே, சம்பிரதாயமான விடைபெறல் தேவையில்லை என்றே எண்ணுகிறேன்...

நெஞ்சார்ந்த நேசங்களுடன்,

ஆத்மனுடன் நிலா





gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum